SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL
SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL
  • 165
  • 44 787
MADHANA GOPALA THE MANGALAM – THARANGAM 12–GITAM 119 : மதனகோபால தே மங்களம் - .தரங்கம் 12-கீதம் 119
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N.
Sri Sri Sri Narayana Theertha Swamigal has explained in this Taranga Gitam named as Sri Krishna Leela Tarangini which is fully approved by Lord Sri Krishna Paramatma are falling like shower on Him. On the basis of this, the commentator expressed that if all these Amarakavya Geethas are chanted or listened to with devotion, then it is certain that the results of reading Srimath Bhagavatam can be attained and the life will be strengthened. It is still being realised by many stalwarts that Sri Sri Sri Narayana Theertha Swamigal has sung Sri Krishna Leela Tharanga Geethams for the welfare of people in the same style the commentator too prayed Alamelu Manga Sametha Sri Venkatesa Perumal and given his commentary.
The Commentator Bhagavata Shironmani Sri Nataraja Sharma @ Premnath commented the factual thing that even today we can feel the immense devotion and love the residents of Varagur imposed their faith on Alamelu Manga Sametha Sri Venkatesa Perumal and there is no doubt about that.
The description given by the Commentator Bhagavata Shironmani Sri Nataraja Sharma @ Premnath has been followed by many and it can be felt that he has given the interpretation of all the Tharanga Geetas in a way that is suitable for the modern life.
Many have commented that there is no doubt that the videos of Sri Krishna Leela Tharanga Geetas narrated by the commentator will be another enhanced treasure for the people of Varagur in the days to come.
Sri Ravi Bhagwathar, a resident of Varagur, has sung this song with melodious voice.
May we worship Alamelu Manga Sametha Sri Venkatesa Perumal who is full of all virtues Rukmini Satyabhama Sakitha and guide us to live a happy married life!
SARVAM SRI KRISHNARPANAMASTU
ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் இந்த தரங்க கீதத்தில் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவினால் பரிபூர்ணமாக அங்கீகரிக்கப்பட்ட ஶ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணீ அனைத்து கீதங்களும் மலைபோல் விளங்கும் தன் மேல் தாரையாக பொழிவதாக வருணித்து கூறியுள்ளார். இதன் அடிப்படையிலேயே வ்யாக்யாதாரர் இந்த அமரகாவிய கீதங்கள் அனைத்தையும் அனைவரும் பக்தியுடன் பாடுவதும் கேட்பதும் வழக்கத்தில் வைத்துக்கொண்டால் ஶ்ரீமத் பாகவதம் படித்த பலன் ஏற்பட்டு வாழ்க்கை சபலமடைவது நிச்சியம் என்று வரகூர் அலமேலு மங்கா சமேத ஶ்ரீ வேங்கடேச பெருமாளிடம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் எவ்வாறு அனைத்து தரங்க கீதங்களை லோக க்ஷேமத்திற்காக பாடியுள்ளாரோ அதேபோல் ப்ரார்த்தனை செய்து அறிவுறுத்தியுள்ளார்.
வ்யாக்யாதாரர் பாகவத சிரோன்மணி ஶ்ரீ நடராஜ சர்மா @ ப்ரேம்நாத் அவர்கள் வரகூர் வாசிகள் அலமேலு மங்கா சமேத ஶ்ரீ வேங்கடேச பெருமாளிடம் வைத்துள்ள அபரிமித பக்தி மற்றும் அன்பு உண்மையானது என்ற விஷயத்தை இன்றளவும் நம்மால் உணரமுடிகிறது.
வ்யாக்யாதாரர் பாகவத சிரோன்மணி ஶ்ரீ நடராஜ சர்மா @ ப்ரேம்நாத் அவர்கள்கூறுவது பலரால் பின்பற்றி வரப்படுகிறது. ஆனால் அவர் கூறிய அனைத்து தரங்க கீதங்களின் வ்யாக்யானம் தற்கால வாழ்க்கைக்கு ஏற்றார்போல் கொடுத்துள்ளார் என்பதை உணர முடிகிறது.
வ்யாக்யானம் கூறிய ஶ்ரீ கிருஷ்ண லீலா தரங்க கீதங்களின் காணொளி வரகூர் வாசிகளுக்கு மற்றுமொரு மேம்பட்ட பொக்கிஷமாக வரும்காலத்தில் விளங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என்பதை பலர் கருத்தாக தெரிவித்துள்ளார்கள்.
வரகூர் வாசி ஶ்ரீ ரவி பாகவதர் இந்த கீதத்திற்கு மெருகேற்றி பாடியுள்ளார்.
சகல குணங்களும் நிறைந்த ருக்மிணி சத்தியபாமா சகித வடிவில் வீற்றிருக்கும் அலமேலு மங்கா சமேத ஶ்ரீ வேங்கடேச பெருமாளை நாம் அனுதினமும் வணங்கி தாம்பத்ய வாழ்க்கையினை சந்தோஷமாக வாழ்வதற்கு வழிவகுத்துக்கொள்வோமாக!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து
มุมมอง: 98

วีดีโอ

ALOKAYE RUKMINI - THARANGAM 12 - GITAM 118 : ஆலோகயே ருக்மிணீ - .தரங்கம் 12 - கீதம் 118
มุมมอง 44119 ชั่วโมงที่ผ่านมา
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. Sri Sri Sri Narayana Theertha Swamigal has sung in this Tharanga Gitam after the marriage of Rukmini Sri Krishna, when Sri Krishna Paramatma was seated with his eight patta Mahishis, in the Rajya Sabha called Sudharma in t...
JAYA MANGALAM NITHYA SUBHA - THARANGAM 12-GITAM 120 : ஜய மங்களம் நித்ய சுப - தரங்கம் 12 - கீதம் 120
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. Sri Sri Sri Narayana Theertha Swamigal has sung this last Taranga Gitam as Auspicious song and completed all the 120 Githam of Sri Krishna Leela Tarangam. Bhagavata Shironmani Sri Nataraja Sharma @ Premnath is a well verse...
BRAHMAKRANDHIM KURU - THARANGAM 12 - GITAM 117 : ப்ரஹ்மக்ரந்திம் குரு - .தரங்கம் 12 - கீதம் 117
มุมมอง 21314 วันที่ผ่านมา
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. BRAHMAKRANDHIM KURU - THARANGAM 12 - GITAM 117 : ப்ரஹ்மக்ரந்திம் குரு - .தரங்கம் 12 - கீதம் 117 Sri Sri Sri Narayana Theertha Swamigal in this Taranga Geetha has described the marriage ritual tattvas that are being perform...
SHOBANA ME SHOBANAM - THARANGAM 12 - GITAM 116 :ஷோபனம் மே ஷோபனம் - தரங்கம் 12 - கீதம் 116
มุมมอง 17721 วันที่ผ่านมา
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. It is noteworthy that Sri Sri Sri Narayana Theertha Swamigal has sung this Taranga Geetha as Mangalasasana by using of Gopala Name as he witnessed Sri Krishna Paramatma Tirukalyana Vaibhava at Varagur Punnya Kshetra with f...
SHOBANA ME SHOBANAM - THARANGAM 12 - GITAM 115 : ஷோபனம் மே ஷோபனம் - தரங்கம் 12 - கீதம் 115
มุมมอง 16128 วันที่ผ่านมา
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. SHOBANA ME SHOBANAM - THARANGAM 12 - GITAM 115 : ஷோபனம் மே ஷோபனம் - தரங்கம் 12 - கீதம் 115 Sri Sri Sri Narayana Theertha Swamigal has beautifully sung this Gitam based on the Andhra traditional custom of “Tharam Ralu” in t...
LAGNASHTAKAM - THARANGAM 12 - GITAM 114 : லக்னாஷ்டகம் - THARANGAM 12 - கீதம் 114
มุมมอง 253หลายเดือนก่อน
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள்பாகவத்த்தில் இல்லாத ஒன்றை லக்னாஷ்டமாக இயற்றி தான் மிகுந்த அன்பும், பாசமும், பக்தியும் கொண்ட ஶ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் திருக்கல்யாணம் எந்தவிதமான தடங்களுகளும் இல்லாமல் சிறப்பாக விமர்சயா...
LAGNASHTAKAM - THARANGAM 12 - GITAM 114 : லக்னாஷ்டகம் - THARANGAM 12 - கீதம் 114
มุมมอง 12หลายเดือนก่อน
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. In this Taranga Gita, Sri Sri Sri Narayana Theertha Swamigal has prettily described the procedure of marriage sampradayam of Sri Krishna- Rukmini based on Apastamba Sutra method purely according to the Andhra tradition. Im...
KOMALADHARE RUKMINI - THARANGAM 12 - GITAM 113 : கோமளாதரே ருக்மிணி - தரங்கம் 12 - கீதம் 113
มุมมอง 271หลายเดือนก่อน
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. Sri Sri Sri Narayana Theertha Swamigal on his own imaginary vision described Rukmini Devi's swayamvaram. She went to the Umamaheswarar temple and performed the rituals as per her family tradition and waited for the arrival...
KSHEMAM KURU GOPALA - THARANGAM 12 - GITAM 111 : க்ஷேமம் குரு கோபாலா - தரங்கம் 12 - கீதம் 111
มุมมอง 174หลายเดือนก่อน
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. Sri Sri Sri Narayana Theertha Swamigal has sung this gitam detailing about Sri Krishna Paramatma as the Supreme Leader of all deities. This Tharanga Gitam is considered to be the most beautiful and important hymn for Varag...
VANAMALI KILA NINAM - THARANGAM 12 - GITAM 112 : வனமாலி கில நூநம் - தரங்கம் 12 - கீதம் 112
มุมมอง 340หลายเดือนก่อน
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. Sri Sri Sri Narayana Theertha Swamigal has sung with devotional ecstasy that in the first sloka, Rukmimini sent an Ambassador to Dwaraka who gave her message to Sri Krishna and while walking on Dwaraka chanting the name of...
SRI KRISHNA LEELA THARANGAM
มุมมอง 76หลายเดือนก่อน
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. ஸ்காந்தம் 10 - அத்யாயம் 52 - ஸ்லோகம் 37 to 43 ருக்மிணி ஸ்துதி (ருக்மிணி ஶ்ரீ கிருஷ்ணருக்கு எழுதிய கடிதம்) இதை படித்து வந்தால் திருமணம் தாமதம் ஆகாமல் நடக்கும்)
KANGSHE THAVA PRASADAM - THARANGAM 12 - GITAM 110 : காங்க்ஷே தவ ப்ரஸாதம் - தரங்கம் 12 - கீதம் 110
มุมมอง 2052 หลายเดือนก่อน
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. Rukmini Devi, who is the embodiment of Mahalakshmi, spoke to her very close friend about her undivided love and devotion towards Sri Krishna. Sri Sri Sri Narayana Theertha Swamigal explains in the first sloka of this Thara...
GOPALA MEVA DEIVATHAM - THARANGAM 12 - GITAM 109 : கோபால மேவ தைவதம் - தரங்கம் 12 - கீதம் 109
มุมมอง 1472 หลายเดือนก่อน
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. In this Taranga Gita, Sri Sri Sri Narayana Theertha Swamigal has mentioned in the very first sloka that Rukmini Devi, the form of Mahalakshmi, makes heartfelt love to Sri Krishna with supreme devotion. As per Varagur Sri V...
RE RE MANASA GOPALAM - THARANGAM 12 - GITAM 108 : ரே ரே மானஸ கோபாலம் - தரங்கம் 12 - கீதம் 108
มุมมอง 1062 หลายเดือนก่อน
This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N. In this Taranga Gitam, Sri Sri Sri Narayana Theertha Swamigal explains the nature of the mind that evolves naturally within us. Sri Sri Sri Narayana Theertha Swamigal presumes himself as Goddess Rukmini, who incarnates as ...
VEEKSHEKAM KATHA-THARANGAM 12 - GITAM 107 : வீக்ஷேஹம் கதா கோபாலமூர்த்திம் - தரங்கம் 12 கீதம் 107
มุมมอง 2172 หลายเดือนก่อน
VEEKSHEKAM KATHA-THARANGAM 12 - GITAM 107 : வீக்ஷேஹம் கதா கோபாலமூர்த்திம் - தரங்கம் 12 கீதம் 107
VAYAMDHANYA VAYAMDHANYAM - THARANGAM 11 - GITAM 106 : வயம்தன்யா வயம்தன்யம் - தரங்கம் 11 - கீதம் 106
มุมมอง 1833 หลายเดือนก่อน
VAYAMDHANYA VAYAMDHANYAM - THARANGAM 11 - GITAM 106 : வயம்தன்யா வயம்தன்யம் - தரங்கம் 11 - கீதம் 106
VEDADRI SIMHA THVAM NOUMI வேதாத்ரி ஸிம்ஹ த்வாம் நௌமி - THARANGAM 11 = GITAM 105
มุมมอง 1573 หลายเดือนก่อน
VEDADRI SIMHA THVAM NOUMI வேதாத்ரி ஸிம்ஹ த்வாம் நௌமி - THARANGAM 11 = GITAM 105
KAMSA SURA SAMHARANA - THARANGAM 11 - GITAM 104 : கம்ஸ்ஸுர ஸம்ஹரண - தரங்கம் 11 - கீதம் 104
มุมมอง 1983 หลายเดือนก่อน
KAMSA SURA SAMHARANA - THARANGAM 11 - GITAM 104 : கம்ஸ்ஸுர ஸம்ஹரண - தரங்கம் 11 - கீதம் 104
IDHI VADATHI GOPI - THARANGAM 11 - GITAM 103 | இதி வததி கோபி - தரங்கம் 11 - கீதம் 103
มุมมอง 1473 หลายเดือนก่อน
IDHI VADATHI GOPI - THARANGAM 11 - GITAM 103 | இதி வததி கோபி - தரங்கம் 11 - கீதம் 103
KIMU RAJATHE RAJASADHASI - THARANGAM 10 - GITAM 102 l கிமு ராஜதே ராஜஸதஸி - தரங்கம் 10 - கீதம் 102
มุมมอง 3043 หลายเดือนก่อน
KIMU RAJATHE RAJASADHASI - THARANGAM 10 - GITAM 102 l கிமு ராஜதே ராஜஸதஸி - தரங்கம் 10 - கீதம் 102
GOPALAM VIDHITI GOPALAM - THARANGAM 11 - GITAM 101 : கோபாலம் வித்தி கோபாலம் - தரங்கம் 10 - கீதம் 101
มุมมอง 2.6K4 หลายเดือนก่อน
GOPALAM VIDHITI GOPALAM - THARANGAM 11 - GITAM 101 : கோபாலம் வித்தி கோபாலம் - தரங்கம் 10 - கீதம் 101
VARAGUR VARADHANAI PANI MANAME
มุมมอง 1734 หลายเดือนก่อน
VARAGUR VARADHANAI PANI MANAME
MADHUBA MADHUBA DHOOTHAM - THARANGAM 10 - GITAM 100 : மதுப மதுப தூதம் - தரங்கம் 10 - கீதம் 100
มุมมอง 1.3K4 หลายเดือนก่อน
MADHUBA MADHUBA DHOOTHAM - THARANGAM 10 - GITAM 100 : மதுப மதுப தூதம் - தரங்கம் 10 - கீதம் 100
VARAGUR MAHIMAI
มุมมอง 4764 หลายเดือนก่อน
VARAGUR MAHIMAI
PAHIMAM PAHIMAM PARAMAKRUPALO : பாஹிமாம் பாஹிமாம் பரமக்ருபாளோ - THARANGAM 10 - GITAM 99
มุมมอง 2.8K4 หลายเดือนก่อน
PAHIMAM PAHIMAM PARAMAKRUPALO : பாஹிமாம் பாஹிமாம் பரமக்ருபாளோ - THARANGAM 10 - GITAM 99
AVALOKAYATHA SRI GOVINDAM - THARANGAM 10 - GITAM 98 அவலோகயத ஸ்ரீ கோவிந்தம் - தரங்கம் 10 - கீதம் 98
มุมมอง 2734 หลายเดือนก่อน
AVALOKAYATHA SRI GOVINDAM - THARANGAM 10 - GITAM 98 அவலோகயத ஸ்ரீ கோவிந்தம் - தரங்கம் 10 - கீதம் 98
MADHAVA MADHAVA ME RATHIM DHEHI THARANGAM 10 - GITAM 97 :மாதவ மே ரதிம் தேஹி - தரங்கம் 10 - கீதம் 97
มุมมอง 3025 หลายเดือนก่อน
MADHAVA MADHAVA ME RATHIM DHEHI THARANGAM 10 - GITAM 97 :மாதவ மே ரதிம் தேஹி - தரங்கம் 10 - கீதம் 97
YEHI YEHI VIJAYAGOPALA - THARANGAM 10 - GITAM 96 : ஏஹி ஏஹி விஜயகோபாலா - தரங்கம் 10 - கீதம் 96
มุมมอง 2025 หลายเดือนก่อน
YEHI YEHI VIJAYAGOPALA - THARANGAM 10 - GITAM 96 : ஏஹி ஏஹி விஜயகோபாலா - தரங்கம் 10 - கீதம் 96
NANDA NANDANAM NIJABAKTHA-THARANGAM-10 - GITAM 94 : நந்த நந்தனம் நிஜபக்த - தரங்கம் 10 - கீதம் 94
มุมมอง 2545 หลายเดือนก่อน
NANDA NANDANAM NIJABAKTHA-THARANGAM-10 - GITAM 94 : நந்த நந்தனம் நிஜபக்த - தரங்கம் 10 - கீதம் 94

ความคิดเห็น

  • @ghorakavisampathkumarstara665
    @ghorakavisampathkumarstara665 2 วันที่ผ่านมา

