திருப்புகழ் 1318 வாதினை அடர்ந்த (பழமுதிர்ச்சோலை)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2018
  • மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
    ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
    ACCOUNT NUMBER - 602701518901
    BANK - ICICI BANK LTD
    BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
    IFSC CODE - ICIC0001912
    CITY - MAYURAM (MAYILADUTHURAI)
    DISTRICT - NAGAPATTINAM
    STATE - TAMIL NADU
    MICR CODE - 609229005
    BRANCH CODE - 001912
    ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
    நன்றி - இங்கர்சால்
    .
    வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
    மாயமதொ ழிந்து, தெளியேனே
    மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
    மாபதம ணிந்து, பணியேனே
    ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
    ஆறுமுக மென்று, தெரியேனே
    ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
    தாடுமயி லென்ப, தறியேனே
    நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
    நானிலம லைந்து, திரிவேனே
    நாகமணி கின்ற நாதநிலை கண்டு
    நாடியதில் நின்று, தொழுகேனே
    சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
    சோகமது தந்து, எனையாள்வாய்
    சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
    சோலைமலை நின்ற, பெருமாளே.

ความคิดเห็น • 72

  • @venkataramanarao3563
    @venkataramanarao3563 4 ปีที่แล้ว +11

    என்ஐய்யன் அருணகிரி நாதர் பாடல்கள் பலாப்பழமொத்து வெளியே முள்போன்றும் ஊள்ளேதீஞ்சுவைகனி போன்றது அக்கனியின்சுவைபோன்றது ஐயா சம்பந்தகுருக்கள் அவர்களின் இனிய குரல்

    • @ramkr142
      @ramkr142 4 ปีที่แล้ว

      He is a Christian, Spoiling Hindu Tamils in the name of Tamilan, so his first agenda is destroy the image of Murugan, Dont worry the Same Murugan will blast him and his evangelical group without leaving dust, if you like Respected Samandam Gurukkal Thirupugazh pl listen th-cam.com/video/i9u2vV-ajtA/w-d-xo.html

    • @srinivasana6614
      @srinivasana6614 6 หลายเดือนก่อน

      வெளியில் முள் போன்து எல்லாம் இல்லை

  • @Vallalar_sanmargam
    @Vallalar_sanmargam 4 หลายเดือนก่อน +2

    முருகா... கந்தா... வேலா...
    திருப்புகழை அடியேனும் பாட அருள் புரிய வேண்டும்
    🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 11 หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +5

    சக்தி கணபதி துணை வேலும் மயிலும் துணை பன்னிருகரத்தானே போற்றிபோற்றி

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 ปีที่แล้ว +2

    அருமை அற்புதம் 🙏🙏🙏
    🔥சோதி உணர்கின்ற வாழ்வு சிவமென்ற
    சோகமது தந்து எனை ஆள்வாய் 🔥
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +3

    சக்திகணபதிதுணை திருச்செந்துர் சிவசக்தி சிவக்குமரா போற்றி போற்றி Canada 🇨🇦 Toronto

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +2

    Arunagiri Nathar swamigal Thiruvadikal Saranam 🙏🙏🙏 Guruve Saranam 🙏🙏🙏

  • @murugub9586
    @murugub9586 4 ปีที่แล้ว +5

    மிகவும் அழகான குரல் வளம் ஐயா உங்களுக்கு. முருகா முருகா முருகா முருகா!

  • @venkataramanarao3563
    @venkataramanarao3563 4 ปีที่แล้ว +4

    அருமையான குரல் பாடல்களைகேட்கையில் முருகனே எதிராக தோன்றுகறான்

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +1

    Muruga engaluku kulanthai varam kodungal Muruga 🦚🙏🦚🙏🦚🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +1

    Om Saravana Bhava potri

  • @dthirumangai7592
    @dthirumangai7592 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை மிக உருக்கமாக பாடுகிறீர்கள் ஐயா நன்றி

  • @renugadevipadmanabhan8947
    @renugadevipadmanabhan8947 ปีที่แล้ว

    அற்புதம் ஐயா உங்கள் குரல் வளம்.பாடலை கேட்கும் போதெ கந்தனின் அருளை பெற்று விட்ட மகிழ்ச்சி.
    மிக்க நன்றி.

