காணொலி/காணொளி எது சரி? | Correct Tamil word for ‘Video’ | Video - க்கு இணையான தமிழ்ச்சொல்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 70

  • @AmizhthilIniyathadiPapa
    @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว +7

    காணொளி, நிகழ்படம் இவற்றை ஏற்கமுடியவில்லையெனில் ‘ஒளியொலி’ எனலாம். ஆனால் ‘காணொலி’ என்பது முரணே என்பது நான் உணர்ந்த கருத்து!

    • @palanisenthivel600
      @palanisenthivel600 3 ปีที่แล้ว +2

      ஒலியை கேட்க முடியும்,
      ஒளியை காண முடியும்

    • @dinorisha4849
      @dinorisha4849 3 ปีที่แล้ว +2

      காண் = காட்சி = ஒளி
      ஒலி = சத்தம்
      எனவே, ஒளியொலி என்பதும் காணொலி என்பதும் ஒன்றுதானே. ஒளியும் ஒலியும் என்பதைத்தான் இப்போது கலைச்சொல்லாக்கி காணொலி என்று கூறுகிறார்கள் என்பது எனது கருத்து.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว

      @@dinorisha4849 காட்சி, ஒளி என்பவை பெயர்ச்சொற்கள். காண் என்பது வினைச்சொல் அல்லவா?

  • @rohithrohi7239
    @rohithrohi7239 ปีที่แล้ว +2

    அழகுக்கு மேலும் அழகு சேர்கிறது இந்த காணொளி

  • @jagadeesanmuthukrishnan6390
    @jagadeesanmuthukrishnan6390 2 ปีที่แล้ว +4

    Vision + Audio = Video
    காட்சி + ஒலி = காட்சியொலி
    காட்சியொலி என்பது உம்மைத்தொகை
    காட்சியும் ஒலியும் என்று விாியும் .
    காட்சி என்ற சொல்லின் பகுதி ' காண் '
    காட்சியொலி என்ற சொல்லின் சுருக்கமே
    காணொலி .
    ஒலியைக் காண முடியுமா ?
    என்ற கேள்விக்குப் பாரதியின்
    ' இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே...'
    மற்றும் கம்பனின் ' செவிநுகா் கனிகள் ...'
    ஆகிய தொடா்களையே பதிலாகக் கொள்ளலாம் . செவியால் தேனையும் , கனிகளையும் சுவைக்கும்போது , ஒலியைக் காண முடியாதா ? ஓா் உறுப்பின் செயலை மற்றோா் உறுப்பின் மீது ஏற்றிக் கூறுவது இலக்கணத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றே.
    காணொலி , காணொளி
    வினைத்தொகை ஆகா .
    ' காண் ' வினைமுற்று .
    ' காண் அதை ' என்பதை
    அதைக் காண் .
    என்று எழுதலாம் .

  • @kiruk6986
    @kiruk6986 2 ปีที่แล้ว +2

    அருமையா சொல்லியிருக்கீங்க!
    இன்று வெளியான ஆனந்த விகடன் இதழில் காணொலி என்றே மூன்று நான்கு இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்😔

  • @dinorisha4849
    @dinorisha4849 3 ปีที่แล้ว +6

    வணக்கம்.. Video என்பதற்கு ஒளியும் ஒலியும் என்ற தமிழாக்கம் முன்பு பயன்படுத்தப்பட்டது. கணிப்பொறி என்ற சொல் கணினி என்று கலைச்சொல்லாக மாறியது போல ஒளியும் ஒலியும் என்ற சொல் காணொலி என்று கலைச்சொல்லாக்கம் செய்யப்பட்டுள்ளது.
    காண் = காட்சி அதாவது ஒளி
    ஒலி = சத்தம்
    எனவே ஒளியும் ஒலியும் இணைந்தது காணொலி என்பது எனது கருத்து.. காணொலி என்பது வினைத்தொகை அல்ல.. ஒளிஒலி என்பதன் கலைச்சொல்லாக்கம். ஒளிஒலி என்பது உம்மைத்தொகை.. நன்றி..

    • @sudhakarc3315
      @sudhakarc3315 2 ปีที่แล้ว

      எனது கருத்தும் அதுதான்

    • @alagarasan1
      @alagarasan1 9 หลายเดือนก่อน

      வணக்கம். இரண்டும் சரி தான். ஆனால் காணொளி நன்றாக இருக்கிறது.

  • @palanisenthivel600
    @palanisenthivel600 3 ปีที่แล้ว +1

    சரியான பதிவு.
    ஒலியை கேட்கதான் முடியும்.
    ஒளியை பார்க்க (காண) தான் முடியும்

  • @thumi6610
    @thumi6610 3 ปีที่แล้ว +1

    சிறப்பு ஆசானே, நான் இலங்கை யிலிருந்து

  • @sunnumerology257
    @sunnumerology257 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா அருமையான பதிவு நன்றி உங்கள் கருத்து எனக்கு பிடித்தது மேலும் தகவல் கேட்க வேண்டும்
    கணக்கு கொள்ள வேண்டும் 😀😀🤵🖐️🙏

  • @RedSky1112
    @RedSky1112 3 หลายเดือนก่อน

    அருமையான காட்சிவொலி

  • @mariselvam8556
    @mariselvam8556 3 ปีที่แล้ว

    நன்றி mam. என்னுடைய நீண்ட நாள் ஐயத்திற்கு தங்களுடைய காணொளியின் மூலம் விடை கிடைத்தது.

