தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது : 25 செல்போன்கள், 7 லேப்டாப்புகள், 2 பைக்குகள் பறிமுதல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது : 25 செல்போன்கள், 7 லேப்டாப்புகள், 2 பைக்குகள் பறிமுதல்
    ஒசூர் ஹட்கோ காவல் நிலைய போலிசார் நகர பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர் முன்னுக்குபின் முரணான பதில்களை போலீசாரிடம் கூறியுள்ளார்.
    அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் செங்கதிர் (28) என்பதும், ஒசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள், தனி நபர்கள் தங்கும் வாடகை வீடுகளை குறிவைத்து வீட்டில் யாருமில்லாத நேரத்தை பயன்படுத்தி அங்கிருக்கும் செல்போன்கள், லேப்டாப்புகள் மற்றும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை திருடி வெவ்வேறு இடங்களில் அடகு வைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஜாலியாக செலவு செய்து வந்தது தெரியவந்தது.
    அதனைத்தொடர்ந்து போலிசார் விசாரணை நடத்தி அடகு வைக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து 25 செல்போன்கள், 7 லேப்டாப்புகள், 2 இருசக்கர வாகனங்கள் என சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட செங்கதிரை ஹட்கோ போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்..

ความคิดเห็น •