    Excellent

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 4 วันที่ผ่านมา

    Geetham 118 Tharangam 12 Slokas 310/312 Sri Theertha tells the GIST of the Geetham In the slokas Sri Krishna the Supreme God who cannot be described by Vedas Upanishad performed all marriage Rituals as per the Acharya s Instructions After marrying Rukmani Sri Krishna also married Seven more PATTA MAHISHIS In all total 8 PATTA MAHISHIS And was happily Leading the Administration in DWARAKA sitting in the 1000 pillar Mandapam This Geetham in Rāga KHAMBHOJI Sri Theertha describes sri Krishna as The god wearing the excellent Blue silk vastram The god with curly hair Protecting Vedas Brother of Sri BALARAMA The god with p Sent from my iPhone The god with decorative clothes The God sitting in Dwaraka 1000 pillar Mandapam The god surrounded by Vedic Brahmins The god decorated with diamonds Pearls Sitting in the RATNNA SIMHASANA The god saving the world and devotees Being prayerd by YOGIS and Indira And the proud son of Vasudev The god surrounded by EIGHT PATTA MAHISHIS The God who was sung by the Kandgarva DHUMBURU The god who is victorious The one who saves the Surrendered devotees The god who is sitting in the 1000 pillar Mandapam Surrounded by SANGAM DHUNDHUBHI And various musical 🎶 Instruments Vedic pandits Enjoying the dance performance by RAMBA and other dancers And musical birds 🦅 Wearing Diamonds Pearls Wearing Koustubhaaa Glaring like a chandra And the Lord of Beauty The lord who always bless Sri Narayana theertha I am seeing him on this day of Marriage This Geetham Traditionally always being sung by one and all on Radha Kalyanam Rukmani Kalyanam in all Sambhradhayaa Bhajannas And specially in VARAGUR VILLAGE BY even Children 👧 On festival days Sri PREMNATH ji Well explained the same as Signature Geetham Or Master piece His reference to DHUMBHURU in Ramayana Aranya kandam 4/3 And he being born as VIRADHA the demon His reference to Valmiki Ramayana And specifically to PUNGANUU PUNGA word And reference to MANASAA SNJARAA REE by Sadhashiva Brahmendral And his maternity in Bagawatgam is a big Treasure of KNOWLEDGE The singer Bharathi Shankruthi has done a very classic Melodic Sweet song with her Mesmerising voice The graphics and editing by VKS is the Back bone of this album ALL GOOD WISHES

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 5 วันที่ผ่านมา

    தரங்கம் 12/118/ இத்தரங்கம் ஸ்ரீநாரயணதீர்த்தர் தாமனுபவித்த ருக்மிணி கல்யாண வைபவங்களை தானே நேரில் அனுபவித்த பவ்யத்துடன் பாடியுள்ளார்.ப்ரேம்நாத்ஜீ ஆரம்பத்திலேயே எம்பெருமான் மாயையால் பல உருவங்கள் எடுத்து உரகை உய்விக்க அவதாரமும் செய்கிறர்.பரப்ரம்மஹ ஸ்வரூபம் .வாஸுதேவபதமே "ஸர்வத்ராஸௌ ஸமஸ்தம் ச வைத்து யத்ரேதிவையத: ததஸ்ஸ வாஸுதேவேதி வித்வத்பி: பரிபட்யதே " என்று ஸமஸ்த ஜகத்தும் அவருக்குள் வஸிக்கிறது,லக்ஷ்மியோடு கூடிய அவரே பரப்ரம்மம் என்று ப்ரேம்நாத்ஜீ அழகாக எடுத்து கூறியுள்ளார். ஸ்ரீதீர்த்தர் கர்கர் வாத்தியார் கல்யாண க்ரமங்களை மங்களகரமான ஐதீகங்களை அழகாக எடுத்துரைக்க அப்படியே ஸாஸ்த்ரோத்தமாக திருமணம் நடந்தது என்கிறார். இதில் ஸ்வாமி தேசிகன் திருமண மங்களங்களைபற்றி ஓர் ஓர் வர்ணனை செய்துள்ளார்.அதனை ரசித்ததால் பகிர்கிறேன் எல்லோருக்கும் மங்களத்தை கொடுப்பதற்காக கல்யாணப்பெண்ணிற்கு புஷ்பமாலை அலங்காரங்கள் அக்ஷதை சேர்த்தல் செய்கிறார்கள்.மங்கள வஸ்துக்களுக்கு மங்களம் அளிக்கும் சக்தி எப்படி ஏற்படும்? அதற்காகத்தான் ஸர்வ மங்களத்திற்கும் மூலதேவதையான ருக்மிணியின் கல்யாணத்தில் தாங்கள் அவளோடு அந்வயித்து மங்கள சேர்த்தியை க்ரஹித்துக்கொள்ள ஆசைப்பட்டு ஆபரணங்கள் அவள் மேனியில் ஒட்டிக்கொண்டனவாம்.இவளுக்கு மங்களங்கள் அளிக்கும் சக்தி அவற்றிற்கு இல்லை. திருமணம் முடிந்து த்வாரகாவில் ஸுதர்மா என்ற ராஜ்ய ஸபையில் தனது பட்டமஹிஷிகளுடன் வீற்றிருக்க தேவர்கள் பூமாறி பொழிந்தனர் என்று அனுபவித்து கீதம் பாடுகிறார்.ஸ்ரீப்ரேம்நாத்ஜீயின் அனுபவத்தை கேட்ட பிறகும் நமக்கு இந்த கீதத்தில் ஆர்வம் வரவில்லையென்றால் பக்தியில் இன்னும் மனது பக்குவப்படவில்லையென அர்த்தம். வரகூர் புண்ணிய பூமியாதலால் ருக்மிணி கல்யாண உத்ஸவம் த்வாரகையில் உள்ளது போல வைபவத்தை கேட்க கேட்க ஒருமுறையாவது ஆலோக்யே ருக்மிணி வைபவம் நமக்கும் வாய்க்க வருகூர் ஸ்ரீநிவாஸனருள் வேண்டுகிறேன். இதனை ஸ்ரீ தீர்த்தர் பார்த்து அனுபவிக்காது இப்படி ஓர் பக்தி பாடல் வர இயலாது என்று அவரே தன் தரங்கத்தில் கூறியுள்ளார். அபூர்வத் விஸ்மயம் ஆத்தாநயா என்று ஒவ்வொரு க்ஷணமும் ஆச்சர்யமாக தெய்வீகமாக இருந்தது என்று நம் ப்ரேம்நாத்ஜீ தானும் அனுபவித்ததை நமக்கும் அழகாக கூறியுள்ளார். மண்ணும் விண்ணும் மகிழவே ஸர்வ ஜகத்வந்த்யனான வஸுதேவ ருக்மிணியால் கடாக்‌ஷிக்கப்பட்டு உலகமே ஸ்வர்கமாயிற்று. ஜகத்வந்த்யாம் தேவீம் த்ரிலோகி மங்கள்யாம் மாங்கள்யத்தின் எல்லை பூமி அவள். ஸுராஸுராணாம் வந்த்ய: என்று பெருமாளை சொல்வர். இப்பேற்பட்ட ஸர்வோத்தமனை ஸ்ரீதர்த்தர் பாடிய பாடலுடன் அதனை மிக எளிமையாக எடுத்துரைத்த ப்ரேம்நாத்ஜீயின் விளக்கங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. ஸ்ரீதீர்த்தரின் பக்தி நமக்கும் அருள அந்த ருக்மிணி ஸமேத வஸுதேவரை வணங்கிடுவோம். குமாரி பாரதியின் குரல் குழைவு குழலின் இனிமை. பின்னூட்டம் அதி அற்புதம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @svradhakrishnansirugamani5423
    @svradhakrishnansirugamani5423 7 วันที่ผ่านมา

    राधे राधे राधे कृष्ण रुक्मिणी कृष्ण

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 8 วันที่ผ่านมา

    Tharangam 12 Geetham 117 BRAHMAKRANDHIM GURU KRISHNA THAVVAM Sloka 306/309 This Geetham by Theertha is well explaining the Telugu marriage rituals As explained by Guru Sri GARGAA ACHARYA SRI theetha sees Krishna visually and explains us Sri Krishna wear the yellow silk dress and Adire the yellow Mangala sutra to Rukmani after praying to the Five Brahmins couples Do the Homa as per the tradition Perform the SAPTHAPATHI ( taking 7 Steps of the Bride by Bride groom ) Towards east or North Perform the Sesha homam Kandhraavaa pooja Ssthaliii Bagammm And scrumptious DINNER with your lovely relatives Perform NAGA BALI AND Bless us with your Grace Here Sri PREMNATH ji explained well that Sri Krishna who is the creator of Maya He himself UNDER GOES the Rituals Keshava ( surya Narayan) Shanthi parvathamm Of MAHA Bharatha Also his explanation for BRAHMA GRANDIM LAJA HOMAM SAPTHA PATHI STHALIPAKAM GANDHARVA POOJA SESHA HOMAM PRATHANA HOMAM Also How respect is given to WIFE in SAPTHA PATHI Rituals Also reference to Valmiki Ramayana Sloka RAKSHITHA JEEVA LOKASYA SWA JANA RAKSHITHA Explains the deep knowledge he had on Epics He has taken pains to explain THUSTHIM PUSHTIM GURU JAGATHAAM reference to Dhuruvasass visit to Dhuruyodhanaa And DHORUUPATHI Calling Sri Krishna To save her and The Akshaya Partra Grace are well explained Also the referring to YAGYAAA PATHI rituals are well documented and it is a Treasure for us The singer SHIVA PRIYA had done a melodic performance and she is having a Good talent Sri VKS graphics And editing are beyond Explaining ( one separate Episode will come for this ) All good wishes Sent from my iPhon

  • @rangaprasad336
    @rangaprasad336 19 วันที่ผ่านมา

    Radhe krishna 🙏 contd... 🙏 தொடர்ந்து ஒவ்வொரு ஶ்லோகத்திற்கும் மிகவும் எளிமையாக, ப்ரதி பதமாக, அனைவருக்கும் புரியும் வண்ணம் விளக்கங்கள் சொல்லி இருக்கிறார் - நமது பாகவத ஶிரோன்மணி திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ ஶர்மா அவர்கள் இந்த நேரத்தில் பின்புலத்தில் வரைகலையில், திருப்பதி பெருமாள் கல்யாணத்துடன், நமது வரஹூர் பெருமாள் கல்யாணத்தின் ஊஞ்சல் காட்சிகளையும் மிக நேர்த்தியாக இணைத்திருக்கிறார் - ஸ்ரீ வி.கே.எஸ் அவர்கள். இந்த ருக்மிணி கல்யாண லக்னாஷ்டகத்திற்கு அடியேனுடைய திருத்தந்தையார் கூறும் விளக்கம். லக்னாஷ்டகத்தில் அஷ்டகம் என்றால் எட்டு, அதாவது எட்டு ஶ்லோகங்கள் என்று பொருள். ஸீதா கல்யாணத்திலும், ராதா கல்யாணத்திலும் 8 ஶ்லோகங்கள் தான் உள்ளன. ஆனால் ஸ்ரீ தீர்த்தர் 9 வது ஶ்லோகங்கள் செய்திருக்கிறார். ஏனென்றால் 1. அவருக்கு எட்டு ஶ்லோகங்களுடன் நிறுத்த மனம் வரவில்லை அதனால் ஒரு ஶ்லோகம் அவருடைய த்ருப்திக்காக ஒன்று சேர்த்து 9 ஆக செய்தார். 2. இதில் முதல் 7 ஶ்லோகங்களிலும், 9வது ஶ்லோகத்திலும், ருக்மிணி க்ருஷ்ணன் கல்யாணத்திற்கு யார் யார் வந்திருந்தார்கள் என்று குறிப்பிட்டு சொல்லி இருந்தாலும், 8வது ஶ்லோகத்தில் பொதுவாக - ஸத்யவாதிகளும், பதிவ்ரதா ஸ்த்ரீகளும் - ருக்மிணி கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது வரஹூர் வாசிகளும் இந்த ருக்மிணி கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள் என்று குறிப்பிடுவது போல் இருக்கிறது, அவர்களையே மறைமுகமாக ஸத்யவாதிகள், பதிவ்ரதா ஸ்த்ரீகள் என்று குறிப்பிடுகிறார் - அவருடைய செய் நன்றியை வரஹூர் ஆஸ்திக ஜனங்களுக்கு தெரிவிப்பதற்காக - என்றும், அடியேனின் திருத்தகப்பனார் விளக்கம் அளிப்பார். இது ருக்மிணி க்ருஷ்ணன் கல்யாணம் என்பதால், இந்த ருக்மிணி கல்யாணத்திற்கு வந்திருந்த அனைத்து பாகவத ஶிரோன்மணிகளையும், லக்னாஷ்டக ஶ்லோகங்களை மட்டும் ஒவ்வொரு ஶ்லோகமாக சொல்ல வைத்து ஒரு கதம்ப சாதத்தை, இக்காணொலியில் இணைத்திருக்கிறார் ஸ்ரீ. வி.கே.எஸ் அவர்கள். அனைவருக்கும் நமஸ்காரங்கள்.🙏 இந்த கைங்கர்யம் நன்கு வெற்றிகரமாக தொடர்ந்து நல்லபடியாக, பூர்ண காவ்யமும் செவ்வனே பூர்த்தி அடைய குருநாதர்கள், அலமேலு மங்கா ஸமேத ப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள், ஆனந்த வல்லி அம்பா ஸமேத மஹா கைலாஸ நாதர் க்ருபையை ப்ரார்த்திக்கிறேன். மீண்டும் நமஸ்காரங்கள்🙏 ராதேக்ருஷ்ண🙏

  • @rangaprasad336
    @rangaprasad336 19 วันที่ผ่านมา

    Radhe Krishna 🙏 contd..🙏 இரண்டாவது சரணத்தில் வரும் ஸத்யகாமாதி குணம் - என்ற பதத்திற்கு விளக்கம் அளிக்கும் போது, கோபாலமேவ தைவதம் என்ற தரங்கத்தையும், சாந்தோக்ய உபனிஷத் பற்றி சொல்லியும், ஸ்ரீ ருக்மிணி ஸந்தேஶ கத்யமான - ஸ்ரீமதே … என்று தொடங்கும் கத்யத்தின் வரிகளையும் ஒப்பிட்டு வ்யாக்யானம் கொடுத்ததும் அழகாக இருந்தது. மூன்றாவது சரணத்தில் வரும் - முனி ப்ருந்தாதீனம் - என்ற பதத்திற்கு பொருள் சொல்லும் போது, ஸ்ரீராமன் தண்டகாவனத்தில் இருந்த முனிவர்களைக் காப்பாற்றியதை ஒப்பிட்டு சொன்னதும் அருமை. மேலும் - ஶரணாகத பாலனம் - என்ற பதத்திற்கு பொருள் சொல்லும் போது, ஸ்ரீமத் ராமாயணத்தில் வரும் - தண்டகாவனத்தில் முனிவர்களின் ஶரணாகதி, விஶ்வாமித்ரரின் ஶரணாகதி, விஶ்வாமித்ரர் கொடுத்த அஸ்த்ர ஶஸ்த்ரங்களின் தேவதைகளின் ஶரணாகதி, பரஸுராமரின் ஶரணாகதி, பரதனின் ஸ்ரீராம / பாதுகா ஶரணாகதி, பாதுகா ஸஹஸ்ரத்தில் ஸ்ரீ தேஶிகர் சொல்லிய கங்கா / ஸரயூ நதிகளின் ஶரணாகதி, லக்ஷ்மணனின் ஶரணாகதி, தாரை [வாலியின் மனைவி] ஶரணாகதி, ஸுக்ரீவ ஶரணாகதி, ஆஞ்சனேயர் ஶரணாகதி, விபீஷண ஶரணாகதி, காகாஸுர ஶரணாகதி, என்ற அனைத்து ஶரணாகதிகளையும் விளக்கி வ்யாக்யானம் சொன்னது மிகவும் அழகு. [ஏனோ ஸமுத்ர ராஜனின் ஶரணாகதி, - விடுபட்டுவிட்டது] மற்றபடி அனைத்து சரணங்களுக்கும் ப்ரதிபதமாக சிறிய குழந்தைகளுக்கும் தெளிவாக புரியும் வண்ணம் மிக அழகாக பொருள் சொல்லியும், ஸ்ரீமன் நாராயண தீர்த்தரின் தீராத வயிற்றுவலியை தீர்த்துவைத்து அவருக்கு நற்கதியையும் அளித்து, ஸ்ரீ தீர்த்தருக்கு மிகவும் விரைவாக அருள் புரிந்தவர் என்று விளக்கம் கூறி, இந்த உபன்யாஸத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார் பாகவத ஶிரோன்மணி திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ ஶர்மா அவர்கள். இந்த கீர்தனையை அருமையாக இசைத்திருக்கிறார், வரஹூர் ஸ்ரீ ஹாலாஸ்யம் ஸ்ரீதர் பாகவதர் அவர்கள். எப்போதும் போல வரஹூர் வாசி - ஸ்ரீ வி.கே.எஸ் அவர்களின் ஆங்கில, தமிழ் முகவுரைகளும், வரைகலைகளும் ப்ரமாதம். மொத்தத்தில் எப்போதும் போல இந்த வாரமும் ஒரு சிறந்த ஸமர்ப்பணம் வரஹூர் பெருமாளுக்கும் ஸ்ரீமன் நாராயண தீர்த்தருக்கும். 🙏 சில பல காரணங்களால் சிறிது தாமதம் ஏற்பட்டு விட்டது, மன்னிக்க வேண்டுகிறேன். புனர் நமஸ்காரங்கள் 🙏 ராதே க்ருஷ்ண 🙏

