கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2023
  • பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.
    முதல் பாடல்:
    வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
    மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
    சனிபாம்பு இரண்டும் உடனே
    ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.
    பொருள்:
    இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.
    இரண்டாவது பாடல்:
    என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
    எருதேறி ஏழை உடனே
    பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
    உடனாய நாள்கள் அவைதாம்
    அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.
    பொருள்:
    அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.
    மூன்றாம் பாடல்:
    உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
    உமையோடும் வெள்ளை விடைமேல்
    முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
    திசை தெய்வமான பலவும்
    அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.
    பொருள்:
    திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.
    நான்காம் பாடல்:
    மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
    மறையோதும் எங்கள் பரமன்
    நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
    கொடு நோய்களான பலவும்
    அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.
    ஐந்தாம் பாடல்:
    நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
    விடையேறு நங்கள் பரமன்
    துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
    மிகையான பூதம் அவையும்
    அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.
    ஆறாம் பாடல்:
    வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
    மடவாள் தனோடு உடனாய்
    நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
    கொடு நாகமோடு கரடி
    ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.
    ஏழாம் பாடல்:
    செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
    விடையேறு செல்வன் அடைவார்
    ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
    வினையான வந்து நலியா
    அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.
    எட்டாம் பாடல்:
    வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
    மடவாள் தனோடும் உடனாய்
    வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
    இடரான வந்து நலியா
    ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.
    ஒன்பதாம் பாடல்:
    பலபல வேடமாகும் பரனாரி பாகன்
    பசுவேறும் எங்கள் பரமன்
    சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
    வரு காலமான பலவும்
    அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.
    பத்தாம் பாடல்:
    கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
    குணமாய வேட விகிர்தன்
    மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
    திருநீறு செம்மை திடமே
    அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.
    பதினோறாம் பாடல்:
    தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
    வளர்செம்பொன் எங்கும் நிகழ
    நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
    மறைஞான ஞான முனிவன்
    தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
    நலியாத வண்ணம் உரைசெய்
    ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
    அரசாள்வர் ஆணை நமதே!!
    பொருள்:
    இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.
    பயன்கள்:
    நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள் பலம் பெறவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம். கிரக தோஷம், கிரக நிலையால் நாள் சரியில்லை என தோன்றும் போது இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே அதன் பொருள்.
  • เพลง

ความคิดเห็น • 178

  • @om8387
    @om8387 9 หลายเดือนก่อน +68

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயாவின் குரலில் எழுத்துடன் பதியப்பட்ட இந்த கோளறு பதிகம் மிக மிக அழகான இப்பதிவிற்கு மிக்க நன்றிகள்

  • @user-nl2lv6dd9t
    @user-nl2lv6dd9t 8 หลายเดือนก่อน +41

    ஞானப்பால் உண்டவன் அருளிய
    ஞான பாடலை
    அதே தலத்தில்
    இருந்தே பாடகனாய்
    பிறந்து
    மறுபடியும்
    இவர் குரல் மூலம் கேட்கும் பாக்கியம்
    நமக்கு வாய்ப்பு தந்த
    இறையருளை
    எண்ணி வியக்க வைத்தவன் காலடியினை வணங்குவேன்

    • @sivarathinamaswaminathan1211
      @sivarathinamaswaminathan1211 7 หลายเดือนก่อน +9

      டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடல் அனைத்தும் சிறப்பு.கோளறுபதிகம்.அதன்மகுடம்.!!🎉 வணங்கி நாடுவோம்.இறைவன்.திருவடிகள்🎉🙏🙏🙏🙏🙏💥

    • @ganesansairam9415
      @ganesansairam9415 7 หลายเดือนก่อน +5

      மெய் மறந்து விட்டேன்

  • @dineshprabhu4004
    @dineshprabhu4004 7 หลายเดือนก่อน +24

    காலை யில் இதை கேட்டுதான் வேலை துவங்கும்

  • @harinarayanana6908
    @harinarayanana6908 7 หลายเดือนก่อน +16

    இவர்கள் காலத்தில் நானும் வளர்ந்தேன் என்பது பெருமை❤❤❤

  • @vellaivellai9613
    @vellaivellai9613 8 หลายเดือนก่อน +46

    இந்த உலகம் இருக்கும் வரை உங்கள் குரல் இறைவன் பாடல் ஒலிக்கும் ஐயா உங்கள் பாதங்களை தொட்டு வணங்கிகிறேன்