  • @mcraja9568
    @mcraja9568 ปีที่แล้ว

    அருமை தோழி... by jayandhar

  • @madhavanmadhavan189
    @madhavanmadhavan189 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா.
    தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
    இருப்பினும் பொதுவில் இவை இரண்டும் பயன்பாட்டில் உள்ளதை நாமறிவோம்.
    முன்பொருமுறை, வேர்ச் சொல்லாய்வறிஞர் இச்சொல்லுக்கு மாற்றுப் பொருள் வழங்கியதை தேடிக்கொண்டிருக்கிறேன்.
    கிடைக்குமாயின் மேலும் நாம் துளாவலாம்.
    நன்றி.

  • @prakashk6415
    @prakashk6415 3 ปีที่แล้ว +1

    நன்றி குருவே..🙏🙏🙏
    அருமையான பதிவு👏👏👏

  • @karanraja8275
    @karanraja8275 3 ปีที่แล้ว

    சிறப்பு உங்கள் தமிழ்ச்சேவை தொடரட்டும்.

  • @nikhilancreativity4735
    @nikhilancreativity4735 ปีที่แล้ว

    சிறப்பு...தமிழ்ச் சேவைக்கு நன்றி...

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว

    வணக்கம் விஷ்ணு பிரியா அக்கா அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி நன்றி அனேக நன்றிகள் அனைவருக்கும் உங்கள் முயற்சி சிறக்கட்டும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் தங்களின் கற்பித்தலுக்கு நன்றி நன்றி அனேக நன்றி

  • @tcmacupuncture2010
    @tcmacupuncture2010 11 หลายเดือนก่อน

    மிகச்சிறப்பான பதிவு... வாழ்துகள்

  • @anbunithianbunithi3848
    @anbunithianbunithi3848 3 ปีที่แล้ว +1

    ஒளிதம்

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்!

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா
    சிறப்பாக கூறி இருக்கிறீர்கள். சில காணொளிகளில் விழியம் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த சொல் எப்படி உருவாக்கப் பட்டது என்று பதிவிடுங்கள். நன்றி

  • @sangeethadanush
    @sangeethadanush 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அக்கா....

  • @karunanithiselvaraj9951
    @karunanithiselvaraj9951 10 หลายเดือนก่อน

    நன்றி

  • @velmurugancraneoperator977
    @velmurugancraneoperator977 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி...

  • @grasshoppertime6800
    @grasshoppertime6800 3 ปีที่แล้ว +1

    Super chithi

  • @JaiganeshJai
    @JaiganeshJai 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் !

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 ปีที่แล้ว

    அருமை
    மிக்க நன்றி
    Radio வை நாம்
    வானொலி என்று சொல்கின்றோம்
    அது ஒலியாககொடுக்கப்பட்டு
    மின்காந்த அலையாக மாறி காற்றில் மிதந்து
    மீண்டும் மின்காந்த அலையாகமாறி
    ஒலியாக நம் காதுகளை வந்தடைகிறது
    இந்த வானொலி என்ற சொல்லை
    விண்ணொலி என்று சொல்லமுடியுமா?
    அல்லது
    அந்த சொல்லை
    கேளொலி
    கேட்கும் ஒலி என்று சொல்லமுடியுமா?
    விளக்கம் தருக

  • @murugapandi7440
    @murugapandi7440 2 ปีที่แล้ว

    அருமை

  • @KarthiKeyan-ql1tv
    @KarthiKeyan-ql1tv ปีที่แล้ว

    Thank you i understood the meaning,🙂

  • @d.ananthannanthu4743
    @d.ananthannanthu4743 2 ปีที่แล้ว

    வணக்கம் நன்று மேடம்

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 3 ปีที่แล้ว

    🎉நல்ல விளக்கம்🎉நன்றி🎉

  • @anbunithianbunithi3848
    @anbunithianbunithi3848 3 ปีที่แล้ว +1

    எட்டு ....இதை எப்படி பிரித்தும் சேர்த்தும் தொடர் அமைப்பது அம்மா!