  • @rangaprasad336
    @rangaprasad336 19 วันที่ผ่านมา

    115 शोभनं मे शोभनम् - 30 11 2024 ராதே க்ருஷ்ண 🙏 நமஸ்காரங்கள் 🙏 ஶ்லோகம் 305 இந்த ஶ்லோகத்திற்கு ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்கள் பொருள் சொல்லும் போது, ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் ஆகியவற்றை மிகவும் அருமையாக விளக்கி, இந்த ருக்மிணி கல்யாணத்தின் போது, ருக்மிணி தேவி மட்டுமல்லாமல், அவர்களால் ஸ்ரீ க்ருஷ்ணனின் தலையில் வர்ஷிக்கும் போது, அந்த முத்துக்களும் ஸ்ரீ க்ருஷ்ணனுடன் இரண்டறக் கலந்தன - என்ன ஒரு அருமையான விளக்கம். இந்த இடத்தில் ………………………. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியோனே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே! என்ற குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியையும் சொல்லி விளக்கியது அவருடைய விளக்கத்திற்கு மேலும் அழகூட்டியது, இந்த ஸமயத்தில், வரைகலையில் - ஆந்த்ராவின் “தாழம்ப்ராலு / தரம்ப்ராலு” என்ற ஆந்த்ராவின் திருமண ஸம்ப்ரதாயத்தைப் பற்றி - ஹைதரபாத் வாசி - ஸ்ரீ வி.கே.எஸ் அவர்கள் விளக்கி இருப்பதும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் அடியேனுடைய திருத்தகப்பனாரின் விளக்கம். அதாவது தெலுங்கு / ஆந்த்ரா ஸம்ப்ரதாயத்தில் மணப்பெண்ணும், மணமகனும், அவர்களுக்கு நடுவில் ஒரு திரையை வைத்து அவர்கள் ஒருவருக்கொருவர் மங்களாக்ஷதை சேர்த்துக் கொள்வது வழக்கம். இதை இந்த பஜனை திருமணங்களின் முன்னோடி - பத்ராசல ராமதாஸர் அவருடைய ஸீதா கல்யாண ஸம்ப்ரதாயத்தில் அறிமுகப் படுத்தி இருக்கிறார். அதையே இங்கே நமது தீர்த்தரும் ஸ்ரீ க்ருஷ்ணனும், ருக்மிணியும் முத்துக்களால் ஒருவருக்கொருவர் தலையில் வர்ஷித்துக் கொண்டார்கள் என்று இந்த ஶ்லோகத்தில் சொன்னதாக - அடியேனின் திருத்தகப்பனார் விளக்கம் அளிப்பார். மேலும் அதனைக் குறிப்பதற்காகவே நாம் கூட அனைத்து இடங்களிலும் பஜனை ஸம்ப்ரதாயத்தில் நடைபெறும், ராதா / ஸீதா / ருக்மிணி முதலிய தெய்வீக திருமணங்களில், பகவானுக்கு முன்பு ஒரு திரையை வைத்து, அதிலேயே, லக்னாஷ்டகத்தின் போது ஒவ்வொரு ஶ்லோகத்தின் முடிவிலும், மங்களாக்ஷதையினை பாகவதர்கள் சேர்ப்பார்கள். [நமது வரஹூரில் கோவிலாக இருப்பதால் பாகவதர்களுக்கு பதிலாக பட்டாச்சாரியாரே அந்த மங்களாக்ஷதையினை பெருமாளிடத்தில் சேர்த்து விடுவார்]. இதுவும் அடியேனின் திருத்தகப்பனாரின் விளக்கம் தான். கீதம் 115 அடுத்து கீத்த்திற்கு பொருள் சொல்லும் போது, ஶோபனம் என்ற சொல்லுக்கு விளக்கங்கள் அபாரம். மேலும் ப்ரதிபதமாக அந்த கீதத்தின் வரிகளுக்கு பொருள் சொல்லி வரும் போது, “அனந்தம்” என்ற பதத்திற்கு விளக்கம் சொல்லும்போது, விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் வரும் “அனந்தாத்மா” என்ற பதத்திற்கு - ஶங்கர பாஷ்யத்திலிருந்து விளக்கம் சொல்லி விளக்கியதும் மிகவும் அருமை. Radhe Krishna contd...

  • @Subi654
    @Subi654 21 วันที่ผ่านมา

    அஹோ மம பாக்யம்! ஜய ஜய கல்யாண கோபாலா! 🙏🙏

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 21 วันที่ผ่านมา

    12 வது தரங்கம் 116 இத்தரங்கத்தில் கோபால. நாம மூலம் மங்கள பாசுரமாக பாடலை துவங்கியுள்ளார். தனக்கும் எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும் என்கிறார். ஸம்ஸார இருளிலிருந்து அஜ்ஞான இருளைற்றி ஞானம் அருளுபவன் கோபாலன் பஞ்ச இந்தரியங்களால் ஜீவர்கள் அடையும் துன்பத்தை போக்க கண்ணனிடம்மனம் ஈடுபடவேண்டும் என்று ப்ரேம்நாத்ஜீ அழகாக வர்ணித்துள்ளார். ஆண்டாள் திருப்பாவையில் வையத்து வாழ்பவர்களே வாழ்வில் உய்ய செய்யும்கிரிசைகள் கேளீரோ என்கிறாள். செய்யாதன செய்யோம் என்கிறாள். பிறப்பால் வருவது வாழ்வு பிறவிப்பயனை உணர்ந்தால் வருவது உய்வு. சரீரம் ஓர் ரதம் இந்த்ரியங்கள் ரதத்தில் பூட்டிய குதிரைகள்,ஆத்மா ரதத்தை செலுத்தும் சாரதி,மனம் தான்கடிவாளம் மனதை அடக்காவிட்டால் பகவதனுபவம் கிடைக்காது. இதனை தீர்த்தர் உணர்ந்து பாடியதை நம்ப்ரேம்நாத்ஜீ உணர்ந்து நம்மையும் ஞான ஒளிக்கு அழைத்து சென்றுள்ளது அவரது சிறப்பு. ய: சாஸ்த்ரவிதி முத்ஸ்ருஜ்ய வர்ததே காம காரத: நஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம்கதிம். (16-23) கீதையில் கண்ணன் சொன்னது சாஸ்த்ர முறை துறந்து மனம் போன போக்கில் நடந்து கொள்பவன் வெற்றி அடைவதில்லை ஞாத்வா சாஸ்த்ரவது நோக்தம் கர்ம கர்தும் இஹாரஸி (17-24) செய்யத்தக்கது செய்யத்தகாதது என்று சாஸ்த்ரம் உரைத்ததை அறிந்து கர்மம் செய். இதனையே சந்த்யா வந்தனாதிகள் செய்து கர்மத்தின் பலனை கண்ணனிடம்விட ஞானம் அடைந்து கண்ணனையே அடையலாம்என்று எடுத்துரைத்துள்ளார். கல்யாண குணங்கள் நிறைந்தவன் எம்பெருமான் வேதம் அறிந்தவர்கள் அவனுக்கு ப்ரியமானவர்கள். எந்நாள் எம்பெருமான் உந்தனுக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் உய்ந்தது காண். பெரியாழ்வார் பாசுரம். புருஷோத்தமன் என்று உருகுகிறார்தீர்த்தர் உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத் யுதாஹ்ருத: (15-17) எவன் எல்லோரையும் போஷிக்கிறானோ அழிவற்றவனோ அவனே புருஷோத்தமன். அப்படிப்பட்ட தேவனுக்கு மங்களங்கள் என்கிறார் தீர்த்தர். க்ருஷ்ணானுபாவம் என்ற பக்தியில் திளைத்து பரமானந்தம் கண்டவர் பாடலில் நாமும் பாடி உய்வு பெறுவோம். மன்மநா பவ மத் பக்தோ மத்யாஜீமாம் நமஸ்குரு மாமேவைஷ்ய ஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸிமே (18-65) என்னிடமே மனதை செலுத்தி பக்தி கொண்டு வணங்கினால் என்னையே அடைவாய். என்று கண்ணன் உரைத்ததை அறுபவித்த தீர்த்தர் வழியில் நாமும் கோபாலனை உணர்ந்து பக்தி செய்து ப்ரபத்தியும் செய்தால் பிறவிப்பிணியிலிருந்து விடுபடலாம். தீர்த்தருக்கு பல்லாண்டு அவரது பாடல்களின் அர்த்தத்தை எளிதாக நமக் களித்து வரும் ஸ்ரீப்ரேம்நாத்ஜீக்கும் பல்லாண்டு. பாடியவரின் இனிமையால் பாடல் மெறுகேறியது பின்னூட்டம் அதற்கு இன்னும் மெறுகேற்றியது. காத்திருப்போம் கண்ணன் அனுபவம் பரிபூர்ணமாக பெற ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்🙏🙏🙏🙏

  • @Subi654
    @Subi654 24 วันที่ผ่านมา

    I like to add my congratulations to you for the excellent discourse. So far, I thought there were only eight verses in Lagnashtakam. I used to comment on these at Radha Kalyanam events. Today, I learnt there is one more. Thanks. Radhekrishna! 🙏🙏

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 25 วันที่ผ่านมา

    This Geetham 115 In the Ragha Bandhu VARALI Gives us the blessing and prayers through Rukmani to all of us The devotees of Varagur Perumal For all MANGALAM PEACE and happiness and wellness Rukmani prays after the marriage and sri Theertha who witnessed the same event puts in the form of Geetham Sri Theertha explaining the marriage t events Which is being done in ANDHRA STYLE Sri Rukmani Devi showering the WHITE PEARLS on Sri Krishna and the Pearls while in the hands 🙌 of Rukmani looks RED due to her hands colour and complexion And when it comes down on Sri Krishna they become BLACK Matching his colour Sri PREMNATH ji here explains well about the Various stages of Bhakthi and Mukthi Referring Kulasekaran Alwar Jeevathma and Paramathma The Event THALABU Putting pearls has been nicely documented by MR VKS Rukmani praying to sri Krishna for her MANGALAM Wellness Peace Happiness After the marriage praising sri Krishna about his qualities He is who is known for his kindness Beauty like the MAN MADAN He who is Kalyana Kolam with his Adorable flowers He is being praised by Devas And Vedas with high qualities He is Ananthan He is everything Everywhere He is sathya Kama JAGATH KARANAM he takes care of his devotees He who gives Moksha He who is always mesmerised with his Flute 🪈 to the devotion Of the bhaktas He who saves the Rishi’s He who saves who surrendered to him He who is the CHANDRA of the Sarath Kala ruthu He who saves from Samsara Who is KAMADHENU KALPAKA VIRIKSHAM HERE sri PREMNATH ji explanation for MUNI BRINDA DHEENAM reference to Aranya kandam And his explanation for SARANAGATHI referring

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 28 วันที่ผ่านมา

    இத்தரங்கத்தில் ருக்மணி க்ருஷ்ணர்மங்களகரமான திருமணத்தை விவரிக்கிறார்.அமுதிலும் ஆற்ற இனியனைப் பருகுகின்றன கண்கள் என்பர்.அப்படி ருக்மணி கண்ணனையே அடைந்து திருக்கல்யாணம் நடக்க செந்தாமரை போன்ற கையை குவித்து நல்முத்துக்கள் சிகப்பாக அதனையே கண்ணனின்சிரஸில் தூவ கண்ணனின் நிறத்தை அடைந்தது என்று அழகாக வர்ணிக்கிறார் ஸ்ரீதீர்த்தர்.இந்த வரிகளின் விவரணையை ஸ்ரீப்ரேம்நாத்ஜீ கூறும்பொழுது ஸ்வாமி தேசிகன் யாதவாப்யுதயத்தில் கண்ணனை திருவயிற்றில்சுமந்த தேவகி க்ருஷ்ணரஸத்தை பருகியவள் போல் தோன்றினாள் என்றது நினைக்கத்தோன்றுகிறது. ஸ்ரீதீ்ர்த்தரின் பக்திக்கு மயங்கி வருகூரில் ருக்மணி பரிணயத்தை காட்சியாக அருளினாற் போலும்.அதனால் அவர் பாடல்களில் கண்ணனின் வர்ணனை வார்த்தைக்கு அப்பாற்பட்ட இனிமையுடன் ஒலிக்கிறது. பகவான் தன்னை அடை விரும்பும் பக்தர்களை தன் பக்கத்தில் இருத்திக்கொள்கிறான் ப்ரேம்நாத்ஜீ 5 ந்து முக்தி நிலைகளை அருமையாக விவரித்துள்ளார். ஸாலோக்யம் ஸாமிப்யம் ஐஸ்வர்யம் ஸாருப்யம் ஸாயுஜ்யம்.அவனிடமிருந்து விலகாமல் பக்தியுடன் ஒன்று கலப்பதே ஸாயுஜ்யம் என்று ஆழ்வார் பாசுரங்களை எடுத்துரைத்துள்ளார். இவரது விவரங்களை எழுதவே ஓர் தனி ப்ரதி ஆகிவிடும்.ஞானம் விரிந்து பக்தி செய்பவர் தத்துவார்த்தங்களை எடுத்துரைப்பதை கேட்பதே ஆனந்தம். நம்மாழ்வார் சுடராழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான் அடியார் குழாங்களை கூடும் நாள் என்று கொலோ ! என்று அடியார்க்கு அடியானாய் இருப்பதை தாம் விரும்புவதாக கூறுகிறார்.நம் ப்ரேம்நாத்ஜீ ஸ்ரீதீர்த்தரின் பாடல் நயத்தில் லயித்தே எம்பெருமானை அநுபவிக்கும் அழகு ஆழ்வாரின் நிலையை ஒத்திருக்கிறது. கண்ணன் பிறந்த போது தம் அத்புதம் என சுகர் உரைத்தார்.ருக்மணியை கண்டதும் தாம் அத்புதம் என்று கண்ணனுக்கு பட்டதாக ஸ்வாமி தேசிகன் கூறுகிறார் .இவர்கள் இருவரையும் இணைந்து பார்ப்பது தத் அத்புதம் த்வந்த்வம் என்று ஸ்ரீதீர்த்தரும் வர்ணிக்கிறார். அடுத்தது கண்ணனின் குணங்கள் ப்ரபஞ்சத்தின் ஆதி சரணாகத ரக்ஷகன் சரத்கால சந்திரன் பாவங்களை அகற்றும் சூரியன் என்று அப்படியோர் வர்ணனை.இதில் சரணாகதி பற்றி ஸ்ரீப்ரேம்நாத்ஜீ இராமாயணத்தின் சாரத்தை பருகி நம்மையும் கிரங்கவைத்துள்ளார்.பரதனின் பாதுகா ப்ரபாவம் ஓர் இரத்தினம்.ஸ்வாமி தேசிகன் காகாசுர சரணத்தை பற்றி பாடிய பாசுரம். பத்திமுதலாமவற்றில் பதி எனக்கு கூடாமல் எத்திசையும் ஒழன்றோடி இளைத்து விழும்காகம் போல் அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே! ஸ்ரீதீர்த்தரும் அவரது மங்களகரமான ப்ரார்த்தனைகளும் நம் ப்ரேம்நாத்ஜீயின் தத்துவார்த்த விளக்கங்கள் கேட்கும்பொழுது லக்ஷ்யமான ப்ரம்ஹவஸ்துவில் அம்புபோல் லயித்து பக்தியெனும் வித்யை சேர ப்ரமஹவித்தாக ஜ்வலிக்கின்றனர். நாம் செய்த பாக்கியம்.ருக்மணி க்ருஷ்ண ஸமேத எம்பெருமான் எல்லோருக்கும் மங்களம் அருளட்டும். பாடலும் பின்னூட்டமும் பாடல் வர்ணனையும் த்வாரகாபுரியில் இருந்த ஓர் ப்ரமிப்பு கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே🙏🙏🙏🙏🙏

  • @vardhanirajan4031
    @vardhanirajan4031 29 วันที่ผ่านมา

    🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @mjsastry
    @mjsastry หลายเดือนก่อน

    Sada vinmrapurvaka sastanga namaskaramulu Abhivadaye chatussagara paryantam go brahnebhya Subham Bhavatu Bhargava Chavaana Apnuvana Aurva Jamadagnya Pancha risheya pravaranvita Srivatsa gotrodbhavaya Aapastambha sutrah yajussakha Adhayayi Jagannatha Sastry Sharma Ahambho Abhivadaye

    • @vkswamy84
      @vkswamy84 29 วันที่ผ่านมา

      Thank you for your comments and for your interest which have motivated further our interest in this service.

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 หลายเดือนก่อน

    This Geetham 113 By sri Theertha is the Re enactment of SWAYAM VARAM Of Rukmani From the eyes of Sri Theertha As rightly said by Sri PREMNATH ji Sri Theertha is the Re incarnation of SUGABRAHMAM And has fulfilled what ever he left while Doing Sri math Bagawatham GADYAM 34 All the kings from many countries have assembled for swamyamvaram Here Sri PREMNATH ji Referring to Yudha kandam 28/33 to 42 slokas about MAHA sangam Sangam Padmamm MAHA padmamm Adhirathan MAHA Ratan are really good Sri Krishna comes to the Hall of swayammvaraa Rukmani comes out of the Parvathi temple after pooja and the assembled kings were taken lost in senses And highly impressed with her beauty She walks out like a PATHIVIRATTHAA Here in this Geetham The DHUDHTHI OR THE assistant/friend The one who is a bridge between Sri Krishna and Rukmani An Ambassador Girl who is the friend of Rukmani explains her the qualities and beauty and other characteristics of the Kings from various states assembled there at the Mandapam For which Rukmani Replies in an excellent way Here Sri PREMNATH ji Explaining reference to Bagawatham 10/53 About Rukmani s Pooja and honouring the Brahamins are well explained The reference that Sri theertha fulfilled his wish in RE BIRTH By including Swayamvaram is well received and shows the Skills of Sri PREMNATH ji The explanation for SAKI DHOOTHI NICHALA SANCHALA REFERRING SRI KRISHNA as Sarad chandra Also while explaining the 10 th Geetham line SARVITHA SARVANENNA Chakrinamm Sara Kamala sangakshem Saradha chandra Saniii bhasyam Are excellent Lastly the explanation given for SARA VIVEKA CHADUREE and quoting the Prahalad CHARITRAM in bagawatgam Shows the DEPTH of Sri PREMNATH ji Knowledge The singer Sri Ramachandra BAGAWATHAR has done a melodic version Sri VKS graphics and Editing are SUPER 👌 All good wishes