  • @palanisai8479
    @palanisai8479 7 หลายเดือนก่อน +16

    தெய்வீக தெய்வீகமான குரல் மந்திர🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @subbaiyanrathakrishnan5794
    @subbaiyanrathakrishnan5794 หลายเดือนก่อน +7

    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் புகழ் ஓங்குக

  • @TamilBoysYT
    @TamilBoysYT 8 หลายเดือนก่อน +15

    ஐயா அவர்களின் வெண்கல குரலில் விநாயகர் அகவல்,சின்னஞ் சிறு பெண் போலே...இப்போது இந்த பாடலும் சேர்ந்து விட்டது....பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...🎉

  • @sankarlalbowna9639
    @sankarlalbowna9639 4 หลายเดือนก่อน +10

    சீர்காழி கோவிந்தராஜன் அய்யாவின் குரல் இவ்வுலகில் பக்தியும், ஆன்மீகம் உள்ள வரையில் சிரஞ்சீவியாக இருப்பார் . - சங்கர்லால்

  • @shenkrishnaraja2710
    @shenkrishnaraja2710 8 หลายเดือนก่อน +15

    அருமையான குரல் வளம் 😊😊 மனநிறைவான பாடல் 🙏🙏🙏 இவ்வையகம் உள்ளவரை உங்கள் கம்பீர குரல் என்றும் அழியாது ✨✨✨✨💫💐💐💐

  • @thenmozhi8785
    @thenmozhi8785 หลายเดือนก่อน +3

    மனதின் கவலை போக்கும் பாடல் அய்யா அவர்களின் குரல் வளத்தில் நிம்மதி தரும் பாடல்

  • @om8387
    @om8387 9 หลายเดือนก่อน +91

    ஐயாவின் குரலில் தேவாரமானாலென்ன பக்தி பாடலானாலென்ன கேட்கும்போது உள்ளமே உருகாதோ இசை வள்ளலாய் என்றுமெம் மனதிலிருக்கும் சீர்காழிகோவிந்தராஜயன் ஐயாவின் பாடல்களைக் கேட்பதில் மனதிலோர் தெய்வீக உணர்வு தோன்றும்

    • @RamachandranMuniswamyraj-xy7ow
      @RamachandranMuniswamyraj-xy7ow 9 หลายเดือนก่อน +8

      வணக்கம்.இனியவர்களே.
      நல்லவன் வாழ்வான்! என்றும்....குற்றால அருவியிலே குளித்தது போலும் இருக்குமே!
      ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றானே! இவைகளையும்கூட இரசிக்கலாங்க!... நன்றிங்க.

    • @moorthyk852
      @moorthyk852 8 หลายเดือนก่อน +11

      இந்த கோளறு பதிகத்தை யார் பாடியும் என் கல் மனம்
      இளகவில்லை. எனது
      உயிரினும் மேலான
      ஐயா அவர்களின் இந்த
      பாடல் பதிவை கேட்ட பொழுது என் கண்கள்
      நீர்பெருக்கெடுக்க, என் உள்ளம் கரைந்தது.
      அதுமட்டும் அல்லாது
      என்னை எங்கோ இனம் புரியாத உலகத்துக்கு அழை தது சென்று அளவற்ற
      சொல்ல இயலாத பேரின்பத்தை தந்தது
      இன்றும் அது தொடர்கின்றது.
      😊
      இசைதெய்வமாகி எங்கும் விரவி நிற்கும்
      ஐயா அவர்களின் திருவடிகளுக்கு
      அனந்தங் கோடி வந்தனம். வந்தனம்.

