"வாழ்க்கையை புரட்டிப்போட்ட விபத்து!"😥 House Wife TO Youtube-ன் சமையல் ராணி - YOGAMBAL SUNDAR பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • TH-cam-ல் சமையல் வீடியோக்களை பதிவிட்டு தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிய யோகாம்பாள் ( @YogambalSundar ) தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #yogambalsundar #cooking #cookingchannel #behindwoodso2
    GTRAP MOSQUITO KILLER LIVE DEMO@
    G MARK APPLIANCES
    34, KUPPUSAMI COMPLEX
    (BEHIND NAIDU HALL)
    PONDY BAZAAR,T.NAGAR
    CHENNAI-600017
    (NEAR RATHNA FAN HOUSE)
    9789343434/9790343434
    ONLINE ORDER
    okoffers.in/
    -----------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 985

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +76

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @lakshmiviswanathan4809
      @lakshmiviswanathan4809 ปีที่แล้ว +10

      மனமார்ந்த பிரார்தனைகள் வாழ்த்துக்கள் அருமை யோகாமா காமாக்ஷி. ஈன்றபொழுதில் பெருந்துவக்கும் தன் மகவை சான்றோன் என கேட்ட தாய் மற்றும் தந்தை. அனைத்து தெய்வங்களின் துணை உன் கரம் பற்றி நடத்தி செல்வதே அன்று வேறு என்ன வேண்டும்? ராம் ராம் ஜெய் காமாக்ஷி
      நமச்சிவாயம்🙏🏻

    • @vijibala2448
      @vijibala2448 ปีที่แล้ว +1

      Your inyerview was overwhelming madam.Felt very emotional.Thank you. GOD BLESS YOU.

    • @cdevadoss3942
      @cdevadoss3942 ปีที่แล้ว

      N​@@lakshmiviswanathan4809

    • @samarapuriselvaraj138
      @samarapuriselvaraj138 ปีที่แล้ว

      pp❤1

    • @KamalamN-uw8iv
      @KamalamN-uw8iv ปีที่แล้ว

      ​@@vijibala2448😅jm mm ooil nhi😂 GMh TV TV TV😂 Tvcf Phone TV

  • @jaganananthu1476
    @jaganananthu1476 ปีที่แล้ว +60

    மாமி உங்களுடைய தைரியம் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க சிரிச்சுண்டே இருக்கணும் மாமி. பெருமாள் அனுக்கிரஹம் உங்களுக்கு கிடைக்க பெருமாளிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்களுடைய முயற்சி மென் மேலும் வளர வாழ்த்துகிறேன். 🙏

  • @padmanagesh8589
    @padmanagesh8589 ปีที่แล้ว +9

    மிக மிக அற்புதமான மனுஷி. நான் இவரது சமையல் குறிப்புக்கு மட்டும் அல்ல இவர் பேசுகின்ற அழகுக்கும் fan. கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல் தன்னடக்கத்துடன் ஒரு தாய் போல இவர் பலருக்கு இருக்கிறார். இறைவன் இவருக்கும் இவர் குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டுகிறேன்

  • @koysalyakrishnaswamy3915
    @koysalyakrishnaswamy3915 ปีที่แล้ว +25

    நானும் சாதாரண சமையலோடுதான் கல்யாணம் செய்து கொண்டு வந்தேன் but இப்ப குழந்தைகள் என்ன கேக்கறாளோ அதை எல்லாம் செய்து தர கற்று கொண்டேன் இப்பவும் செய்கிறேன் அளவு சொல்வதை விட கண் திட்டம்தான் சரியா வரும் எல்லாம் கிருஷ்ணர் என்னுள் இருந்து கொண்டு செய்விக்கிறார். I am in 72

    • @tiruvengadamsrinivasan6777
      @tiruvengadamsrinivasan6777 3 หลายเดือนก่อน

      👌🙏 I too one of your fan. Send it to my friends and enjoy very much.
      VALHA VALAMUDAN

  • @umamaheswari39
    @umamaheswari39 ปีที่แล้ว +15

    அம்பாள் காமாக்ஷியின் மேல் உங்களுக்கு உள்ள அபரிமிதமான நம்பிக்கை, உங்களின் தன்னடக்கம் சிலிர் க்க வைக்கிறது. வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🎉🎉

  • @bhuvanag143
    @bhuvanag143 ปีที่แล้ว +35

    அம்மா..... என் குடும்பம் பெரிய குடும்பம்.... அடிக்கடி ‌நிறைய விருந்தினர்... சமையலில் சந்தேகம்.... புதிய முயற்சி.... என்று வரும்போதெல்லாம்..... உங்கள் ஞாபகம் தான் வரும் அம்மா....கை கொடுக்கும் தெய்வீக அம்மா நீங்கள்

