குடவாசல் கோணேஸ்வரர் கோயில் | நமது தாய் நலமுடன் இருக்க வழிபட வேண்டிய தலம்|Kudavasal Koneswarar Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ส.ค. 2022
  • குடவாசல் கோணேஸ்வரர் கோயில்
    மூலவர் - கோணேஸ்வரர்
    அம்பாள் - பெரியநாயகி
    தலமரம் - வாழைமரம்
    தீர்த்தம் - அமிர்த தீர்த்தம்
    புராண பெயர் - திருக்குடவாயில்
    ஊர் - குடவாசல்
    மாவட்டம் - திருவாரூர்
    மாநிலம் - தமிழ்நாடு
    பாடியவர்கள் - சம்பந்தர்
    * தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 94வது தலம்.
    • கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்று இத்தலம். மேற்கு நோக்கிய இத்தலத்தை திருப்பணி செய்த கோச்செங்கட்சோழ மன்னன், மாடக்கோயிலாக கட்டினார்.
    • கருடன் தன மூக்கினால் புற்றை பிளந்து வெளிப்படுத்திய இறைவன் என்பதால் வன்மீகாசலேசர் , கருடாத்ரி ; சூரியன் வழிபட்டதால் சூரியேஸ்வரர் ; தாலப்பியமுனிவர் வழிபட்டதால் தாலப்பியேஸ்வரர் ; பிருகுமுனிவர் வழிபட்டதால் பிருகுநாதர் என்றெல்லாம் சிவனார் அழைக்கப்படுகிறார்
    • தாலப்பியமுனிவர் இத்தலத்தில் மந்தார மரத்தின் கீழ் தவஞ்செய்ததாக வரலாறு சொல்லப்படுகிறது
    • பிரளய காலத்தில் சிவனார் உயிர்களை குடத்திலிட்டு பாதுகாத்ததாகவும் , மீண்டும் படைப்புக்காலத்தில் வெளிப்படுத்தும்போது குடம் மூன்றாக உடைந்து , அடிப்பாகம் விழுந்த இடம் குடமூக்கு என்கின்ற கும்பகோணம் எனவும் , நடுப்பாகம் விழுந்த இடம் கலயநல்லூர் என்கின்ற சாக்கோட்டை எனவும் , குடத்தின் முகப்பான வாயிற்பாகம் விழுந்த இடம் குடவாயில் என்கின்ற குடவாயில் எனவும் விளங்குவதாக வரலாறு சொல்லப்படுகிறது
    • திருணபிந்து முனிவர் வழிபட்டு உடற்பிணி ( குஷ்டரோகம் ) நீங்கப்பெற்ற தலம்
    • இத்தலத்தைச் சுற்றி திருச்சேறை , கரவீரம் , பெருவேளூர் , தலையாலங்காடு , கடுவாய்க்கரைப்புத்தூர் , திருக்கொள்ளம்பூதூர் , நாலூர் மயானம் முதலிய தேவாரத் தலங்கள் அமைந்துள்ளன
    • கதலிவனம் , வன்மீகாசலம் என்றெல்லாம் அழைக்கப்படும் தலம்
    • சனிப்பிரதோஷம் மிகவிசேஷம்
    • சங்ககாலச் சிறப்பும் , பழமையும் வாய்ந்த தலம்
    • ராஜகோபுரம் இல்லை
    • பிரகாரத்தில் இடும்பன் , தண்டபாணி , கஜலட்சுமி , வீணை இல்லாத சரஸ்வதி , நவக்கிரகங்கள் , பைரவர் , சனைச்சரன் , சப்தமாதர்கள் முதலானோரின் சந்நிதிகள் உள்ளன
    • கஜலட்சுமி சந்நிதியை அடுத்து அமைந்துள்ள குடவாயிற் குமரன் சந்நிதி தனிச்சிறப்புடையது.
    * அருகருகே இரண்டு பைரவர் (ஒருவருக்கு நாய் வாகனம் இல்லை), சூரியன், சந்திரன் ஆகியோரும் உள்ளனர். இதில் சூரியன் அமர்ந்தும், சந்திரன் நின்ற கோலத்திலும் இருக்கிறார். பெற்றோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் சூரிய, சந்திரனை வழிபட்டு மன அமைதி பெறுகின்றனர்.
    • சண்டேஸ்வரர் சந்நிதி தனிக்கோயிலாக
    • நடராஜர் சபை அழகானது. நடராஜர் பீடத்தில் பண்டைய கால எழுத்துக்களால் ஆன சொற்றொடருக்கு மத்தியில் அடியவர் ஒருவர் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார்
    • காசி விஸ்வநாதர் சந்நிதி சிவலிங்கத் திருமேனி செந்நிறமாக திருக்காட்சி
    • மூலவர் கம்பீரமான திருமேனியராக , சதுர பீடத்துடன் , திருமேனியில் கருடன் தீண்டி வழிபட்ட சுவடுகளுடன் மேற்கு நோக்கியும் , அம்மை நின்ற கோலத்தில் தெற்கு நோக்கியும் திருக்காட்சி தருகின்றனர்