    • @dr.s.g.sivachidambaram4221
      @dr.s.g.sivachidambaram4221 8 หลายเดือนก่อน +3

      அருமை..🙏🙏🙏💐

    • @thirunavukkarsuc3523
      @thirunavukkarsuc3523 6 หลายเดือนก่อน

      Pannodu koodia paadal

    • @speedygaming8614
      @speedygaming8614 5 หลายเดือนก่อน

      Qqqaaaaaaàaa😊

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 7 หลายเดือนก่อน +18

    மனித குலம் இழந்தாலும் இறைவன் உங்களை இழக்கவில்லை ஓம் நமசிவாய

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 9 หลายเดือนก่อน +14

    மிகவும் அற்புதம். நன்றி. வேல் விருத்தம், மயில் விருத்தம் கந்தர் அந்தாதி,அபிராமி அந்தாதி, சகலகலாவல்லிமாலை...இவை ஐயாவின் குரலில் இருந்து நெஞ்சை விட்டு எப்போதும் அகலா. நமச்சிவாயம்.

  • @sivalingam2176
    @sivalingam2176 9 หลายเดือนก่อน +20

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க , 🎉🎉
    " உலகம் வாழ்க'🎉🎉🎉
    இந்த இடர்களையும் பாடல், அனைவருடைய இன்னல்களையும் கலைந்து வாழ! எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன். 🎉
    👌 சூப்பர் அருமையான பாடல் 👍. 🎉🎉
    "நன்றி!
    அன்புடன்.
    ச சிவலிங்கம்.

    • @sabari3187
      @sabari3187 7 หลายเดือนก่อน +2

      🙏🙏

    • @venkatachalamr6725
      @venkatachalamr6725 3 หลายเดือนก่อน

      திரு நீலகண்டன்
      திருமறை
      தீராத்துயர் தீர்க்கும்
      மாமருந்து!

  • @bala9083
    @bala9083 8 หลายเดือนก่อน +19

    பல கோடி கொடுத்தாலும் கிடைக்காத குரல்வளம் 0:53 ஐயாவின் புகழ் இந்த உலகம் உள்ளவரை இருக்கும்

  • @srk8360
    @srk8360 9 หลายเดือนก่อน +26

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிகப் பதிவு.தெளிவான உச்சரிப்பில் வெண்கல குரலோன் சீர்காழி ஐயா குரலில். ..(எந்த இசைவடிவமானாலும்)
    கேட்கையில் மனதுஉருகிவிடும்..
    அற்புதமான பதிகப்பதிவிற்கு மனம்நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்🙏💐💐💐💐💐..🌺🌺🌺🌺🌺🙏

    • @deivasigamani7913
      @deivasigamani7913 6 หลายเดือนก่อน +1

      காதில் வாங்காமல் இருக்கமுடியவில்லை

    • @krajajam4386
      @krajajam4386 6 หลายเดือนก่อน

      20:07

    • @gururadha3840
      @gururadha3840 หลายเดือนก่อน

      சூப்பர் அடியேன் காலை வணக்கம்

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw 9 หลายเดือนก่อน +11

    அய்யா அவர்கள் குரலில் மிக அற்புதம்.

  • @karbagamkarbagam6411
    @karbagamkarbagam6411 6 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய அருமையான பதிவு அருமை அருமை

  • @Smutthusamy
    @Smutthusamy 8 หลายเดือนก่อน +7

    அய்யாவின்தேன்கலந்தகுரலைக்கேட்ககொடுத்துவைத்துஇருக்கவேண்டும்வாழ்க‌அவரதுபுகழ்சங்கரமுத்துச்சாமி

  • @anbesivan6499
    @anbesivan6499 8 หลายเดือนก่อน +7

    ஓம்நமசிவாய ❤❤❤
    உஷா கோவில்பட்டி.

  • @skanthavelu
    @skanthavelu 6 หลายเดือนก่อน +7

    I first heard this beautiful Kolaru Thirupadhigam in September 1998, over a year after I became a Hindu. Divine memories.

    • @keerthanaramasamy711
      @keerthanaramasamy711 5 หลายเดือนก่อน +2

      So ,what religion you were following before becoming hindu.You are from which country?I'm just curious to know because this song can be understood only by tamil hindus.

    • @skanthavelu
      @skanthavelu 5 หลายเดือนก่อน +1

      @@keerthanaramasamy711 I am from Canada and am of Ukrainian descent with a little bit of Irish, Scottish, English and Dutch thrown in.