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 ปีที่แล้ว +26

    மாமி உங்க நல்ல மனசுக்கு எப்பவும் இப்படி சந்தோசமா இருக்கணும் 🙏🙏🙏 உங்க பதிவு பார்க்கும் போது தான் எங்களுக்கு வாழ்கை என்ன என்று புரிகிறது மாமி கோடி நன்றி கள் 🙏🙏🙏❤️🌹🌺மாமி

  • @bubsri3324
    @bubsri3324 ปีที่แล้ว +29

    அம்மா தாயே எனக்கு இதெல்லாம் பார்க்க அதிசயமாக இருக்கிறது. காரணம் இவ்வளவு பெரிய பாரத்தை மனதில் வைத்தபடி எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது..சூப்பர் உங்கள் மனம் அழகும்மா...அதனால் தான் இப்படி இயல்பாக இருக்க முடிகிறது...வாழ்த்துக்கள் சகோதரி...நீங்க எல்லாருக்கும் ஓர் நல்ல உதாரணமாக இருக்கிறீங்கள்..கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோதரி....நானும் உங்கள் சமையலுக்கும் நீங்க பேசற பாஷைக்கும் அபிமானி

  • @BalupadmaS
    @BalupadmaS ปีที่แล้ว +27

    நான் உங்க விசிறி யோகாம்மா. நிறைய டிஷ் உங்க வீடியோவ பாத்துதான் கத்துக்கறேன். நீங்க எந்த குறையுமில்லாமல் காமாட்சி அருளால் நலமுடன் வாழ மகா பெரியவாளை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @prasanth1531
    @prasanth1531 ปีที่แล้ว +5

    தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக யோகாம்பாள் அம்மாவை சமையலில் பார்க்கிறேன்.
    அவர்கள் சிரிப்பு பின்னால் இவ்வளவு பெரிய வாழ்கை போராட்டம் இருந்து வாழ்வில் முன்னேறிய இவர் நிறைய பேருக்கு, குறிப்பாக கணவனை இழந்த பெண்களுக்கு முன் உதாரணம். காமாக்ஷி சரணம்.. 😭😭💐💐💐

  • @vydeki
    @vydeki ปีที่แล้ว +4

    திரு. சுந்தரை 1983 முதல் தெரியும். அருமையான,திறமையான, இனிமையான மனிதர். யோகாவை ( என் வயது 78) 4 வருடமாக தெரியும். ஆனால் இவர் அவர் மனைவி என்று 2 மாதங்கள் முன்தான் தெரியும். 1985 தீபாவளி அன்று வீட்டில் சில நிமிடங்கள் பார்த்ததுதான்
    வாழ்த்துக்கள்.

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 ปีที่แล้ว +347

    நீங்க எப்பவும் இப்படி சிரிச்சிண்டே தீர்க்காயுசா இருக்கனும்மா...😊

    • @meenaravikrishnan5916
      @meenaravikrishnan5916 ปีที่แล้ว +4

      Mo🙏🙏 Mo

    • @madhuramesh7032
      @madhuramesh7032 ปีที่แล้ว +7

      Yes en mind kkum video paathavudan adhan thonitthu❤

    • @Galaxy-w4z
      @Galaxy-w4z ปีที่แล้ว +3

      Mami kavalaipadathel. Husband illainu neenga chollithan therium. God will help u

    • @malarvizhikamaraj5576
      @malarvizhikamaraj5576 ปีที่แล้ว +5

      எப்பவும் இப்படியே சிரிச்சிட்டே இருக்கணும் உன் இறைவனை வேண்டுகிறேன்.

    • @tharshinishankar1548
      @tharshinishankar1548 ปีที่แล้ว +1

      Yes, God bless you Amma ❤

  • @padmavenkat4959
    @padmavenkat4959 ปีที่แล้ว +4

    சகோதரி உங்கள் பேச்சு எனக்கு மிகவும் தைரியம் மற்றும் ஊக்கத்தை கொடுக்கிறது. உங்கள் வயது தான் எனக்கு என் கணவர் இறந்தது இரண்டு வருடம் ஆகிறது.சற்று மன உளைச்சல் இருந்தேன் உங்கள் பதிவு ஆறுதல் தருகிறது