    • இத்தலத்தில் உள்ள ஏகபாத மூர்த்தி திருவடிவம் அற்புதமான கலையழகு நிறைந்தது.
    * இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
    * கோயிலுக்கு எதிரே வெளியில் அமுத தீர்த்தம் உள்ளது. இதன் கரையில் சுவாமி சன்னதி பார்த்தபடி "ஆதி கஜாநநர்' என்று அழைக்கப்படும் விநாயகர் இருக்கிறார். சுவாமி சன்னதியில் இருந்து வெளியில் பார்க்கும்போது, இந்த விநாயகரின் விமான கலசம் தெரியும்படியாக கோயில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். மாசி மகத்தன்று சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் அமுத தீர்த்தத்திற்கு எழுந்தருளி, தீர்த்தநீராடுகின்றனர்.
    * இக்கோயிலுக்குள் நுழைந்ததும் வலது புறத்தில் "அனுமதி விநாயகர்' சன்னதி இருக்கிறது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பிறகே சிவனை வழிபடச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். எனவே இவருக்கு இப்பெயர். இதுதவிர பிரகாரத்தில் "மாலை வழிபாட்டு விநாயகர்' என்ற விநாயகரும் இருக்கிறார். சாயரட்ச பூஜையில் இவருக்கே முதல் பூஜை செய்யப்படுவதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இதுதவிர, இரட்டை விநாயகர் சன்னதியும் உள்ளது.
    • அம்மையே பிருகத்துர்க்கையாக வழிப்படப்படுவதால் துர்க்கைக்கென்று தனி சந்நிதி இல்லை
    • மாசிமகத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது
    * சுவாமிக்கு அமுதலிங்கேஸ்வரர் என்றும், புற்றிற்குள் இருந்ததால் "வன்மீகநாதர்' என்றும் பெயர்கள் உண்டு.
    * கோயில் நுழைவு வாசல் எதிரே காசி விஸ்வநாதர் காட்சி தருகிறார்.
    • புறநானூறு மற்றும் அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான தலம்
    • ஜடாயு , அக்னி , சூதமகரிஷி , பிருகுமுனிவர் முதலானோர் வழிபட்டு அருள்பெற்ற தலம்
    * மாசிமகத்தில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருவாதிரை, பங்குனி உத்திரம் முதலான உற்சவங்கள் நடைபெறுகின்றன
    * தை மாதத்தில் 3 நாட்கள் சிவனார் மீது சூரிய ஒளி விழுகிறது
    * தாயின் ஆசைகளை நிறைவேற்றி வைக்காமல் வருந்துபவர்கள் இங்கு சிவனை வேண்டி, மன அமைதி பெறுகிறார்கள். புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். திருமணதோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சையில் நெய் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
    * திருஞானசம்பந்தர், "எழில்கொள் மாடக்கோயில்' என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். உயரமான இடத்தில் இருந்து சிவனார் காட்சி தருவதால், இத்தலத்தை "சிறிய கைலாயம்' என்றும் சொல்கிறார்கள்.
    தரிசன நேரம்
    காலை 06:00 am - 12:00 pm &
    மாலை 04:00 pm - 08:30 pm
    அமைவிடம்
    திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் குடவாசல் உள்ளது.
    கோயில் Google map link
    SCN094 - Kudavasal Koneswaran Shiva TEMPLE, Padal Petra Temple
    maps.app.goo.gl/ZGrxkhGG37wGB...
    if you want to support us via UPI id
    k.navaneethan83@ybl
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 43

