ராமேஸ்வரம் கோயில் வரலாறு , Rameshwaram history in tamil , Ramanathansamy Kovil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • ராமேஸ்வரம் கோயில் வரலாறு , Rameshwaram history in tamil , Ramanathansamy Kovil ‎‪@arima_gokkul‬
    இராமாயணத்தில் சீதையை கவர்ந்து சென்ற இராவணனுடன் போரிட்டு வெற்றி கண்டு அன்னை சீதாதேவியை மீட்டார் இராமபிரான். சிறந்த சிவபக்தனான இராவணனை போரில் கொன்றதன் விளைவாக ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இதை நீக்குவதற்கு அகத்திய முனிவரிடம் யோசனை கேட்டார் ராமபிரான். அவரும் இராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும் எனக் கூறினார். அதன்படியே தனது சிறந்த பக்தனான அனுமனிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கத்தை கொண்டு வர கட்டளையிட்டார். குறித்து நேரத்திற்குள் அனுமன் வர தாமதமானதால் அன்னை சீதா தேவி கடற்கரையில் உள்ள மணலில் ஒரு சிவலிங்கத்தை வடிவமைத்துக் கொடுத்தார். இராமபிரானும் குறித்த நேரத்தில் அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் அவருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் விலகியது. இராமபிரான் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமே இன்று இராமநாத சுவாமியாக ராமேஸ்வரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் எம்பெருமான்.
    இராமபிரான் கட்டளையை ஏற்ற அனுமான் கைலாச பர்வதத்திற்கு விரைந்து சென்றார். அங்கே சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு இராமேஸ்வரம் கடற்கரையை வந்தடைந்தார். அங்கே ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தை கண்டு கோபமுற்றார். தனது பலமிக்க வாலால் அடித்து அந்த சிவலிங்கத்தை பெயர்த்தெடுக்க முனைந்தார். ஆனால் அதை அசைக்கக் கூடி முடியவில்லை அனுமனால். இன்றளவும் எம்பெருமானின் சிவலிங்கத் திருமேனியில் அந்த வாலின் தடம் பதிந்திருப்பதை காணலாம். இதைக் கண்ட இராமபிரானும் அனுமானை சமாதானம் செய்து, தனது பக்தனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த சிவலிங்கமே இன்று விஸ்வநாதராக ராமநாதசுவாமி கோயிலில் காட்சி தருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்திற்கே முதலில் பூஜை நடைபெற வேண்டும் என கட்டளையிட்டார் ராமபிரான். இன்றளவும் அதன்படியே முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டு அதன் பின்பே இராமநாத சுவாமிக்கு பூஜைகள் நடைபெறுகிறது.
    இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். இராமநாத சுவாமி கோயில் 1212 தூண்கள், 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட பிரகாரத்தைக் கொண்டுள்ளது. இத்தலமானது மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்ற மூன்றுக்கும் கீர்த்தி பெற்றது. இத்தல இறைவனுக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுவாமியின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
    பக்தர்கள் முதலில் கடலில் தான் நீராட வேண்டும். அதன் பின் கோயில் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களிலும் பின் வரும் வரிசையில் நீராட வேண்டும்.
    1. மகாலட்சுமி தீர்த்தம் - செல்வ வளம் பெறலாம்.
    2. சாவித்திரி தீர்த்தம் - பேச்சாற்றலைப் பெறலாம்.
    3. காயத்ரி தீர்த்தம் - உலக நன்மைகள் உண்டாகும்.
    4. சரஸ்வதி தீர்த்தம் - கல்வியில் சிறந்து விளங்கலாம்.
    5. சங்கு தீர்த்தம் - வசதிகள் நிறைந்த வாழ்க்கை அமையும்.
    6. சக்கர தீர்த்தம் - மனோதிடம் பெறலாம்.
    7. சேது மாதவ தீர்த்தம் - காரியத் தடைகளை கடந்து வெற்றி பெறலாம்.
    8. நள தீர்த்தம் - அனைத்து தடைகளும் அகலும்.
    9. நீல தீர்த்தம் - எதிரிகள் தொல்லைகள் நீங்கும்.
    10. கவய தீர்த்தம் - பகை மறையும்.
    11. கவாட்ச தீர்த்தம் - கவலைகள் நீங்கும்.
    12. கந்தமாதன தீர்த்தம் - எந்தத் துறையிலும் வல்லுனர் ஆகலாம்.
    13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
    14. கங்கா தீர்த்தம் - பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
    15. யமுனை தீர்த்தம் - உயர் பதவிகள் வந்து சேரும்.
    16. கயா தீர்த்தம் - முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
    17. சர்வ தீர்த்தம் - எந்தப் பிறவியிலும் செய்திருந்த பாவங்கள் அகலும்.
    18. சிவ தீர்த்தம் - எல்லாவிதமான பிணிகளும் நீங்கும்.
    19. சத்யாமிர்த தீர்த்தம் - ஆயுள் விருத்தி பெறலாம்.
    20. சந்திர தீர்த்தம் - கலைகளில் ஆர்வம் உண்டாகும்.
    21. சூரிய தீர்த்தம் - எதிலும் முதன்மை ஸ்தானத்தை அடையலாம்.
    22. கோடி தீர்த்தம் - முக்தியை வழங்குகிறது.

ความคิดเห็น • 5