ஜோதிடத்தின் ஒரு பகுதியான ஜாதக கணிதம் என்பது வேப்பங்காய் போன்ற கசப்பான ஒரு பாடம், இருப்பினும் கசப்பு சுவையே நோயை குணப்படுத்தும் ஒரு அருமருந்தாகும். எனவே ஜோதிடத்தில் உள்ள குழப்பம் தெளிய அழகிய தமிழ் மொழியில் ஜாதக கணிதம் என்னும் அருமருந்தை வழங்கிய உயர்திரு சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு முதற்கண் நன்றி.👃👃👃 இந்த காணொளி மூலம் எனது புரிதலாக ஜோதிட கணிதத்தின் பரிணாம வளர்ச்சியாக ராசியே பாவமா? சம பாவமா? ஸ்ரீபதி பத்ததி ? என அமைந்திருப்பதாக கருதுகின்றேன். நன்றி 👏👏👏
நீங்கள், பரிணாம வளர்ச்சியாக ராசியே பாவகம், சம பாவகம் மற்றும் ஶ்ரீபதி பத்ததி அமைந்திருப்பதாகக் கருதுவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். அதாவது முதலில் ராசியையே பாவகமாகக் கொள்ளும் முறையும், பிற்காலத்தில் ஶ்ரீபதி பத்ததி போன்ற முறை உருவாகி இருக்கும் என்பது உங்கள் கருத்து என்று புரிந்து கொள்கிறேன். இதுவே பலரின் கருத்தாகவும் இருக்கிறது. ஆனால் பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் மற்றும் நம்மிடம் உள்ள சித்தாந்த நூல்கள் காலத்தால் 2000-2500 ஆண்டுகளாவது பிற்பட்டது என்பது உண்மையானால், அவர்கள் அந்த நாளிலேயே கண்டறிந்த வானியல் மற்றும் கணித மேதமை, இன்றும் நம் புரிதலிற்கு அப்பாற்பட்டது. ராசி மண்டலம் என்ற இடத்திற்கு இடம் தோற்றத்தில் மாறுபடுகின்ற, புவி மையத்திலும்/காட்சித் தளப் பார்வையிலும் வேறுபடுகின்ற ஒன்றை, பல்பா என்ற ஒற்றை அளவையில் சுருக்கி விடுகின்ற அந்த மேதமை, நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அப்படியான மேதமை கொண்ட அந்தக் கால அறிஞர்கள், ஏன் ஶ்ரீபதி பத்ததி போன்ற கணிதமுறையை அப்பொழுதே உருவாக்கி இருக்கக் கூடாது? நான் பராசரர் காலத்தில் ஶ்ரீபதி பத்ததி முறையும், அதற்குப் பின் வந்தவர்கள் கணிதத்தின் சுமையால் சம பாவகங்கள், ராசியே பாவகம் என்று எளிமைப்படுத்திக் கொண்டு விட்டதாகக் கருதுகிறேன். இன்று கணிணியின் உதவியால் நம்மால் பராசரர் சொன்ன கணிதத்தை நேரடியாகச் செய்ய முடிகிறது என்பது ஒரு ஆச்சரியம்! நன்றி
வணக்கம் @1:00:00 நேரடியாக சாயன சூரியன் பாதையில் இருந்து கணக்கிடும் போது மட்டுமே அது அன்றைய வானின் உச்சி என்பதை சரியாக குறிப்பிடும். எப்போது நாம் அயனாம்ச திருத்தம் என்பதை செய்கிறோமோ அப்போதே நாம் அன்றைய நாளின் கிரக நிலைகள் அனைத்தையும் ஒரு சமபகல் சம இரவு நாள் அன்றைக்கு உள்ள நிலைக்கு மாற்றி விடுகிறோம். அப்படி ஒரு நாளில் கிட்டத்தட்ட எல்லா பாவங்களும் சம தூரம் உடையதாக இருக்கும். அன்றைய உச்சி என்பதும் சாயன உச்சி என்பதும் அன்றைக்கு மட்டுமே ஒன்றாக இருக்கும். எனவே இந்த இடத்தில் அயனாம்ச திருத்தம் செய்து பின்னர் உச்சி கணக்கிடுவது என்பது நேரடி வானியல் நிலைக்கு முரணானது என்பது என் நிலைப்பாடு. இது பற்றி தாங்கள் கருத்தில் கொண்டீர்களா?
