அருள்மிகு வேயுறுதோளியம்மை உடனாய சோமநாதர் திருக்கோயில், நீடூர் / தேவாரப்பாடல் பெற்ற கோயில் / Nidur
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- திருச்சிற்றம்பலம்
அருள்மிகு வேயுறுதோளியம்மை உடனாய சோமநாதர் திருக்கோயில், நீடூர் / தேவாரப்பாடல் பெற்ற கோயில் / Nidur
இறைவன் பெயர்: சோமநாதர் , கான நிர்த்தன சங்கரர்
இறைவி பெயர் வேயுறு தோளியம்மை, ஆலாலசுந்தர நாயகி
பதிகம் திருநாவுக்கரசர் - 1 சுந்தரர் - 1
தலமரம் : மகிழ மரம்
ஊழிக் காலத்தும் இத்தலம் அழியாது நீடித்திருக்குமாதலின் நீடூர் என்று பெயர் பெற்ற இவ்வாலயத்திற்கு இராசகோபுரமில்லை
காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும்.
நண்டாகப் பிறந்த தன்மசுதன் எனும் அசுரன் வழிபட்ட தலம் இது. அதனால் கடக ராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. சிவனடியார்களுக்குத் திருவமுது படைக்கும் திருத்தொண்டைச் செய்துவந்த 63 நாயன்மார்களில் ஒருவரான முனையடுவார் நாயனார் முக்தி அடைந்த தலம் இது.
இறைவியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும், சனியையும் தரிசிக்கும் வகையில் சந்நிதிகள் அமைந்துள்ளன. இதனால் சனிதோஷம் விலகும் என்கிறார்கள். இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது.
இத்தல இறைவன் அருட்சோமநாதர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார்
இத்தலத்தில் பெரியவராக சிந்தாமணிபிள்ளையார், பழையவராக செல்வமகா விநாயகர், புனிதமானவராக சிவானந்த விநாயகர் என்று 3 நிலைகளில் உள்ளார் புதிய செயல் தொடங்குபவர்கள் இவரை வேண்டி வணங்குகிறார்கள்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநின்றியூர் இறைவரை வணங்கி புகழ் நீடூர் பணியாது திருப்புன்கூர் இறைவரை பணிந்திறைஞ்ச செல்லும்போது, மெய்யுணர்வு ஓங்கவே, நீடூர் இறைவரை வந்துப் பாடிப் பணிந்து தங்கிப் பின் திருப்புன்கூர் சென்ற வரலாற்றை சேக்கிழார் பதிவு செய்துள்ள வண்ணம் எண்ணி மகிழத்தக்கது.
எப்படிப் போவது மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் மயிலாடுதுறையில் இருந்து வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் நீடூரில் சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நீடூர் செல்ல நகரப் பேருந்து வசதி இருக்கிறது. வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து வருவோர் திருப்பனந்தாள் சாலையில் பட்டவர்த்தி என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து இடப்புறமாகத் திரும்பி மயிலாடுதுறை சாலையில் சென்று நீடூரை அடையலாம்.
கூகுல் வரைபடம் - maps.app.goo.g...
தொலைபேசி:
என் .கல்யாணசுந்தரசிவன் குருக்கள் 04364 250142, 250424, 99436 68084
இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.
வேண்டுகோள்:-
கோயில் பற்றி மேலும் நன்கு அறிந்த மெய்யடியார்கள் கோயில் செல்லும் வழிபற்றிய விவரங்களையோ, அர்ச்சகர் பற்றியோ, நடை திறப்பு பற்றியோ கமெண்டில் தெரிவித்தால் அடியார் பெருமக்கள் இவ்வாலயத்தை எளிதில் தரிசிக்கப் பேருதவியாக இருக்கும்.
அன்புடன்
சிவ.ஜவஹர்
☎️ 9551623296
#சிவ_ஜவஹர்
#Siva_Jawahar
இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.
#sivan
#sivalayam
#Nidur
#devaram
#devara
#padalpetratemple
#thevaram
#தேவாரம்
#தேவாரத்திருத்தலங்கள்
#சிவாலயம்
#சிவதரிசனம்
#சிவன்
#சிவத்தலம்
#சிவன்கோயில்
Arumaiyaana pathivu🙏🏻🙏🏻
@@aruneshwars.j.5939
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 ஈசனின் திருவருள் உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கட்டும் 💐💐💐
Om namachivaya 🕉🕉🕉🚩
@@narayanamoorthyr1656 திருச்சிற்றம்பலம்🙏🙏
மழலையின் மொழி கேட்டு மகிழ்ச்சி கொள்ளும் பெற்றோரைப் போல, தான் படைத்த 🐦உயிர்களின்(பட்சிகள்)🐦 ரீங்காரம்(சிவாயநம)கேட்டு அம்மையும் (சக்தி), அப்பனும்(சிவன்)ஆனந்தம் அடைவார்கள் என்பது திண்ணமே🙏🕉 நமசிவாய🕉🙏
@@Little_flower_94
திருச்சிற்றம்பலம்🙏 மிகவும் உண்மை
காணும் உயிர்கள் அனைத்திலும் ஈசன் நீக்கமற நிறைந்திருக்கிறார் ஆதலால் தான் வள்ளலார் சாமிகளும் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கலங்கினார் 🙏🙏