திருக்குறுங்குடி நம்பி கோவில் பாதை மூடல் வனத்துறை அறிவிப்பு|Thirukurungudi Nambi Temple|Tirunelveli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • திருநெல்வேலி : 22 -05-2024
    திருக்குறுங்குடி நம்பி கோவில் பாதை மறு அறிவிப்பு வரும் வரை மூடல் என வனத்துறை அறிவிப்பு
    திருக்குறுங்குடி நம்பி கோவில் பாதை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறை இன்று (22-05-2024) அறிவித்துள்ளது.
    நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலை நம்பி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் .
    இங்கு மலை நம்பிக்கு சனிக்கிழமை தோறும் பூஜைகள் நடப்பது வழக்கம். அதிலும் தமிழ் மாத கடைசி சனிக்கிழமை நடக்கும் சிறப்பு பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு.
    இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் விடப்பட்ட கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக திருக்குறுங்குடி சூழல் சுற்றுலா மற்றும் நம்பி கோவில் செல்லும் மலை பாதை மூடப்பட்டது.
    இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நாளை முதல் மே 25 வரை மேற்கு தொடர்ச்சி மலையில் வனத்துறை சார்பில் யானைகள் கணக்கெடுக்கும் முகாம் நடைபெறுகிறது.
    இதனை அடுத்து கணக்கெடுப்பிற்கு இடையூறும் ஏற்படா வண்ணம் நம்பி கோவில் மலைக்கு செல்லும் வனத்துறை சோதனைச் சாவடி மூடப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறை அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
    மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மறு அறிவிப்பு வரும் வரை இப்பாதை திறக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதனால் நம்பி கோவில் செல்லும் பெருமாள் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    Thirukurungudi Nambi Temple
    திருக்குறுங்குடி நம்பி கோவில் பாதை மறு அறிவிப்பு வரும் வரை மூடல்.
    - வனத்துறை அறிவிப்பு

ความคิดเห็น • 3

  • @optimiztik
    @optimiztik 4 หลายเดือนก่อน

    Nanbarey Nambi kovil falls 30,31 may open aaguma ?

    • @opentalktamil7545
      @opentalktamil7545  4 หลายเดือนก่อน

      நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலுக்கு செல்ல இன்று (28-05-2024) முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

    • @optimiztik
      @optimiztik 4 หลายเดือนก่อน

      @@opentalktamil7545 ungal sevaikku mikka nandri 🙏🏼🙏🏼🙏🏼