  • @vijayalakshmi06
    @vijayalakshmi06 ปีที่แล้ว +11

    உங்க சிரிப்ப பிடிக்காதவா இருக்கவே முடியாது மா . அவளோ சந்தோஷமா இருக்கும் எப்பொவும் அந்த சிரிப்ப கேட்டுண்டே இருக்கணும் ❤ லவ் யூ அம்மா ❤❤❤

    • @jayashreek8749
      @jayashreek8749 ปีที่แล้ว

      இதுவும் கடந்து போம்
      எப்பேர் பட்ட வார்த்தை
      வாழ்கையை த்திரும்பிப்ப்பார்க்கவைக்கும் வார்த்தை
      Bramikka வைக்கும் வார்த்தை
      பட்டவர்களுக்கு மட்டுமே புரியும் வார்த்தை யோகம்பாள் அம்மா
      உங்கள் வார்த்தைகள் அரு மருந்தாக உள்ளன
      மிக்க நன்றி

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 ปีที่แล้ว +37

    உங்கள் பாசை தான் அழகு மேடம் உங்கள் உடம்பை பார்த்து கொள்ளவும் வாழ்த்துக்கள் 💐

  • @dhanambkm7267
    @dhanambkm7267 ปีที่แล้ว +7

    அம்மா உங்க தெய்வீக முகமும் சிரித்து பேசும் அழகும் வேற லெவல் அம்மா வணங்குகிறேன் ❤❤❤

  • @RajugHema
    @RajugHema ปีที่แล้ว +2

    Madam iam 73 years old I lost my wife 11 years back ie. 2013 when she was 60. She was a best lady in preparation of food and good family girl like old tradition

  • @shantielangovan3802
    @shantielangovan3802 ปีที่แล้ว +3

    உங்கள் சிரித்த முகத்தின் பின் இத்தனை அனுபவங்களா!.எதையும் கடந்து வரும் துணிவு பெண்களுக்கு உண்டு என்பதற்கு நீங்க உதாரணம். Respects madam

  • @bhuvanaganesan5373
    @bhuvanaganesan5373 ปีที่แล้ว +3

    உங்கள் நிலையில் நானும் 48வயதில் அனுபவித்தேன்.இதே மனநிலை எனக்கும் உள்ளது. நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்❤🎉

  • @vatsalalakshmanan8874
    @vatsalalakshmanan8874 ปีที่แล้ว +18

    I am much much older than you yoga.In 2017 my daughter asked me to watch your cooking video.She told Mami is telling in very simple language.From that day I became your subscriber.
    Forgetting all sorrows in front of the camera and giving a beautiful smile and giggling while cooking and narrating different stories and your deep bakti and surrendering to Goddess Kamakshi tells how pure and devoted human being you are .
    Goddess Kamakshi will give you the will power to continue and show our traditional recipes through you.

  • @mahaboobali4588
    @mahaboobali4588 ปีที่แล้ว +3

    நீங்க எப்பவும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் அம்மா.

  • @nalininarayanan2029
    @nalininarayanan2029 ปีที่แล้ว +3

    Amezing. I am 70. So உங்களை நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

  • @padmasbrmanian
    @padmasbrmanian ปีที่แล้ว +3

    அற்புதமான interview. கள்ளங்கபடற்ற பேச்சு. ஆசீர்வாதங்கள் யோகாம்பாள்.

  • @prkrish54
    @prkrish54 ปีที่แล้ว +4

    நீங்கள் எப்போதும் நல்ல படியாக இருக்க இறைவனை
    பிரார்த்திக்கிறோம்

  • @GAYATHRITHANGAM-o6s
    @GAYATHRITHANGAM-o6s 7 หลายเดือนก่อน +2

    மாமி எங்க அம்மா பெயரும் யோகாம்பாள்தான்
    அம்மாவும் எல்லா பதார்த்தமும் நண்ணா பண்ணுவா. இப்ப அம்மா இல்லை. ஆனா இன்னிக்கும் எல்லா விஷேஷத்துக்கும் நான் உங்களோட வீடியோ பார்த்துதான் பட்க்ஷணங்கள் பண்ணி நெய்வேத்தியம் பண்றேன்.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 ปีที่แล้ว +3

    அருமை அருமை யோகாம்பாள் அம்மா உங்களுடைய அனுபவங்களை எங்களுடன் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நன்றி அம்மா.