  • @rangaprasad336
    @rangaprasad336 หลายเดือนก่อน

    Radhe krishna 🙏🙏 contd... 🙏 இந்த கீர்த்தனைக்கு விளக்கம் சொல்லும்போது, அடியேனது திருத்தந்தையார், ப்ரும்மஸ்ரீ V.N. வேங்கட க்ருஷ்ண பாகவதர் அவர்கள், இந்த கீர்த்தனையில் ருக்மிணி சின்னக் கைக் குழந்தையாக மாறி விட்டாள் என்று விளக்கம் சொல்வார். கடைத் தெருவுக்கு நாம் சிறு குழந்தையை அழைத்துச் செல்லும் போது, ஏதாவது ஒரு பொருளை பார்த்து ஆசைப்பட்டால், அந்த பொருள் தான் வேண்டும் என்று அழுது அடம் பிடிக்கும். நாம் வேறு ஏதாவது பொருளை வாங்கிக் கொடுப்பதாக சொன்னாலும், தான் கேட்ட பொருள் தான் வேண்டும் என்று சில குழந்தைகள் அடம் பிடிக்கும். அது போல் இந்த கீர்த்தனையில், அந்த தூதி ஒவ்வொரு சரணத்திலும் ஒவ்வொரு ராஜாவை அறிமுகப் படுத்தினாலும், ருக்மிணி சின்ன குழந்தையைப் போல - எனக்கு ஸ்ரீக்ருஷ்ணன் தான் வேண்டும், அவனைக் காட்டு - ஸ்ரீக்ருஷ்ணன் தான் வேண்டும், அவனைக் காட்டு - என்று மீண்டும் மீண்டும் கேட்டு அடம் பிடிக்கிறாள் பார், நமக்கு பகவானிடம் அப்படிப்பட்ட பக்தி தான் வேண்டும். என்று அடியேனின் பூஜ்யஸ்ரீ தகப்பனார் சொல்வார். அதாவது இந்த கீர்த்தனையை ஒரு தூதிக்கும், ருக்மிணிக்கும் நடந்த ஸாதாரண உரையாடலாகப் பார்க்காமல், எவ்வளவு கவனச்சிதறல்கள் வந்தாலும், அந்த பகவானையே நினைவில் வைத்து அவனிடம் பக்தி செய்யவேண்டும் என்பதை நமக்கு காட்டுவதற்காகவே இந்த கீதம் இவ்வாறு ஸ்ரீ தீர்த்தரால் எழுதப் பட்டதாக அடியேனின் திருத் தகப்பனார் சொல்வார். இதைப் போலவே ஸ்ரீ ஸ்ரீ ஞானானந்த ஸ்வாமிகளும், நாம் பகவானிடம் பக்தி செய்யும் போது, திருவிழாவில் காணாமல் போன குழந்தை தன் தாயைத் தேடுவது போல பகவானைத் தேட வேண்டும் என்று சொல்வார். அதாவது தாயைத் தொலைத்து விட்டு, தன் தாயிடம் இருந்து பிரிந்து நிற்கும் அந்த குழந்தையை தேற்றுவதற்கு நாம் என்ன தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருள் வாங்கிக் கொடுத்தாலும், அவற்றை ஏற்காமல், - எனக்கு எங்கம்மா தான் வேணும் - அப்படின்னு அழும். அதுபோல் இந்த பூமியில் நம் மனதை மாற்ற எத்தனை பொருட்கள், சுகங்கள் நம்மைத் தேடி வந்தாலும், அவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, நாம் பகவான் ஒருவனையே நினைவில் வைத்து அவனிடம் மட்டுமே, மனோ, வாக், காயம் இவைகளை அர்ப்பணித்து, பக்தி செய்ய வேண்டும் என்று சொல்வார் ஸ்ரீ ஸ்ரீ ஞானானந்த ஸ்வாமிகள். இன்றைய ஒளிபரப்பில் வரைகலைகள் எப்போதும் போல வரஹூர் ஸ்ரீ வி.கே.எஸ் அவர்களின் கைவண்னத்தில் மிளிர்கிறது. இதை மிகவும் அழகாக, பதம் பிரித்து நன்றாக அனைவருக்கும் புரியும் வண்ணம், நிறுத்தி நிதானமாக, திருப்புணித்துரா ப்ரும்மஸ்ரீ ராமசந்த்ர பாகவதர் அவர்கள் பாடி இருக்கிறார். அவர் பாடும் போது, தூதியின் கூற்றுக்கும், ருக்மிணியின் பதிலுக்கும் வித்யாஸம் தெரிய, முகாரி மற்றும் நாட்டைக் குறிஞ்சியில் பாடி இருப்பதும் மிகவும் அழகாக இருக்கிறது. இந்த கைங்கர்யத்தில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் அனேக கோடி நமஸ்காரங்கள். இவர்களுக்கு ஸர்வ மங்களங்களையும் அளிக்கவும், இந்த கைங்கர்யம் தொடர்ந்து நடைபெறவும் எல்லாம் வல்ல வரஹூர் அலமேலு மங்கா ஸமேத ப்ரஸன்ன வேங்கடேச பெருமாளையும், ஆனந்த வல்லி அம்பாள் ஸமேத மஹா கைலாஸ நாதரையும் குருநாதர்கள் ஸ்ரீமன் நாராயண தீர்த்தரையும், ப்ரும்மஸ்ரீ கோபால பாகவதரையும் ப்ரார்த்திக்கிறேன். புனர் நமஸ்காரங்கள்🙏 ராதேக்ருஷ்ண🙏

  • @rangaprasad336
    @rangaprasad336 หลายเดือนก่อน

    ராதேக்ருஷ்ண🙏 நமஸ்காரங்கள்🙏 113 कोमलाधरे रुक्मिणी - 16 11 2024 இந்த வாரம் இந்த தரங்கத்திற்கு பொருள் சொல்லும்போது ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்கள், கத்யம் 34, ஶ்லோகம் 287, 288, கத்யம் 35, ஶ்லோகம் 289, கீதம் 113 ஆகியவற்றிற்கு வ்யாக்யானம் அளித்திருக்கிறார். கத்யம் 34க்கு வ்யாக்யானம் சொல்லும் போது, முதலில் கத்யத்தை பதம் பிரித்து சொன்னவிதம் அழகாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ப்ரதிபதமாக பொருள் சொல்லும் போது, அதில் குறிப்பிட்ட சங்கம், மஹாசங்கம், பத்மம், மஹாபத்மம், அதிரதன், மஹாரதன் ஆகியவற்றிற்கு பொருள் சொல்லும் போது ஸ்ரீமத்ராமாயணம் யுத்தகாண்டம் 28வது அத்யாயம் ஶ்லோகம் 33-42 - குறிப்பிட்டு, அதனை இணைத்து விளக்கியதும் மிக அழகாக இருந்த்து. ஶ்லோகம் 287க்கு பொருள் சொல்லும் போது, தஶமஸ்கந்தம் 53வது அத்யாயம் இணைத்துப் பொருள் சொன்னது அருமையாக இருந்த்து. தொடர்ந்து ஶ்லோகம் 288, கத்யம் 35 ஆகியவற்றிற்கு ப்ரதிபதமாக பொருள் சொல்லி விட்டு ஶ்லோகம் 289க்கு பொருள் சொல்லும் போது, தூதி என்ற வார்த்தைக்கு பொருள் சொல்லும் போது, நாயகன் நாயகிக்கு இடையில் ஒரு facilitator என்பதாக மிக அழகாக பொருள் சொல்லி, தூதிக்கும் ஸகிக்கும் உள்ள வித்யாஸத்தைக் காண்பித்து, விளக்கி இருக்கிறார் ஸ்ரீ பாகவதர் அவர்கள், அடுத்து கீதம் 113ற்கு பொருள் சொல்லும் போது, ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படாத ஒரு ஸ்வயம் வரத்தை இங்கே, ஸ்ரீமன் நாராயண தீர்த்தர் நடத்திக் காட்டி, அந்த ஸமயத்தில், இந்த தூதி தான், வந்திருந்த அரசர்களை அறிமுகம் செய்து வைத்ததாக சொல்லி இருக்கிறார் ஸ்ரீ தீர்த்தர் என்றும், ஸ்ரீமத் பாகவதத்தில் தான் சொல்ல விட்டதை சொல்வதற்காக இங்கே மீண்டும் ஸ்ரீமன் நாராயண தீர்த்தராக அவதாரம் செய்து, வரஹூரில் ஸ்ரீக்ருஷ்ண லீலா தரங்கிணியில் அதனைச் சொல்லி, தன் ஆசையை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார், ஸ்ரீ ஸ்ரீ ஶுகப்ரும்ஹம் என்று மிக அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறார், பாக்வத ஶிரோன்மணி திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ ஶர்மா பாகவதர் அவர்கள். தொடர்ந்து ப்ரதி பதமாக மிக எளிய தமிழில், அனைவருக்கும் புரியும் வண்ணம் கீதம் 113க்கு பொருள் சொல்லி இருக்கிறார். அப்போது அந்த தூதிக்கும், ருக்மிணி தேவிக்கும், நடந்த உரையாடலை மிகவும் ஸ்வாரஸ்யமாக, விறுவிறுப்பாக விளக்கி சொல்லி இருக்கிறார் ஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்கள். இதில் 10வது சரணத்தில் - சர்வித சர்வணேன அலம் - என்ற பதத்திற்கு பொருள் சொல்லும் போது, ஸ்ரீமத் பாகவதம் 7வது ஸ்கந்தம் ப்ரஹ்லாத சரித்ரம், அத்யாயம் 5, ஶ்லோகம் 30 உடன் ஒப்பிட்டு பொருள் சொன்னது மிகவும் அழகாக இருக்கிறது. contd..... Radhe Krishna 🙏🙏

  • @rajisuresh1012
    @rajisuresh1012 หลายเดือนก่อน

    It was indeed a mesmerizing moment to hear the song sung by Bharati. Stay blessed always.Explanation was excellent.

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 หลายเดือนก่อน

    Geetham 112 Tharangam 12 Rukmani Devi after sending the letter through a learned Brahmin to sri Krishna Gets a response from Sri Krishna that He is coming to KUNDINAPURAM Sri Narayana theertha has described the Greatness of sri Krishna Dharu 30 Sri PREMNATH ji had nicely explained about GOVINDA RAMA Also about HARI Referring to Bagaeatham 11/5:36 to 40 The greatness of RAMA Nama KRISHNA Nama Also his reference to Adi shankara Vishnu Sahasranama bhssyam Also referring to KALISANDHARANAA UPANISHAD Chanting Hari 8 times Rama 4 times Krisna 4 times Are excellent 👌 Sri Theertha sing as a representative of Rukmani Fully expressing her feelings Bagawatgam 10/53 Has not in detail touched this subject but Sri Thertha had very elaborate Geetham Vidhu meaning Vishnu Ugraa means Sivan Had used his poetry skills PREMNATH ji Comparing to Kalameha Pulavar Shows his deep knowledge Theertha has experienced the msg from varagur Perumal and had narrated as the same Praising the lord he says The lord who is the son of Vasudeva The lord who is adored with 5 types of flowers The lord who is worshipped by Sanath kumara Sri Krishna who is the ultimate saviour for all The lord who is having DHARUGAN as the chariot driver The lord who is HARI THE one who removes the sin of devotees The lord who is in PAR KADAL with Lakshmi Devi The lord who always wears the best silk The lord who protects you Rukmani who is so beautiful impressing everyone You are going to marry this great lord Hearing this great qualities and positive msg from the Brahmin Rukmani is happy The singer Bharathi SANKRUTHI had done an excellent rendering Sri PREMNATH ji explaining NIKAMA kalidha Sloka suiting to KRISHNA Leela Tharangini establishes the fact that Sri Theertha is the reincarnation of SUKA BRAHMAM THE graphics of Mr VKS Are excellent and editing is well done 👍

  • @rangaprasad336
    @rangaprasad336 หลายเดือนก่อน

    ராதே க்ருஷ்ண 🙏 தொடர்கிறது 🙏 அடுத்து கீதம் 112க்கு மிகவும் அழகாக ப்ரதிபதமாக பொருள் சொல்லி விளக்கி இருக்கிறார் ஸ்ரீ பாகவதர் அவர்கள். அதில் 2வது சரணத்திற்கு பொருள் சொல்லும் போது, ஹரி என்ற பதத்தை ஸ்ரீ தீர்த்தர் ஏன் உபயோகப் படுத்தி இருக்கிறார் என்பதை விஷ்ணு ஸஹஸ்ர நாமம் ஶ்லோகம் மூலம் மிகவும் அழகாக விளக்கி இருக்கிறார் ஸ்ரீ பாகவதர் அவர்கள். அதுபோல் 4வது சரணத்திற்கு பொருள் சொல்லும் போது, ஶ்லோகம் 278ல் ருக்மிணி ப்ரார்த்தனை செய்த - க்ஷேமத்தை செய்வதற்காக - ஸ்ரீ க்ருஷ்ணன் வந்து கொண்டிருக்கிறார் என்று ஒப்பிட்டு பொருள் சொன்னதும், அது போல ஸ்ரீமான் அகிலாத்மா என்ற பதத்திற்கு பொருள் சொல்லும் போது, நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேசவ:புருஷோத்தம: - என்ற பதங்களை ஒப்பிட்டு பொருள் சொன்னதும், ‘ஸ்ரீமான்’ - என்ற பதத்திற்கு ஶங்கர பாஷ்யத்திலிருந்து பொருள் சொன்னதும், மிகவும் அழகாக இருக்கிறது. சரணம் 5க்கு பொருள் சொல்லும் போது, அதில் “மாதவம்” என்ற பதத்தை ஏன் ஸ்ரீ தீர்த்தர் உபயோகப் படுத்தி இருக்கிறார் என்பதை மிகவும் அழகாக, மது வித்யை என்பதற்கு விளக்கம் சொல்லி விளங்க வைத்து இருக்கிறார் ஸ்ரீ பாகவதர் அவர்கள். சரணம் 6க்கு பொருள் சொல்லும் போது - “மத்த ப்ரமரை: ஆபீதம்” என்ற பத்த்திற்கு விளக்கம் சொல்லும் போது, ஸ்ரீமத் பாகவதம் ஶ்லோகம் - “நிகமகல்பத்ரோர் களிதம்” - என்ற ஶ்லோகத்தின் பொருளோடு ஒப்பிட்டு சொன்னதும், அந்த வரிகள் ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணிக்கும் பொருந்தும் என்று, “ஸ்ரீதீர்த முகாத் அம்ருத த்ரவ ஸம்யுதம்” என்றும், “பிபத ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணி ரஸம் ஆலயம்” என்றும் சில சொல் விளையாடல் செய்து விளக்கியதும், ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணியின் பலஶ்ருதி ஶ்லோகங்களுக்கு பொருள் சொல்லி விளக்கியதும், ஸ்ரீமத் பாகவத்த்தில் சொல்ல விட்டதை சொல்வதற்காகவே ஸ்ரீ ஸ்ரீ ஶுகப்ரும்மம், ஸ்ரீமன் நாராயண தீர்தராக பிறவி எடுத்து ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணி இயற்றி ஸ்ரீ க்ருஷ்ணனைத் துதித்து தன்னுடைய குறையை தீர்த்துக் கொண்டார் என்ற விளக்கமும் மிகவும் அருமை. ஶ்லோகம் 286க்கு மிகவும் அழகாக பொருள் சொல்லி, தன்னுடைய உபன்யாஸத்தை பூர்த்தி செய்திருக்கிறார், பாகவத ஶிரோன்மணி திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ ஶர்மா அவர்கள். வரஹூர் வாசி ஸ்ரீ வி.கே.எஸ் அவர்களின் தமிழ், ஆங்கில முன்னுரைகள், வரைகலையின் சிறப்பு எப்பவும் போல மிகவும் அருமை. இந்த தரங்கத்தை, காணொலியில், ப்ரம்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்களின் குமாரத்தி , ஸங்கீத விதூஷி , குமாரி பாரதி ஸங்க்ருதி அவர்கள் மிகவும் அனுபவித்து, நிறுத்தி, நிதானமாக, அழகாக பதம் பிரித்து, அற்புதமாக இசைத்திருக்கிறார். சூப்பர். சில ப்ராசீன காலப் பாகவதப் பெரியவர்கள் இதனை மிகவும் ரசிக்கமாட்டார்கள் என்றாலும், “கண்டேன் ஸீதையை” என்று ராமாயணத்தில் ஹனுமான் சொன்னது போல், ருக்மிணிக்கு “ஸ்ரீ க்ருஷ்ணன் வந்து கொண்டிருக்கிறான்” என்று பொருள் பட அந்த அந்தணர் கூறியது போல, “வனமாலி ஆயாஹி” என்று கீர்த்தனையை ஆரம்பித்து பாடினது மிகவும் அருமை. இந்த வாரமும் மிகவும் சிறப்பான சமர்ப்பணம் வரஹூர் பெருமாளுக்கும், குரு நாதருக்கும் அனைவருக்கும் நமஸ்காரங்கள்.🙏 இந்த கைங்கர்யம் நன்கு வெற்றிகரமாக தொடர்ந்து நல்லபடியாக பூர்த்தி அடைய குருநாதர்கள், அலமேலு மங்கா ஸமேத ப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள், ஆனந்த வல்லி அம்பா ஸமேத மஹா கைலாஸ நாதர் க்ருபையை ப்ரார்த்திக்கிறேன். மீண்டும் நமஸ்காரங்கள்🙏 ராதேக்ருஷ்ண🙏