    • @skanthavelu
      @skanthavelu 5 หลายเดือนก่อน

      ​​@@keerthanaramasamy711 Prior to becoming a Hindu, I was not baptized in any religion. But for a few years during the time from late 1991/early 1992 until 1997 when I was researching about Hinduism and Hindu beliefs, teachings and practices, I called myself a Christian with Hindu beliefs. I had a desire to visit a Hindu temple after seeing some of them on TV and in books. Then on 13th July, 1997, I visited a Hindu temple, namely, the Maha Ganapathy Society of Alberta in the city of Edmonton, for the first time. After the aaratthi got over, I introduced myself to everyone present and told them who am I and expreseesed a desire to become a Hindu, which was welcomed by everyone present in the temple.

    • @keerthanaramasamy711
      @keerthanaramasamy711 5 หลายเดือนก่อน +2

      @skanthavelu oh nice .May lord shiva bless you brother.

    • @skanthavelu
      @skanthavelu 5 หลายเดือนก่อน +1

      ​@@keerthanaramasamy711 நன்றி!

  • @nagaganesh1239
    @nagaganesh1239 หลายเดือนก่อน

    உலகம் உள்ளவரையொலிக்கும்தெய்வீககுரல்.🙏🙏🙏🙏🙏

  • @managementaccountingmadeea5236
    @managementaccountingmadeea5236 8 หลายเดือนก่อน +9

    There is no replacement to this beautiful voice, what a clarity. Miss him a lot.

  • @anandakrishnanallendrampil777
    @anandakrishnanallendrampil777 4 หลายเดือนก่อน +3

    காலத்தால் அழியாத தேவாரம். அருமை.

  • @subramaniamrajagopala4670
    @subramaniamrajagopala4670 6 หลายเดือนก่อน +4

    Grown up in my childhood hearing my mother recite this everyday. Am 78 years now and blessed by this recital.
    Shambo mahadeva deva.

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 2 หลายเดือนก่อน +1

    Miga nalla padal ungal kuralil ketka kuduthu vaithurukkom Iyya 🙏🙏👌

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 9 หลายเดือนก่อน +7

    Thank u for uploading Kolarupathigam and shanmugakavasam

  • @preminim2903
    @preminim2903 8 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @TamilBoysYT
    @TamilBoysYT 8 หลายเดือนก่อน +4

    Dr.Sirkazhi Sivasidhambaram avargalukku mikka nandri.

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  8 หลายเดือนก่อน +1

      நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.

  • @sundarsundar9420
    @sundarsundar9420 8 หลายเดือนก่อน +7

    ஓம் நம சிவாய 🙏🙏❤❤🎉🎉

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 15 วันที่ผ่านมา

    இந்த ஜென்மத்தில் இந்த பாடலை கேட்பதுமகிழ்ச்சி அளிக்கிறது...சிவசிவ..

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 หลายเดือนก่อน

    Bhakthi Paravasam, Mei Silirkirathu ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaresan-yz1ob
    @kumaresan-yz1ob 9 หลายเดือนก่อน +6

    வணக்கம் நன்றி 🎉

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 9 หลายเดือนก่อน +6

    Vallalarin deivamanimalai 31 songs ketu manapadam seithal nalla dicipline na vazhalam.vallalar murugar mel vaitha patturu,tears coming from our eyes

  • @kumaresana5805
    @kumaresana5805 6 หลายเดือนก่อน +4

    ஒம் நமசிவாய போற்றி போற்றி

  • @manorpillay2433
    @manorpillay2433 27 วันที่ผ่านมา

    OM NAMASIVAYA MIKKA NANDRI

  • @KandanS-gp4gz
    @KandanS-gp4gz 4 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்களின் புகழ் வாழ்த்துக்கள் நன்றி

  • @jayavishwanathanjayavishwa6867
    @jayavishwanathanjayavishwa6867 8 หลายเดือนก่อน +6

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y 2 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய 😊😊😊😊😊😊

  • @chitraraghunathan2988
    @chitraraghunathan2988 7 หลายเดือนก่อน +2

    Arumai,om nama shivaya,deiviha kural👌🙏🙏✌️

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 6 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @kumarm3634
    @kumarm3634 19 วันที่ผ่านมา

    ௐ நம சிவாய சிவாயநமௐ.மோட்சகுரு தில்லை.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 5 หลายเดือนก่อน +2

    ❤ valgavalamudan ❤❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 4 หลายเดือนก่อน +3

    Om namasivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @rajapackiyamsr9850
    @rajapackiyamsr9850 8 หลายเดือนก่อน +11

    வாழ்க்கையில் நாம் இழந்த பெரிய சொத்து அன்புக்கூரிய சீர்காழியார்தான்..!!

  • @somasundaramt7893
    @somasundaramt7893 7 หลายเดือนก่อน +4

    தேன் இசை குரலோன் ❤

  • @vijayrani164
    @vijayrani164 หลายเดือนก่อน

    அனைவரும் இல்லத்தில் மகிழ்ச்சி உடன் பல்லாண்டு வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bamamoorthy8690
    @bamamoorthy8690 9 หลายเดือนก่อน +5

    Once again I thank the family for sharing so many Iya,S records. Godbless you all.🇨🇦

  • @dhanalakshmir4817
    @dhanalakshmir4817 5 หลายเดือนก่อน +2

    Evergreen voice. Thank God.

  • @koteesvaran
    @koteesvaran 29 วันที่ผ่านมา

    . தனிமை❤️இனிமை❤️மன அழுத்தம் குறையும்🎉x+ ஜூபிடர்.

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 8 หลายเดือนก่อน +3

    This voice and the devotion is THE GIFT OF GOD .
    SRI SEERGHAZHI USED IT TO SING THE PRAISE OF THE GOD .
    HE NEVER SANG , EVEN FOR FILMS , ANY VULGAR OR IMMORAL MEANING SONGS .
    THE GREAT SOUL .

    • @Raghavan-ht1bi
      @Raghavan-ht1bi หลายเดือนก่อน

      yes...he is a divine soul. no doubt. In his last breath, he uttered thus: vaazgha vaiyagam; vaazgha valamudan...Om Namah Shivaya!!

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 5 หลายเดือนก่อน +1

    ஐயாவின் குரலில் கேட்கும் தெய்வத் திருமுறைகளில் இது ஒரு அற்புதத் தேன் என்றால் சுந்தரமூர்த்தி நாயனார் படத்தில் ஐயா பாடிய "எற்றான் மறக்கேன் ","உரைப்பார் உரை உகந்து"என்ற அவிநாசித் தலப் பதிகத்தின் திருப்பாட்டுகளும்,"தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் "என்ற திருத்தொண்டத் தொகையும் ,"வெறுத்தேன் மனை வாழ்க்கையை"என்னும் "தலைக்கு தலைமாலை"பதிகத் தேவாரமும்,"பொன்னார் மேனியனே"பாடலுடன் தொடங்கும் பதிகத்தின் பாடல்களும் தேவாமிர்தம்...நமச்சிவாயம்.

  • @TheB657
    @TheB657 4 หลายเดือนก่อน +1

    வரலாறு தங்கம் 🙏🕉🛕🐚🌿🪔☀🚩🏹

  • @k.velayudhamk8762
    @k.velayudhamk8762 8 หลายเดือนก่อน +3

    ayya voice arumai

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 หลายเดือนก่อน

    Amma Appa ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasandaraanivadantharaani9156
    @vasandaraanivadantharaani9156 5 หลายเดือนก่อน +1

    Very peaceful and quiet for soul

  • @user-nv8mf5ot1r
    @user-nv8mf5ot1r 8 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤excellent work

  • @kumarm3634
    @kumarm3634 9 วันที่ผ่านมา

    அண்ணன் சீர்காழி புகழ் ஓங்குக.மோட்சகுருதில்லை12/6/24

  • @maheshkolpurath7336
    @maheshkolpurath7336 8 หลายเดือนก่อน +2

    Very good nice full dinner TTHANKS

  • @ramakrishnanvenkatachalam7390
    @ramakrishnanvenkatachalam7390 6 หลายเดือนก่อน