  • @lallivenkat7024
    @lallivenkat7024 ปีที่แล้ว +3

    நீங்கள் என் கண்ணுக்கு என் அம்மா தான். அழகு , ஆத்மார்த்தம், எடுத்துச் சொல்லும் முறை எல்லாம் ❤❤❤❤❤❤❤❤. Love you Amma

  • @veronicaraphael2730
    @veronicaraphael2730 ปีที่แล้ว +5

    உங்களுடைய சிரித்த முகமும் பேசும் விதமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @sampathkumarv4328
    @sampathkumarv4328 ปีที่แล้ว +6

    உங்க வயசுல இந்த அளவுக்கு நீங்க சாதிக்கிறங்க ரொம்ப சூப்பர்

  • @nikoniko5355
    @nikoniko5355 ปีที่แล้ว +59

    Huge respect for Yogambal maam ! I have only seen her videos but knowing her journey and hear her talk, such a heart-to-heart talk. God bless you, and looking forward to much more from this amazing soul !!💛

  • @sasikala3858
    @sasikala3858 ปีที่แล้ว +1

    பெண்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாக மறுபடியும் மறுபடியும் கூறியதற்கு மிக்க நன்றி அம்மா

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 ปีที่แล้ว +4

    நமஸ்காரம் மாமி. நீங்கள் தீர்க்காயுளுடன் வாழ வேண்டும். வாழ்க வளமுடன்.🙏🏼💕

  • @vijayalakshmiv610
    @vijayalakshmiv610 ปีที่แล้ว

    Very nice to hear you Amma
    உங்களில் எங்கள் குடும்பத்தினர்
    எங்கள்
    அம்மாவைப்
    பார்க்கிறோம்.
    அவருக்கு யூ ட்யூப் பற்றி எதுவும் தெரியாது.ஆனால் நாங்கள் உங்களின் யூடியூப் பார்க்க அவரிடம் காண்பித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்.
    ஒருமுறை என் பெண் அமெரிக்காவில் இருந்து பேசும்போது நீங்கள் சொன்னது போல் சீடை செய்தது நன்றாக வந்ததாக சொன்னாள்.
    உடனே அம்மா அந்தமாமி அமெரிக்கா கூட போய் சொல்லிக்கொடுக்கிறார்கள் பார் ரொம்ப தேங்க்ஸ் என்று சொல் என்றார்கள். நாங்கள் அனைவரும் உங்கள் சீடர்கள்.
    வாழ்த்துக்கள் அம்மா.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 ปีที่แล้ว +21

    I became a widow at young age with rwo datrs i educated them n brought rhem up now i am 70

    • @kasiraman.j
      @kasiraman.j ปีที่แล้ว +1

      Great women 🙏🙏🙏

    • @mysreeni1
      @mysreeni1 5 หลายเดือนก่อน

      You are great madam

  • @vijayalakshmimani2224
    @vijayalakshmimani2224 ปีที่แล้ว +5

    கவலைப்படாதீங்க கடவுள் இருக்கார் மாமி. நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன். உங்கள் அனைத்து பதிவுகளும் சூப்பர் மாமி.❤🎉

  • @jayanthiswaminathan6210
    @jayanthiswaminathan6210 ปีที่แล้ว +28

    Such a heart-warming interview. I really am in awe of Yogambal mami. She is so humble and just like one of us, no airs about her. Her advices are very sincere and she does her work with full dedication. She is N inspiration to so many people. Thanks for the interview.

  • @lakshmij.lakshmi7494
    @lakshmij.lakshmi7494 ปีที่แล้ว +7

    மாமி தங்கள் சிரித்த முகம் , சமையல் குறிப்புகள் சொல்லும் விதம் எல்லாம் மிகவும் சந்தோஷமாக உள்ளது. தாங்களும் எப்போதும் சந்தோஷமாகக் இருக்க வேண்டும்.

    • @sugunarajendran4937
      @sugunarajendran4937 6 หลายเดือนก่อน

      ungal siripphkku pinnal avloa periya vali aam medam unmy ana anbu erukkumbodhu avargal nam moduthan iruppaargal adhu unmy annullum annabar erukkirar

  • @UmaKumar-q3v
    @UmaKumar-q3v ปีที่แล้ว +9

    You are gifted to have children with you madam. I too lost my husband five months back.My only son abandoned me. Leading my life with God's support

  • @ShanthiA-w8l
    @ShanthiA-w8l ปีที่แล้ว +42

    You are really a great soul mami. Your way of speech , politeness, way of cooking, explaining the method of recipes etc inspires everyone. Really a blessed person. May the almighty to shower his blessings always on you.