  • @rajeshwari9924
    @rajeshwari9924 4 หลายเดือนก่อน +1

    இவ்வளவு சிறப்பு பெற்ற மிகவும் மகிமையான கோவில் எந்த ஒரு பராமரிப்பும் பெரிதளவில் இல்லாமல் இருப்பதுதான் மனதுக்கு வருத்தம்

  • @madhesh294
    @madhesh294 ปีที่แล้ว +5

    எங்கள் ஊர் குடவாசல் 🕉️ ஓம் நமச்சிவாய 🙏

  • @shanmugampalaniyappan8659
    @shanmugampalaniyappan8659 ปีที่แล้ว +5

    அருமையானவிளக்கம்

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +3

    எங்கள் ஊர் கோயில் வெகுசிறப்பாக பதிவிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் சார் 🙏🙏🙏

    • @kulaitaivelk2586
      @kulaitaivelk2586 9 หลายเดือนก่อน

      நாங்கள் நேரடியாக பார்த்த மாதிரி யாக‌உள்ளது உங்கள் வார்த்தை கள்‌மிகவும்‌சிறப்பாக உள்ளது ‌வாழ்க‌வழமடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +2

    அமிர்த தீர்த்தம் பற்றிய உங்கள் விளக்கம் 👌 சிறப்பான பதிவு சார் வாழ்க வளமுடன் சார் 🙏 🙏🙏🌷

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏🌿🌻சிவ சிவ🍁🌷🌺திருச்சிற்றம்பலம் 🌿🙏

  • @vijaykathirvel8988
    @vijaykathirvel8988 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா உங்களுடைய விளக்கம் அருமையாக இருந்தது

  • @muralikrishna-zt6rv
    @muralikrishna-zt6rv ปีที่แล้ว

    Superb Sir. Thank u so much

  • @kalaivanis9122
    @kalaivanis9122 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @manip421
    @manip421 ปีที่แล้ว +1

    ஒம் நம் சவாய நம

  • @RameshRamesh-ee7dr
    @RameshRamesh-ee7dr 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏♥🌹🌸🌺🌼💐

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 ปีที่แล้ว

    Thanks for sharing ji 🙏🙏

  • @kalavathis1483
    @kalavathis1483 ปีที่แล้ว

    ரொம்ப சிறப்பாக இருந்தது வீடியோ அமிர்ந்த தீர்த்தம் பற்றிய தகவல்கள் அருமை

  • @kalaivanis9122
    @kalaivanis9122 ปีที่แล้ว

    வெகு சிறப்பாக இருந்தது உங்களது விளக்கம் 👌👌👌🙏🙏👌👌

  • @umaganesan9460
    @umaganesan9460 ปีที่แล้ว

    SUPER THANKS

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว

    அருமையான ஸ்தல விளக்க ம்,
    தரிசிக்க வேண்டிய முக்கியமான ஸ்தலம். ஈசன் அருள் புரியட்டும்.
    ஓம் நம சிவாய...from, "வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,....நன்றி....

  • @mahamaha-bv9yz
    @mahamaha-bv9yz ปีที่แล้ว

    Thanks my TK

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 11 หลายเดือนก่อน

    0mnamo SHIVAYA SHIVAYA namaha. Om Garuda bhaghavane pottri Potri.

  • @user-sl9rk8pc1y
    @user-sl9rk8pc1y ปีที่แล้ว

    Thanks

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal61119 ปีที่แล้ว

    nice...