  • @rangaprasad336
    @rangaprasad336 หลายเดือนก่อน

    112 वनमाली किल नूनम् - 09 11 2024 ராதேக்ருஷ்ண🙏 நமஸ்காரங்கள்🙏 ஶ்லோகம் - 281 மற்றும் தரு : 30க்கு மிகவும் அழகாக ப்ரதிபதமாக பொருள் சொல்லி தன் உபன்யாஸத்தை ஆரம்பித்திருக்கிறார் ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர். இதில் தரு 30 க்கு பொருள் சொல்லும் போது, 1. மிகவும் ப்ரஸித்தமான முதல் தரங்கத்தில் வரும் - ராம க்ருஷ்ண கோவிந்தேதி - என்ற 6வது தரங்க கீதத்தினை ஒப்பிட்டு பொருள் சொல்லியும், 2. கலியுகத்தில் நாமஸங்கீர்த்தனத்தின் மேன்மையை எடுத்து சொல்லும், ஸ்ரீமத் பாகவதம் 5வது ஸ்கந்த்த்தில் இருக்கும் ஶ்லோகங்களின் பொருளை விளக்கிச் சொல்லியும், 3. கலிஸந்தரண உபனிஷத்தின் மேன்மையை எடுத்து சொல்லியும், 4. ஸ்ரீமத் பாகவதத்தின் கடைசியில் வ்யாஸ பகவான் ஹரி நாமத்தை பற்றி கூறியிருப்பதை எடுத்து சொல்லியும், 5. ஹரி வம்ஶம் என்ற நூலில் கோவிந்த நாமத்தைப் பற்றி கூறி இருப்பதை விளக்கி சொல்லியும் 6. மஹாபாரதத்தில் ஶாந்தி பர்வாவில் - வராஹ அவதாரம் பற்றி கூறி இருப்பதையும் சொல்லி விளக்கி இருப்பதும் 7. வரஹூருக்கும், வராஹத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்து சொல்லியும், 8. வரஹூரில் - ‘கோவிந்த’ என்ற நாமமே - தாரக நாமாவாக இருப்பதை எடுத்துச் சொல்லியும் 9. த்யாகராஜ கீர்த்தனையின் - ஜோ ஜோ ராம - என்ற கீர்த்தனையின் பொருளை எடுத்துச் சொல்லியும் விளக்கி இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. [இந்த இடத்தில் அடியேனுடைய திருத்தகப்பனார் - வேடிக்கையாக ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு பூர்வ ஜன்மத்தை ஞாபகப் படுத்துவதற்காகவே “கோவிந்த ராம” என்று பாடிக் கொண்டு வந்தார் என்று சொல்லுவார் - அதாவது ஹே க்ருஷ்ண, நீ இந்த ஜன்மத்தில் க்ருஷ்ணனாக பிறந்திருந்தாலும், முந்தைய அவதாரத்தில் நீயே ஸ்ரீ ராமன், அப்போது உன்னுடன் இருந்த ஸீதாப்பிராட்டி இப்போது ருக்மிணி தேவியாக ஜனித்து உனக்காக காத்திருக்கிறாள். க்ருஷ்ணா நீ காலம் தாழ்த்தாமல் உடனே சென்று உனக்காக காத்திருக்கும் ருக்மிணி தேவியை அழைத்து வர வேண்டும் - என்று அவருக்கு மட்டும் புரியுமாறு ஸூசகமாக - கோவிந்த ராம - என்று பாடினார் என்று அடியேனின் பூஜ்யஸ்ரீ தகப்பனார் கூறுவார்.] ஶ்லோகம் - 282-285 க்கு மிகவும் அழகாக ப்ரதி பதமாக விளக்கம் சொல்லி விளக்கும் போது, காளமேகப் புலவரின், பாம்பிற்கும், எண்ணைக்கும் ஒப்பிட்ட ஶ்லேடை செய்யுளான - ஆடிக் குடத்தடையும், ஆடும்போதே இரையும் …. - என்று துவங்கும் செய்யுளை சொல்லி பொருள் விளக்கம் கொடுத்து அதனை 284வது ஶ்லோகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தீர்த்தரின் ஶ்லேடையுடன் ஒப்பிட்டு பொருள் சொல்லும் போது, ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதரை - Many sided genius - என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்த உபன்யாஸத்தில் மிகவும் விஶேஷமாக 282வது ஶ்லோகத்தில், ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப் படாத ஒரு தகவலை, அதாவது, ஸ்ரீக்ருஷ்ணன் ருக்மிணியின் கடிதத்திற்கு பதில் கடிதம் கொடுத்தார், என்ற தகவலை ஸ்ரீமன் நாராயண தீர்த்தர் சொல்லி இருக்கிறார் என்றால், ஸ்ரீ க்ருஷ்ணனே தஶமஸ்கந்தத்தின் நிகழ்வுகளை நடித்துக் காட்டி, அவ்வமயம் சிறிய திருவடியான தாளம் கொட்டி ஆஞ்சனேயரும் உடன் தாளம் போட்டு ஆமோதித்து சொன்னபடியால் ஸ்ரீமன் நாராயண தீர்த்தர் சொன்ன தகவல் கண்டிப்பாக உண்மையானது என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய உபன்யாசத்தில் சொல்லி இருக்கிறார் ப்ரும்மஸ்ரீ பாகவதர் அவர்கள். ராதே க்ருஷ்ண🙏 தொடரும்🙏

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 หลายเดือนก่อน

    இத்தரங்கத்தில் ருக்மிணி தூதராக கண்ணனிடம் ஓர் ப்ராம்மணரை அனுப்ப அவர் மூலமாக திருநாம வைபவத்தை அனுபவித்த ஸ்ரீதீர்த்தரும் சரி நாம மகிமையை ப்ரேம்நாத்ஜீ பல பாஷ்ய உபநிஷத் வேத வார்த்தைகளுடன் எளிமையாக எடுத்துரைத்ததும் சரி நம் உள்ளத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றது. எந்த நாக்கு கண்ணனை பாடவில்லையோ அது ஸர்ப்ப புற்றுபோல் என்று ஆதிசங்கர்ர் சொன்னதாக நம் ப்ரேம்நாத்ஜீ சொன்னதுபோல் குலசேகர ஆழ்வார் முகுந்த மாலையில் ஜிஹ்வே கீர்தய கேசவம் முரரிபும் சேதோ பஜ என்றும் ஆலஸ்யம் வ்யபநீய பக்தி ஸுலபம் என்றும் நா இருப்பதே அவனை பாட கண் இருப்பதே அவனை காண என்று நாம வைபவ பெருமை அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கோவிந்த நாமத்தின் மகிமை மட்டுமே தனி ப்ரசங்கமாக இவர் சொல்லி நாம் கேட்க வேண்டும்.கோதை போல் கோவிந்தனை புகழ்வதில் தீர்த்தரும் நம் ப்ரேம்நாத்ஜீக்கும் பலத்த போட்டி. அருமையான தரங்கத்திற்கு அருமையான விளக்கங்கள். கல்யாண களை என்பார்கள் தரங்க இசை அதன் வர்ணனை ருக்மணீ கல்யாண கச்சேரியாக அமைந்து விட்டது. பாரதியின் பாடலின் இனிமை தீர்த்தரின் சொற்களின் வளமை ப்ரவசன சிரோன்மணி யின் ஞானப்புலமை பின்னூட்டத்தின் திறமை பிபத ஸ்ரீக்ருஷ்ணலீலா தரங்க ரஸமாலயம். 👌🙏

  • @vasanthaiyer6661
    @vasanthaiyer6661 หลายเดือนก่อน

    Good voice

  • @rangaprasad336
    @rangaprasad336 หลายเดือนก่อน

    Radhe krishna 🙏 contd..🙏 மூகனையும் வாசாலனாகச் செய்து பரமனானந்தத்தை அளித்த மாதவன் - தனக்கும் ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணியை இசைக்கச் செய்து, பரமானந்தத்தை அளித்ததால் - இங்கே - மாதவ - என்ற பதத்தை உபயோகப் படுத்தி இருக்கிறார் என்பதும் ஒரு அபூர்வமான விளக்கம். இந்த இடத்தில் “திவ்ய த்ருக் விதாயினம்” என்ற பதத்திற்கு விளக்கம் சொல்லும் போது, பகவத் கீதையில், அர்ஜுனனுக்கு விஶ்வரூபம் காட்டி - அவனுக்கு சொன்ன விளக்கத்தை எடுத்துக்காட்டாக சொல்லி விளக்கி இருப்பதும், ப்ரும்மஸ்ரீ கோபால பாக்வதர் முதலான பெரிய பெரிய பாகவதர்கள் இந்த கீர்த்தனை பாடும் போது சொன்ன விளக்கங்களை எடுத்துச் சொன்னதும் மிகவும் அழகு. [ இந்த இடத்தில் அடியேனின் திருத்தகப்பனார் விளக்கம் சொல்லும் போது, - மாதவ - என்றால் - லக்ஷ்மியின் கணவன் என்று பொருள் , அதனால், “ஹே மாதவ - நீயே உண்மையில் லக்ஷ்மியின் மணாளன் என்பதை உணர்ந்து கொள், நானே லக்ஷ்மி, நீதான் ஸ்ரீமன் நாராயணன், என்பதை மறந்து விடாதே, உன்னுடைய லக்ஷ்மியான நான் - ருக்மிணி - என்ற பெயரோடு பிறந்து உனக்காக காத்திருக்கிறேன். அடியாள் உனைத்தவிர வேறு எவரையும் மனதால் நினைக்கக்கூட மாட்டேன் - நீ எப்போதும் போல் விளையாட்டு பிள்ளையாக இருக்காமல், அடியாளை மணமுடிக்க உடனே ஆவன செய் - என்று ஞாபகப்படுத்தவே, இந்த இடத்தில் “மாதவ” என்ற நாமத்தை ருக்மிணி உபயோகித்ததாக - அடியேனின் பூஜ்யஸ்ரீ தகப்பனார் கூறுவார்] இன்றைய உபன்யாஸத்தில், ப்ரும்மஸ்ரீ பாகவதரின் உபன்யாஸத்தோடு, ஒவ்வொரு சரணத்தையும் அவரே அழகாக தன்னுடைய மென்மையான குரலில் பாடி விளக்கம் சொல்லி இருப்பது - ஒரு போனஸ் மற்றபடி இந்த கீர்த்தனத்தின் சரணங்கள் யாவற்றிற்கும் வரி வரியாக பொருள் சொல்லி அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இந்த உபன்யாஸத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார், பாகவத ஶிரோன்மணி திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ ஶர்மா பாகவதர். இந்த தரங்கத்தை, காணொலியில், ஸங்கீத விதூஷி ஸ்ரீமதி வீணா பாலாஜி அவர்கள் மிகவும் அனுபவித்து, நிறுத்தி, நிதானமாக, அழகாக பதம் பிரித்து, அற்புதமாக இசைத்திருக்கிறார். எப்போதும் போல இந்த காணொலியில் வரைகலைகளில், பெருமாளையும், வரஹூரையும், ஸ்ரீ க்ருஷ்ணனையும், ருக்மிணி கல்யாண கதையையும், தன் ஜிகினா வேலைகளால் அலங்கரித்துக் காண்பித்து அனைவரையும் அசத்தி இருக்கிறார் வரஹூர் வாசி ஸ்ரீ சூரி கந்தஸ்வாமி அய்யர். மொத்தத்தில், ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்களின் உபன்யாஸமும், வரஹூர் பாகவதர்களின் கானமும், ஸ்ரீ வி,கே.எஸ் அவர்களின் வரைகலைகளும் இந்த க்ருஷ்ண லீலா தரங்கிணி தொடருக்கு புது மெருகு ஏறிக் கொண்டிருக்கின்றன. அனைவருக்கும் நமஸ்காரங்கள்.🙏 இந்த கைங்கர்யம் நன்கு வெற்றிகரமாக தொடர குருநாதர்கள், அலமேலு மங்கா ஸமேத ப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள், ஆனந்த வல்லி அம்பா ஸமேத மஹா கைலாஸ நாதர் ஆகியோரது க்ருபையை ப்ரார்த்திக்கிறேன். மீண்டும் நமஸ்காரங்கள்🙏 ராதேக்ருஷ்ண🙏

  • @rangaprasad336
    @rangaprasad336 หลายเดือนก่อน

    109 - गोपालमेव दैवतम् - 19 10 2024 ராதேக்ருஷ்ண🙏 நமஸ்காரங்கள்🙏 சில பல காரணங்களால், சிறிது தாமதமாகி விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன். ப்ரம்மஸ்ரீ ப்ரேம்நாத் பாகவதரின் இந்த உபன்யாஸத்தில், எப்போதும் போல, நமக்கு தெரியாத பல விளக்கங்களை அருமையாக கொடுத்திருக்கிறார்.. ஶ்லோகம் 275 இந்த ஶ்லோகத்திற்கு ப்ரதிபதமாக அர்த்தம் சொல்லி மிக அழகாக விளக்கி இருக்கிறார் பாகவதர் ஸ்வாமி. அந்த ஸமயத்தில் “கோவிந்தாவாப்தயே ஹ்ருதி” என்ற பதத்திற்கு விளக்கம் சொல்லும் போது, “கோவிந்த” என்ற பதத்திற்கு ஸ்ரீ பாகவதர் அவர்கள் , ஹரிவம்ஶம் என்ற காவ்யத்திலிருந்தும், மஹாபாரதம் ஶாந்தி பர்வாவிலிருந்தும், திருப்பாவை முதலிய ஆழ்வார் பாஸுரங்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டி சொன்ன விளக்கங்கள் அபாரம். கீதம் 109 இதில் பல்லவிக்கு பொருள் சொல்லும் போது, - கோபால - என்ற நாமத்தை ஸ்ரீ தீர்த்தர் ஏன் உபயோகப்படுத்தி உள்ளார் - என்ற விளக்கமும் அழகாக இருக்கிறது, மொத்தத்தில் பூமியை ஹிரண்யாக்ஷனிடமிருந்து காப்பாற்றியது போல் தன்னை ருக்மி, ஶிஶுபாலன் போன்ற கொடியவர்களிடமிருந்து காப்பாற்ற “கோவிந்த” என்ற பதத்தையும், உடலில் உள்ள பஞ்ச இந்திரியங்களையும் கட்டுபடுத்தி, க்ருஷ்ணனை மட்டுமே நினைத்து உருகி, அவனிடமே லயிக்க, “கோபால” என்ற பதத்தையும், ருக்மிணி இந்த ஶ்லோகம்/கீர்த்தனையில் உபயோகப் படுத்தி அழைத்து இருப்பதாக ஸ்ரீ நாராயண தீர்த்தர் கூறியிருக்கிறார் - என்ற ப்ரும்மஸ்ரீ பாகவதரின் விளக்கம் அபாரம். இந்த ஸமயத்தில் பஞ்சேந்த்ரியங்கள், ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள், பஞ்ச உபசாரங்கள், [லமித்யாதி பூஜா] ஆகியவற்றுக்கான விளக்கமும் அதி அத்புதமாக ஸ்ரீ பாகவதர் அளித்து இருக்கிறார். அனைத்து சரணங்களையும் மிகவும் அழகாக அவரே இசைத்து, ப்ரதி பதமாக பொருள் சொல்லி விளக்கி இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. கடைசி சரணத்தில் “மாதவ” என்ற பதத்திற்கு விளக்கம் அளிக்கும் போது, - மது- என்ற பதத்திற்கு விளக்கம் அளித்து, ஏன் ‘மாதவ’ என்ற பதத்தை ஸ்ரீ தீர்த்தர் கையாண்டு இருக்கிறார் - என்ற விளக்கமும் அழகாக இருக்கிறது, ராதேக்ருஷ்ண🙏 contd.. 🙏

  • @rangaprasad336
    @rangaprasad336 หลายเดือนก่อน

    Radhe krishana 🙏 contd...🙏 கீதம் 110 இந்த கீதத்திற்கு மிகவும் அழகாக, அனைவருக்கும் புரியும் வண்ணம், ப்ரதிபதமாக பொருள் சொல்லி விளக்கி இருக்கிறார், இதில் - கமனீய கருணாகரம் - என்ற பதத்திற்கு பொருள் சொல்லும் போது, ஜய ஜய ரமா நாத - என்ற கீதத்தின் - நிரவதிக காருண்ய - என்ற பதத்தின் பொருளையும் ஒப்பிட்டு விளக்கி இருப்பதும், கோபால - என்ற நாமத்தை இந்த கீதத்தில் பல இடங்களில் ஸ்ரீமன் நாராயண தீர்த்தர் உபயோகப்படுத்தியதின் அவசியத்தையும் அழகாக விளக்கி இருப்பதும், பாகவதம் முதல் ஸ்கந்தம் , 2வது அத்யாயம், 10வது ஸ்லோகத்தின் பொருளையும் ஒப்பிட்டு விளக்கம் சொல்லி இருப்பதும் அருமை. இந்த கீதத்தில் வரும் - தீர்த்தரின் ஶ்யாம ஸுந்தரனையும், ருக்மிணி ஸந்தேஶத்தின் - புவன ஸுந்தரனையும், கோபீ வஸ்த்ராபஹரணத்தின் போது கோபிகைகள் அழைத்த ஶ்யாம ஸுந்தரனையும் - ஒப்புமைப் படுத்தி பொருள் சொல்லி இருப்பதும் அழகாக இருக்கிறது. த்வாமஶ்ரயே[அ]னீஹம் - என்ற பதத்திற்கு பொருள் சொல்லும் போது, பகவத் கீதையின் - ஸர்வ தர்மான் பரித்யஜ்ய - என்ற ஶ்லோகத்தின் பொருளையும் மிகவும் அழகாக ஒப்பிட்டு கூறியிருக்கிறார் ஸ்ரீ பாகவதர் அவர்கள். மற்றபடி அனைத்து சரணங்களுக்கும் ப்ரதிபதமாக சிறிய குழந்தைகளுக்கும் தெளிவாக புரியும் வண்ணம் மிக அழகாக பொருள் சொல்லியும், ஸ்ரீமன் நாராயண தீர்த்தரின் தீராத வயிற்றுவலியை தீர்த்துவைத்த வரஹூர் வேங்கடேஶ பெருமாளுக்கு, இந்த கீர்த்தனையின் கடைசி சரணத்தில் நன்றி கூறி இருக்கிறார் ஸ்ரீ தீர்த்தர் என்று கூறியும், இந்த உபன்யாஸத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார் பாகவத ஶிரோன்மணி திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ ஶர்மா அவர்கள். இந்த கீர்தனையை அருமையாக இசைத்திருக்கிறார், திருப்புணித்துரா ப்ரும்மஸ்ரீ ராமச்சந்த்ர பாகவதர் அவர்கள். எப்போதும் போல வரஹூர் வாசி - ஸ்ரீ வி.கே.எஸ் அவர்களின் ஆங்கில, தமிழ் முகவுரைகளும், வரைகலைகளும் ப்ரமாதம். மொத்தத்தில் எப்போதும் போல இந்த வாரமும் ஒரு சிறந்த ஸமர்ப்பணம் வரஹூர் பெருமாளுக்கும் ஸ்ரீமன் நாராயண தீர்த்தருக்கும். 🙏 புனர் நமஸ்காரங்கள் 🙏 ராதே க்ருஷ்ண 🙏 th-cam.com/users/sgaming/emoji/7ff574f2/emoji_u1f64f.png