  • @sudhagovind2316
    @sudhagovind2316 ปีที่แล้ว +6

    உங்கள் சமையல் எங்கள் உயிர் உள்ளவரை மறக்கமுடியாது

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 ปีที่แล้ว +2

    Kamakshi sollum bodhu my eyes were filled with tears

  • @geethacp89
    @geethacp89 ปีที่แล้ว +10

    Yogambal ma'am is thangam. Amidst so many youtubers, the one and only down to earth person ❤

  • @p.geetha4648
    @p.geetha4648 ปีที่แล้ว +23

    Dear Yogambal mami, You are really an inspiration to older generation like me, as well to the younger n modern generation. Your life journey is a lesson to all.. Your receipies helps n guides me a lot in each and every dish preparation. I pray God to give you a healthy n happy long life. I am 70years old.

  • @vr2hear
    @vr2hear ปีที่แล้ว +35

    I am sorry for your loss from 2011 and I am touched by listening to your interview. Your recipes are simply great. You are so genuine and this is why you are so loved! Wish you great success in all your endeavors.

  • @chandrasekaranthaiyagaran3542
    @chandrasekaranthaiyagaran3542 ปีที่แล้ว +1

    இஷ்டப்பட்டு செய்யனும்.கஷ்டப்பட்டு செய்யகூடாது.எதுவாக இருந்தாலும்.பாராட்டுக்கள் மேடம்.
    ஆண்கள்(இளமையோ,வயதானவரோ)குறைந்தபட்சம் சமைக்க தேவையானவை தாங்கள் ஒரு Video போடுங்கள்.
    சாம்பார்,ரசம்,காய்,கூட்டு இவைகளகளுக்கு சொல்லுங்கள்.
    Basic சொன்னா போதும்.அப்புறம் Develop பண்ணிக்கலாம்.Stc

  • @ranjinimahesh2529
    @ranjinimahesh2529 ปีที่แล้ว +18

    You are an inspiration to so many people aunty..we are always there for you. Your smiling face is an energy to us. Take care aunty

  • @jeyanthirathinam1787
    @jeyanthirathinam1787 ปีที่แล้ว +1

    உங்க கதைதான் என் கதை.கஅமெரிக்கா பெண் வீட்டிற்கு வந்த இடத்தில் இரண்டு நிமிடத்தில் இறந்துவிட்டார்.30 நாட்கள் ஆகிறது.மனகாயத்தில் இருக்கிறேன்.

    • @srmelmango
      @srmelmango 14 วันที่ผ่านมา

      விரைவில் உங்கள் மனம் அமைதி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏽

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 ปีที่แล้ว +8

    Amma neenga eppovum sirichutu irrukanum ❤
    God bless you Amma
    Love u lot 🎉

  • @mathyvdm5152
    @mathyvdm5152 ปีที่แล้ว +1

    மேம் திவசத்திற்கு அன்றே பாகு செலுத்தி பண்ணுவது எங்காத்தில் வழக்கம். ஆனால் நீங்கள் சொல்வது உண்மை.ஊறிய மாவுதான் லேயராக சாப்ட் ஆக வருகிறது. ❤🎉❤

  • @as4720-q3g
    @as4720-q3g ปีที่แล้ว +3

    Yogambal aunty is such a sweet person and so simple. My best wishes to her and her family. Her recipes are awesome. Thanks to the interviewer also.

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et ปีที่แล้ว +1

    நீங்க சந்தோசமாக சிரிச்சிட்டு இருக்கிற மாமிதான் தெரியும் காமாட்சி உங்களுக்கு துணையிருப்பாள் மாமி🙏🙏

  • @srividhyajayaraman6151
    @srividhyajayaraman6151 ปีที่แล้ว +8

    One of the Best interview 🎉🎉yogambal Amma.... Namaskaram 🙏🙏❤️❤️

  • @shanthis3468
    @shanthis3468 ปีที่แล้ว

    நீங்க நீண்ட ஆயுளையும்,தேகாரோக்யத்துடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறோம்

  • @uc1bs
    @uc1bs ปีที่แล้ว +12

    Pranams to your courage, positive attitude, humility and devotion

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 ปีที่แล้ว

    அம்மாவோட சமையல் நிறைய பாத்திருக்கிறேன்
    புதுயுகம் தொலைக்காட்சியில்
    இவங்க கூடவே ஒரு சகோதரி வருவாங்க இரண்டு பேருமே பொருமையா பேசுவாங்க பார்க்கவும் கேட்கவும் நல்லாருக்கும்
    அம்மா இதேபோல் சிரிச்சுக்கிட்டே நூறு வயது வரை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @VinoSai-f5m
    @VinoSai-f5m ปีที่แล้ว +35

    All her recipes are fail proof... just follow her recipe instructions blindly and the final output is always amazing... for the recipes i had difficulty initially following other youtube videos now i have been able to successfully cook those dishes following her recipes. Her recipes are just wow 😊

    • @meena599
      @meena599 ปีที่แล้ว +1

      Very practical speech and realistic interview mam..keep going..

    • @priyadivakaran3284
      @priyadivakaran3284 ปีที่แล้ว +1

      Yes for me too🙂

  • @padmajayaraman8407
    @padmajayaraman8407 ปีที่แล้ว

    வணக்கம் மாமி.l am a great fan of your channel.உங்களுடைய சமையல் குறிப்புக்கள் ஒரு dictionary for every one. அது போல உங்களுடைய பேசும் வீதம்,சிரிப்பு and முக பாவம் ரொம்ப அழகு and தெய்வீகம்.Wish l could meet you in person and நீங்க சமைத்து சாப்பிடணும்.People like you are rare,so talented,yet so down to earth.

  • @sudhashivakumar4792
    @sudhashivakumar4792 ปีที่แล้ว +6

    Very heart touching to know about your life. May Ambal Kamakshi be with you always and bless you with good health and happiness ❤🎉😊

  • @hemalathakamesh3751
    @hemalathakamesh3751 ปีที่แล้ว +1

    I miss my mom 12 years back...but my mom look like same yogambal amma..அதுக்காகவே நான் அவங்கள பார்ப்பேன்..என் அம்மாவும் நன்னா சமைப்பாங்க ❤😊

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 ปีที่แล้ว +3

    What a great comment by Amma; “it is not me, is Goddess Kamakshi”. 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @lalithasankaran5079
    @lalithasankaran5079 ปีที่แล้ว

    அம்மா வணக்கம்
    என்னுடைய அம்மா எப்போதும் சொல்வார்கள்
    பகவான் ஒரு கதவை மூடினால் நிச்சயமாக இன்னொரு பக்கம் திறப்பான்
    நீங்கள் உங்களுடைய பணிகளை சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்

  • @TheBaranika
    @TheBaranika ปีที่แล้ว +13

    Yogambal Amma is my go to for anything traditional. I can blindly follow her recipes without a doubt. Beautiful interview, she is such an authentic person, so positive. No wonder her food is good.. it comes from a pure, positive space. My hope and prayers for her to continue her journey and inspire many more on the wonders of Indian cooking.

  • @ganeshbalaji1760
    @ganeshbalaji1760 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் மூங்கிலணை காமாட்சி அம்மன் அருளால் நன்னாருக்கனும்.ஷேமமாயிருக்கணும்.நிறைய சொல்லி தரணும்.நாங்களும் பின்பற்றணும்.

  • @PadmavathyVenkatesan-p6x
    @PadmavathyVenkatesan-p6x ปีที่แล้ว +4

    Excellent interview. Good inspiration for all women. We need more and more information not only in food but also worldly matters. We pray god to give healthy and weathy health. Thank u so much.

  • @padmasbrmanian
    @padmasbrmanian ปีที่แล้ว

    எனக்கும் பல பல பேரால் "அம்மா: என்று கூப்பிடப்படும் பாக்கியம் கிடைத்துள்ளது. மிக மனநிறைவு எல்லோரையும் குழந்தைகளாக பார்க்கிறது.

  • @rajalakshmir7649
    @rajalakshmir7649 ปีที่แล้ว +8

    Don't Worry mam. Take Care. Vazhga Valamudan.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว

    எனக்கும் இவங்கள ரொம்ப பிடிக்கும் மிமி பேசறது நான் அவங்க சேனல்ல ரசிச்சு கேட்பேன் எக்ஸ்லன்ட் சூப்பர் சூப்பர் அவங்கள பேட்டி எடுத்து போட்டதுக்கு நன்றி ❤️❤️👍👏👏👏👏👏👏

  • @savithasuresh2009
    @savithasuresh2009 ปีที่แล้ว +3

    How humble you are. Not only cooking but the humility and life wisdom we have to learn from you. All Ambals grace

  • @JK-fn7gv
    @JK-fn7gv ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அம்மா எப்போதும் கடவுள் அருளால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாக இருக்க பிரார்த்திக்கிறேன்