  • @crawleytamil
    @crawleytamil 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @user-bd2pb2ic9u
    @user-bd2pb2ic9u 3 ปีที่แล้ว

    அக்கா உங்கள் பாடமே 👌👌👌

  • @muralikrishnanbanumathi6869
    @muralikrishnanbanumathi6869 2 ปีที่แล้ว +1

    மேற்றே என்பதன் பொருள் அக்கா

  • @rameshm1926
    @rameshm1926 3 ปีที่แล้ว

    Superb 👍

  • @DAS-oo5xd
    @DAS-oo5xd 3 ปีที่แล้ว

    👏👏👏

  • @user-jy4et8mq8b
    @user-jy4et8mq8b 6 หลายเดือนก่อน

    தலையும் இல்லை வாலும் இல்லை. எதற்காக இந்த அர்த்தம் இல்லாத காணொளி

  • @sangeethamani6819
    @sangeethamani6819 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @9-HAPPYTHOUGHTS
    @9-HAPPYTHOUGHTS ปีที่แล้ว

    Tamil aarvam Nala iruku madam

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி தோழி 🙏. டப்பா, டம்ளர் இவற்றின் சரியான தமிழ் சொல் என்ன?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว +2

      டப்பா - பெட்டி (தகர டப்பா - தகரப்பெட்டி),
      டம்ளர் - குவளை/தும்பா
      டபரா செட் - வட்டா& தும்பா
      ஒரு குவளை/தும்பா தேநீர் அருந்துங்களேன்! என்று கூறலாம்.🙂

    • @bharathiparthasarathi29
      @bharathiparthasarathi29 3 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa நன்றி சகோதரி

  • @mukeshkannavideos7694
    @mukeshkannavideos7694 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா நான் தமிழ் ரசிகை எனக்கு பிரித்து, சேர்த்து எழுதுக பற்றி ஆரம்பத்தில் இருந்து விளக்கவும்.

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 3 ปีที่แล้ว

    விழியம்

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 2 ปีที่แล้ว +1

    மறைகாணி

  • @user-zw5pb3tv6l
    @user-zw5pb3tv6l 3 ปีที่แล้ว +1

    இதே முறையில் audioவின் தமிழாக்கம் என்ன?

  • @KumaresanPalchamy
    @KumaresanPalchamy 5 หลายเดือนก่อน

    ஒளி என்பதே காணக்கூடியது தானே. பின்னர் ஏன் காண் என்ற வினைத்தொகை தேவைப்படுகிறது. என்னைப்பொருத்த வரை ஒளியும் ஒலியும் என்பதை காண்(ஒளி) + ஒலி = காணொலி என்று குறிக்கலாம். வினைத்தொகையாக கருதாமல் இரு பெயர்ச்சொற்களாக கருதினால் காணொலி பொருத்தமாக இருக்கும்.

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 3 ปีที่แล้ว

    அன்புடையீர்,
    ஒளிஒலி என்று கூறலாமா?

  • @MrKrishutube
    @MrKrishutube 3 ปีที่แล้ว

    Hi என்னோட பெயரும் உங்க பெயரும் 1 தான் சில்லறை சில்லரை வித்தியாசம் சொல்லுங்க

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว +2

      சில + அரை = சில அரைகள் உள்ளது சில்லரை.
      சில+அறை = சில அறைகள் உள்ளது சில்லறை.
      நாம் பணத்தை அரை அரையாக மட்டும் பிரிப்பதில்லை கால் முக்காலாகவும் வேறு விதங்களிலும் பிரிக்கலாம்.
      அதனால் சில அறைகளாகப்(பகுதிகளாக) பகுக்கப்பட்ட பணம் - சில்லறையே சரியானது.

    • @MrKrishutube
      @MrKrishutube 3 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa மிக்க நன்றி தோழி 🙏

  • @human8950
    @human8950 3 ปีที่แล้ว

    தெலைப்பேசி அல்லது தொலைபேசி ?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว +1

      தொலைப்பேசி என்பதே சரி. தொலைபேசி என்றால் தொலைந்த பேசி, தொலையும் பேசி, தொலைகின்ற பேசி என்ற வினைத்தொகை ஆகிவிடும்!

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว +2

      தொலைகாட்சி என்று சொல்லவது இல்லை அல்லவா!
      தொலைக்காட்சி, தொலைப்பேசி இவையே சரி!

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 3 ปีที่แล้ว

    சிலர் videoவை விகிதம் என்கின்றனர், அது சரியா?

    • @karanraja8275
      @karanraja8275 3 ปีที่แล้ว +1

      விகிதம் is ratio

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว +1

      நீங்கள் கூற நினைத்தது 'விழியம்' என்று நினைக்கிறேன்.

  • @kavithap1456
    @kavithap1456 3 ปีที่แล้ว

    நீங்கள் கூறியது தவறு. தமிழில் இது போன்ற தவறான வீடியோ போடாதீர்கள்.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว +1

      தவறென்பதை விளக்கலாமே!

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว +2

      'வீடியோ' என்று தங்களைப் போலவே பயன்படுத்த வேண்டுமோ?🤔

  • @elangor584
    @elangor584 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.

  • @vigneshdharmalingam8679
    @vigneshdharmalingam8679 3 ปีที่แล้ว

    அருமை

  • @harshinijayaram5743
    @harshinijayaram5743 3 ปีที่แล้ว

    Super chithi