அகன்றவர் அன்றுடன் நன்றி கொல்லவார். அறம்பாடி சித்தர் பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • விமலனாய் அமலனாய் விழிப்பொடு காத்திடும் வெண்டலையானுடன் விண்ணுறை விட்டுவும் விட்டதோர் கமலனும் கண்விழும் அழகெழில் கவின்மிகு கந்தனும் கண்ணப்ப நாதனின் கானக தேவியும் என்னப்பனாகியே இன்முகவேழத்தை எடுத்த எம்மிறைவனும் பொன்னப்பனாகியே பொய்துயில் கொள்ளவோர் பூமெத்தையாக்கிட புயங்கமேற்றவன் முயங்கும் அமுதத்தின் மொத்த வடிவமும் அருங்கலை அனைத்தையும் பெருங்கொடையளித்திடும் பிரமனின் முதல்வியும் நமனது வருகையை நல்வரவாக்கியே நாறிடும் பாவியை நாடாதிருப்பரே. நஞ்சுறை நெஞ்சினர் நாளெலாம் துதித்துமே கண்டிட கண்கொடார் காதுடை செவிடென அண்டிடாதவருமே ஆயிரம் மறுமைக்கும் அகன்றவர் அன்றுடன் நன்றி கொல்வாரென நற்றமிழ் வார்த்த எம் நறுமுனிகூடத்தான் செப்பிய நன்னெறி செவிமலரேற்றிட நட்டதோர் வாக்கிது நலிவுற வாய்ப்பிலை நானிலமறியவே !
    🌸ஆதவன் முகமொத்த அண்ணல் அரும்பவே ஆழிசூழ் உலகெலாம் ஆன்றோர் அறனுடன் மாண்டோர் தயவுடன் மாண்புடை மாந்தர்கள் மாதவம் செய்ததால் மண்ணில் பிறந்திட மாதவன் இணங்கிட மார்புறை மலர்மகள் மனமொடு விரும்பியும் மாலனை அடைந்திடா மாதவள் அகன்றதோ மன்னவன் ஊழ்வினை மறுமையை நிறுவிட தென்னவன் பெற்றதோ தெய்வமாமுனிவனின் தீதுறு சாபத்தால் திடநிலை பெற்றவன் தீர்த்திட வேண்டித்தான் இம்மையின் பாவத்தை எடுத்து அணிந்திட்டான். இடரினை விரும்பித்தான் இத்தகு பிறப்பினை ஏற்றதன் காரணம் இருளுடை மேகமாய் எண்ணரும் மாயையுள் மானிடம் மீட்டிட மறுபடி திணித்ததால் மண்ணிற்குதவிட மறுமையே கிடைத்தது. அறநெறிக்குதவியே அழும் விழிதுடைக்கவே அமுதவன் அரும்புமுன்னாண்டிலே அடுஞ்சினம் அவனியெல்லாமுமே அதிர்ந்திட செய்யுமே. அனல் வயல் போர்த்திட அழுகுரல் கேட்குமே அறிந்திடு ஐயனே அயர்ந்தது போதுமே. அணிந்திடும் வீரத்தால் அனைத்தையும் வெல்லவே அணுவினில் உறங்கிடும் ஆணொடு பெண்ணுறை ஆணவப் பேரிறை அவனையும் அன்போடு அசைப்பவர் ஆரென அடுத்துடை சொற்களை அள்ளியே சூட்டுவேன். பிறையினை பணிந்தபின் பேரிறை பெருமையை பிளிறிடும் வாக்கு தான் பேறிலா வரத்துடன் பிழையொடு போகுமோ ? மறை சொலும் மாண்புடன் மனங்கொளும் நோன்பினை மதிப்பொடு முறிப்பவர் மன்னவன் குடக்கினில் மடிவது பெருகிடும். மனம்விழும் குமுறலால் மழலைகள் ஒலியினை மரணத்தின் வலியினை நெஞ்சினில் ஏந்திடா நேர்மை இலாதவர் வெந்தணல் வீசியே வேள்வியால் வதைப்பரே. வாதையின் மைந்தராய் வலம் வரும் கொடியவர் வாழ்ந்திடும் நாடது குருதியின் கடல்தனை கொண்டுதான் தென்படும் தென்பதம் தீதுற ஊன்றியே தென்றலின் திசையிலே தெள்ளுயிர் போவதை தெய்வந்தான் ஏற்குமோ ? பொங்கிடும் அல்லலை போக்கிடப் புகுந்தவன் பெயர்தனை பகர்ந்திட பின்வரும் பொருளிலே அவனது அடைமொழி அறிந்திட உதவுமே. புண்பட்டோர் நெஞ்சிலே புத்துயிரூட்டிட புதினமாய் புதைந்தவன் புதயலாய் மிகுந்தவன் பொல்லாருலகுக்குள் பொறி தழல் வீசிடும் புதிரென அமைந்தவன் வளவன் நிலத்திற்கு வடதிசை வாழ்பவன் வல்லரசொன்றையே வலிமையாய் ஆள்பவன் வான்படை வலுப்பெற வல்லூறே புறப்பட வான்மழை போலவே வன்கணை பாயச்சியே படுதுயர் பட்டழும் பலிகடா அனைத்தையும் பத்திரப்படுத்துவான். பனிபடர்ந்து தன் படை குவித்துமே குடை குனியா கொடியமைக்கவே உறுபகைவரை உருத்தெரியாமல் ஒழித்திக்கட்டிட உறுதியேற்றதால் எரிதழல்கணை எண்ணிலாமலே எய்து முடிப்பவன். இடர் தருபவர் இடம் முடித்திடும் இயல்பெடுத்தவன் மறை மறுப்பிலே மனம் சிறுத்தவன் தொடர் போரெழெ துயர் வேர்விட தொட்டில் கட்டுவான். குரலோங்கியே குணம் வீங்கிடும் குருதிப்புனல்நிற கடல் கொண்டதோர் கடுநிலமதன் தென்றலீன்றிடும் திருத்திசையிலே திரையடிக்குமோர் செழுநிலத்தினை சிதைத்து மகிழ்ந்திட சீறிப்பாய்ந்திடும் செங்கொடியவன் செய்த கொடுமையோ செயலில் புதுமையாய் சீர்திருத்திட அமைதிப்பூவனம் அகிலம் முழுமையும் அமைந்து மேம்படும். ஆறுமுனையினை அணிந்த கொடியினைஅமைத்த அவருமே அடங்கிப் போனபின் அகிலம்முழுமையும் அமைதி பிறக்குமே !
    🌸 குளிரம் குழிபறித்து குடிப்புக்கும் எண்ணமுற்று களிக்கும் போழ்தினிலே குள்ளநரிவந்து கொலையை கலையெனவே கொல்லும் திண்ணமுடன் வளைமுன் வந்து நின்று வாலை நுழையவிட்டால் நெளியும் இரையெனவே நினைத்து கடகம் கௌவி கொழிக்கும் கணப்பொழுதே மரிக்கும் தருணமேற்று மாளா காயப்பட்டு கண்ணீர் பெருக்கெடுக்கும் கதையை முடிப்பது போல் கயவர் பலரையுமே கற்கி களையெடுத்து கண்டம் தூய்மைப்படும் கடமை கடந்தபின்னம் காவியமேற்கவரும் கைத்தலப் பெருமை சொல்லும் காலமும் ஓயாது காதுகள் இசைக் கேட்டு கணமும் அகலாது கிட்டிய மட்டுமவன் கீர்த்தியும் அடங்காது. கொட்டிடும் முரசுடனே கூத்தனிவன் அருளோடு எம் கொற்றவன் புகழ் பாடும கொற்றவை கண்டேனே.

ความคิดเห็น • 6

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he 3 หลายเดือนก่อน +6

    ❤️ வாழ்த்துக்கள்.
    அறம்பாடி சித்தர் பாடல் 198.
    🌸 ஈரம் அகத்தில் இன்மையாயிருக்க இறுமாப்பு ஆங்கே வன்மையாய் மிதக்க தீரம் சிறக்க தேறுவதேது ? ஆரம் கழுத்தில் அலையென அடிக்க அன்பும் அறனும் அற்றே கிடக்க தூரம் அறிந்தே துரத்தும் ஈசனை துட்டர் தொலைத்தால் பழி யார் மீதோ ? நட்டம் என்றும் நாதனுக்கு இல்லை. நமனின் உலகே நட்டவர் எல்லை கெட்டும் திருந்தார் கேடு கெட்டோரே. கீழ்குலமாயினும் வீடு கிட்டும் கிட்டா பேறு கீர்த்தியுற்றும் கீழ்மையுற்றால் வற்றா பாவம் வளமிடுமோ ?
    🌸 தீயினும் கொடியோள் தீரம் பழுத்தும் திருவில் செழித்தும் தீதில் திளைத்தும் தீதறியா திருமார்பனுக்கு தீவினையாற்றிடவே திருந்தா சிறப்பமைத்து வருந்தா பிறப்பெடுத்து வாழும் வஞ்சகத்தால் வரையொத்த பாவமுடன் வானளவு பழியேற்று சிதைந்ததோர் சிரம் பட்டும் செம்மானுயிருக்கு பின்னமும் விலைவைத்தால் பெண்டில் பிணைந்திருக்கும் பிறைமுடி நாதனுமே விண்டுவை வீழ்த்தவந்தோர் விண்ணவரானாலும் வீணாய் விடுவானோ ! பார்த்திபன் முகம் வாட பாதகம் செய்ததனால் பாடையில் செல்ல வைக்கும் பரமனின் சாபத்தை பற்றிடாதிருந்திருந்தால் பைம்பொன் முடிசூட்டி தோரணம் ஆயிரமாய் தொட்டது துலங்கிடவே பட்டது பளிச்சிடவே நட்டது நற்பயிராய் நறுமணம் கமழ்ந்திடவே நாட்டவர் போற்றி நின்றே நயனம் நனைந்தவண்ணம் பயணம் முடித்த பின்னம் பரதக் கொடி போர்த்தி பாமரர் முதற்கொண்டு பணமுறு முதலைகளும் பணிந்தே வழியனுப்பி வருந்தி நிற்கின்ற வாய்ப்பையமைக்காது வஞ்சக மனம் படைத்து ஆணவச் சிறுக்கியென்றும் அன்பிலா அரக்கியென்றும் வைதல் வசைவாங்கி வானகமேறாத ஊழ்வினையேற்பதொன்றே உறுதிக்குறுதியென்ற உண்மையை உடைத்தவனே உலகை உடைமையாக்கி உமையொடு உறைந்தவனே !

  • @saranasri2694
    @saranasri2694 3 หลายเดือนก่อน

    என்னும் எத்தனைபேர.பைத்தியமாக்க திட்டம் இது ....

  • @சந்திரகாசம்_பாசுபதம்
    @சந்திரகாசம்_பாசுபதம்  3 หลายเดือนก่อน +1

    சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய
    chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD

  • @BalaDhandapani-u8g
    @BalaDhandapani-u8g 2 หลายเดือนก่อน

    சிவாயாநம

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