  • @veerakaruppu778
    @veerakaruppu778 ปีที่แล้ว +7

    You are great singapean mam kadaul thunai eruppar 🙏🙏🙏🙏🙏🙏🙏🥰😘😍

  • @selvasamy5819
    @selvasamy5819 ปีที่แล้ว +1

    தாங்கள் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் அம்மா 🙏

  • @nagalakshminagu2958
    @nagalakshminagu2958 ปีที่แล้ว +5

    Fantastic interview mam God bless you with lots of happiness and health and success in your life mam

  • @shanthiramakrishnan-k5g
    @shanthiramakrishnan-k5g ปีที่แล้ว +2

    Yogambal mamikku equal mamidhan

  • @mangalamr7761
    @mangalamr7761 ปีที่แล้ว +15

    Wonderful Mami.I am aslo one of yr follower. A SMALLL REQUEST FROM YOU MAMI,PLEASE PRINT YOUR DISHES AS A BOOK. IT WILL BE USEFUL FOR FUTURE GENERATIONS GENERATIONS.THANK YOU MAMI.

    • @brindhavenu2551
      @brindhavenu2551 ปีที่แล้ว

      Yes I also thought the same. Please put book

    • @girijaswathi782
      @girijaswathi782 ปีที่แล้ว

      மாமி, எந்த ஒரு ரெஸிப்பி பண்ணாலும் உங்களோட ஐட்டம் தேடி பார்த்து பண்ணுவேன். My all time favorite Paal payasam உங்களோட ரெயில்வே பார்த்து பண்ணி இப்போ எக்ஸ்பர்ட் ஆயிட்டேன். பகவான் உங்களுக்கு நோய், நொடி அற்ற நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் அளிக்க பிரார்த்திக்கிறேன். அன்புடன் கிரிஜா❤❤

  • @rera5376
    @rera5376 ปีที่แล้ว +1

    உங்க நல்ல குணம் தான் மாமி உங்களை வெற்றி பெற செய்தது
    இவங்க Dish நம்பி செய்யலாம்.Tastee ah இருக்கும்

  • @mythilimani9496
    @mythilimani9496 ปีที่แล้ว +2

    அம்மா உங்களுக்கு கடவுள் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அருள பிரார்த்தனை செய்கிறேன் அம்மா ❤

  • @kalaivanis9576
    @kalaivanis9576 ปีที่แล้ว +10

    You are an amazing person mam. You are adored by one and all. Ambal Guides you. We like your smile. Keep rocking always. Vazhga nalamudan.

  • @dilipkumarvunnava5407
    @dilipkumarvunnava5407 11 หลายเดือนก่อน +1

    I really wonder how ppl body shamed Yogambal mam. She is genius and most respectable TH-cam personality. Ppl should learn to not body shame someone. It hurts them.

  • @sudhavenkateswaran785
    @sudhavenkateswaran785 ปีที่แล้ว +20

    So much positivity ❤. My deep respect to you Mami 🎉

  • @ramaasankar8812
    @ramaasankar8812 11 หลายเดือนก่อน +1

    உங்கள் கையில் காமாக்‌ஷி பதார்தம் செய்து தருவதாக சொல்லும் -
    உங்களை நான் அன்னம் இடும் அன்னபூரணியாக வணங்குகிறேன்-
    உங்கள் உணவு செய்முறை விளக்கம் பின்பற்றி ருசியாக சமைத்து சாப்பிடும் குடும்பம் பல பேர் உண்டு -நன்றி 🙏

  • @radhikaravi3537
    @radhikaravi3537 ปีที่แล้ว +9

    Mami, you are inspiration to many and an amazing person. You are full of positivity. Take care of your health mami 🙏🙏🙏

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 ปีที่แล้ว +1

    Very inspirational ji.I am so proud of u ji.Humble prabams

  • @PaviRam1000
    @PaviRam1000 ปีที่แล้ว +4

    Romba thanks mam for sharing this video... Prayers to god to give you more strength..

  • @masilamani7762
    @masilamani7762 ปีที่แล้ว

    அம்மா பலகாரம் செய்யும் போது உங்கள் ஞாபகம் வரும் பலகாரம் செய்யும் போது பிள்ளையார் பிடித்தது ஞாபகத்தில் வந்தது நான் கிறிஸ்டின் நான் பலகாரம் செய்யும் போது பிள்ளையார் பிடித்து வைத்துவிட்டு தான் செய்வேன் அந்தப் பலகாரம் நல்லபடியாக வந்தது அதற்கு முன்னாடி சில தவறுகள் நடக்கும் பிள்ளையாரை நினைத்ததில் இருந்து பலகாரம் சூப்பராக வரும் உங்கள் ஞாபகத்துடன் செய்வேன்

  • @jayanthivenkatesh8537
    @jayanthivenkatesh8537 ปีที่แล้ว +10

    Love your shows and a huge admirer of your talent.Your enthusiasm when you cook is contagious and the sparkle in your eyes when you make sweets is something to watch.Your detailed stories of festivals like about the Cauvery are a bonus.Keep going and enrich us.Your 71 year old fan.

