ASTRO - STAR ACADEMY
ASTRO - STAR ACADEMY
  • 628
  • 3 129 238
பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - அத்தியாயம்:3 / கிரகங்களின் தன்மைகள் (1/8) | Dr. R. Sambasivam | SA 6
பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - அத்தியாயம்:3 / கிரகங்களின் தன்மைகளை உணர்தல் (1/8) || Brihat Parasara Hora Sastra | Dr. R. Sambasivam | STAR ACADEMY 006
வணக்கம்.
ஜோதிடம் என்ற கலையைக் கற்க, அருமையான மூல நூல்கள் பல உண்டு. அவற்றுள், பிருஹத் பராசர ஹோர சாஸ்திரத்திற்கு உள்ள ஒரு தனியான சிறப்பிடம் குறிப்பிடத்தக்கது. இன்று நமக்குக் கிடைக்கும் மற்ற பிற மூல நூல்களுக்கும் கூட மூல நூலாகவும், காலத்தால் முந்தைய, நமக்கு இன்று வரை கிடைக்காத பழம்பெரும் ஜோதிட நூல்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பாலமாகவும் இருப்பதால், இதனைக் கற்றுத் தெளிவது ஜோதிடர்களுக்கு இன்றியமையாதது. பராசர மஹரிஷியால் வழங்கப் பெற்ற இந்த நூல், ஜோதிடத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் நமக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது.
பராசரர் சொல்லும் சொற்களை அப்படியே தமிழில் உரையோடு பதிவிடும் எண்ணம் ஸ்டார் அகாடமிக்கு தோன்றியதால், இந்தப் பணியைச் செய்ய திரு R சாம்பசிவம் அவர்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தோம். அவரும் அதற்கு சம்மதித்திருப்பதால், பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் - மூலமும் உரையும் என்ற தலைப்பில், வாரந்தோறும் ஒரு பதிவாக, யூடியூபில் தொடர்ந்து வெளியாகும்.
பராசரரைக் கற்பது, நமக்கு ஜோதிடம் பற்றிய முழுமையான புரிதலைத் தருவதுடன், வாழ்வையும் கர்மாவையும் பற்றிய உணர்தலையும் தந்து, நம் வாழ்வை நன்முறைப்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பராசர ஹோரா சாஸ்திரத்தை நாம் அனைவரும் சேர்ந்து கற்போம். ஸ்டார் அகாடமி, உங்கள் அனைவரையும் இந்தப் பெரும் பயணத்தில் இணையுமாறு, அன்புடன் அழைக்கிறது.
திரு. R சாம்பசிவம் அல்லது ஸ்டார் அகாடமியின் அனுமதியின்றி பிருஹத் பராசர ஹோர சாஸ்திர மூலமும் உரையும் பதிவுகளில் பேசப்படும் பராசரர் கூறிய, மற்ற நூல்களில் இருந்து கூறப்பட்ட கருத்துகளைத் தவிர உள்ள பிற கருத்துகளை, படங்களை, விளக்கங்களை வேறு ஊடகங்களில் பயன்படுத்துவது கூடாது. அது போல இந்த வீடியோ பதிவுகள், பராசரர் கூறிய கருத்துகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில், மிகுந்த முயற்சியுடன், பொதுநலன் கருதி இலவசமாக வெளியிடப் படுகிறது. இவற்றைத் தனிநபர்கள் ஜோதிடம் கற்பதைத் தவிர, வேறு வியாபார நோக்கத்திற்கோ அல்லது பிற விதங்களிலோ பயன்படுத்த அனுமதி இல்லை. இந்தப் பதிவுகளின் முழு காப்புரிமை, திரு R சாம்பசிவத்தையும் மற்றும் ஸ்டார் அகாடமியை மட்டுமே சாரும்.
நன்றி.
มุมมอง: 626

วีดีโอ

பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - அத்தியாயம்:2 / அவதாரங்கள்: 2 | Dr. R. Sambasivam | STAR ACADEMY 005
มุมมอง 756วันที่ผ่านมา
பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - அத்தியாயம்:2 / அவதாரங்கள்: 2 | Brihat Parasara Hora Sastra | Dr. R. Sambasivam | STAR ACADEMY 005 வணக்கம். ஜோதிடம் என்ற கலையைக் கற்க, அருமையான மூல நூல்கள் பல உண்டு. அவற்றுள், பிருஹத் பராசர ஹோர சாஸ்திரத்திற்கு உள்ள ஒரு தனியான சிறப்பிடம் குறிப்பிடத்தக்கது. இன்று நமக்குக் கிடைக்கும் மற்ற பிற மூல நூல்களுக்கும் கூட மூல நூலாகவும், காலத்தால் முந்தைய, நமக்கு இன்று வரை கிட...
பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - அத்தியாயம்:2 / அவதாரங்கள்: 1 | Dr. R. Sambasivam | STAR ACADEMY 004
มุมมอง 1.2K14 วันที่ผ่านมา
பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - அத்தியாயம்:1 / அவதாரங்கள்: 1 | Brihat Parasara Hora Sastra | Dr. R. Sambasivam | STAR ACADEMY 004 வணக்கம். ஜோதிடம் என்ற கலையைக் கற்க, அருமையான மூல நூல்கள் பல உண்டு. அவற்றுள், பிருஹத் பராசர ஹோர சாஸ்திரத்திற்கு உள்ள ஒரு தனியான சிறப்பிடம் குறிப்பிடத்தக்கது. இன்று நமக்குக் கிடைக்கும் மற்ற பிற மூல நூல்களுக்கும் கூட மூல நூலாகவும், காலத்தால் முந்தைய, நமக்கு இன்று வரை கிட...
பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - அத்தியாயம்:1 / படைப்பு: 2 | Dr. R. Sambasivam | STAR ACADEMY 003
มุมมอง 2.2K21 วันที่ผ่านมา
பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - அத்தியாயம்:1 / படைப்பு: 2 | Brihat Parasara Hora Sastra | Dr. R. Sambasivam | STAR ACADEMY 003 வணக்கம். ஜோதிடம் என்ற கலையைக் கற்க, அருமையான மூல நூல்கள் பல உண்டு. அவற்றுள், பிருஹத் பராசர ஹோர சாஸ்திரத்திற்கு உள்ள ஒரு தனியான சிறப்பிடம் குறிப்பிடத்தக்கது. இன்று நமக்குக் கிடைக்கும் மற்ற பிற மூல நூல்களுக்கும் கூட மூல நூலாகவும், காலத்தால் முந்தைய, நமக்கு இன்று வரை கிடைக்...
பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - அத்தியாயம்:1 / படைப்பு: 1 | Dr. R. Sambasivam | STAR ACADEMY 002
มุมมอง 2.3Kหลายเดือนก่อน
பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - அத்தியாயம்:1 / படைப்பு: 1 | Brihat Parasara Hora Sastra | Dr. R. Sambasivam | STAR ACADEMY 002 வணக்கம். ஜோதிடம் என்ற கலையைக் கற்க, அருமையான மூல நூல்கள் பல உண்டு. அவற்றுள், பிருஹத் பராசர ஹோர சாஸ்திரத்திற்கு உள்ள ஒரு தனியான சிறப்பிடம் குறிப்பிடத்தக்கது. இன்று நமக்குக் கிடைக்கும் மற்ற பிற மூல நூல்களுக்கும் கூட மூல நூலாகவும், காலத்தால் முந்தைய, நமக்கு இன்று வரை கிடைக்...
பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் | Brihat Parasara Hora Sastra | Dr. R. Sambasivam | STAR ACADEMY 001
มุมมอง 4.2Kหลายเดือนก่อน
பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் | Brihat Parasara Hora Sastra | Dr. R. Sambasivam | STAR ACADEMY 001 வணக்கம். ஜோதிடம் என்ற கலையைக் கற்க, அருமையான மூல நூல்கள் பல உண்டு. அவற்றுள், பிருஹத் பராசர ஹோர சாஸ்திரத்திற்கு உள்ள ஒரு தனியான சிறப்பிடம் குறிப்பிடத்தக்கது. இன்று நமக்குக் கிடைக்கும் மற்ற பிற மூல நூல்களுக்கும் கூட மூல நூலாகவும், காலத்தால் முந்தைய, நமக்கு இன்று வரை கிடைக்காத பழம்பெரும் ஜோதிட நூல்களி...
ஜோதிடத்தில் ஆறாம் பாவகம் (பாகம் 2) || ஆர்.ஸ்ரீனிவாசன் || STAR ACADEMY SSS 162
มุมมอง 2K2 หลายเดือนก่อน
ஜோதிடத்தில் ஆறாம் பாவகம் (பாகம் 2) || ஆர்.ஸ்ரீனிவாசன் || STAR ACADEMY SSS 162
ஹர்ஷவர்த்தனர் நாவல் 3 பாகங்கள் & "மைசூர் புலி" திப்பு சுல்தான் | ஆத்தூர் மு.மாதேஸ்வரன் அறிவிப்பு
มุมมอง 1K10 หลายเดือนก่อน
ஹர்ஷவர்த்தனர் நாவல் 3 பாகங்கள் & "மைசூர் புலி" திப்பு சுல்தான் | ஆத்தூர் மு.மாதேஸ்வரன் அறிவிப்பு
ASTROLOGY - BASIC COURSE in English INTRODUCTORY SESSION || VELACHERY BALU || STAR ACADEMY COURSE ||
มุมมอง 1.2Kปีที่แล้ว
ASTROLOGY - BASIC COURSE in English INTRODUCTORY SESSION || VELACHERY BALU || STAR ACADEMY COURSE ||
ஆயுள் நிர்ணய கணிதம்: அஷ்டகவர்க்க ஆயுர்தாய முறை! | அல்லூர் வெங்கட்ராமய்யர் | SA SSS MEETING 102 |
มุมมอง 3.7Kปีที่แล้ว
ஆயுள் நிர்ணய கணிதம்: அஷ்டகவர்க்க ஆயுர்தாய முறை! | அல்லூர் வெங்கட்ராமய்யர் | SA SSS MEETING 102 |
அஷ்டவர்கத்தில் யோகபிந்துக்கள் கணக்கிடும் முறை என்ன? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 353
มุมมอง 1.1Kปีที่แล้ว
அஷ்டவர்கத்தில் யோகபிந்துக்கள் கணக்கிடும் முறை என்ன? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 353
கிரகம் லக்னத்தை பார்த்தல், லக்னாதிபதியை பார்த்தல் - எது சிறப்பு?|வெங்கடேஸ்வரன் ராமசுப்பு| SN 2 - 352
มุมมอง 2.1Kปีที่แล้ว
கிரகம் லக்னத்தை பார்த்தல், லக்னாதிபதியை பார்த்தல் - எது சிறப்பு?|வெங்கடேஸ்வரன் ராமசுப்பு| SN 2 - 352
இறந்தவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் கர்மா பாதிக்குமா ? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 351
มุมมอง 1.4Kปีที่แล้ว
இறந்தவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் கர்மா பாதிக்குமா ? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 351
அஷ்டவர்க பரல்கள் மூலம் நன்மை / தீமை எப்படி அறிவது? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 350
มุมมอง 1Kปีที่แล้ว
அஷ்டவர்க பரல்கள் மூலம் நன்மை / தீமை எப்படி அறிவது? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 350
சந்திரனின் ஒளி அளவை பூமியிலிருந்து கணக்கிட இயலுமா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 349
มุมมอง 497ปีที่แล้ว
சந்திரனின் ஒளி அளவை பூமியிலிருந்து கணக்கிட இயலுமா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 349
ஜனன கால சனி மீது கோச்சார சனி சென்றால்? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 348
มุมมอง 3.1Kปีที่แล้ว
ஜனன கால சனி மீது கோச்சார சனி சென்றால்? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 348
'நீசம்' என்றால் கதை முடிந்ததா? 'விசு'த்தன கேள்விக்கு விவர பதில்! |வெங்கடேஸ்வரன் ராமசுப்பு| SN 2- 347
มุมมอง 1.9Kปีที่แล้ว
'நீசம்' என்றால் கதை முடிந்ததா? 'விசு'த்தன கேள்விக்கு விவர பதில்! |வெங்கடேஸ்வரன் ராமசுப்பு| SN 2- 347
'வளர் ஜாதகம்' என்றால் என்ன? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 346
มุมมอง 1.3Kปีที่แล้ว
'வளர் ஜாதகம்' என்றால் என்ன? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 346
வெள்ளியன்று காசு கொடுக்கக்கூடாதா? செவ்வாயன்று முடி வெட்டக்கூடாதா? |வெங்கடேஸ்வரன் ராமசுப்பு| SN 2-345
มุมมอง 801ปีที่แล้ว
வெள்ளியன்று காசு கொடுக்கக்கூடாதா? செவ்வாயன்று முடி வெட்டக்கூடாதா? |வெங்கடேஸ்வரன் ராமசுப்பு| SN 2-345
யோகினி தசா மூலம் ஒருவரின் மரணத்தை கண்டறிவது எப்படி? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2- 344
มุมมอง 1.3Kปีที่แล้ว
யோகினி தசா மூலம் ஒருவரின் மரணத்தை கண்டறிவது எப்படி? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2- 344
தாத்தா-அப்பா-பிள்ளை மூவருக்கும் ராகு-கேது-சுக்ரன் ஒரே இடத்திலா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு| SN 2- 343
มุมมอง 634ปีที่แล้ว
தாத்தா-அப்பா-பிள்ளை மூவருக்கும் ராகு-கேது-சுக்ரன் ஒரே இடத்திலா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு| SN 2- 343
சாந்திமுகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் குறிக்கவேண்டியது அவசியமா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2- 342
มุมมอง 700ปีที่แล้ว
சாந்திமுகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் குறிக்கவேண்டியது அவசியமா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2- 342
சுக்கிரன் எதிரில் இருக்கும்போது கிரகப்பிரவேசம் செய்யக்கூடாதா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2- 341
มุมมอง 843ปีที่แล้ว
சுக்கிரன் எதிரில் இருக்கும்போது கிரகப்பிரவேசம் செய்யக்கூடாதா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2- 341
வான் மண்டலத்தை 12 ராசிகளாக ஏன் - எப்படி பிரித்தார்கள்? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | S N 2 - 340
มุมมอง 573ปีที่แล้ว
வான் மண்டலத்தை 12 ராசிகளாக ஏன் - எப்படி பிரித்தார்கள்? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | S N 2 - 340
ஒருவர் ஜோதிடராவதற்கு அவரின் ஜாதக கட்டம் முக்கியமா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | S N 2 - 339
มุมมอง 1.8Kปีที่แล้ว
ஒருவர் ஜோதிடராவதற்கு அவரின் ஜாதக கட்டம் முக்கியமா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | S N 2 - 339
உயிர்வாழ காரணமான சூரியனை அசுப கிரகம் என்பது சரியா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | S N 2 - 338
มุมมอง 799ปีที่แล้ว
உயிர்வாழ காரணமான சூரியனை அசுப கிரகம் என்பது சரியா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | S N 2 - 338
"சனி கொடுத்தால் யார் தடுப்பார்?" என்ற பழமொழி உண்மைதானா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | S N 2 - 337
มุมมอง 992ปีที่แล้ว
"சனி கொடுத்தால் யார் தடுப்பார்?" என்ற பழமொழி உண்மைதானா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | S N 2 - 337
தந்தையின் ஆயுட்காலம் மகனின் ஜாதகத்தில் தெரியுமா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | S N 2 - 336
มุมมอง 1.8Kปีที่แล้ว
தந்தையின் ஆயுட்காலம் மகனின் ஜாதகத்தில் தெரியுமா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | S N 2 - 336
புனர்பூ தோஷமிருந்தால் திருமண வாழ்க்கை என்னவாகும்? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | S N 2 - 335
มุมมอง 1.5Kปีที่แล้ว
புனர்பூ தோஷமிருந்தால் திருமண வாழ்க்கை என்னவாகும்? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | S N 2 - 335
நிழல் கிரங்களான ராகு / கேது அத்தனை பயங்கரமானவர்களா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 334
มุมมอง 899ปีที่แล้ว
நிழல் கிரங்களான ராகு / கேது அத்தனை பயங்கரமானவர்களா? | வெங்கடேஸ்வரன் ராமசுப்பு | SN 2 - 334

ความคิดเห็น

  • @shreeja3320
    @shreeja3320 31 นาทีที่ผ่านมา

    Excellent explanations sir, thank you so much, what ever you said is hundred percent matching

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 ชั่วโมงที่ผ่านมา

    அய்யா வாழ்க்கை என்பது பிறந்தவருக்கான வாழ்நாள் தேர்வுகள் என்றே கருதுகிறேன். பாவிகள் புண்ணியம் செய்தால் வென்றவராவர். புண்ணியர் பாவம் ஏதும் செய்யாதிருந்தால் வென்றவர் ஆவார். வென்றவர்கள் பிறப்பறுக்கும் பாக்கியம் பெறுவர். மற்றோர் பிறப்புச் சங்கிலியில் தொடர்வர்.

  • @asmanogar2079
    @asmanogar2079 3 ชั่วโมงที่ผ่านมา

    மிக வித்தியாசமான, அற்புதமான, நேர்த்தியான ஜோதிஷ விளக்கவுரை - மிக மிக அருமை.👌👍💐🙏💐🙏💐.🙏💐

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 6 ชั่วโมงที่ผ่านมา

    8 விதிகள் Supper, அதில் 3 விதி High Light என்பதுவும் excelent,

  • @kavikavi6143
    @kavikavi6143 วันที่ผ่านมา

    நன்றி ஐயா 🙏

  • @R_Sambasivam
    @R_Sambasivam วันที่ผ่านมา

    I had made an error in my understanding of Karakamsha lagna, in this talk. As per Parasara, Karakamsha is only the navamsa of Atma karaka. The results of Karakamsha should be seen only in Navamsa. There is no need to bring that to the rasi chart. Since Parasara speaks about Swamsa and Karakamsha in the same section, I got misled by few other scholars’ understanding. Karakamsha is called Swamsha when atmakaraka is in own sign in Navamsa. Sorry for the misinformation! Thanks

  • @R_Sambasivam
    @R_Sambasivam วันที่ผ่านมา

    இந்தப் பதிவில், நான் காரகாம்ச லக்னம் எடுத்தது தவறு! காரகாம்சம், ஆத்மகாரகன் நவாம்சத்தில் இருக்கும் இடம் என்பது தான், சரி! எனவே, காரகாம்சம் நவாம்சத்தில் மட்டுமே பார்க்கப் பட வேண்டும். நான் சொன்னது போல, அதை ராசி சக்கரத்தில் எடுத்து வரக் கூடாது. பராசரர், ஆத்ம காரகன் நவாம்சத்தில் ஆட்சியாக இருந்தால் அதற்கு ஸ்வாம்சம் என்ற சொல்லைப் பயன்படுத்தி, தனியான பலனைச் சொல்லி இருக்கிறார். எனவே தான் அடுத்தடுத்த ஸ்லோகங்களில் ஸ்வாம்சம், காரகாம்சம் என்ற இரண்டு பலன்களும் சில நேரங்களில் சொல்லப்படுவதால், வேறு சில ஆசிரியர்கள் சொன்ன விளக்கத்தைப் பயன்படுத்தி, காரகாம்சத்தை நவாம்சத்தில் இருந்து ராசி சக்கரத்திற்கு எடுத்து வர வேண்டும் (நவாம்சத் துல்ய ராசி என்ற அடிப்படையில்) என்று புரிந்து வைத்திருந்தேன். மீண்டும் பல முறை அந்த பிருஹத் பராசர ஹோர சாஸ்திர அத்தியாயத்தைப் பல முறை படித்த பிறகு, என் புரிதல் தவறு என்று இப்பொழுது தெளிவாகப் புரிகிறது. எனவே, காரகாம்சம், நவாம்சத்தில் ஆத்ம காரகன் இருக்கும் இடம் மட்டுமே! எனவே பராசரர் சொல்லும் காரகாம்சப் பலன்கள் அனைத்தும் நவாம்சத்திற்கு மட்டுமே! பராசரர், கூடுதலாக ஆத்ம காரகன் நவாம்சத்தில் ஆட்சியாக இருந்தால் அதை ஸ்வாம்சம் என்று அழைத்து பலன்களை வேறுபடுத்திக் காட்டி இருக்கிறார். என் தவறான புரிதலிற்கு வருந்துகிறேன். நன்றி

  • @R_Sambasivam
    @R_Sambasivam วันที่ผ่านมา

    வணக்கம்! காரகாம்சம் பற்றி, மருந்துவ குரு திரு ஆர் ஶ்ரீநிவாசன் ஐயா அவர்கள் புரிதல் சரி! காரகாம்சம், ஆத்மகாரகன் நவாம்சத்தில் இருக்கும் ராசி தான், காரகாம்சம்! எனவே அவர் சொன்னது போல, காரகாம்சம் நவாம்சத்தில் தான் பார்க்கப் பட வேண்டும். பராசரர், ஆத்ம காரகன் நவாம்சத்தில் ஆட்சியாக இருந்தால் அதற்கு ஸ்வாம்சம் என்ற சொல்லைப் பயன்படுத்தி, தனியான பலனைச் சொல்லி இருக்கிறார். எனவே தான் அடுத்தடுத்த ஸ்லோகங்களில் ஸ்வாம்சம், காரகாம்சம் என்ற இரண்டு பலன்களும் சில நேரங்களில் வருகிறது. என் தவறான புரிதலிற்கு வருந்துகிறேன். இந்தப் பதிவைப் பார்ப்பவர்கள், என் கருத்தைப் புறக்கணிக்கவும். நன்றி

  • @rajaraamanjs3625
    @rajaraamanjs3625 วันที่ผ่านมา

    Thanks for this great service. Able to understand the meaning of the sloka after so long.

    • @R_Sambasivam
      @R_Sambasivam วันที่ผ่านมา

      Thanks a lot 🙏

  • @subhasree-j3h
    @subhasree-j3h 3 วันที่ผ่านมา

    இந்த வீடியோவை 2 நாட்களாக வேலை பளு காரணமாக பார்க்க முடியவில்லை. நல்ல கர்மம் மற்றும் கொடுப்பினை இருந்தால்தான் சிறந்த விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் என்று கூறுவார்கள் . அதனால் தான், ஒவ்வொரு வீடியோவிலும் பார்வையாளர் எண்ணிக்கை குறைகிறது என்று நினைகிக்கிறேன் . ஆனால் பின்வரும் நாட்களிலிலோ அல்லது பின்வரும் சமுதாயத்திற்கோ கண்டிப்பாக பயன்படும் ஒரு பொக்கிஷம் இது .பிரபஞ்ச ரகசியம் போல உள்ள இந்த ஜோதிடக் கலையை படிக்க பல தடைகளில் இதுவும் ஒன்று.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 2 วันที่ผ่านมา

      உங்கள் பின்னூட்டத்திற்கும், இந்தப் பயணத்தில் தொடர்ந்து வருவதற்கும் நன்றி.

  • @theniyinsaral7829
    @theniyinsaral7829 3 วันที่ผ่านมา

    Arumai ayya

  • @karaikudikitchen6114
    @karaikudikitchen6114 4 วันที่ผ่านมา

    வாழ்க நீர் எம்மான் பராசரரை அரியவைக்கும் நீர் நீடுழி வாழ்க

    • @R_Sambasivam
      @R_Sambasivam 4 วันที่ผ่านมา

      நன்றி. நான் ஒரு சாதாரண, துவக்கநிலை பராசரரின் மாணவன் மட்டுமே! நாம் அனைவரும் சேர்ந்து பராசரரைக் கற்போம். நன்றி

  • @tamilnovel9112
    @tamilnovel9112 4 วันที่ผ่านมา

    அருமையான பதிவு சார்... பொன்னெழுத்துக்களால் பொறிக்கபட வேண்டிய பதிவு சார்...இதை மக்களுக்கு எளிமையாக புரிய வைத்த சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு மிக மிக நன்றி..🙏🙏🙏.. இந்த பதிவுகள் கண்ணில் படுவதற்கே பல ஜென்மாக்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்...🙏🙏🙏..பராசர மகரிஷியே தங்கள் வடிவில் எங்களுக்கு உபதேசம் செய்கிறார் 💯🙏🙏🙏

    • @R_Sambasivam
      @R_Sambasivam 4 วันที่ผ่านมา

      @@tamilnovel9112 உங்களுடைய பின்னூட்டத்திற்கும், தொடர்ந்த பயணத்திற்கும் மிக்க நன்றி

  • @aimlastrology
    @aimlastrology 4 วันที่ผ่านมา

    சிறப்பான மொழிபெயர்ப்பு மற்றும் உரை. மிக்க நன்றி! இலக்கினம் என்பது பருப்பொருளாக அன்றி கணிதப் புள்ளியாக அமைவதால் கிரகங்களுக்கு சொல்லப்பட்ட உயிர் காரகத்துவங்கள் அதற்கு வழங்கப்பட இயலாது என்று பொருள் எடுக்க சாத்தியம் உண்டா? எவ்வளவு அடித்துச் சொன்னாலும் இந்த வாக்கியப் பஞ்சாகங்கத்தில் மாட்டிக்கொண்டு வெளியேற மறுக்கும் தமிழ் சோதிடர்களையும் அதற்கு வியாபார நோக்கம் கருதி பஞ்சாங்கம் போடும் பதிப்பாளர்களையும் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனது அடுத்த வகுப்பு வாக்கியத்தை பற்றியதே. அது ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றித்தான் பேச இருக்கிறேன்.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 4 วันที่ผ่านมา

      உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி! தத்வஷ (tadvasha) என்ற சொல்லிற்கு, காத்திருந்து (longing for that) அல்லது விரும்பி (desirous of that) என்று பொருள் வருகிறது. அதேவ (adeva) என்றால் இறை அல்லாத உயிர்கள் என்று பொருள் கொள்ளலாம். எனவே, இதை நான் இறையல்லாத மற்ற உயிர்கள் பிறக்கும் பொழுது, உதிக்கும் ராசியை லக்னம் எனக் கொள்ளலாம் என்று பொருள் சொன்னேன் (விரும்பி - தத்வஷ என்ற சொல்லிற்கு, அந்த உதய ராசி மண்டலப் புள்ளியை விரும்பி என்பதாகப் பொருள் கொண்டிருக்கிறேன் - by keenly assessing/desiring the rising zodiacal longitude என்று!). எனவே இன்று நம்மிடையே பலரும் சொல்லும் ராமர் ஜாதகம், அனுமார் ஜாதகம் என்று பேசும் கடவுளர் ஜாதகங்களைப் பராசரர் ஊக்குவிக்கவில்லை எனப் பொருள் கொள்ளலாம் (இறை சக்தி, அவதாரமாக இந்த உலகில் வரும் பொழுது, நாம் பயன்படுத்தும் லக்னம் சரியாக இருக்காது என்று பராசரர் சொல்வதாக நான் புரிந்து கொள்கிறேன். நாம் பயன்படுத்தும் லக்னம், இறை அல்லாத மற்ற பிறப்புகளுக்குத் தான்!). நான் தேடியவரை வேறு பொருள் எதுவும் கிடைக்கவில்லை. மற்ற மொழிபெயர்ப்பாளர்கள், இந்தச் சொல்லைக் கண்டுகொள்ளாமல் (இந்தச் சொல்லை மொழிபெயர்க்கவில்லை என்ற ஒரு footnote கூட இல்லாமல்) கடந்து சென்று விட்டார்கள். வேறு ஏதேனும் மொழிபெயர்ப்போ சிந்தனையோ கிடைத்தால் சொல்கிறேன். நன்றி

    • @R_Sambasivam
      @R_Sambasivam 4 วันที่ผ่านมา

      வாக்கியப் பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் பற்றி வானியல் பார்வையில், கிரகங்கள் இருக்கும் இடத்தை வைத்து ஒரு ஒப்பீடு செய்து, எதிர் வரும் உங்கள் தளப் பதிவில் காட்டுங்கள். ஏற்கெனவே ஒரு பஞ்சாங்கத்தைப் பின்பற்றுபவர்களை மாற்றுவது இயலாது; கடினம்! நம்மால் செய்ய முடிவது, அடுத்து வரும் இளந்தலைமுறை ஜோதிடர்களுக்கு அறிவியல் வழியான ஒப்பீடு மூலம் எது சரி என்று காட்டுவது மட்டுமே, என்பது என் கருத்து! நன்றி

    • @RAMESHT1976
      @RAMESHT1976 2 วันที่ผ่านมา

      ​@@R_Sambasivam நன்றி! அது போல ஸ்டார் அகாடமி குழுவில் பயணித்த காலத்தில் பதிவிட்டு இருக்கிறேன். அதனோடு இன்னும் விரிவாக தர்க்க பூர்வமாக விளக்கத் திட்டமிட்டுள்ளேன்.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 2 วันที่ผ่านมา

      வாக்கியப் பஞ்சாங்கம் / திரிக் கணிதப் பஞ்சாங்கம் - இவை இரண்டையும் வைத்து வான மண்டலத்தில் கிரகங்கள் இருக்கும் இருப்பிடம் எதன் படி சரியாக இருக்கிறது (எனக்கு இதற்கான விடை தெரியும் 😊) என்பதையும் புள்ளியியல் பார்வையில் நீங்கள் விளக்கலாம். இந்தக் குழப்பத்தில் ஏற்கெனவே சிக்கிக் கொண்டவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இனி வரும் தலைமுறை, தர்க்கம் சார்ந்த பதிவுகளைப் பார்த்து மாறும். மாற்றம், சில நேரங்களில் மெல்லத் தான் நடக்கிறது. காத்திருக்கத் தான் வேண்டும். வேறு வழியில்லை. நன்றி

  • @aadhithyabalupillai2868
    @aadhithyabalupillai2868 4 วันที่ผ่านมา

    வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு அற்புதமான விளக்கம் திருக்கணித முறையில் பராசரர் கிரகங்களை கணக்கிட வேண்டும் என்று தெளிவாக நம்மளுக்கு சொல்லி இருக்கின்றார்கள் அதை மிக அற்புதமாக எடுத்துரைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி மேலும் இந்த காணொளி மிக சிறப்பாக வர எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமானை வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன்

    • @R_Sambasivam
      @R_Sambasivam 4 วันที่ผ่านมา

      நன்றி. திரிக் கணிதம் - கிரக ஸ்புடங்களைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கொள்ளுதல், இவை இரண்டையும் பராசரர் தெளிவாகச் சொல்கிறார். தங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி.

