பௌர்ணமி வழிபாடு முருகனுக்கு உகந்தது ஏன்? | Purnami day is auspicious |பௌர்ணமி முருகன் வழிபாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • பௌர்ணமி வழிபாடு முருகனுக்கு உகந்தது ஏன்?
    பௌர்ணமி தினத்தில் முருகன் வழிபாடு அதன் சிறப்புக்களும்:
    பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் தோன்றுவது ஆகும். இந்த நாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும்.அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாள் ஆகும்.
    பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள பழக்கமாகும். முருகப் பெருமான் அருளாட்சி செய்யும் கோயில்களில் அதுவும் கடல்சார்ந்த கோயில்களில் பெளர்ணமி வழிபாடு மிகவும் பிரசித்திபெற்றது திருச்செந்தூர் முருகன் கோயில். 'திருச்சீரலைவாய்' என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் முருகன் கோயில் இயற்கையோடு இயைந்த திருத்தலமாகும்.
    'பௌர்ணமி வழிபாடு' என்றாலே திருவண்ணாமலை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புள்ளதாகத் திகழ்ந்துவருகிறது. இப்போது திருச்செந்தூரிலும் பக்தர்கள் பெருமளவில் திரளத் தொடங்கியுள்ளனர்.
    இந்த நாளில் கோவில் சென்று வழிபடுவது நன்று. பெளர்ணமி நன்னாளில் முருகன் வழிபடுச்செய்தால் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
    பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள பழக்கமாகும். அறிவியல் ரீதியாகப் பார்த்தால், சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று சந்திரன் பிரதிபலிக்கிறது. பூமி, சூரியனைச் சுற்றி வருவதுபோல் சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது. பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியில் சந்திரனின் ஒளி முழுவதுமாக பூமிக்குக் கிடைக்கும் நாள் பௌர்ணமி.
    பௌர்ணமி முருகன் வழிபாடு வழிப்பாடும் நன்மையும்:
    ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் ஏதேனும் ஒரு விழா கொண்டாடப்படுகிறது.
    சித்திரை மாத பௌர்ணமி - சித்ரா பௌர்ணமி
    வைகாசி மாத பௌர்ணமி - வைகாசி விசாகம்
    ஆனி மாத பௌர்ணமி - சாவித்திரி விரதம்
    ஆடி மாத பௌர்ணமி - சாவித்திரி விரதம், கோபத்ம விரதம்
    ஆவணி மாதம் பௌர்ணமி - ரட்சா பந்தனம் ஆவணி அவிட்டம்
    புரட்டாசி மாதம் பௌர்ணமி - உமாமகேஸ்வர விரதம்
    ஐப்பசி மாதம் பௌர்ணமி - சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா
    கார்த்திகை மாதம் பௌர்ணமி - கார்த்திகை தீபத் திருவிழா
    மார்கழி மாதம் பௌர்ணமி - திருவாதிரை விரதம்
    தை மாதம் பௌர்ணமி - தைப்பூசம்
    மாசி மாதம் பௌர்ணமி - மாசி மகம்
    பங்குனி மாதம் பௌர்ணமி - பங்குனி உத்திரம்
    #murugandevotee #aanmeegam #முருகன் #murugan #murugantemple #murugansongs #murugan
    #pournami2024 #pournami #pournami2024 #பௌர்ணமி #பௌர்ணமிநாட்கள்2024 #purnima2024 #PournamiDates2024
    #ThiruvannamalaiGirivalamDates2024 #girivalam #girivalamheritagepath #murugandevotee #chitrapournami2024intamil #chitrapournami2024 #moon2024 #purnimakabhai

ความคิดเห็น •