  • @jaisankarparamasivam7379
    @jaisankarparamasivam7379 ปีที่แล้ว

    சிவ சிவ திருட்சிற்றம்பலம்
    நின்றி

  • @radhakrishnanvenkatesan7532
    @radhakrishnanvenkatesan7532 11 หลายเดือนก่อน

    Great & thanks for the details

    • @mathina
      @mathina  11 หลายเดือนก่อน

      My pleasure

  • @user-gn3zo3zb7f
    @user-gn3zo3zb7f 5 หลายเดือนก่อน

    Good one. The lady devotee voluntarily was trying to say something at 6:48, you could have added the details I think maybe the same devotee was again trying to add some more details at 11:04 when Gurukal was giving the details. Appreciate the Devotee also. Thank you very much

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram ปีที่แล้ว

    Om nama sivaya

  • @umamaheswari604
    @umamaheswari604 7 หลายเดือนก่อน

    🙏🙏

  • @keerthikamurugan7526
    @keerthikamurugan7526 ปีที่แล้ว +1

    Kudavasal aruge ulla Thaduthalkondapuram ennum gramathil Sri Kasi visvanathar vishalatchi perasipetra Kovil ullathu

  • @vicky.k8258
    @vicky.k8258 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @happyworldtravels3235
    @happyworldtravels3235 หลายเดือนก่อน +1

    Will any body present. ThiruVellaKulam,,Annam,Perumal,,temple .to Seniors like me who cannot visit there .,tq

    • @mathina
      @mathina  หลายเดือนก่อน

      Already our channel done Thiruvellakulam Annan koil please click the below link to watch
      th-cam.com/video/wVMkzQDmpLc/w-d-xo.html

  • @sambathkumar8564
    @sambathkumar8564 ปีที่แล้ว

    Intha vedio parkupoluthu ippa than parkiren two karudan veetu munnadi parunthukondirukirathu now

  • @annamalaik4237
    @annamalaik4237 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்

  • @user-sc3dh8sh3q
    @user-sc3dh8sh3q 9 หลายเดือนก่อน

    ௮௹மை௮ண்ணா

  • @chandru.schandru.s9874
    @chandru.schandru.s9874 ปีที่แล้ว

    Kadasivaraikum Amma nalamudan irukka intha Kovil vu yen varanum nu sollave illa

    • @mathina
      @mathina  ปีที่แล้ว

      கருடன் இந்த தலத்தில் வழிபட்டு தனது தாயின் அடிமைத்தனம் நீக்கிய தலம் இந்த தலத்தில் வழிபட கருடன் எப்படி தனது தாயை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு நலமுடன் காத்தாரோ அதேபோல் இந்த தலத்தில் வழிபட நமது தாய் நலமுடன் இருப்பர் பதிவில் சொல்லப்பட்டுள்ளது

    • @GoogleBusinessAccount-mw2sr
      @GoogleBusinessAccount-mw2sr 9 หลายเดือนก่อน

      Oru Thai thanudaiya pilaikalai ilakamal iruka valibada vendum. Sabam pokum

  • @rangarajmarimuthu5339
    @rangarajmarimuthu5339 11 หลายเดือนก่อน

    தஞ்சாவூரில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளதா என்பதை அன்பர்கள் யாரேனும் தெரியப்படுத்தவும்

    • @mathina
      @mathina  11 หลายเดือนก่อน +1

      தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருக்கருக்காவூர் வலங்கைமான் வழியாக குடவாசல் செல்ல குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து உள்ளது.ஆனால் கும்பகோணம் மற்றும் பாபநாசத்தில் இருந்து குடவாசல் செல்ல நிறைய பேருந்து வசதி உள்ளது.

    • @GoogleBusinessAccount-mw2sr
      @GoogleBusinessAccount-mw2sr 9 หลายเดือนก่อน +1

      Tanjore to kumbakonam. Kumbakonam to thiruvarur. All time bus undu. Nama area temple area. Don't feel

    • @thiruvarurthiyaharajan1158
      @thiruvarurthiyaharajan1158 7 หลายเดือนก่อน +1

      தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் கொரடாச்சேரி என்ற இடத்தில் இறங்கி ஷேர் வேன் மற்றும் பஸ் வசதி உள்ளது

    • @mathina
      @mathina  7 หลายเดือนก่อน +1

      தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் திருக்கருக்காவூர் வழியாக குடவாசல் செல்ல பேருந்து வசதி உள்ளது. பாபநாசம் மற்றும் கும்பகோணத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது