76. Arudra Darshan Song ஆருத்ரா சிறப்பு பாடல்
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025
- Part -1 1,2,3,4.
1. மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ,
மறை நான்கின் அடி முடியும் நீ....
மதியும் நீ ,ரவியும் நீ ,புனலும் நீ ,அனலும் நீ,
மண்டலம் இரண்டேழும் நீ......
பெண்ணும் நீ ,ஆணும் நீ, பல்லுயிர் குயிரும் நீ,
பிறவும் நீ ,ஒருவன் நீயே......
பேதாதி பேதம் நீ ,பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே.......
பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ ,ஒளியும் நீ
போதிக்க வந்த குரு நீ......
புகழெணா கிரகங்க ளொன்பதும் நீ ,இந்த
புவனங்கள் பெற்றவனும் நீ.......
என்னறிய ஜீவகோடிகளீன்ற அப்பனே
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ.......
ஈசனே சிவகாமி நேசனே
யெனை யீன்ற தில்லைவாழ் நடராஜனே...(2)
2. மானாட மழுவாட, மதியாட புனலட,
மங்கை சிவகாமி ஆட....
மாலாட, நூலாட, மறையாட, திரைய,
மறைதந்த பிரம்மனாட......
கோனாட வானலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட
குண்டலமே இரண்டாட தண்டை. புலியுடையாட குழந்தை முருகேசனாட
ஞான சம்பந்தரோடு இந்திரா பதினெட்டும்,
முனியட்ட பாலர் ஆட....
நரைத் தும்ப எருகாட நந்தி வாகனமாட,
நாட்டியப் பெண்கள் ஆட.......
வினையோட உனைப் பாட யெனைநாடி
இதுவேலை விருந்தோடு ,ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
யெனை யீன்ற தில்லைவாழ் நடராஜனே(2)
3. கடல் என்ற புலி மீதில் அலை என்ற
உரு கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி...
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலீலே,
கட்டுண்டு நித்தம் நித்தம்.....
உடலென்ற கும்பிக்கு உனைவென்ற இரைத்தேடி
ஓயாமல் இரவும் பகலும்.....
உண்டுண்டு உறங்குவதை கண்டதே அல்லாது
ஒரு பயனடைந்தி லேனே.....
தடம் என்ற மிடிகரையில் பந்த பாசங்களென்றும்
தாபம் பின்னலிட்டு......
ஈசனே சிவகாமி நேசனே
எனை யீன்ற தில்லைவாழ் நடராஜனே(2)
4. பம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம்
தம்பனம் வசியமல்ல....
பாதாள வஞ்சனம் பாரகாய பிரவேச மதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியும் மந்திரம் அல்ல ,ஆகாயக் குலிகை அல்ல
அன்போடு செய்கின்ற வாத மோடிகளல்ல
அரிய மோகனமும் அல்ல
கும்பமுனி, மச்சமுனி, சட்ட முனி ,
ப்ரம்மரிஷி, கொங்கணர் புளிப்பாணியு
கோரகர், வள்ளுவர் போகிமுனி இவரெல்லா
கூறிடும் வைத்தியம் அல்ல......
என் மனதுன் அடிவிட்டு நீங்காது நிலை நிற்க
யேது உலவு புகழ வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
யெனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே
Next 5,6,7,8
சிவமயம்#