உங்கள் கேள்விக்கு நன்றி. அயனாம்சத் திருத்தம் செய்யும் பொழுது இரவு-பகல் சம நாள் நிலைக்கு நாம் மாற்றுவதில்லை. நம்மிடம் இரண்டு அளவுகோல்கள் (ராசி மண்டலங்கள்) உள்ளன. ஒன்றின் அடிப்படையில் கிரகங்களும் இன்னொன்றின் அடிப்படையில் லக்னமும்/பாவங்களும் கணக்கிடுகிறோம். அப்படி இரண்டு வெவ்வேறு அளவுகோல்களின் மூலம் கணக்கிடப்பட்டவற்றை நாம் ஒரே ஜாதகக் கட்டத்தில் அடைக்க முயலும் போது, அதற்கு அயனாம்சத் திருத்தம் தேவையாக இருக்கிறது. அடுத்து பாவங்கள் கணக்கிடப்படுவது சாயன அடிப்படையில்! சந்திகள் உட்பட, அனைத்து பாவகங்களைக் கணக்கிட்ட பிறகே, நாம் நிராயணத்திற்கு மாற்றுகிறோம். எனவே பாவகக் கணக்கீடு செய்யும் பொழுது நாம் வானில் உள்ள ராசி மண்டல அமைப்பை நாம் பார்த்த படியே கணிதம் செய்கிறோம். அயனாம்சத் திருத்தம் என்பது ஒரு standard linear error. எனவே அயனாம்சத் திருத்தத்திற்கு முன் வேறுபட்ட பாவகங்களும், திருத்தத்திற்குப் பின் சம பாவகங்களும் வர இயலாது. தொடர்கிறேன்.
மேலும் பராசரர் சொன்ன (ஶ்ரீபதி பத்ததி) பாவக முறை சரியான ஒன்று என்பதற்கான கூடுதல் விளக்கம்! நீங்கள் நிலநடுக்கோட்டில் இருந்து, தீர்க்கரேகையை (meridian) அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது ராசிகளின் அளவுகள் mirror symmetryயில் இருக்கும். இதையே பராசரர் லங்கோதய மதிப்புகளாகச் சொல்கிறார். ஆனால் நில நடுக்கோட்டில் இருந்து தள்ளிச் செல்லச் செல்ல இந்த mirror symmetry உடைகிறது. ஶ்ரீபதி பத்ததி முறை, இந்த நிலநடுக்கோட்டில் உள்ள mirror symmetryயையும், மற்ற அட்சாம்சங்களில் உடைகின்ற mirror symmetryயையும் சரியாகத் தருகிறது. ஏனெனில் இது வானில் உள்ள காட்சித்தள அமைப்பை அப்படியே பிரதிபலிப்பதால் தான்! நன்றி
@@R_Sambasivam இரண்டு ராசி மண்டலங்கள் எனில் அயனாம்ச திருத்த அளவுகள் ஏன் கிரகம் மற்றும் லக்னம் இரண்டுக்கும் ஒன்றாக உள்ளன? இரண்டு ராசி மண்டலங்கள் பொருந்திப்போகும் ஒரே நாள் அயனாம்ச ஆதார நாள் மட்டுமே! நாம் இந்த திருத்தம் செய்யும் போது எல்லா கிரக நிலைகளையும் தானே பின்னால் நகர்த்துகிறோம்?
@@RAMESHT1976உண்மை! நீங்கள் சொன்னது போல, இரண்டு ராசி மண்டலங்களும் பொருந்திப் போவது, அயனாம்ச ஆதார நாளில் மட்டுமே! சாயனச் சூரியன், பருவம்சார் மண்டல மேஷ ராசியில் நுழையும் பொழுது, சூரியன் அஷ்வினி நட்சத்திரத்திலும் நுழையும்! அயனாம்சத் திருத்த அளவு இரண்டிலும் ஒன்றாக இருக்கக் காரணம், ஒரே ஒரு திருத்தம் மட்டுமே இரண்டு அளவுகோல்களுக்கு இடையே இருக்க முடியும் (there is only one correction possible between two observations. The degrees of freedom is always one less than the number of observations. Because one of the observations has to become the reference). எடுத்துக்காட்டாக, ஒரு அளவு கோல் சரியாக அதன் பூச்சியத்தில் துவங்குகிறது என்று கொள்வோம்; இன்னொரு அளவுகோலின் பூச்சிய மதிப்பு முதல் அளவுகோலின் பூச்சியத்தை ஒப்பிடும் பொழுது 10 மிமீ நகர்ந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டால், நாம் இரண்டாம் அளவுகோலை பின்னோக்கி 10 மிமீ நகர்த்தலாம்; அல்லது முதல் அளவுகோலை 10மிமீ முன்னோக்கி நகர்த்தலாம். இரண்டும் ஒன்று தான்! ஆனால் இந்திய ஜோதிடம், நட்சத்திர அடிப்படையிலான ராசி மண்டலத்தை அடிப்படையாகக் கொண்டதால் அதை அப்படியே வைத்துக்கொண்டு, பருவம் சார் ராசி மண்டலத்தைப் பின்னோக்கி நகர்த்துகிறோம். எனவே தான் இன்னும் 10000 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியன் அஷ்வினி நட்சத்திரத்தில் வரும் பொழுது அது கோடைக்காலத்தின் துவக்கமாக இருக்காது; குளிர்காலத்தின் துவக்கமாக இருக்கும்.
@@RAMESHT1976 (I have edited my previous post as I had written wrongly. Not sure whether you had read this post earlier or not). நாம் அயனாம்சத் திருத்தம் செய்வது ஏன் என்பதை என் புரிதலின் படி விளக்குகிறேன். ஜோதிட விதிகள் இந்த இரண்டு ராசி மண்டலங்களும் பொருந்தி இருக்கும் நிலையில் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த இரண்டு ராசி மண்டலங்களுக்கு இடையேயான வேறுபாடு தொடர்ந்து மாறுபடுவதால், நாம் அயானம்சத் திருத்தம் மூலம் அந்த இரண்டு மண்டலங்களும் பொருந்தி இருந்த அமைப்பிற்கு மாற்றிக் கொள்கிறோம்.
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம்
நன்றி
ஜோதிடத்தின் ஒரு பகுதியான ஜாதக கணிதம் என்பது வேப்பங்காய் போன்ற கசப்பான ஒரு பாடம், இருப்பினும் கசப்பு சுவையே நோயை குணப்படுத்தும் ஒரு அருமருந்தாகும். எனவே ஜோதிடத்தில் உள்ள குழப்பம் தெளிய அழகிய தமிழ் மொழியில் ஜாதக கணிதம் என்னும் அருமருந்தை வழங்கிய உயர்திரு சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு முதற்கண் நன்றி.👃👃👃
இந்த காணொளி மூலம் எனது புரிதலாக ஜோதிட கணிதத்தின் பரிணாம வளர்ச்சியாக ராசியே பாவமா? சம பாவமா? ஸ்ரீபதி பத்ததி ? என அமைந்திருப்பதாக கருதுகின்றேன். நன்றி 👏👏👏
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி 🙏
நீங்கள், பரிணாம வளர்ச்சியாக ராசியே பாவகம், சம பாவகம் மற்றும் ஶ்ரீபதி பத்ததி அமைந்திருப்பதாகக் கருதுவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். அதாவது முதலில் ராசியையே பாவகமாகக் கொள்ளும் முறையும், பிற்காலத்தில் ஶ்ரீபதி பத்ததி போன்ற முறை உருவாகி இருக்கும் என்பது உங்கள் கருத்து என்று புரிந்து கொள்கிறேன். இதுவே பலரின் கருத்தாகவும் இருக்கிறது.
ஆனால் பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் மற்றும் நம்மிடம் உள்ள சித்தாந்த நூல்கள் காலத்தால் 2000-2500 ஆண்டுகளாவது பிற்பட்டது என்பது உண்மையானால், அவர்கள் அந்த நாளிலேயே கண்டறிந்த வானியல் மற்றும் கணித மேதமை, இன்றும் நம் புரிதலிற்கு அப்பாற்பட்டது.