  • @rangaprasad336
    @rangaprasad336 หลายเดือนก่อน

    110 काङ्क्षे तव प्रसादम् - 26 10 2024 ராதே க்ருஷ்ண 🙏 நமஸ்காரங்கள் 🙏 கத்யம் 32 இந்த கத்யத்திற்கு பொருள் சொல்லும் போது, ருக்மிணியின் ஆத்மானந்தத்தை, ஸ்ரீ பாகவதர் பரமானந்தமாக அனுபவித்து, மிகவும் அழகாக பொருள் சொல்லி விளக்கி இருக்கிறார். ஶ்லோகம் 276 ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்கள், இந்த ஶ்லோகத்திற்கு வ்யாக்யானம் கொடுக்கும் போது, ஸ்ரீமத் பாகவதம் / ஸ்ரீமன் நாராயணீயம் ஆகியவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களையும் ஒப்பிட்டு பொருள் சொல்லி இருக்கிறார். அதே சமயத்தில் ஸ்ரீமத் பாகவதம் 3 வது ஸ்கந்தம், 16 வது அத்யாயத்தில் ஶ்லோகம் 2-12ல் கூறப்பட்ட பூர்வகதையையும், அந்த ஸமயத்தில் ப்ராமணர்களைப் பற்றி பகவான் ஸனகாதிகளிடம் கூறியதை ஞாபகப் படுத்தியும், Law of torts, Vicarious liability பற்றியும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 71 வது ஶ்லோகத்தை எடுத்துக் கூறியும் விளக்கி இருப்பதைக் கேட்கும் போது ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதரை Many sided genius என்று பாராட்டிச் சொல்லி மனதால் பல நமஸ்காரங்களும் செய்யாமல் இருக்க முடியவில்லை. கத்யம் : 33 இதற்கு பொருள் கூறும்போது, சாந்தோக்ய உபனிஷத், 3வது பாகம், 14வது கண்டத்தில், சாண்டில்ய மஹரிஷியால் சொல்லப்பட்ட ஶ்லோகத்தின் பொருளையும் ஒப்பிட்டு சொல்லி இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. அதே நேரத்தில் தஶமஸ்கந்தம் 52வது அத்யாயம் ஶ்லோகம் 37 - 43 வது ஶ்லோகங்களில் வரும் ருக்மிணி ஸந்தேஶத்தை / ருக்மிணியின் கடிதத்தையும், கானடா ராகத்தில் இசைத்து, பொருளை எடுத்துச் சொல்லி, அதன் பலஶ்ருதியாக இதை பாராயணம் செய்யும் பெண் குழந்தைகளுக்கு ஸ்ரீ க்ருஷ்ணன் போன்ற மாப்பிள்ளையுடன் விரைவில் திருமணம் என்றும், அதி அத்புதமாக விளக்கி இருக்கிறார் ஸ்ரீ பாகவதர் அவர்கள். பின்னணியில் ருக்மிணியின் மன உபாதைகளையும், விரக தாபத்தையும் வரைகலையில் காண்பித்திருக்கிறார் வரஹூர் வாசி ஸ்ரீ வி.கே.எஸ் அவர்கள். இந்த தஶமஸ்கந்தம் 42,43 வது ஸ்லோகத்திற்கு பொருள் சொல்லும் போது, ஸ்ரீமத் பாகவதம் 2 வது ஸ்கந்தம் 35 வது அத்யாயம் 17வது ஶ்லோகத்தின் பொருளையும், ஸ்வயம்வர கல்யாணி மந்த்ரத்தைப் பற்றியும் எடுத்துக் கூறி விளக்கி இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. [இந்த இடத்தில் நகைச்சுவையாக அடியேனின் திருத்தந்தையார் - ருக்மிணி தற்கால பெண் குழந்தைகளுக்கு - 1. எவ்விதம் கணவனைத் தேர்ந்தெடுப்பது, [முதலில் உந்தன் ரூபத்தைப் பார்த்து மோஹிக்க வில்லை, கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விஜாரிப்பதே மெய் - என்பது போல் உன்னுடைய கல்யாண குணங்களை பல பாகவதர்கள் மூலமாக கேட்டறிந்து -“ஶ்ருத்வா குணான்” - அதன் பின்பே உன் ரூபத்தையும் விரும்பி - “புவன ஸுந்தர” - என்பது இரண்டாவது பதம் தான்] என்றும் 2. எப்படி லவ் லெட்டர் எழுதுவது என்று மட்டும் சொல்லித் தர வில்லை, 3. “மஹதீ குலதே³வியாத்ரா யஸ்யாம்ʼ ப³ஹிர்னவவதூ⁴ர்கி³ரிஜாமுபேயாத்” மிகச் சிறப்பு வாய்ந்ததான குலதேவியான பார்வதி தேவியை பூஜைசெய்ய செல்லும்போது என்று சொல்லி, அதாவது எவ்விதம் நாத்தனாரை தாஜா செய்து வைத்துக் கொள்வது என்றும் சொல்லித் தந்திருக்கிறார் ருக்மிணி தேவி- என்று சொல்வார்] ஶ்லோகம் - 277 இந்த ஶ்லோகத்திற்கு மிகவும் அழகாக ப்ரதிபதமாக பொருள் சொல்லி, இதில் கூறப்பட்ட விஷயம் ருக்மிணியின் உள்ளம் மட்டும் அல்ல, ஸ்ரீ தீர்த்தர் தன்னுடைய உள்ளக்கிடக்கையும் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று விளக்கம் சொல்லி இருப்பதும் அழகு, அதேசமயம் ஸ்ரீமத் பாகவதம் 11வது ஸ்கந்தம், 8வது அத்யாயம் 44வது ஶ்லோகத்தின் பொருளையும் ஒப்பிட்டு சொல்லி இருப்பதும் அத்புதம். Radhe krishna 🙏 contd..🙏

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 หลายเดือนก่อน

    Tharangam 12 Geetham 108 Slokas 273/274 Here in this Geetham Rukmani is telling her HEART HER MANAS HER THOUGHTS HER SENSES to Concentrate only on Sri Krishna Indirectly sri Theetha is telling us to concentrate on the PARA BRAHMAMM Rukmani is instructing her senses by praising the qualities of sri Krishna That they should concentrate only on Gopalam Govindamm Madhavan Here sri Theetha is referring the great qualities as the Lord who is existing in all the Jeevan in this world The lord who is the incarnation of all characters and good qualities The lord who came as a CHILD on a leaf 🍂 Floating when the whole world is not existing The lord who is residing In the hearts of Yogi The lord with various names and roopas The lord who is not attached to any one and identifies the Vedas The lord who is not having any LIKE A OR DIS LIKE and treats everyone as same The lord who’s is well described in SAMA VEDAS and upanishad The lord who’s is AKASHA The lord who is Always BRIGHT without any help from any object or Vasthu The SAGARA of qualities The lord who saves us from SAMSARA WITH SIX GREAT QUALITIES THE LORD WHO IS ADHI GURU The Venugopala who is the son of Nanda Gopa The lord who carried the MANTARA MALAI On his shoulders in KOORMAA Avathar The lord who is worshipped by Nanda and Sunanda The lord who blessed Sri Narayana theertha Rukmani says her senses to always worship this great GOPALA SRI PREMNATH JI referring to Govindamm Gopalan His reference to RE / RE To Mysore Vasudeva acharyas Sadashiva brahmendra His reference to Sri Krishna Floating on the Leaf with a finger in his mouth His reference to ADHI GURU are brilliant Well deserved explanation of every words The poetic Rhythm of sri Theertha is to be appreciated The singer Mrs Veena Balaji has done a MELODIC performance Very nice voice Keep it up 👍 The Graphics Master VKS has done a Remarkable job Now only 12 more to go All good wishes Great project All Varaguran must Refer to all his friends and relatives Sent from my iPhone

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 หลายเดือนก่อน

    Tharangam 12 Geetham 109 Sloka 275 In this Geetham Sri Narayana theertha has described the bhakthi of Rukmani towards sri Krishna With utmost sincerity and dedication Rukmani after knowing her proposed marriage with SISHUBALAN Had decided to marry sri Krishna and with utmost sincere bhakthi and surrender Was praying the lord Here sri Theertha puts himself in the place of Rukmani and indirectly prays him his qualities The definition given by Sri PREMNATH ji For GOVINDA and the effect of the Pancha indriyas and its causes and effects and its application are well addressed by Sri PREMNATH ji Quoting the BAGAWATH geetha Bagawatham Rukmani prays to sri Krishna Govinda I always pray for you and your blessings You the root cause of the Pancha indriyas Vedas SARVA Kama SARVA rasan SARVA kanda The one who protects the Vedas Devas And Brahma The lord who is the CHANDRAN for the YADAVAS and the Lord who shines the Gopis face like chandra The lord who killed Kamsaa and the lord who kills AAGGYANNA My prayers are always towards sri Krishna and he is the lord who gave Viswa Roopa Darshan to Arjuna and he is the one who protects and bless those bhakthas who are sincere and surrendering to him He is the lord who gave darshan to Yashoda Arjuna Brahma And sri Narayana theertha We VARAGURANS ARE very lucky to be born in varagur where Sri Krishna danced to the tunes of sri Theertha and gave Darshan to him Sri PREMNATH ji has taken lot of pains and time in this project and with utmost sincerity he had described he words The singer VEENA BALAJI has done an incredible performance and the First Sloka which she is Telling I AM NOT ABLE TO TRACE in the book ( from where she is taking can be shared ) The graphics expert SRI VKS has done a fantastic work and with patience All good wishes Sent from my iP

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 2 หลายเดือนก่อน

    Geetham 12 Tharangam 110 This Geetham is about the expression of love of Rukmani towards Sri Krishna After realising the fact that Her brother has arranged for a marriage with Sishuu Balan Rukmani sends a LETTER through one of Learned Brahmin to Sri Krishna Expressing her love and willingness to marry him And request him to Come help her Describing Sri Krishna of his qualities Rukmani says she is not having any other interest in this world except sri Krishna She pleads him By praising his great qualities The lord who gave the Vedas Who gives abundant blessings and wealth The Gopala who is kind The Gopala who is taking care of the learned pandits The Gopala who controls the enemies The lord who reduced the burden of BHOOMI MATHA by killing the demons Except you Sri Krishna My mind is not leaning towards any one The lord who cares this whole world The Gopala who is having GARUDA as banana The lord who save us from samsara The Gopala who cured the Health of Sri Narayanan theertha and his stomach ache And gave Moksha to Sri Narayana theertha has given a RYTHAMIC Melody in Ragha SAVERI Sri PREMNATH ji vast knowledge in BAGAWATHA as we all know His reference to BAGAWATH geetha Upanishad And various slokas His reference about a Sloka for Good marriage God life Are brilliant and no words to explain the beauty of His reference to UMA MAHESWARA Worship His involvement in referring each and every word is seasoned and Thought provoking The Thiruopunna Ramachandran BAGAWATHAR has rendered an excellent melody Sri VKS had well experienced Graphics and well designed An excellent presentation All good wishes Sent from my iPhon

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 2 หลายเดือนก่อน

    தரங்கம் 12/கீதம் 109 அற்புதமான கீதம் .இதில் தாயார்ருக்மணி கோபாலனின் குணங்களால் கவரப்பட்டு அவரைஅன்றி வேறெவரையும் மணாளனாக வரிக்க இயலாது என்றதை தீர்த்தர் தன்னையும் அந்த கோபாலனின் குணங்கள் ஈர்த்தன அவனையன்றி வேறெவரையும் ஸ்மரிக்கவே முடியாது என்றும் வருகூர் எம்பெருமானின் கருணையையும் அற்புதமாக் பாடியுள்ளார். இதன் தாத்பர்யத்தை நம் ப்ரேம்நாத்ஜீ அவருக்கே உரித்தான எளிய விளக்கங்களை கூறி பக்தியில் திளைக்க வைத்துள்ளார். கோபாலனின் திருநாமவைபவம் பக்த அனுக்ரஹம் எப்படி பக்தி அல்லாத கம்சாதி அசுரர்களை அழித்து பக்தர்களை காப்பவன் என்றும் பஞ்சேந்த்ரியங்களால் நாம் செய்ய வேண்டிய பகவத் கைங்கர்யங்கள் என்று தீர்த்தர் அனுபவித்து பாடியதை கீதையிலிருந்து உபமானங்கள் கொடுத்து அழகான புரிதலை கொடுத்துள்ளார் நம் ப்ரேம்நாத்ஜீ. இங்கு அடியேன் நம்மாழ்வார் எம்பெருமான் நாராயணன் எப்படி பக்தர்களுக்கு உதவுகிறான் என்று திருவாய்மொழியில் ஒரு பாசுரம் படித்ததை பகிர விரும்புகிறேன். அடங்கெழில் சம்பத்து அடங்ககண்டு ஈசன் அடங்கு எழில் அதற்கு அடங்குக உள்ளே. ப்ரபஞ்சமே அவன் சொத்து. நாமும் அவன் சொத்து என்பதனை உணர்ந்து அவனுள் அடக்கம் என்ற ஞானம் வந்துவிட்டால் பகவான் நம்மை கைவிடுவதே இல்லை. கடலினில் உள்ள மீன் திமிங்கிலம் சிப்பி இவைகளை கடல் வெளியே தள்ளுவதில்லை தாம்கடலை சேர்ந்தவர்கள் என்ற ஞானத்தினால் கடலும் அதனை ரக்‌ஷிக்கிறது.அதுபோல் அவனை சொத்தாக பற்றியவரை அவன் கருணையால் எளிமை மங்கள குணங்களால் நம்மை ரக்‌ஷிக்காமல் விடுவதில்லை. இதனை அனுபவத்தில் கண்ட ருக்மணி தாயாரும் தீர்த்தரும் நமக்கு ஓர் வழிகாட்டியாய் கோபாலனை பற்றினால் மோக்ஷமே கிடைக்கும் என்றும் என்றும் ஆனந்தத்தை மட்டுமே கொடுக்கும் மாதவன் தாள் நாமும் பற்றிடுவோம். பகவான் பல வடிவங்கள் எடுக்கிறான் அந்தந்த பக்தனுக்கேற்று காட்சி தருகிறான். இதனை கீதையில் விச்வரூப தரிசனம் காட்டியதையும் நம் ப்ரேம்நாத்ஜீ விளக்கியுள்ளார். எப்படி தன்னிடம் பற்று கொண்டவர்களின் அன்பையே தன் இல்லமாக எண்ணி கருணை பொழிகிறானோ அதனையே தன் இயல்பாய்கொண்டுள்ளானோ நாமும் தீர்த்தரை போல் பகவத் பக்தியே நமக்கு இயல்பாகக் கொண்டால் அவனது கைங்கர்யத்தில் மனசு வாக்கு சிந்தை ஈடுபடித்தினால் கண்ணன் நமக்கும் காட்சி தருவான். எல்லா மங்கள குணங்களைக்கொண்ட கோபாலன் தாள் பற்றி உய்வோம் எண் பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில வண்புகழ் நாரணன் திண் கழல் சேரே! எண்ணிலா குணக்குன்றான அவன் கழல்(திருவடி) பற்ற வண்புகழ் நாராயணன் நம்மை காப்பான். பாடலைப் தேனொழுக பாடியவர்க்கும் நம்மை அந்தந்த பாடலின் வரிகளுக்கேற்ப காட்சிகளை அமைத்து பரவசப்படுத்தும் VK swamy கும் பாராட்டுகள். காத்திருப்போம் கண்ணனை அனுபவிக்க.🙏🙏🙏🙏

  • @rangaprasad336
    @rangaprasad336 2 หลายเดือนก่อน

    Radhe krishna 🙏 contd.🙏 மற்றபடி அனைத்து சரணங்களுக்கும் ப்ரதி பதமாக, சின்ன குழந்தைகளுக்கும் மனதில் பதியும் வண்ணம் பொருள் சொல்லி இருப்பது, பாகவத ஶிரோன்மணி திருவையாறு நடராஜ ஶர்மா @ ப்ரேம் நாத் பாகவதர் அவர்களின் இயல்பான குணம், Down to the earth person, அதே சமயம் சிறந்த ஞானி. இவரது வ்யாக்யானங்கள் நமக்கு ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணிக்கு அமைந்தது நாம் செய்த பாக்யம் தான். [ அந்த கீதங்களை இசைக்க பல பாகவதர்களையும், ஸங்கீத விதூஷிகளையும், இவரோடு சேர்த்து அனைத்தையும் ஒன்றிணைக்க வரஹூர் வாசி ஸ்ரீ வி.கே.எஸ் அவர்களையும், நமக்கு அருளிச் செய்தது நமது வரஹூர் பெருமாளின் திருவருளும் / நமது குரு நாதர்களின் குருவருளும் தான்] இவற்றை மீண்டும் மீண்டும் கேட்டு நம்மை நாமே சரிப் படுத்திக் கொள்ள வேண்டும், ஸ்ரீமன் நாராயண தீர்த்தரின் ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணியின் வரிகளில் உள்ள உண்மையான / உள்ளார்ந்த பொருளை உணர்வதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த தரங்கத்திற்கு வ்யாக்யானம் சொல்லும் போது, ஸ்ரீமன் நாராயண தீர்த்தர் இதை ருக்மிணி சொல்வதாக, கதையாக, எடுத்துக் கொள்வதை விட, தன் மனதை அடக்கி, அந்த கோபாலனை மனதில் நிலை நிறுத்துவதற்கு ஸ்ரீமன் நாராயண தீர்த்தர் தனக்குத் தானே சொல்லிக் கொண்ட வரிகளாகவும், இந்த கீர்த்தனத்தை இசைக்கும் நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனதை அடக்கி அந்த பரப்ரும்மத்தில் மனதையும், எண்ணத்தையும் ஈடுபடச் செய்வதற்கான உபாயமான வரிகளாகவும் கொள்ள வேண்டும் என்று அடியேனுடைய பூஜ்யஸ்ரீ தகப்பனார் விளக்கம் சொல்லுவார். வரஹூர் வாசி ஸ்ரீ வி.கே.எஸ் அவர்களது காணொலியும், வரைகலைகளும் எப்போதும் போல் மிகவும் அழகாக இருக்கிறது. இதனை மிகவும் அருமையாக இசைத்திருக்கிறார், ஸங்கீத விதூஷி ஸ்ரீமதி வீணா பாலாஜி அவர்கள் -. மொத்தத்தில் எப்போதும் போல இந்த வாரமும் ஒரு சிறந்த ஸமர்ப்பணம் வரஹூர் பெருமாளுக்கும் ஸ்ரீமன் நாராயண தீர்த்தருக்கும். புனர் நமஸ்காரங்கள் 🙏 ராதே க்ருஷ்ண 🙏