  • @rajitharanvijayasekaram5862
    @rajitharanvijayasekaram5862 11 หลายเดือนก่อน +1

    Thank you, Ingersol. For this beautiful collection.

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +1

    Om Saravana Bhava

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +1

    மிக்கநன்றி வணக்கம் ஐயா வாழ்கநலமோடு பல்லாண்டுகாலம்வாழ்க🌺🌺🌺

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +1

    Om Saravana Bhava potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @Anon13100
    @Anon13100 2 ปีที่แล้ว

    முருகா, இறைவா, நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு நாடி அதில் நின்று நான் உனைத் தொழவேண்டும். சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய், அன்பு தெய்வமே.

  • @chinnusamykalimuthu3395
    @chinnusamykalimuthu3395 4 ปีที่แล้ว +2

    ஓம் முருகா சரணம்.

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +1

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @rainbowpromoters2023
    @rainbowpromoters2023 4 ปีที่แล้ว +3

    நித்தமும் கேட்க கூடிய பாடல்.. இனிமையான குரல் அய்யா.. பாடலோடு சேர்த்து விளக்கமும் இருந்தால் மிக்க நன்று

  • @rajasaanyarajasaanya7834
    @rajasaanyarajasaanya7834 4 ปีที่แล้ว +1

    நல்ல பணி சிறக்கட்டும்

  • @sunderrajagopal2084
    @sunderrajagopal2084 ปีที่แล้ว

    Superb and melodious song. Thanks Sir.

  • @swaminathang8726
    @swaminathang8726 5 ปีที่แล้ว +6

    அருமைமுருகா

  • @user-oe9kr3jp2l
    @user-oe9kr3jp2l 4 ปีที่แล้ว +2

    ஓம் முருகா சரணம் அருமையாக உள்ளது ஐயா

    • @ramkr142
      @ramkr142 4 ปีที่แล้ว

      He is a Christian, Spoiling Hindu Tamils in the name of Tamilan, so his first agenda is destroy the image of Murugan, Dont worry the Same Murugan will blast him and his evangelical group without leaving dust, if you like Respected Samandam Gurukkal Thirupugazh pl listen th-cam.com/video/i9u2vV-ajtA/w-d-xo.html

  • @muthamil03
    @muthamil03 3 ปีที่แล้ว +1

    Super rendition

  • @s.r.saravanans.r.saravanan6987
    @s.r.saravanans.r.saravanan6987 4 ปีที่แล้ว +1

    Om muruga om muruga om muruga

  • @ganessrinivaasvictorysucce5348
    @ganessrinivaasvictorysucce5348 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சரணபவ 🙏🙏🙏

  • @user-fm7np3ic4i
    @user-fm7np3ic4i 5 ปีที่แล้ว +4

    முருகா

    • @ramkr142
      @ramkr142 4 ปีที่แล้ว

      He is a Christian, Spoiling Hindu Tamils in the name of Tamilan, so his first agenda is destroy the image of Murugan, Dont worry the Same Murugan will blast him and his evangelical group without leaving dust, if you like Respected Samandam Gurukkal Thirupugazh pl listen th-cam.com/video/i9u2vV-ajtA/w-d-xo.html

  • @Chanmos
    @Chanmos 5 ปีที่แล้ว +5

    ARUMAI ARUMAI

    • @ramkr142
      @ramkr142 4 ปีที่แล้ว

      He is a Christian, Spoiling Hindu Tamils in the name of Tamilan, so his first agenda is destroy the image of Murugan, Dont worry the Same Murugan will blast him and his evangelical group without leaving dust, if you like Respected Samandam Gurukkal Thirupugazh pl listen th-cam.com/video/i9u2vV-ajtA/w-d-xo.html

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 2 ปีที่แล้ว +1

    உலகம் தமிழ் மக்களை காப்பாற்ற ஓடி வா தஞ்சாவூர் பெருவுடையார் சிவன் கோயில் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 3524786 தமிழ் மக்களை உலகம் ஆளப்போறான் தூயதமிழன் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல்

  • @Revathy-st2vm
    @Revathy-st2vm 19 วันที่ผ่านมา

    Om muruga 🙏🙏🙏🙏🙏

  • @TheSurya9397
    @TheSurya9397 6 หลายเดือนก่อน

    Divine❤

  • @sivayanama-cosmicdivine
    @sivayanama-cosmicdivine 4 ปีที่แล้ว +9

    vAdhinai adarndha vEl vizhiyar thangaL
    mAyamadh ozhindhu ...... theLiyEnE
    mA malargaL koNdu mAlaigaL punaindhu
    mA padham aNindhu ...... paNiyEnE
    Adhi odum antham Agiya nalangaL
    ARumugam endru ...... theriyEnE
    Ana thani manthra rUpa nilai koNdadh
    Adu mayil enbadh ...... aRiyEnE
    nAdhamodu vindhu Ana udal koNdu
    nAnilam alaindhu ...... thirivEnE
    na aham aNigindra nAtha nilai kaNdu
    nAdi adhil nindru ...... thozhugEnE
    jOthi uNargindra vAzhvu sivam endra
    sOham adhu thandhu ...... enaiyALvAy
    sUrar kulam vendru vAgaiyodu sendru
    sOlai malai nindra ...... perumALE.

    • @ramkr142
      @ramkr142 4 ปีที่แล้ว

      He is a Christian, Spoiling Hindu Tamils in the name of Tamilan, so his first agenda is destroy the image of Murugan, Dont worry the Same Murugan will blast him and his evangelical group without leaving dust, if you like Respected Samandam Gurukkal Thirupugazh pl listen th-cam.com/video/i9u2vV-ajtA/w-d-xo.html

  • @balajig8655
    @balajig8655 3 ปีที่แล้ว +1

    Nice song

  • @rexgamingtamil6307
    @rexgamingtamil6307 4 ปีที่แล้ว

    Om muruga..om muruga..om muruga..om muruga..om muruga..om muruga

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +1

    மிக்கநன்றிவணக்கம் ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க🌺🌺🌺

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 ปีที่แล้ว

    OM MURUGA..OM MURUGA...OM MURUGA...OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @baluhappy784
    @baluhappy784 ปีที่แล้ว

    ஓம் ரீங் சரஹணபவ 🦚🐓🤲

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 3 ปีที่แล้ว

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @rakeshduttsharma3568
    @rakeshduttsharma3568 2 ปีที่แล้ว

    Om

  • @priyadharshinipriya4138
    @priyadharshinipriya4138 3 ปีที่แล้ว

    Pakthikaramana kural om Murga..

  • @saravanannellaiappan1628
    @saravanannellaiappan1628 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏arokara

  • @krishnakumarsukumaran9796
    @krishnakumarsukumaran9796 2 ปีที่แล้ว

    💎💎💎💎💎💎

  • @revathimurali860
    @revathimurali860 4 ปีที่แล้ว +1

    where can I contact thiru Sambandham gurukkal? we are doing a Tiruppugazh bajani in Tiruttani in September

    • @ramkr142
      @ramkr142 4 ปีที่แล้ว

      He is a Christian, Spoiling Hindu Tamils in the name of Tamilan, so his first agenda is destroy the image of Murugan, Dont worry the Same Murugan will blast him and his evangelical group without leaving dust, if you like Respected Samandam Gurukkal Thirupugazh pl listen th-cam.com/video/i9u2vV-ajtA/w-d-xo.html

  • @aiyyapana5286
    @aiyyapana5286 ปีที่แล้ว

    ஐயப்பன் பி எஸ் சி

  • @poomanipalanikkannan3683
    @poomanipalanikkannan3683 4 ปีที่แล้ว +2

    முருகன் அருள் உங்ககளுக்கு உண்டு

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 4 ปีที่แล้ว +4

    சோகமது தந்து என்றா இருக்கிறது ?
    சோகமநு நீக்கி எனையாள்வாய் என்றுதானே இருக்க வேண்டும்

    • @Aravindloveu
      @Aravindloveu 4 ปีที่แล้ว +1

      நமசிவாய ஐயா
      "சோக மது*
      சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோக மது தந்து எனை ஆள்வாய்.
      சோகமது தந்து எனையாள்வாய் ... ( +அகம்) அதுவே நான்
      என்ற நிலை தந்து, என்னை ஆள்வாய்.
      www.kaumaram.com/thiru/nnt1318_u.html

    • @meenasal2120
      @meenasal2120 4 ปีที่แล้ว +1

      ஆம்.சோகமது நீக்கி‌எனையாள்வாய் என்பது தான் சரி. அறம் வைத்து கொல்வதுபோல் கொல்லாமல் இருந்தால் சரி.

