ஓசூர் - சர்வதேச யோகா தினம் - யோகாசனப் பயிற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024
  • சர்வதேச யோகா தினம், யோகாசனப் பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்று அசத்திய ஓசூர் அரசு பள்ளி மாணவர்கள்.
    யோகாசன பயிற்சி வாயிலாக, மனிதர்களுக்கு உடலும், மனமும் செம்மை அடைந்து உள்ளத் தெளிவும், உடல் ஆரோக்கியமும் மேம்படும். எனவே ஒவ்வொருவரும் யோகாசனத்தை குறிப்பாக சிறு வயது முதலே பயிற்சியை மேற்கொண்டால் ஆரோக்கியமான வாழ்விற்கு அச்சாரமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
    இதில் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இன்று உலகெங்கும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேடரப்பள்ளி பகுதியில் இயங்கும், அரசு பள்ளியில் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
    யோகா குரு அருண் பயிற்சியின் மேற்பார்வையில், ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று, ஆரம்ப பிரார்த்தனை, எளிய முறை உடற்பயிற்சி, பத்மாசனம், வஜ்ராசனம், மகா முத்ரா, குழந்தை ஆசனம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு ஆசன முறைகளில் பயிற்சி மேற்கொண்டு அசத்தினார்கள்.

ความคิดเห็น •