  • @rangaprasad336
    @rangaprasad336 2 หลายเดือนก่อน

    108 रे रे मानस गोपालम् 12 10 2024 ராதே க்ருஷ்ண 🙏 நமஸ்காரங்கள் 🙏 ஶ்லோகம் 273-274 ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்கள் இந்த ஶ்லோகங்களுக்கு வ்யாக்யானம் சொல்லும் போது, இந்த இடத்தில் ஸ்ரீ தீர்த்தர் ஏன் “கோவிந்த” என்ற நாமத்தை ப்ரயோகப் படுத்தி இருக்கிறார் என்பதை ஹரிவம்ஶம் ஶ்லோகத்திலிருந்தும், மஹாபாரதம் ஶாந்தி பர்வா ஶ்லோகத்திலிருந்தும், ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாஸுர வரிகளிலிருந்தும் விளக்கியது மிகவும் அருமையாக இருந்தது. [இதனால் தான் நம் வரஹூரின் தாரக மந்திரமே - “உறியடியோ கோவிந்தோ” என்பதோ?] ஶ்லோகம் 274க்கு பொருள் சொல்லும் போது, பரம ஹம்ஸரான ஸ்ரீ ஸ்ரீ ஸதாஶிவ ப்ரம்மேந்த்ராளின் கீர்த்தனைகள் வரிகளிலிருந்து ஒப்பிட்டு பலன் சொல்லியதும், இந்த ஶ்லோகத்தில், गो என்றால் இந்த்ரியம், அதை அடக்க உதவுபவன் கோபாலன் என்பதால், கோபால என்ற பதத்தை உபயோகப் படுத்தி இருக்கிறார் - என்பதும் அருமையான விளக்கங்கள். கீதம் 108 இந்த கீதத்தின் பல்லவிக்கு விளக்கம் சொல்லும் போது, மைசூர் வாஸுதேவாச்சாரின் கீர்த்தனையான - ரே ரே மானஸ பஜரே கண நாதம் - என்ற கீர்த்தனையையும் ஒப்பிட்டு பொருள் சொல்லும் போது, ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் ஒரு சிறந்த அத்வைதி - என்பது புரிகிறது. இந்த கீர்த்தனத்தின் பல்லவி, அனுபல்லவிக்கு ப்ரதிபதமாக பொருள் சொல்லும் போது, அதர்வ வேதத்தின் வரிகளையும், பால முகுந்தாஷ்டகத்தின் வரிகளையும், ஸ்ரீமத் பாகவதம் 12வது ஸ்கந்தம் ஶ்லோகத்தின் வரிகளையும், முதல் சரணத்திற்கு பொருள் சொல்லும் போது உபனிஷத்துகளின் வாக்யங்களையும், ஒப்பிட்டு பொருள் சொல்லும் போது, ப்ரும்மஸ்ரீ பாகவதருக்கு பலவிதமான ஸனாதன க்ரந்தங்களில் இருக்கும் பாண்டித்யம் நன்கு தெரிகிறது. இதில் இரண்டாவது சரணத்திற்கு பொருள் சொல்லும் போது சாந்தோக்ய உபனிஷத் வரிகளையும், ஆனந்தவல்லி வரிகளையும், ராமக்ருஷ்ணர் பரமஹம்ஸரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்தும், மேற்கோள் காட்டி சொல்லி இருப்பதும், பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாசத்தையும், ப்ரம்மத்தையும் - ஒப்பிட்டும், வேறுபடுத்தியும் வ்யாக்யானம் கொடுத்திருப்பதும், அருமை. அதே சரணத்தில் வரும் - ஆதி குரும் என்ற பதத்திற்கு श्वेताश्वतर उपनिषद् வரிகளையும், ஸ்ரீமத் பாகவதம் முதல் ஶ்லோகத்தையும், 12வது தஶகம், 13வது அத்யாயம், 29வது ஶ்லோகத்தையும், ஸ்ரீமத் பகவத் கீதை 4வது அத்யாயம் ஶ்லோகங்களையும், ஒப்பிட்டு வ்யாக்யானம் கொடுத்திருப்பதும், மிகவும் அழகாக இருக்கிறது. இதில் 3வது சரணத்திற்கு பொருள் சொல்லும் போது, மங்களாலய மாமவ தேவ - என்ற தரங்கத்தின் வரிகளை இசைத்தும், ஒப்பிட்டும் விளக்கம் சொல்லி இருப்பதும், இந்த சரணத்தில் வரும் - அகில நிகம கந்தம் - என்ற பதத்திற்கு பொருள் சொல்லும் போது ப்ருஹதாரண்யக உபனிஷத் - வரிகளை மேற்கோள் காட்டி விளக்கம் சொல்லி இருப்பது, மிகவும் அருமையாக இருக்கிறது. Radhe krishna 🙏🙏 contd... 🙏

  • @varagurpranatharthiharansu6432
    @varagurpranatharthiharansu6432 2 หลายเดือนก่อน

    கோவிந்தா கோபாலா, ஸ்ரீ வராஹபுரி வாசா கோவிந்தா 🙏🙏🦚👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🥀🥀🥀🥀🥀🥀🥀🦚🙏🙏

  • @rangaprasad336
    @rangaprasad336 2 หลายเดือนก่อน

    Radhe krishna 🙏 contd.🙏 இந்த கீர்த்தனைக்கு பொருள் சொல்லிய பிறகு, வரஹூர் பெருமாள் புறப்பாட்டின் போது அனுசரிக்கப்படும் ஸப்த ப்ரதக்ஷிணத்தின் சிறப்பையும், ஏகாந்த ஸேவையையும் மிகவும் அழகாக விளக்கி சொல்லி இருக்கிறார் - ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்கள். இந்த இடத்தில் ஸ்ரீரங்கத்த்தின் ஸப்த ப்ராகாரம் ஸ்ரீமன் நாராயண தீர்த்தரின் மனதில் ஏற்படுத்திய தாக்கமே, அவரால் இங்கே வரஹூரில் இந்த ஸப்த ப்ரதக்ஷிண முறையை அறிமுகப்படுத்த தூண்டியது என்றும், தஶம ஸ்கந்தத்தினை ஸ்ரீ ருக்மிணி கல்யாணத்துடன் நிறுத்தி விட்டு, வரஹூர் பெருமாளோடு இரண்டறக் கலந்த நமது ஸ்ரீமன் நாராயண தீர்த்தர் - எப்போ வருவாரோ - என்று ஏங்கிக் கொண்டு, ஸ்ரீ தீர்த்தர் முக்தி அடைந்ததாக பெரியோர்களால் கூறப்படும், இந்த அர்த மண்டபத்தில் இருந்து கொண்டு - வீக்ஷேஹம் கதா - மீண்டும் என்று காண்போம் நமது தீர்த்தரை - என்று பொருள் பட, ஒவ்வொரு புறப்பாட்டின் ஏகாந்த ஸேவையின் போதும், வரஹூர் பாகவதர்கள் இந்த - வீக்ஷேஹம் கதா - என்ற கீர்த்தனையை இசைக்கிறார்கள் என்று, அடியேனின் திருத்தகப்பனார் சொல்லும் விளக்கத்தை இங்கே எடுத்துச் சொல்லி இருக்கிறார் ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்கள். அப்போது இந்த ஏகாந்த ஸேவையில் தன்னுடைய பக்தர்களை / வரஹூர் பாகவதர்களைத் தான் அமரும் மேடையின் மீது ஏற்றிவிட்டு, அவர்களை கீதம் இசைக்க வைத்து அதனைக் கேட்டு இன்புறும் ஒரே பெருமாள் நம்முடைய வரஹூர் பெருமாள் தான், ஏனென்றால் பகவான், 9வது ஸ்கந்தம், 4வது அத்யாயம், 63வது ஶ்லோகத்தில் அவனே கூறிய ப்ரகாரம் அவன் பக்த பராதீனன், அவன் அஸ்வதந்த்ரன் அதாவது தன் பக்தர்களுக்காகவே ஸ்வதந்த்ரம் அற்றவன், என்றும் நமது பெருமாளின் கல்யாண குணங்களையும், இந்த ஏகாந்த ஸேவையைக் காண்பவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்றும், உணர்ச்சி பெருக சொல்லி தன்னுடைய உபன்யாஸத்தை பூர்த்தி செய்திருக்கிறார், பாகவத ஶிரோன்மணி திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ ஶர்மா அவர்கள். அதே சமயம் பின்னணியில் அந்த புறப்பாட்டினை காண்பிக்கிறது, வரஹூர் வாசி ஸ்ரீ வி.கே.எஸ் அவர்களின் வரைகலையின் சிறப்பு. இந்த தரங்கத்தை, காணொலியில், ஸங்கீத விதூஷி , ப்ரம்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்களின் குமாரத்தி, குமாரி பாரதி ஸங்க்ருதி அவர்கள் மிகவும் அனுபவித்து, நிறுத்தி, நிதானமாக, அழகாக பதம் பிரித்து, அற்புதமாக இசைத்திருக்கிறார். சூப்பர். அடியேன் பலமுறை இந்த கீர்த்தனத்தை அனுபவித்துக் கேட்டேன். பின்னணியில் வரைகலையில் ரேவதி பலராமன் கல்யாணமும் சூப்பர். இந்த வாரமும் மிகவும் சிறப்பான சமர்ப்பணம் வரஹூர் பெருமாளுக்கும், குரு நாதருக்கும் அனைவருக்கும் நமஸ்காரங்கள்.🙏 இந்த கைங்கர்யம் நன்கு வெற்றிகரமாக தொடர குருநாதர்கள், அலமேலு மங்கா ஸமேத ப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள், ஆனந்த வல்லி அம்பா ஸமேத மஹா கைலாஸ நாதர் க்ருபையை ப்ரார்த்திக்கிறேன். மீண்டும் நமஸ்காரங்கள்🙏 ராதேக்ருஷ்ண🙏

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 2 หลายเดือนก่อน

    Tharangam 12, Geetham 107 Another excellent Geetham by Sri Theertha This Tharangam entirely deals with Rukmini Kalyanam The marriage preparations of Rukmini with SISHUUBALAN The msg through a Brahmin to Rukmini etc The slokas 264 to 267 explains about King BHISMA His son Rukmi The King BHISMA decides to marry Rukmini to Sri Krishna and was consulting his ministers His son Rukmi was against this decision and decides to consider His friend SISSHUUBALAN The King also favours this decision Hearing this Bad News RUKMANI was upset and in tears express her Feeling about her intention to marry sri Krishna describing Sri Krishna Qualities Indirectly Sri Theertha Is expressing his feelings Rukmani sings as follows The most beautiful Person in the earth Better than KOTI Manmadhaas put together The most beautiful sri Krishna with a KASTURI TILAKAM The person with all great qualities The lord who is playing in Brindavan The lord with Peacock feather 🪶 in his crown 👑 The beautiful lord who is compared to the beautiful cloud With excellent and expensive dresses The lord who gives happiness to all devotees The lord who dances to the excellent tunes of the music 🎶 The who removes all the problems of his devotees The lord who produces the mesmerising Geetham with his Flute 🪈 and the Lord who is always in the minds of Sri Theertha This Geetham is one of the best and even a CHILD in Vargur village sings this Geetham at the time of festival in the temple Sri PREMNATH ji had very emotional experience with Varahur temple 🛕 And our Perumal at varahur His excellent explanation through his experience is well reflected His comparison to Bagawatham The song ADADHUU ADANGATHUU Vaaa Kannaaaa His song MANSA SANSHAARAEE Also his explanation about Saptha Praharamm at Srirangam to Saptha pradhakshinaa At Vargur His emotional singing the song makes us feel that We are in Vargur The singer BHARATHI had given a very touching performance and highly involved singing 🎶 Sri VKS GRAPHICS are very timely APT to the situation Even a CHILD CAN understand This will be preserved for CENTURIES TO COME And every VARAGURANN will See this video again and Again Excellent Geetham All good wishes Sent from my iPh

  • @rajisuresh1012
    @rajisuresh1012 2 หลายเดือนก่อน

    இந்த வரகூர் வர்ணணையை கேட்க கொடுத்து வைத்துள்ளேன்.பாடலும் மிக மிக பாவத்துடன் பகவானை அலங்கரித்து போல் மனதை நெகிழ வைத்தது.

  • @vijayas5510
    @vijayas5510 2 หลายเดือนก่อน

    Miga miga arumaiyana varnanai. Inimyana pattu. Radhekrishna.

  • @rangaprasad336
    @rangaprasad336 2 หลายเดือนก่อน

    Radhe krishna 🙏 contd..🙏 இதில் ஸ்ரீ பாகவதர் அவர்கள், முதல் சரணத்தில், अघमूलविनाशन என்ற பதத்திற்கு பொருள் சொல்லும் போது, अघमर्षण सूक्त த்திலிருந்து சிலவரிகளை சொல்லி, இவை எப்போது சொல்லப்படும் என்பதையும் சொல்லி வ்யாக்யானம் சொல்லி இருப்பது மிகவும் அருமை. இந்த சரணங்களுக்கு பொருள் சொல்லும் போது, தற்போதைய த்வாராகா நரகரத்தையும், புராண காலத்து த்வாரகா நகரத்தையும், ஸ்ரீ வி.கே.எஸ் அவர்களின் வரைகலைகள் மிகவும் அழகாக எடுத்துக் காட்டுகின்றன. தொடர்ந்து, மிகவும் அருமையாக அனைத்து சரணங்களுக்கும், 262-263 ஶ்லோகங்களுக்கும், பலஶ்ருதி ஶ்லோகங்களுக்கும் பொருள் சொல்லி பூர்த்தி செய்திருக்கிறார் திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ ஶர்மா அவர்கள். இதில் அனுபல்லவியில் “ஸ்வயம் வ்யக்தம் பரம் தத்வம் ஹரிம்” என்ற ஒரு சொற்றொடர் வருகிறது. இதில் “ஸ்வயம் வ்யக்தம்” என்ற பதத்திற்கு பொருள் சொல்லும் போது - இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வ்யக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வ்யக்தம் என்றால் இறைவன் சுயமாகவே / தானாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். 108 திவ்ய க்ஷேத்ரங்களில், ஸ்ரீ திருவரங்கம், ஸ்ரீ நாங்குநேரி , ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ திருவேங்கடம், ஸ்ரீ புஷ்கரம், ஸ்ரீ நைமிசாரண்யம், ஸ்ரீ பத்ரிநாத், ஸ்ரீ முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும். ஆனால் இந்த த்வாரகா எனும் க்ஷேத்ரம், ஸாக்ஷாத் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனாலேயே தன்னுடைய வாழ்நாளில் உருவாக்கப்பட்டதால், இதனை ஸ்ரீ நாராயண தீர்த்தர் ஒரு ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரமாக கருதுகிறார் - அதனால் தான் அனுபல்லவியில் - “ஸ்வயம் வ்யக்தம் பரம் தத்வம் ஹரிம்” என்ற சொற்றொடரை உபயோகப் படுத்தி இருக்கிறார் என்று அடியேனின் திருத்தந்தையார் வ்யாக்யானம் அளிப்பார். மேலும் “ஸ்வயம் வ்யக்தம்” என்ற பதத்திற்கு மேற்கூறியது போல இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் தோன்றிய இடம் - என்று பொருள் சொல்லும் போது, நமது வரஹூர் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாளும், ஸ்ரீமன் நாராயண தீர்த்தருக்காகவே விக்கிரக வடிவில் தோன்றிய இடம் என்பதால் - நமது வரஹூரையும் - நாம் ஒரு ஸ்வய்ம் வ்யக்த க்ஷேத்ரமாகவே கொள்ளலாம் என்றும் அடியேனின் பூஜ்யஸ்ரீ தகப்பனார் விளக்கம் அளிப்பார்., இந்த கீர்த்தனையை மிகவும் அருமையாக இசைத்திருக்கிறார், ஸங்கீத விதூஷி திருமதி வீணா பாலாஜி அவர்கள் மொத்தத்தில் எப்போதும் போல இந்த வாரமும் ஒரு சிறந்த ஸமர்ப்பணம் வரஹூர் பெருமாளுக்கும் ஸ்ரீமன் நாராயண தீர்த்தருக்கும். இத்துடன், இறைவன் அருளால் 11 தரங்கங்கள் பூர்த்தியாகி, மிகவும் முக்கியமான ஸ்ரீ ருக்மிணி கல்யாணம் வரக்கூடிய 12 வது தரங்கம், அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகிறது. இதனையும் அனைவரும் ஶ்ரவணம் செய்ய வேண்டும், ஒவ்வொருவரது உறவினர், நண்பர்களையும், குறிப்பாக குழந்தைகளையும் கேட்க செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை ஶ்ரவணம் செய்யும் ஒவ்வொருவர் இல்லத்திலும் - நித்ய கல்யாண ப்ராப்தி - ஏற்பட வேண்டும் என்றும், அனைவரும் அவன் அருளால் குறைவற்ற செல்வத்துடன், நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்றும், எல்லாம் வல்ல வரஹூர் அலர்மேல் மங்கா ஸமேத வேங்கடரமண பெருமாளையும், ஆனந்த வல்லி அம்பா ஸமேத மஹாகைலாஸ நாதரையும், குரு நாதர்கள் ஸ்ரீமன் நாராயண தீர்த்தரையும், ப்ரும்மஸ்ரீ கோபால பாகவதரையும் ப்ரார்த்தனை செய்கின்றேன். புனர் நமஸ்காரங்கள் 🙏 ராதே க்ருஷ்ண 🙏

  • @venkataramanv5176
    @venkataramanv5176 2 หลายเดือนก่อน

    Sukalam baradharam is Shree Vishnu slokham you are telling the wrong one please refer and humbly reply the same

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 3 หลายเดือนก่อน

    தரங்கம் 11 கீதம் 106 ஸ்ரீதீர்த்தர் கண்ணனின் பல குணங்கள் லீலைகள் இவற்றை மறுபடி மறுபடி அநுபவித்து பாடுகிறார். மதுராவை விட்டு விலகி கண்ணன் த்வாரகா நகரம் நிர்மாணித்தது கூட அவனது லீலைதான். த்வாரகா நகர வர்ணனை ப்ரேம்நாத்ஜீ யின் விளக்கங்கள் த்வாரகை போல் அற்புதமான ஒன்று. தீர்த்தர் அங்கும் கண்ணன் எப்படி கொண்டாடப்பட்டான் அவனது குணங்களின் மகிமைகள் ஹரி நாமத்தின் மகிமை என்று தன் பக்தியை வெளிப்படுத்தி உள்ளார். நம் குருஜீயும் பாகவதம் பகவத்கீதை உபநிஷத் இதில் கூறிய உள்ளேயும் வெளியேயும் தத்துவங்களை அழகாக விளக்கியுள்ளார். வீணா பாலாஜியின் இனிமையான குரல் வி கே ஸ் பின்னூட்டம் குருஜியின் விளக்கம் தரங்கம கேட்பதே த்வாரகையில் இருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. காத்திருப்போம் அடுத்த அனுபவத்திற்கு🙏🙏

