SHOBANA ME SHOBANAM - THARANGAM 12 - GITAM 116 :ஷோபனம் மே ஷோபனம் - தரங்கம் 12 - கீதம் 116

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 2

  • @Subi654
    @Subi654 22 วันที่ผ่านมา

    அஹோ மம பாக்யம்! ஜய ஜய கல்யாண கோபாலா! 🙏🙏

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 22 วันที่ผ่านมา

    12 வது தரங்கம் 116
    இத்தரங்கத்தில் கோபால. நாம மூலம்
    மங்கள பாசுரமாக பாடலை துவங்கியுள்ளார்.
    தனக்கும் எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும் என்கிறார்.
    ஸம்ஸார இருளிலிருந்து அஜ்ஞான இருளைற்றி ஞானம்
    அருளுபவன் கோபாலன் பஞ்ச இந்தரியங்களால்
    ஜீவர்கள் அடையும் துன்பத்தை போக்க கண்ணனிடம்மனம் ஈடுபடவேண்டும் என்று ப்ரேம்நாத்ஜீ அழகாக வர்ணித்துள்ளார்.
    ஆண்டாள் திருப்பாவையில் வையத்து வாழ்பவர்களே வாழ்வில் உய்ய செய்யும்கிரிசைகள் கேளீரோ என்கிறாள்.
    செய்யாதன
    செய்யோம் என்கிறாள்.
    பிறப்பால் வருவது வாழ்வு பிறவிப்பயனை உணர்ந்தால் வருவது உய்வு. சரீரம் ஓர் ரதம்
    இந்த்ரியங்கள் ரதத்தில் பூட்டிய குதிரைகள்,ஆத்மா
    ரதத்தை செலுத்தும் சாரதி,மனம் தான்கடிவாளம்
    மனதை அடக்காவிட்டால் பகவதனுபவம் கிடைக்காது.
    இதனை தீர்த்தர் உணர்ந்து பாடியதை நம்ப்ரேம்நாத்ஜீ உணர்ந்து நம்மையும்
    ஞான ஒளிக்கு அழைத்து சென்றுள்ளது அவரது சிறப்பு.
    ய: சாஸ்த்ரவிதி
    முத்ஸ்ருஜ்ய வர்ததே
    காம காரத:
    நஸ ஸித்திமவாப்நோதி
    ந ஸுகம் ந பராம்கதிம். (16-23)
    கீதையில் கண்ணன் சொன்னது சாஸ்த்ர
    முறை துறந்து மனம் போன போக்கில் நடந்து கொள்பவன் வெற்றி அடைவதில்லை ஞாத்வா சாஸ்த்ரவது
    நோக்தம் கர்ம கர்தும்
    இஹாரஸி (17-24)
    செய்யத்தக்கது செய்யத்தகாதது
    என்று சாஸ்த்ரம் உரைத்ததை அறிந்து கர்மம் செய்.
    இதனையே சந்த்யா வந்தனாதிகள் செய்து கர்மத்தின் பலனை கண்ணனிடம்விட ஞானம் அடைந்து
    கண்ணனையே அடையலாம்என்று எடுத்துரைத்துள்ளார்.
    கல்யாண குணங்கள் நிறைந்தவன் எம்பெருமான் வேதம்
    அறிந்தவர்கள் அவனுக்கு ப்ரியமானவர்கள்.
    எந்நாள் எம்பெருமான் உந்தனுக்கு அடியோமென்று
    எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் உய்ந்தது
    காண்.
    பெரியாழ்வார் பாசுரம்.
    புருஷோத்தமன் என்று உருகுகிறார்தீர்த்தர்
    உத்தம: புருஷஸ்த்வந்ய:
    பரமாத்மேத் யுதாஹ்ருத: (15-17)
    எவன் எல்லோரையும்
    போஷிக்கிறானோ
    அழிவற்றவனோ அவனே புருஷோத்தமன்.
    அப்படிப்பட்ட தேவனுக்கு மங்களங்கள் என்கிறார் தீர்த்தர்.
    க்ருஷ்ணானுபாவம்
    என்ற பக்தியில் திளைத்து பரமானந்தம் கண்டவர் பாடலில்
    நாமும் பாடி உய்வு பெறுவோம்.
    மன்மநா பவ மத் பக்தோ மத்யாஜீமாம்
    நமஸ்குரு
    மாமேவைஷ்ய ஸி
    ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸிமே (18-65)
    என்னிடமே மனதை செலுத்தி பக்தி கொண்டு வணங்கினால் என்னையே அடைவாய்.
    என்று கண்ணன் உரைத்ததை அறுபவித்த தீர்த்தர்
    வழியில் நாமும்
    கோபாலனை உணர்ந்து பக்தி செய்து ப்ரபத்தியும்
    செய்தால் பிறவிப்பிணியிலிருந்து விடுபடலாம்.
    தீர்த்தருக்கு பல்லாண்டு
    அவரது பாடல்களின்
    அர்த்தத்தை எளிதாக
    நமக் களித்து வரும்
    ஸ்ரீப்ரேம்நாத்ஜீக்கும்
    பல்லாண்டு.
    பாடியவரின் இனிமையால் பாடல்
    மெறுகேறியது
    பின்னூட்டம் அதற்கு இன்னும் மெறுகேற்றியது.
    காத்திருப்போம் கண்ணன் அனுபவம்
    பரிபூர்ணமாக பெற
    ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்🙏🙏🙏🙏