ராசி மண்டலம் என்ற இடத்திற்கு இடம் தோற்றத்தில் மாறுபடுகின்ற, புவி மையத்திலும்/காட்சித் தளப் பார்வையிலும் வேறுபடுகின்ற ஒன்றை, பல்பா என்ற ஒற்றை அளவையில் சுருக்கி விடுகின்ற அந்த மேதமை, நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
அப்படியான மேதமை கொண்ட அந்தக் கால அறிஞர்கள், ஏன் ஶ்ரீபதி பத்ததி போன்ற கணிதமுறையை அப்பொழுதே உருவாக்கி இருக்கக் கூடாது? நான் பராசரர் காலத்தில் ஶ்ரீபதி பத்ததி முறையும், அதற்குப் பின் வந்தவர்கள் கணிதத்தின் சுமையால் சம பாவகங்கள், ராசியே பாவகம் என்று எளிமைப்படுத்திக் கொண்டு விட்டதாகக் கருதுகிறேன். இன்று கணிணியின் உதவியால் நம்மால் பராசரர் சொன்ன கணிதத்தை நேரடியாகச் செய்ய முடிகிறது என்பது ஒரு ஆச்சரியம்! நன்றி
வணக்கம்
@1:00:00 நேரடியாக சாயன சூரியன் பாதையில் இருந்து கணக்கிடும் போது மட்டுமே அது அன்றைய வானின் உச்சி என்பதை சரியாக குறிப்பிடும். எப்போது நாம் அயனாம்ச திருத்தம் என்பதை செய்கிறோமோ அப்போதே நாம் அன்றைய நாளின் கிரக நிலைகள் அனைத்தையும் ஒரு சமபகல் சம இரவு நாள் அன்றைக்கு உள்ள நிலைக்கு மாற்றி விடுகிறோம். அப்படி ஒரு நாளில் கிட்டத்தட்ட எல்லா பாவங்களும் சம தூரம் உடையதாக இருக்கும். அன்றைய உச்சி என்பதும் சாயன உச்சி என்பதும் அன்றைக்கு மட்டுமே ஒன்றாக இருக்கும். எனவே இந்த இடத்தில் அயனாம்ச திருத்தம் செய்து பின்னர் உச்சி கணக்கிடுவது என்பது நேரடி வானியல் நிலைக்கு முரணானது என்பது என் நிலைப்பாடு. இது பற்றி தாங்கள் கருத்தில் கொண்டீர்களா?
உங்கள் கேள்விக்கு நன்றி.
அயனாம்சத் திருத்தம் செய்யும் பொழுது இரவு-பகல் சம நாள் நிலைக்கு நாம் மாற்றுவதில்லை.
நம்மிடம் இரண்டு அளவுகோல்கள் (ராசி மண்டலங்கள்) உள்ளன. ஒன்றின் அடிப்படையில் கிரகங்களும் இன்னொன்றின் அடிப்படையில் லக்னமும்/பாவங்களும் கணக்கிடுகிறோம். அப்படி இரண்டு வெவ்வேறு அளவுகோல்களின் மூலம் கணக்கிடப்பட்டவற்றை நாம் ஒரே ஜாதகக் கட்டத்தில் அடைக்க முயலும் போது, அதற்கு அயனாம்சத் திருத்தம் தேவையாக இருக்கிறது.
அடுத்து பாவங்கள் கணக்கிடப்படுவது சாயன அடிப்படையில்! சந்திகள் உட்பட, அனைத்து பாவகங்களைக் கணக்கிட்ட பிறகே, நாம் நிராயணத்திற்கு மாற்றுகிறோம். எனவே பாவகக் கணக்கீடு செய்யும் பொழுது நாம் வானில் உள்ள ராசி மண்டல அமைப்பை நாம் பார்த்த படியே கணிதம் செய்கிறோம். அயனாம்சத் திருத்தம் என்பது ஒரு standard linear error. எனவே அயனாம்சத் திருத்தத்திற்கு முன் வேறுபட்ட பாவகங்களும், திருத்தத்திற்குப் பின் சம பாவகங்களும் வர இயலாது. தொடர்கிறேன்.
மேலும் பராசரர் சொன்ன (ஶ்ரீபதி பத்ததி) பாவக முறை சரியான ஒன்று என்பதற்கான கூடுதல் விளக்கம்! நீங்கள் நிலநடுக்கோட்டில் இருந்து, தீர்க்கரேகையை (meridian) அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது ராசிகளின் அளவுகள் mirror symmetryயில் இருக்கும். இதையே பராசரர் லங்கோதய மதிப்புகளாகச் சொல்கிறார்.