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 3 หลายเดือนก่อน

    Tharangam 11 Geetham 106 Slokas 258/261 This Geetham by Sri Theertha is about Musukundans BAKTHI His prayers towards sri Krishna Who is pleased with his prayers blessed him and Reached Madura As per the instructions of sri Krishna to Viswakarma The beautiful DWARAKA city was built in the middle of the sea This Geetham is the Reflection of the Happiness of the people of Dwaraka And they are singing this Geetham in praise of sri Krishna Sri Theertha has indirectly praised the lord through the people of Dwaraka They say We are blessed and lucky to be born in this beautiful city We are blessed to have your darshan We are blessed As you are lord of Vedas You are the lord of Devas You saved Indira You save us from Samsara You clean the 14 worlds and clean the Inner and outer enemies We are blessed to live and see this beautiful city of Dwaraka You created this Dwaraka as comparable to the Amaravati You save the devotees from the evils and ensure the Happiness You are the one worshipped by VAMADEVA You are the blessed son of VASUDEVA YOU are Hari You are Gopala You are the Padmanabha You are Always victorious We the people of DWARAKA are Lucky to be born here Sri PREMNATH ji Had as usual very nicely explained word by word The meaning quoting Geetha BAGAWATHAM Upanishad etc This marks the end of 11 th tharangam and The team has done a good job The singer SMT VEENA BALAJI Has rendered a melodic singing In ragga ANANDA BHIARAVI Due to this project we are getting very CAPABLE SINGERS TO OUR varagur We VARAGURANSS Are lucky to hear her The graphics expert and the Brain behind this project sri VKS Has proved his worth All good wishes Sent from my iPhon

  • @rangaprasad336
    @rangaprasad336 3 หลายเดือนก่อน

    Radhe krishna 🙏🙏 contd...🙏🙏 இந்த இடத்தில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவர்களின் - பஞ்சாயுத ஸ்தோத்ரம் பற்றியும், ஸ்ரீமத் ராமாயணத்தில் மண்டோதரி ஸ்ரீராமனை ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயணன் என்று குறிப்பிட்டதையும், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் யுத்தகாண்டம் 18வது ஸர்கம், 23வது ஶ்லோகம் உத்தரார்தத்தில் வரும் अन्गुलि अग्रेण तान् हन्याम् इच्चन् हरि गण ईश्वर - என்ற பதங்களுக்கு விரல் நுனியினாலேயே அனைவரையும் வதம் செய்வேன் என்று ஸ்ரீராமன் சொன்னதாக பொருள் சொல்லியும் கம்ஸவதத்திற்கு மதுராவிற்கு வந்தபோது, க்ருஷ்ணனுக்கு வஸ்த்ரம் தர மறுத்த வண்ணானின் தலையை விரல்களாலேயே கிள்ளி எறிந்ததையும் ஸ்ரீமத் ராமாயணத்தில் காகாஸுரன் மீது தர்பைப்புல்லில் ப்ரும்மாஸ்த்ரம் ஏவி விட்டதையும் மிக அழகாக விளக்கி सुरवैरि दळन खर नखरम् - என்ற சொற்றொடருக்கு வ்யாக்யானம் சொன்னபோது, ஸ்ரீ பாகவதருக்கு வைஷ்ணவ க்ரந்தங்களில் இருக்கும் பரிபூரண ஞானம் பளிச்சிட்டது. நான்காவது சரணத்திற்கு பொருள் சொல்லும் போது, निगम मय खग वर यान - என்ற பதங்களுக்கு, ஸ்ரீ நாராயண வாஹன, ஜய ஜய ரமா நாத - என்ற தரங்களுக்கு பொருள் ஒப்பிட்டு சொல்லி விளக்கியது அழகாக இருக்கிறது. ஐந்தாவது சரணத்திற்கு பொருள் சொல்லும் போது - अणिमादि भूदिदम् - என்ற பதத்திற்கு வ்யாக்யானம் சொல்லும் போது - அஷ்டமாஸித்திகளை விளக்கி சொல்லி விளக்கியதும் சிறப்பாக இருந்தது. மற்றபடி இந்த கீர்த்தனத்தின் சரணங்கள் யாவற்றிற்கும் வரி வரியாக பொருள் சொல்லி அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இந்த உபன்யாஸத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார், திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ ஶர்மா பாகவதர். இந்த தரங்கத்தை, காணொலியில், வரஹூர் ஹாலாஸ்யம் ஸ்ரீ ஸ்ரீதர் பாகவதர் மிகவும் அனுபவித்து, நிறுத்தி, நிதானமாக, அழகாக பதம் பிரித்து, அற்புதமாக இசைத்திருக்கிறார். எப்போதும் போல இந்த காணொலியில் வரைகலைகளில், பெருமாளையும், ஸ்ரீ நரஸிம்மனையும், ஸ்ரீ க்ருஷ்ணனையும், முசுகுந்த சக்ரவர்த்தி கதையையும், தன் ஜிகினா வேலைகளால் அலங்கரித்துக் காண்பித்து அனைவரையும் அசத்தி இருக்கிறார் வரஹூர் வாசி ஸ்ரீ சூரி கந்தஸ்வாமி அய்யர். மொத்தத்தில், ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்களின் உபன்யாஸமும், வரஹூர் பாகவதர்களின் கானமும், ஸ்ரீ வி,கே.எஸ் அவர்களின் வரைகலைகளும் இந்த க்ருஷ்ண லீலா தரங்கிணி தொடரில் ஒரு புது உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அனைவருக்கும் நமஸ்காரங்கள்.🙏 இந்த கைங்கர்யம் நன்கு வெற்றிகரமாக தொடர குருநாதர்கள், அலமேலு மங்கா ஸமேத ப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள், ஆனந்த வல்லி அம்பா மஹா கைலாஸ நாதர் ஆகிய அனைவரின் க்ருபையையும் ப்ரார்த்திக்கிறேன். மீண்டும் நமஸ்காரங்கள்🙏 ராதேக்ருஷ்ண🙏

  • @rangaprasad336
    @rangaprasad336 3 หลายเดือนก่อน

    105 - वेदाद्रि सिम्ह त्वाम् नौमि - 21 09 2024 ராதேக்ருஷ்ண🙏 நமஸ்காரங்கள்🙏 ப்ரம்மஸ்ரீ ப்ரேம்நாத் பாகவதரின் இந்த உபன்யாஸத்தில், எப்போதும் போல, நமக்கு தெரியாத பல விளக்கங்களை அருமையாக கொடுத்திருக்கிறார்.. ஶ்லோகம் 255-257 இந்த ஶ்லோகங்களுக்கு ப்ரதிபதமாக அர்த்தம் சொல்லி மிக அழகாக விளக்கி இருக்கிறார் பாகவதர் ஸ்வாமி. *இந்த இடத்தில் விளக்கம் சொல்லும் போது அடியேனது திருத்தகப்பனார் இதில் 257வது ஶ்லோகத்தில், ஸ்ரீ க்ருஷ்ணன் முசுகுந்தருக்கு ஸ்ரீ நரஸிம்ம மூர்த்தியாக காக்ஷி கொடுக்கிறார். முசுகுந்தனும் ஸ்ரீ நரஸிம்மரை ஸச்சிதானந்த பரப்ப்ரும்மமாக உணர்ந்து ஸ்தோத்ரம் செய்கிறார் - இதே போல் ஸ்ரீ க்ருஷ்ணன் ராஸக்ரீடையின் போது, கோபிகைகளுக்கும், ஸ்ரீ நரஸிம்மனாக காக்ஷி கொடுத்தார். - தரங்கம் 6- ஶ்லோகம் 148 - கீதம் 56 - கருணயா அவலோகய மாம் ஸ்ரீ நரஸிம்ம தரங்கம் 7- கீதம் 67 - நித்யானந்தமிஹ பஶ்யத நரஸிம்ஹம், ஏனென்றால் ஸ்ரீ க்ருஷ்ணனை - ஸச்சிதானந்த பரப்ரும்மமாக, ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயணனாக முதன் முதலில் உணர்ந்தவர்கள் / அறிந்தவர்கள் அவர்கள் தான் இரண்டாம் தரங்கம் - 46வது ஶ்லோகம் - அவதரித்த ஸ்ரீ க்ருஷ்ணனின் கை, கால்களில் காணப்பட்ட லக்ஷணங்களை / ரேகைகளை கண்டு இவன் ஸ்ரீமன் நாராயணனே என்று உணர்ந்து கோபிகைகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர் - என்று அடியேனது திருத்தகப்பனார் விளக்கம் அளிப்பார். * இந்த ஸமயத்தில், ஸ்ரீமத் பாகவதம் தஶமஸ்கந்தம் 50வது அத்யாயத்தில் சொல்லப்பட்ட ஜராஸந்த வதத்தையும், காலயவனனது சரித்ரத்தையும் மிக அழகாக விளக்கி இருக்கிறார், ஸ்ரீ பாகவதர் அவர்கள். பின்புலத்தில் முசுகுந்தரின் சரித்ரத்தையும், முசுகுந்த ஸ்துதியையும் மிக அழகாக தன் வரைகலையில் வரஹூர் வாசி ஸ்ரீ. வி.கே.எஸ் காண்பித்து இருக்கிறார்., கீதம் 105 முதல் சரணத்திற்கு பொருள் சொல்லும் போது, ஸ்ரீ பாகவதர் அவர்கள் - வித்யுத்ஜ்வலித ஜிஹ்வம் - என்ற பதத்திற்கு ஸ்ரீ நாராயண ஸூக்தத்தில் வரும் - नी॒लतो॑-यद॑मध्य॒स्था॒-द्वि॒ध्युल्ले॑खेव॒ भास्व॑रा - என்ற வாக்யத்தை ஒப்பிட்டு சொல்லி பொருள் சொன்னது மிக அழகாக இருந்தது. பின்புலத்தில் விதம் விதமான நரஸிம்ஹ மூர்த்திகளை காண்பிக்கிறது ஸ்ரீ.வி.கே.எஸ் அவர்களின் கைவண்ணம். விமலானந்த - என்ற பதத்திற்கு விளக்கம் கொடுக்கும் போது - आनन्दो ब्रह्मेति व्यजानात् .. - என்று தொடங்கும் தைதரீயோபனிஷத் வரிகள் மூலமாக விளக்கம் கொடுத்ததும் அற்புதம். ஸ்ரீமன் நாராயண தீர்த்தருக்கு - இளமையில் அருள் பாலித்த வேதாத்ரி நரஸிம்மரை துதிக்க வேண்டும் என்பதற்காகவும் - முசுகுந்த சக்ரவர்த்திக்கு வேதாத்ரி நரஸிம்மனாக காக்ஷி அளித்தார் - ஸ்ரீ க்ருஷ்ணன் - என்று சொல்லி இருக்கிறார் ஸ்ரீமன் நாராயண தீர்த்தர் - மிக அருமையான விளக்கம் [அடியேனுடைய பூஜ்யஸ்ரீ பிதாவும் இதே விளக்கத்தை இந்த தரங்கத்திற்கு அளிப்பார்] இரண்டாம் சரணத்தில் உள்ள - सुरवैरि दळन कर @@ नखरम् - என்ற பதத்திற்கு விளக்கம் அளிக்கும் போது ப்ரஹ்லாத சரித்ரத்தை மிக அழகாக, உணர்ச்சி பெருக, விளக்கி சொல்லி இருக்கிறார் ஸ்ரீ பாகவதர் அவர்கள் [@@ कर नखरम् என்ற ப்ராசீன க்ரந்த பாடம் खर नखरम् - என்று புதிய பதிப்பில் மாற்றப்பட்டு உள்ளது] Radhe krishna 🙏🙏 contd...🙏🙏

  • @banumathic2750
    @banumathic2750 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏Jaivijayaraya.

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 3 หลายเดือนก่อน

    Geetham 105 This Tharangam by sri Narayana theertha in praise of Lord Narasimha This remainds me the FACT THAT sri THEERTHA IS from Mangalagiri Where PANAGALUU NARASIMHAR IS LOCATED And to thank his grace sri Theertha is making this Geetham in the voice of JARASANDAN in Ragha KALYANI JARASANDAN was distributed by the news of KAMSA VADAM as his two daughters have lost their beloved Husband KAMSA Wages war on sri Krishna 17 times and loses every time Sri Krishna only destroys the huge army so as to reduce the burden to THE BHOOMI DEVI and allows JARASANDAN to escape And finally kills him Musukindaa Chakraborty from the ISSHA VAGHU VAMSA Was the Senapati for Devas and the Devas pleased with his victory gives him the gift of Sound sleep and rest in a cave with a curse that Whoever disturbs him in sleep will get killed KALAYAVANAN was created by GARGA Maharishi to teach a lesson to YADAVAS Sri Krishna wages war with him and distracted by sri Krishna who is running away from place to place Kalyavanan comes behind him chasing and KRISHNA enters the Cave where Musukundaa is sleeping and MUSUKUNDAA was killed by JARASANDAN This Geetham is the essence of MUSUKANDA STHUTHI He praises the lord as The NARASIMHA of vedathtri as the Lord of Vedas and upanishad The lord who removes the grief of Samsara The Lord who saved Prahalada and who killed HIRANYA KASUBHU LORD OF LAKSHMI Devi The lord of Garuda VAHANA The lord adoring the Gems The lord who removes the fear of death and bless the devotees Sri PREMNATH ji excellent reference to Vedanta Desikar BAGAWATH geetha Ramayana Yuthaakandamm The Five weapons of Vishnu Are nicely explained Sri Sridhar BAGAWATHAR has rendered a good Melodic song Sri VKS graphics are giving Live coverage of this Geetham Very good selection of Videos and photos All good wishes my

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 3 หลายเดือนก่อน

    கேட்க கேட்க பரவசம், நேரம் போவது தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட மகா ன் . ப்ரணமாம்யஹம்.

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 3 หลายเดือนก่อน

    Sent from my iPhone Tharangam 11 Geetham 104 Slokas 253/254 Sri Theertha has nicely explained the Purpose and importance of GURU KULAM Though the SUPREME Lord knows everything as he is Vedas He is the creator He is the universe He is the purpose He is Jeevan He is the pramathma He goes to school with Sri Bakarama To Guru kulam To learn from SANDHEEPINII MAHARISHI after his Gayathri upadesam As guru Dakshina Sri Krishna brings back the child of the Maharishi who was dead some years back By bringing him back from Yamalokaa After seeing these great Actions of sri Krishna His friends sing this Tharangam in praise of Sri Krishna Hi lord who killed KAMSA He who save us from the samsara SAGARA He who is present in all Jeevathma He who is away from Maya He who is PURUSHOTTHAMMA He who is worshipped by the great sanyasiii He who saved the child of Guru SANDHEEPANII MAHARISHI from Yamaloka And he who killed the asura PANCHANAN he who saved the Vedas by killing THE ASURA HYAGREEVAN He who cannot be described by words He the son of Vasudeva Who is protecting the Dharma He is who is MANMADHA He who is worshipped by BRAHMAA HE who is worshipped by Sri Narayana theertha Sri PREMNATH ji reference to PURUSHOTTHAMMA referring to Sadashiva bramendral Srimath Bagawatham And Balakandam of Ramayana are very good Also reference to Kunti sthuthi Shows his mastery knowledge Sri Shivaraja BAGAWATHAR Has done an incredible Singing As a feather 🪶 in the cap 🧢 Sri VKS graphics for the Guru kulam Sri Krishna going to Yamaloka and bringing the Gurus child is explained nicely by VKS Very good Excellent 👌 job Keep it going

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 3 หลายเดือนก่อน

    இத்தரங்க கீதம் கண்ணனின் மேன்மையை மிக அழகாக வர்ணித்துள்ளது. அவதாரம் பல பெயரில் ஆனாலும் மூலம் ஒன்றுதான். அதர்மத்தை அழித்து பூமி பாரத்தை குறைப்பது.துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம். கண்ணனை நரஸிம்ஹனாய் தன் தோழனாய் தன்னை ரக்‌ஷிக்கும் ஓர் உன்னத வடிவாய் ஸ்ரீதீர்த்தர் பாடுவது ஒரு யோகியின் ஆழ்வார் நாயன்மார்களின் நிலை என்றே எடுத்துக்கொள்ள தோன்றுகிறது. நம் ப்ரேம்நாத்ஜீயும் இந்த பாவத்தை பல உபமானத்துடன் அற்புதமாக வர்ணித்துள்ளார். யதா த்ருஷ்டி ததோ பாவ:யத் பாவம் தத் பவதி. சிறு வயதில் பரிச்சயமான உருவங்கள் மனதில் ஆழமாய் பதிந்துவிடும். அப்படித்தான் முசுகுந்தர் கண்ணனைஸ்துதி செய்தாலும் தான் அனுபவித்த நரஸிங்கனாகவே தீர்த்தர் உருவகப்படுத்தி பாடுகிறார். எம்பெருமானின் ஒவ்வொரு செயலுக்கும் பல அர்த்தங்கள் இருக்கும் என்பதை கண்ணன் ஜராஸந்தனை அழிக்காமல் விட்டது தன்னை உலகோர்க்கு கோழையாக காட்டி கொண்டு தன்பின்னால் ஓடி வரச்செய்து அவனை முசுகுந்தனால் அழிய வைத்து அவனுக்கும் மோக்ஷத்திற்கான வழி வகுத்தார். அவரது லீலா வினோதங்கள் நம் போன்ற சாமன்யர்களுக்கு புரிய வைக்கவே ஸ்ரீதீர்த்தர் போன்று ஆழ்வார் ஆச்சார்யர் போன்று பல மகான்களை அவதரிக்க செய்து நம்மையும் மேம்படுத்த தானேயும் பல அவதாரங்கள் எடுக்கிறார். பிரேம்நாத் ஜீயின் விளக்கங்கள் தீர்த்தரின் இப்பாடல்கள் உள்ளார்ந்து அனுபவித்தால் பல நுண்ணிய கருத்துக்கள் புலப்படும். இது அடியேன் புரிந்து கொண்ட அளவில் எழுதுகிறேன். கண்ணனை வர்ணிக்க வார்த்தையில்லை தீர்த்தர் உரைத்தது போல் வணங்கி வழிபடுவோம். பாடலை அதன் பாவம் குறையாது பாடியுள்ளார். தீர்த்தர் அனுபவித்த கண்ணனை நரஸிங்கனை நாமும் அனுபவிக்க பாடலின் வரிகளுக்கு உயிர் ஊட்டியது போல் காண்பித்து பரவசப்படுத்தி உள்ளார் . கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே🙏🙏