  • @vijayashanmugam4980
    @vijayashanmugam4980 5 วันที่ผ่านมา

    🙏வணக்கம் ஐயா தங்களின் பொன்னான நேரத்தில் என்போன்றோருக்கும் நேரம் செலவு செய்து அருளியதற்கு மிக்க நன்றிகள் பல🙏🙏🙏

    • @R_Sambasivam
      @R_Sambasivam 5 วันที่ผ่านมา

      உங்களது தொடர்ந்த ஆர்வத்திற்கு நன்றி 🙏

  • @2801v
    @2801v 5 วันที่ผ่านมา

    🙏

  • @aasaithambi8758
    @aasaithambi8758 5 วันที่ผ่านมา

    Excellent explanation Sir. Thank you very much. ❤❤❤❤❤❤❤❤❤

    • @R_Sambasivam
      @R_Sambasivam 5 วันที่ผ่านมา

      Thanks a lot

  • @asmanogar2079
    @asmanogar2079 5 วันที่ผ่านมา

    நல்ல விளக்கவுரை. ஜோதிஷ விஞ்ஞானி Dr. சாம்பசிவம் ஐயா அவர்களுக்கும், ஸ்டார் அகடாமிக்கும நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏

    • @R_Sambasivam
      @R_Sambasivam 5 วันที่ผ่านมา

      நன்றி ஐயா

  • @rmtlpg194
    @rmtlpg194 5 วันที่ผ่านมา

    Dear Sir, Very excellent, Thank you.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 5 วันที่ผ่านมา

      Thanks a lot for your encouraging feedback

  • @vikiraman8398
    @vikiraman8398 6 วันที่ผ่านมา

    KP - KRISHNAMOORTHY PATHATHI NIRAYA SIGNIFICATOR KATTUM Ethu Seyal PADUM NU KRISHNAMOORIKE THERIYUM.

  • @vikiraman8398
    @vikiraman8398 6 วันที่ผ่านมา

    SIR WHAT AYANAMSA you USED IN THIS KALA CHAKRA DASA.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 6 วันที่ผ่านมา

      True Lahiri

    • @vikiraman8398
      @vikiraman8398 6 วันที่ผ่านมา

      ​​Why no pusyapaksa, if pusya pakaaha is rigt it applys to all types of dasa right because lahiri and pusya dasa differnce 1 year..​@@R_Sambasivam

  • @vikiraman8398
    @vikiraman8398 6 วันที่ผ่านมา

    NEXT LAGNA TARA DASA.

  • @vikiraman8398
    @vikiraman8398 6 วันที่ผ่านมา

    AMAZING Explanations.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 6 วันที่ผ่านมา

      Thanks a lot

  • @vikiraman8398
    @vikiraman8398 7 วันที่ผ่านมา

    வருக வருக 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Mithusuresh7958
    @Mithusuresh7958 7 วันที่ผ่านมา

    பணத்துகாக ஜோதிடத்தை வியபாரம் செய்யும் கயவர்.பணம் என்ற நிலை வருவதால் எமற்று பொய் எல்லாம் ஜோதிடத்தில் ஒட்டிகொள்கின்றது.தன்னை எல்லாம் தெரிந்த கடவுளக கட்டுகின்றார்

    • @R_Sambasivam
      @R_Sambasivam 6 วันที่ผ่านมา

      ஏமாறுபவர்களும் ஏமாற்றுபவர்களும் அனைத்துத் துறைகளிலும் இருக்கிறார்கள். தெரியாமல் செய்யும் பிழைகளுக்கும், தெரிந்தே ஏமாற்றுவதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்வதும் இன்றியமையாதது என்று நினைக்கிறேன்.

  • @tourism3606
    @tourism3606 7 วันที่ผ่านมา

    Out of subject

  • @subhasree-j3h
    @subhasree-j3h 8 วันที่ผ่านมา

    சிலர் தாங்கள் கற்றுக்கொள்ளாத, படிக்காத விஷயங்களை பற்றிச் சரியாய் தெரியாமலே தாழ்வாக பேசுகிறார்கள் என்பதைக் குறித்து சில நேரங்களில் நான் உண்மையிலேயே ஆச்சரியப்படுகிறேன். ஜோதிடம் ஒரு கலை மற்றும் அறிவியல். நீங்கள் இதைப் பற்றி படிக்கவோ, அறியவோ இல்லை என்றால் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க கூடாது. சிலர் தவறான ஜோதிடர்களால் மோசமான அனுபவம் ஏற்பட்டபோதிலும், அதற்காக ஜோதிடத்தை முழுமையாக இழிவாகச் சொல்லவோ அல்லது கடுமையாக விமர்சிக்கவோ கூடாது. இது ஒரு பொது மரியாதை. இதை சிலர் கடைப்பிடிக்க தவறுவது ஏன் ?

  • @asmanogar2079
    @asmanogar2079 8 วันที่ผ่านมา

    ஜோதிஷ விஞ்ஞானி உயர் திரு சாம்பசிவம் ஐயா அவர்கள் உரை மிக அருமை👌👍ஸ்டார் அகடாமிக்கும், ஜோதிஷ மாணவர்களாக எங்களுக்கும் கிடைத்த அரிய பொக்கிஷம்🙏🙏🙏

    • @R_Sambasivam
      @R_Sambasivam 8 วันที่ผ่านมา

      நன்றி ஐயா

  • @pvparikesh7077
    @pvparikesh7077 8 วันที่ผ่านมา

    Vazha vazhamudan sir

  • @vsmohan432
    @vsmohan432 9 วันที่ผ่านมา

    அட வெட்டி வெண்ணெய்களா...

  • @jaganathan6501
    @jaganathan6501 9 วันที่ผ่านมา

    ஸ்ரீ சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு வணக்கம்.உங்களின் உழைப்பு அபரிதமானது.என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் . தாங்கள் ஒரு ஸ்லோகத்தை சொல்லி முழு அர்த்தத்யும கூறுகிறீர்கள் அதுவே போதுமானது. ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லும் பொழுது காலதாமதம் ஏற்படுகிறது.என்னை தவறாக நினைக்க வேண்டாம்.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 9 วันที่ผ่านมา

      உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இந்தப் பதிவின் நோக்கம் பிருஹத் பராசர ஹோர சாஸ்திரத்தை முழுமையாக அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே! ஸ்லோகத்திற்கான பொருளை மட்டும் தரும் பராசர நூல்கள் பல இருக்கின்றன. மொத்தமாகப் பொருள் சொல்லும் பொழுது, சில சொற்கள் விடுபட்டு அவற்றின் பொருள் தெரியாமல் போகிறது. நீங்கள் என் முன்னுரையைக் கேட்டிருந்தீர்கள் என்றால் அதில் இந்த முநற்சிக்கான தேவை என்ன என்பதை நான் விளக்கி இருக்கிறேன். உங்கள் கருத்திற்கு நன்றி. வேறு யாரேனும் இது போன்ற கருத்தை முன் வைக்கிறார்களா என்று பார்ப்போம். 🙏

  • @kamalisrig2019
    @kamalisrig2019 9 วันที่ผ่านมา

    100% True 👌👌

  • @nkausalya851
    @nkausalya851 10 วันที่ผ่านมา

    Thank you

    • @R_Sambasivam
      @R_Sambasivam 10 วันที่ผ่านมา

      நன்றி

  • @subhasree-j3h
    @subhasree-j3h 11 วันที่ผ่านมา

    எவ்வளவு மெனக்கெடல்! நீங்கள் பல புத்தகங்களை ஆய்வு செய்து எங்களுக்காக இவ்வளவு சுருக்கமான மற்றும் தெளிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு மனமார்ந்த நன்றி!

    • @R_Sambasivam
      @R_Sambasivam 10 วันที่ผ่านมา

      உங்கள் பின்னூட்டத்திற்கும், தொடர்ந்த ஆர்வத்திற்கும் நன்றி!

  • @subhasree-j3h
    @subhasree-j3h 11 วันที่ผ่านมา

    நீங்கள் பாரசுரரின் நூலை தமிழில் விளக்கத்துடன் கற்றுக்கொடுக்கும் அற்புதமான முயற்சிக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த குழுவின் உழைப்பும், அக்கறையும் என் மனதை நெகிழச்செய்து இருக்கிறது. அவர்களின் கடின உழைப்பிற்கும், அறிவை இலவசமாக வழங்கும் மனநலனிற்கும், இதயங்கனிந்த நன்றி மற்றும் கடவுளின் ஆசியை கேட்கிறேன்.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 10 วันที่ผ่านมา

      உங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி

  • @ramumani806
    @ramumani806 11 วันที่ผ่านมา

    Excellent. Good effort❤

    • @R_Sambasivam
      @R_Sambasivam 11 วันที่ผ่านมา

      Thanks a lot

  • @SelviR-j4f
    @SelviR-j4f 11 วันที่ผ่านมา

    மும்மூர்த்திகளை பெரிய விஷயம் நான்கு மூர்த்தி வெங்கடாஜலபதி ஈஸ்வரன் ராமன் சுப்பிரமணி வெங்கடேஸ்வரன் ராம சுப்பையா ஐயா தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @aimlastrology
    @aimlastrology 11 วันที่ผ่านมา

    வணக்கம். விரிவான விளக்கங்கள் அருமை. சுலோகங்களின் வரிசை மற்றும் வைப்பு முறையை உற்றுக் கவனித்தால் இந்த சாஸ்திரம் ஏதோ ஒரு கேள்வி பதிலாக இல்லாமல் முறையாக ஒரு வரிசை பேணி தொகுக்கப்பட்டு இருப்பதை ஊகிக்க இயலும். யார், ஏன் ஜோதிடம் பயில வேண்டும் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய குறிப்புகள் மைத்ரேயரின் வினாக்களுடன் இயல்பில் பொருந்தாமல் பராசர முனிவர் வலிந்து கூறியதைப் போல இருப்பதாக நான் உணர்கிறேன். கூறப்பட்டவை யாவும் நல்ல விடயங்கள் என்ற போதிலும் அவை சோதிடம் கற்பதை காக்க வேண்டி சொல்லப்பட்டவையாக நான் பார்க்கிறேன். சோதிடத்தை நிந்தனை செய்பவர்களை தாண்டி தவறாக பேசி, பயன்படுத்துபவர்களுக்கு நரகம் கிடைக்கும் எனில் அடுத்த பிறவியில் அந்த நரகத்தில் முதல் வரிசையில் இருக்கப் போவது இன்றைக்கு மக்களிடம் பிரபலமான தமிழ் சோதிடர்களாக இருக்கக் கூடும்! 😊

    • @R_Sambasivam
      @R_Sambasivam 11 วันที่ผ่านมา

      உங்களது நீண்ட தெளிவான பார்வைக்கு நன்றி. நீங்கள் சொன்னது போலவும் இருக்கலாம். நான் முன்பொரு உரையில் சொன்னது போல, அத்தியாயங்கள், அவற்றின் பெயர்கள் கூட பிற்காலத்தில் தொகுத்தவர்கள் செய்தது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்தக் கருத்துகள் இடைச் சேர்க்கை இல்லை என்பதற்கான சில விளக்கங்களும் தரலாம் என்று நினைக்கிறேன். பராசரர், ஒரு பேராசிரியரைப் போல, மாணவர் கேட்கும் ஒரு கேள்விக்கு நேரடியான பதிலைத் தராமல் நீண்ட ஒரு பதிலைத் தருவதைப் பார்க்க முடிகிறது. எனவே அவர், இதை மைத்ரேயருக்கு மட்டுமான பதிலாக இல்லாமல், நம்மைப் போன்ற ஞானம் குறைந்தவர்களுக்குமான ஒரு உரையாகக் கொண்டு செல்வதால் (லோகாநுக்ரஹகாரினா என்ற சொல்லைச் சில இடங்களில் அவர் சொல்கிறார்), மைத்ரேயருக்குத் தெரிந்திருந்தாலும் கூட, நமக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகக் கூட சில கருத்துகளைச் சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது. அது போல, இது திட்டமிடப் பட்டு செய்யப் பட்ட நூல் அல்ல; நமக்குத் தெரிந்த வரை, பராசரரை மைத்ரேயர் கேட்க அவர் சொன்ன பதில்கள் என்பதாகவே, இந்த நூல் இருக்கிறது (பண்டைய சமஸ்க்ருத நூல்களில், நேரடியாக நூலாசிரியரே பேசும் நூல்களும் உண்டு; கேள்வி பதிலாக உள்ள நூல்களும் உண்டு. எனவே, நேரடியாக எழுதப் படும் நூல்களும் இருக்கிறது என்பதால், பராசரர் விரும்பி இருந்தால், மைத்ரேயருக்கு இடம் தராமல், இதை அவரது நூலாகவே செய்து இருக்கலாம்). எனவே, பராசரர் தன் சிந்தனைக்கு வந்த செய்திகளை அப்படியே எடுத்துப் பேசுவதால் சில இடங்களில், சற்றே தொடர்பற்ற கருத்துகள் இருக்கலாம்; இது போன்ற தன்மையும் இந்த நூலின் மூலத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. நன்றி.

    • @aimlastrology
      @aimlastrology 11 วันที่ผ่านมา

      ​@@R_Sambasivamதங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி

  • @Karthiban.V
    @Karthiban.V 11 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா. தங்களின் ஒவ்வொரு பதிவும் விலை மதிப்பில்லாத அறிவு பொக்கிஷங்கள். நன்றி ஐயா. ஐயா ஒரு சிறு வேண்டுகோள் குரல் பதிவு மிகவும் குறைவாக கேட்கும்படியாக உள்ளது. சிறிது sound volume அதிகபடுத்தினால் சிறப்பாக இருக்கும் ஐயா. நன்றி.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 11 วันที่ผ่านมา

      உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நான் ஏற்கெனவே சில பதிவுகளைச் செய்து முடித்து விட்டதால், இன்னும் வரும் சில பதிவுகளை அடுத்து வரும் பதிவுகளில் சற்று குரல் கூடி வரும் பதிவுகளாக இருக்கும். சில வாரங்கள் சென்ற பிறகு, குரல் சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். நன்றி

    • @Karthiban.V
      @Karthiban.V 11 วันที่ผ่านมา

      @@R_Sambasivam நன்றி ஐயா.

  • @ragukm4560
    @ragukm4560 12 วันที่ผ่านมา

    வணக்கம் பிறவித்தளையிலிருந்து விடுபட்டு வீடுபெற்ற (மோட்சமடைந்த) ஜீவாத்மாக்கள் அனைவரும் ஜோதிட ஞானத்தையும் ஏதோ ஒரு விதத்தில் முழுமையாக அடைந்தவர்களாக இருப்பர் என்ற புரிதல் சரிதானா? நன்றி..

    • @R_Sambasivam
      @R_Sambasivam 11 วันที่ผ่านมา

      மிகவும் அருமையான சிந்தனை! எனக்குத் தெரிந்த விளக்கத்தைத் தருகிறேன். ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். பராசரர், இறையின் தன்மையையும், கர்மா பற்றிய புரிநலையும், ஒவ்வொரு ஆத்மாவும் எடுக்கும் தொடர் பிறவி என்ற சங்கிலியையும் பற்றி உணர்ந்து, இந்தத் தொடர்பிறவியில் இருந்து ஜீமாத்மா விடுபட ஒரு வழியாக ஜோதிடத்தைச் சொல்கிறார். ஜோதிடத்தை வேதத்தின் கண்ணாகச் சொல்வதால், செல்லும் பாதையைச் சரியாகப் பார்க்க கண் தேவை - எனவே ஜோதிடம், ஒருவர் இறை வழியில் செல்லும் பாதையைக் காட்டுகிறது என்றும் சொல்லலாம். ஆனால், ஜோதிடம் மட்டுமே ஒரே வழி; வேறு வழி இல்லை என்று பராசரர் சொல்லவில்லை. எனவே ஜோதிடத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டால், பிறவியில் இருந்து விடுபடலாம் என்றே நான் புரிந்து கொள்கிறேன். அதைத் தவிர, பக்தி போன்ற மற்ற வழிகளில் செல்பவர்கள் கூட விடுபடலாம் என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் சொன்ன படி, இந்தப் பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டவர்களில் பலர் ஜோதிடம் என்ற வழியைப் பின்பற்றி இருப்பார்கள்; ஆனால் வேறு சிலர், மற்ற வழிகளையும் பின்பற்றி இருக்கலாம் என்பது என் கருத்து! ஆனால் மற்ற வழிகளில் செல்வதற்கும், ஜோதிடம் உதவியாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லுங்கள். நன்றி

  • @nathankulandaivel464
    @nathankulandaivel464 12 วันที่ผ่านมา

    Sir, North India people write "poosam" Star as "pushya" star. May be the questioners intention is to ask about poosam stars padam.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 12 วันที่ผ่านมา

    வணங்குகிறேன் ஐயா" 🙏🙏🙏🙏🙏

  • @aadhithyabalupillai2868
    @aadhithyabalupillai2868 12 วันที่ผ่านมา

    வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் மிகச்சிறப்பு

    • @R_Sambasivam
      @R_Sambasivam 12 วันที่ผ่านมา

      நன்றி ஐயா 🙏

  • @vijayashanmugam4980
    @vijayashanmugam4980 12 วันที่ผ่านมา

    🙏அருமையான பதிவாக இருந்தது மிக்க நன்றி ஐயா🙏🙏

    • @R_Sambasivam
      @R_Sambasivam 12 วันที่ผ่านมา

      உங்கள் தொடர்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி 🙏

  • @vikiraman8398
    @vikiraman8398 12 วันที่ผ่านมา

    டாக்டர். திரு. சம்பசிவம் ஐயா உங்கள் அணைத்து விடியோவும் பார்த்து ரசித்தேன். நீங்கள் எல்லோருக்கும் விஷயஞா னம் உயர்த்தலத்தில் அளித்து வரலாற்றில் இடம் பெற்று விட்டிர்கள், பல கோடி நன்றிகள். உங்கள் வேலை ப்ரமிக்க வைக்கிறது.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 12 วันที่ผ่านมา

      தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா! 🙏

  • @murugesank5546
    @murugesank5546 12 วันที่ผ่านมา

    அவதாரமும் நவகிரக ஒப்பிடும் மிகவும் அருமை ஐயா🙏.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 12 วันที่ผ่านมา

      நன்றி ஐயா! அனைத்தும் பராசரர் சொன்னதே! 🙏

  • @arulnayagisubramaniaiyer4937
    @arulnayagisubramaniaiyer4937 12 วันที่ผ่านมา

    🙏🙏

    • @R_Sambasivam
      @R_Sambasivam 12 วันที่ผ่านมา

      நன்றி

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 12 วันที่ผ่านมา

    உயர்ந்த படைப்பு🙏🙏🙏

    • @R_Sambasivam
      @R_Sambasivam 12 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @manoharansm2746
    @manoharansm2746 12 วันที่ผ่านมา

    தங்களின் விளக்கம் அருமை.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 12 วันที่ผ่านมา

      நன்றி