ஆனால் நில நடுக்கோட்டில் இருந்து தள்ளிச் செல்லச் செல்ல இந்த mirror symmetry உடைகிறது. ஶ்ரீபதி பத்ததி முறை, இந்த நிலநடுக்கோட்டில் உள்ள mirror symmetryயையும், மற்ற அட்சாம்சங்களில் உடைகின்ற mirror symmetryயையும் சரியாகத் தருகிறது. ஏனெனில் இது வானில் உள்ள காட்சித்தள அமைப்பை அப்படியே பிரதிபலிப்பதால் தான்! நன்றி
@@R_Sambasivam இரண்டு ராசி மண்டலங்கள் எனில் அயனாம்ச திருத்த அளவுகள் ஏன் கிரகம் மற்றும் லக்னம் இரண்டுக்கும் ஒன்றாக உள்ளன? இரண்டு ராசி மண்டலங்கள் பொருந்திப்போகும் ஒரே நாள் அயனாம்ச ஆதார நாள் மட்டுமே! நாம் இந்த திருத்தம் செய்யும் போது எல்லா கிரக நிலைகளையும் தானே பின்னால் நகர்த்துகிறோம்?
@@RAMESHT1976உண்மை! நீங்கள் சொன்னது போல, இரண்டு ராசி மண்டலங்களும் பொருந்திப் போவது, அயனாம்ச ஆதார நாளில் மட்டுமே! சாயனச் சூரியன், பருவம்சார் மண்டல மேஷ ராசியில் நுழையும் பொழுது, சூரியன் அஷ்வினி நட்சத்திரத்திலும் நுழையும்!
அயனாம்சத் திருத்த அளவு இரண்டிலும் ஒன்றாக இருக்கக் காரணம், ஒரே ஒரு திருத்தம் மட்டுமே இரண்டு அளவுகோல்களுக்கு இடையே இருக்க முடியும் (there is only one correction possible between two observations. The degrees of freedom is always one less than the number of observations. Because one of the observations has to become the reference). எடுத்துக்காட்டாக, ஒரு அளவு கோல் சரியாக அதன் பூச்சியத்தில் துவங்குகிறது என்று கொள்வோம்; இன்னொரு அளவுகோலின் பூச்சிய மதிப்பு முதல் அளவுகோலின் பூச்சியத்தை ஒப்பிடும் பொழுது 10 மிமீ நகர்ந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டால், நாம் இரண்டாம் அளவுகோலை பின்னோக்கி 10 மிமீ நகர்த்தலாம்; அல்லது முதல் அளவுகோலை 10மிமீ முன்னோக்கி நகர்த்தலாம். இரண்டும் ஒன்று தான்!
ஆனால் இந்திய ஜோதிடம், நட்சத்திர அடிப்படையிலான ராசி மண்டலத்தை அடிப்படையாகக் கொண்டதால் அதை அப்படியே வைத்துக்கொண்டு, பருவம் சார் ராசி மண்டலத்தைப் பின்னோக்கி நகர்த்துகிறோம். எனவே தான் இன்னும் 10000 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியன் அஷ்வினி நட்சத்திரத்தில் வரும் பொழுது அது கோடைக்காலத்தின் துவக்கமாக இருக்காது; குளிர்காலத்தின் துவக்கமாக இருக்கும்.
@@RAMESHT1976 (I have edited my previous post as I had written wrongly. Not sure whether you had read this post earlier or not).
நாம் அயனாம்சத் திருத்தம் செய்வது ஏன் என்பதை என் புரிதலின் படி விளக்குகிறேன். ஜோதிட விதிகள் இந்த இரண்டு ராசி மண்டலங்களும் பொருந்தி இருக்கும் நிலையில் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த இரண்டு ராசி மண்டலங்களுக்கு இடையேயான வேறுபாடு தொடர்ந்து மாறுபடுவதால், நாம் அயானம்சத் திருத்தம் மூலம் அந்த இரண்டு மண்டலங்களும் பொருந்தி இருந்த அமைப்பிற்கு மாற்றிக் கொள்கிறோம்.