    Arumaiyana Pathippu Thiruvadi Saranam Aiya🙏🙏🙏

  • @rajagopalakrishnanc1710
    @rajagopalakrishnanc1710 8 หลายเดือนก่อน +6

    சீர்காழி என்றால் சீர்காழி தான் பக்தி பாடல்களுக்கு

  • @user-xb7vn9cr4e
    @user-xb7vn9cr4e 5 หลายเดือนก่อน

    வணங்கி மகிழ்கிறேன் ஐயா

  • @padmadaspottivelu1734
    @padmadaspottivelu1734 16 ชั่วโมงที่ผ่านมา

    Om Namasivaya

  • @msdsomasundaram9657
    @msdsomasundaram9657 8 หลายเดือนก่อน +2

    Wow superb voice

  • @LUCK8434
    @LUCK8434 หลายเดือนก่อน

    Om sivaya 😭🙇🙏🥺🔱😍🤩💚

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 5 หลายเดือนก่อน

    சிவ சிவ

  • @r.vengateshanraghupathy5507
    @r.vengateshanraghupathy5507 2 หลายเดือนก่อน

    Evening I will hear this pathigam...

  • @user-wf9gl3pz8n
    @user-wf9gl3pz8n หลายเดือนก่อน

    Super
    Thanks

  • @KarunakaranR-sd4ei
    @KarunakaranR-sd4ei 5 หลายเดือนก่อน

    Omnamashivaya potri potri ❤❤❤❤❤😊😊😊

  • @ramakrishnanvenkatachalam7390
    @ramakrishnanvenkatachalam7390 6 หลายเดือนก่อน

    🙏Arumaiyana pathippu Thiruvadi Saranam🙏🙏🙏

  • @saravanan.k-nc7dg
    @saravanan.k-nc7dg 3 หลายเดือนก่อน

    ஐயா அவர்கள் வணங்குகிறேன்

  • @padminic9892
    @padminic9892 8 หลายเดือนก่อน +1

    Arputham❤

  • @valarmathiv1388
    @valarmathiv1388 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @kalaiselvan1951
    @kalaiselvan1951 5 หลายเดือนก่อน

    ஓம் சிவசிவ சிவசிவ ஓம்

  • @lachuu.princes.111
    @lachuu.princes.111 5 หลายเดือนก่อน

    நமசிவாய 😍

  • @sathiyamoorthyb975
    @sathiyamoorthyb975 7 หลายเดือนก่อน +1

    om namah shivaya

  • @nagalakshmyhariharaiyer4424
    @nagalakshmyhariharaiyer4424 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathar8054
    @lathar8054 23 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanasekara2667
    @gnanasekara2667 2 หลายเดือนก่อน

    Excellent bakthi song forever 19:17

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏

  • @user-vg4yb2zk9p
    @user-vg4yb2zk9p 5 หลายเดือนก่อน +1

    🎉🎉❤❤

  • @balabk918
    @balabk918 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏👌

  • @kumarshanthy3613
    @kumarshanthy3613 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 7 หลายเดือนก่อน +1

    🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @shanthiguna4382
    @shanthiguna4382 9 หลายเดือนก่อน +3

    🎉🙏🙏🙏

  • @m.k.manickamkalyan5453
    @m.k.manickamkalyan5453 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vravicoumar1903
    @vravicoumar1903 8 หลายเดือนก่อน +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 5 หลายเดือนก่อน

    Om Namashivayaa 🙏🙏🙏🙏

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 9 หลายเดือนก่อน +4

    🙏👌👌🙏👍

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤🙏

  • @deivasigamani7913
    @deivasigamani7913 6 หลายเดือนก่อน +2

    ❤🎉

  • @kumarm3634
    @kumarm3634 9 วันที่ผ่านมา

    ௐநமசிவாய சிவாயநமௐ.மோட்சகுரு.தில்லை.11/6/24

  • @shankarmahadevan6760
    @shankarmahadevan6760 5 หลายเดือนก่อน

    Om Namah Sivaya

  • @ramganeshganesh7101
    @ramganeshganesh7101 5 หลายเดือนก่อน

    Om Namaha Shivaya 🙏

  • @saravanantrichyshunmugam553
    @saravanantrichyshunmugam553 7 หลายเดือนก่อน +1

    🙏

  • @guhana8785
    @guhana8785 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @malathiashokkumar4680
    @malathiashokkumar4680 6 หลายเดือนก่อน

    Om namah shivaya 🙏🕉️