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 4 ปีที่แล้ว +1

      @@meenasal2120
      நன்றி மகிழ்ச்சி 😃

    • @Anon13100
      @Anon13100 2 ปีที่แล้ว

      பொதுவாக, தமிழ்ச் சொற்களுக்குப் பல பொருட்கள் இருக்கின்றன. சோகம் என்கிற சொல்லுக்கும் அப்படியே. இதன் ஒரு பொருள் 'இறைவனும் ஆன்மாவும் ஒன்று எனப் பாவித்தல்'. அதாவது, தன்னிலை மறந்து இறைவனின் ஐக்கியமாக உணர்வது. இது ஒருவகை மயக்கம். சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய் என்று அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 5 หลายเดือนก่อน

    இந்த திருப்புகழின் விளக்கம் என்ன

  • @sugumarastro8360
    @sugumarastro8360 3 ปีที่แล้ว

    Change the murugan picture to the traditional one

    • @muthuvelsamayalarai8223
      @muthuvelsamayalarai8223 3 ปีที่แล้ว +2

      வரலாற்றில் திரிக்கப்பட்ட சூப்ரமணியனின் புகைப்படத்தை கோருகிரீரா தமிழ் முருகன் கருத்த நிறத்திலே சிறப்பாக இருக்கின்றான்

  • @prabhakaran6502
    @prabhakaran6502 3 ปีที่แล้ว +7

    வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் ... வம்பு செய்வது போன்று
    அடர்ந்து நெருங்கி வேலொத்த கண்களை உடைய பெண்களின்
    மாயமது ஒழிந்து தெளியேனே ... மயக்குதல் என்னை நீங்கி நான்
    தெளிவு பெறவில்லையே.
    மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து ... நல்ல மலர்களால்
    ஆன மாலைகளைத் தொடுத்து
    மாபதம் அணிந்து பணியேனே ... நின் சீரிய அடிகளில் சூட்டி நான்
    பணியவில்லையே.
    ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ... முதலில் தொடங்கி இறுதி
    வரை உள்ள சகல நலன்களும்
    ஆறுமுக மென்று தெரியேனே ... ஆறுமுகம்* என்ற உண்மையை
    நான் தெரிந்து கொள்ளவில்லையே.
    ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது ... ஒப்பற்ற ஓங்கார மந்திர
    ரூபநிலை கொண்டது
    ஆடுமயி லென்பது அறியேனே ... ஆடுகின்ற நிலையிலுள்ள
    மயில்தான் என்று அறியவில்லையே.
    நாதமொடு விந்து வானவுடல் கொண்டு ... நாதமும் விந்துவும்
    சேர்ந்து உருவாக்கிய இவ்வுடலால்
    நானிலம் அலைந்து திரிவேனே ... உலகமெல்லாம் அலைந்து
    திரிகின்றேனே.
    நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு ... குண்டலினியாக ஓடும்
    பிராணவாயு அடைகின்ற ஆறாவது நிலையை (ஆக்ஞாசக்ரமாகிய
    ஒளி வீசும் ஞான சதாசிவ நிலையைக்) கண்டு தரிசித்து**
    நாடியதில் நின்று தொழுகேனே ... விருப்புற்று அந்த நிலையிலே
    நின்று நான் தொழவில்லையே.
    சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற ... அந்த ஞான ஒளியை
    உணர்கின்ற வாழ்வே சிவ வாழ்வு என்ற
    சோகமது தந்து எனையாள்வாய் ... ( +அகம்) அதுவே நான்
    என்ற நிலை தந்து, என்னை ஆள்வாய்.
    சூரர்குலம் வென்று வாகையொடு சென்று ... சூரர் குலத்தை
    வென்று வெற்றியோடு போய்
    சோலைமலை நின்ற பெருமாளே. ... பழமுதிர்ச்சோலை மலையில்
    வீற்றிருக்கும் பெருமாளே.

    • @Anon13100
      @Anon13100 2 ปีที่แล้ว +1

      அற்புதமான விளக்கம், ஐயா. நன்றி. நாத நிலை கண்டு என்பதில் கண்டு என்பது அடைந்து என்று பொருள்படும் என நினைக்கிறேன்.

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 ปีที่แล้ว

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA