கந்தர் அலங்காரம் செய்யுள் 91 - கருமான் மருகனை (திருச்செங்கோடு 6)
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப்
பொருமா வினைச்செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன்
தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே.
பதம் பிரித்த வடிவம்:
கருமால் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
வரும் ஆகுலவனைச் சேவல் கைக்கோளனை வானம் உய்யப்
பொரும் மாவினைச் செற்ற போர்வேலனைக் கன்னிப் பூகம் உடன்
தரு மா மருவு செங்கோடனை வாழ்த்துகை சால நன்றே.