  • @riselvi6273
    @riselvi6273 3 หลายเดือนก่อน

    நீங்கள் பார்ப்பதற்கு நடிகை Vanisri மாதிரி இருக்கீங்க.. உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்., ma' am.❤❤❤❤❤❤❤

  • @Shukra9665
    @Shukra9665 ปีที่แล้ว +38

    Mami, you are an amazing cook and an amazing person. God bless. Very sad to hear of your tragic loss. Breaks my heart.😢 I have followed so many of your dishes. God bless you with a 100 years.

  • @gnanambigaigovindasamy7224
    @gnanambigaigovindasamy7224 ปีที่แล้ว

    அம்மா, என்னிக்குமே தங்கள் சமையல் கைவண்ணம்தான் எனக்கு இதுவரை உதவியுள்ளது.நான் நாடுவதும் உங்கள் செய்முறைகளேயே.நீடூழி நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க 🙏

  • @aarthiswaminathan6894
    @aarthiswaminathan6894 ปีที่แล้ว +3

    Anyday, mami is the best .Thank you for everything mami 🙏🏼we owe you a lot

  • @mmmtn3
    @mmmtn3 ปีที่แล้ว +2

    I feel 🎉 very happy with such a nice hearted , such a good soul, such a beautiful lady. 🎉. I wish God should give her a healthy and long life.

  • @akshaya4624
    @akshaya4624 ปีที่แล้ว +6

    Huge respect to mam.... Lots of love and power to u❤

  • @meeram7
    @meeram7 ปีที่แล้ว +2

    Amma..neenga romba humble and romba ganyamaanavanga🙏you are doing such a great service to humanity…May God shower His Choicest Blessings on you ❤

  • @shyamushyamala6335
    @shyamushyamala6335 ปีที่แล้ว +8

    God bless you and your family ❤️❤️❤️

  • @viswaasslokasandmantras5926
    @viswaasslokasandmantras5926 5 หลายเดือนก่อน

    மாமிக்கு நமஸ்காரம்....❤❤❤நம்ப ஆத்துல சமைக்கறதே ரொம்ப கஷ்டப்படறோம்...கேமரா முன்னாடி சமைக்கறதுக்கு ரொம்ப தைரியம் வேணும்...அது சொதப்பிடுமோ அப்படின்னு பயமாவே இருக்கும்...ஆனா அத சமாளிச்சு தைரியமா பண்றது பெரிய விஷயம்.. உங்களுக்காக பிரார்த்தனை பண்றேன் மாமி... நமஸ்காரம்

  • @sunderr.117
    @sunderr.117 ปีที่แล้ว +5

    I have been watching your programs on TH-cam with interest over the last 4-5 years and, to tell you frankly, was thrilled each time. I was following some of your recipes during my wife's temporary absence from town some years back. The cooking methods taught by you are akin to those of my mother and wife. The present interview was very insightful and enlightening. Wishing you good luck in all your future endeavours.

  • @surekhakumar2025
    @surekhakumar2025 ปีที่แล้ว

    Correct!
    Ivvalavu polite aa Naa illa yenakkulla irukkara kamakshi seiyaraa nnu azhutham thiruthama sollaringa adu nejamave GREAT maami.
    Hats off to yr politeness 🙏🙋

  • @muthuparvathi1003
    @muthuparvathi1003 ปีที่แล้ว +23

    Admire your cooking skills , story telling skills, speaking style with innocence.. Now after watching today's interview have seen you as a great motivational person. Have tried many recipes of yours from puthuyugam TV and channel.. Wonderful Amma...praying God for your good health and happiness always😊

  • @lalithav3328
    @lalithav3328 ปีที่แล้ว +1

    உங்கள் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமி. உங்கள் ரெசிபிகளும் நன்கு உள்ளது. அது பிரகாரம் தான் நான் சமையல் செய்வேன்.

  • @ushag8943
    @ushag8943 ปีที่แล้ว +4

    yes mami. we want r ever smiling smile always.

  • @padmavathiranganathan7054
    @padmavathiranganathan7054 2 หลายเดือนก่อน

    உங்க குழந்தை முகமும் சிரிப்பும் பணிவும் அடக்கமும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க சமையலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்