VANAMALI KILA NINAM - THARANGAM 12 - GITAM 112 : வனமாலி கில நூநம் - தரங்கம் 12 - கீதம் 112

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 4

  • @vasanthaiyer6661
    @vasanthaiyer6661 3 วันที่ผ่านมา

    Good voice

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 2 วันที่ผ่านมา +1

    இத்தரங்கத்தில்
    ருக்மிணி தூதராக கண்ணனிடம் ஓர் ப்ராம்மணரை அனுப்ப அவர்
    மூலமாக திருநாம
    வைபவத்தை அனுபவித்த ஸ்ரீதீர்த்தரும் சரி
    நாம மகிமையை
    ப்ரேம்நாத்ஜீ பல பாஷ்ய உபநிஷத் வேத வார்த்தைகளுடன்
    எளிமையாக எடுத்துரைத்ததும் சரி
    நம் உள்ளத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றது.
    எந்த நாக்கு கண்ணனை பாடவில்லையோ அது ஸர்ப்ப புற்றுபோல் என்று ஆதிசங்கர்ர் சொன்னதாக நம் ப்ரேம்நாத்ஜீ சொன்னதுபோல்
    குலசேகர ஆழ்வார்
    முகுந்த மாலையில்
    ஜிஹ்வே கீர்தய கேசவம் முரரிபும் சேதோ பஜ
    என்றும்
    ஆலஸ்யம் வ்யபநீய பக்தி ஸுலபம் என்றும்
    நா இருப்பதே அவனை பாட கண் இருப்பதே அவனை காண என்று நாம வைபவ பெருமை அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
    கோவிந்த நாமத்தின் மகிமை
    மட்டுமே தனி ப்ரசங்கமாக இவர் சொல்லி நாம் கேட்க வேண்டும்.கோதை
    போல் கோவிந்தனை புகழ்வதில் தீர்த்தரும்
    நம் ப்ரேம்நாத்ஜீக்கும்
    பலத்த போட்டி.
    அருமையான தரங்கத்திற்கு அருமையான விளக்கங்கள்.
    கல்யாண களை
    என்பார்கள்
    தரங்க இசை
    அதன் வர்ணனை
    ருக்மணீ கல்யாண
    கச்சேரியாக அமைந்து விட்டது.
    பாரதியின் பாடலின்
    இனிமை தீர்த்தரின்
    சொற்களின் வளமை
    ப்ரவசன சிரோன்மணி யின்
    ஞானப்புலமை
    பின்னூட்டத்தின் திறமை
    பிபத ஸ்ரீக்ருஷ்ணலீலா
    தரங்க ரஸமாலயம்.
    👌🙏

  • @rangaprasad336
    @rangaprasad336 4 ชั่วโมงที่ผ่านมา

    ராதே க்ருஷ்ண 🙏 தொடர்கிறது 🙏
    அடுத்து கீதம் 112க்கு மிகவும் அழகாக ப்ரதிபதமாக பொருள் சொல்லி விளக்கி இருக்கிறார் ஸ்ரீ பாகவதர் அவர்கள்.
    அதில் 2வது சரணத்திற்கு பொருள் சொல்லும் போது, ஹரி என்ற பதத்தை ஸ்ரீ தீர்த்தர் ஏன் உபயோகப் படுத்தி இருக்கிறார் என்பதை விஷ்ணு ஸஹஸ்ர நாமம் ஶ்லோகம் மூலம் மிகவும் அழகாக விளக்கி இருக்கிறார் ஸ்ரீ பாகவதர் அவர்கள்.
    அதுபோல் 4வது சரணத்திற்கு பொருள் சொல்லும் போது, ஶ்லோகம் 278ல் ருக்மிணி ப்ரார்த்தனை செய்த - க்ஷேமத்தை செய்வதற்காக - ஸ்ரீ க்ருஷ்ணன் வந்து கொண்டிருக்கிறார் என்று ஒப்பிட்டு பொருள் சொன்னதும், அது போல ஸ்ரீமான் அகிலாத்மா என்ற பதத்திற்கு பொருள் சொல்லும் போது, நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேசவ:புருஷோத்தம: - என்ற பதங்களை ஒப்பிட்டு பொருள் சொன்னதும், ‘ஸ்ரீமான்’ - என்ற பதத்திற்கு ஶங்கர பாஷ்யத்திலிருந்து பொருள் சொன்னதும், மிகவும் அழகாக இருக்கிறது.
    சரணம் 5க்கு பொருள் சொல்லும் போது, அதில் “மாதவம்” என்ற பதத்தை ஏன் ஸ்ரீ தீர்த்தர் உபயோகப் படுத்தி இருக்கிறார் என்பதை மிகவும் அழகாக, மது வித்யை என்பதற்கு விளக்கம் சொல்லி விளங்க வைத்து இருக்கிறார் ஸ்ரீ பாகவதர் அவர்கள்.
    சரணம் 6க்கு பொருள் சொல்லும் போது - “மத்த ப்ரமரை: ஆபீதம்” என்ற பத்த்திற்கு விளக்கம் சொல்லும் போது, ஸ்ரீமத் பாகவதம் ஶ்லோகம் - “நிகமகல்பத்ரோர் களிதம்” - என்ற ஶ்லோகத்தின் பொருளோடு ஒப்பிட்டு சொன்னதும், அந்த வரிகள் ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணிக்கும் பொருந்தும் என்று, “ஸ்ரீதீர்த முகாத் அம்ருத த்ரவ ஸம்யுதம்” என்றும், “பிபத ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணி ரஸம் ஆலயம்” என்றும் சில சொல் விளையாடல் செய்து விளக்கியதும், ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணியின் பலஶ்ருதி ஶ்லோகங்களுக்கு பொருள் சொல்லி விளக்கியதும், ஸ்ரீமத் பாகவத்த்தில் சொல்ல விட்டதை சொல்வதற்காகவே ஸ்ரீ ஸ்ரீ ஶுகப்ரும்மம், ஸ்ரீமன் நாராயண தீர்தராக பிறவி எடுத்து ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணி இயற்றி ஸ்ரீ க்ருஷ்ணனைத் துதித்து தன்னுடைய குறையை தீர்த்துக் கொண்டார் என்ற விளக்கமும் மிகவும் அருமை.
    ஶ்லோகம் 286க்கு மிகவும் அழகாக பொருள் சொல்லி, தன்னுடைய உபன்யாஸத்தை பூர்த்தி செய்திருக்கிறார், பாகவத ஶிரோன்மணி திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ ஶர்மா அவர்கள்.
    வரஹூர் வாசி ஸ்ரீ வி.கே.எஸ் அவர்களின் தமிழ், ஆங்கில முன்னுரைகள், வரைகலையின் சிறப்பு எப்பவும் போல மிகவும் அருமை.
    இந்த தரங்கத்தை, காணொலியில், ப்ரம்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்களின் குமாரத்தி , ஸங்கீத விதூஷி , குமாரி பாரதி ஸங்க்ருதி அவர்கள் மிகவும் அனுபவித்து, நிறுத்தி, நிதானமாக, அழகாக பதம் பிரித்து, அற்புதமாக இசைத்திருக்கிறார். சூப்பர்.
    சில ப்ராசீன காலப் பாகவதப் பெரியவர்கள் இதனை மிகவும் ரசிக்கமாட்டார்கள் என்றாலும், “கண்டேன் ஸீதையை” என்று ராமாயணத்தில் ஹனுமான் சொன்னது போல், ருக்மிணிக்கு “ஸ்ரீ க்ருஷ்ணன் வந்து கொண்டிருக்கிறான்” என்று பொருள் பட அந்த அந்தணர் கூறியது போல, “வனமாலி ஆயாஹி” என்று கீர்த்தனையை ஆரம்பித்து பாடினது மிகவும் அருமை.
    இந்த வாரமும் மிகவும் சிறப்பான சமர்ப்பணம் வரஹூர் பெருமாளுக்கும், குரு நாதருக்கும்
    அனைவருக்கும் நமஸ்காரங்கள்.🙏
    இந்த கைங்கர்யம் நன்கு வெற்றிகரமாக தொடர்ந்து நல்லபடியாக பூர்த்தி அடைய குருநாதர்கள், அலமேலு மங்கா ஸமேத ப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள், ஆனந்த வல்லி அம்பா ஸமேத மஹா கைலாஸ நாதர் க்ருபையை ப்ரார்த்திக்கிறேன்.
    மீண்டும் நமஸ்காரங்கள்🙏
    ராதேக்ருஷ்ண🙏