எங்கள் அன்புயிர் அப்பா..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ค. 2024
  • 14-ம் ஆண்டு நினைவேந்தல் தினம் (30-05-2024)..
    எங்கள் அன்புயிர் அப்பா..
    சேலம் அருகில் உள்ள சேசன்சாவடி
    என்ற கிராமத்தில்
    விவசாயக்குடும்பத்தில் பிறந்து
    ஒரு வயதுக்குள்ளாகவே தாய் தந்தையரை இழந்து,
    உற்றார் சிலர் உதவியால்
    சேலம் மாநகருக்கு வந்து,
    நெசவாளியாக, ஓவியராக,
    வணிகராக,
    தன்னை நெறிப்படுத்திக்கொண்ட
    பகுத்தறிவுவாதியாக
    17 வயதிலேயே திராவிட இயக்கத்தில்
    தன்னை ஒப்படைத்துக் கொண்டு
    தீவிரமாய் சமூகப்பணியாற்றி
    அதன் விளைவாய்,
    1969-ல் சேலம்நகரில் மிக அதிக
    வாக்குகள் வித்தியாசத்தில்
    நகரமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டு
    ஒரு வியாபாரி எப்படி ஒரு
    தூய்மையான அரசியல்வாதியாகவும்
    வாழ்ந்து திட்டமிட்டு மக்களுக்கு
    பணியாற்ற முடியும்
    என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்து ,
    பத்திரிக்கையாளராக,
    அரசியல்வாதியாக,
    சமூகதலைவராக,விளம்பரத்துறை
    வல்லுனராக,
    தமிழ்சங்க நிர்வாகியாக,
    தொழிலதிபராக,
    மக்கள் தொடர்பில் தவிர்க்க முடியாத சக்தியாக,
    இப்படி செயல்பட்ட துறைகள்
    அனைத்திலும் நேர்மையான
    கடின உழைப்பையே மூலமாய் வைத்து செயல்பட்டு
    மாபெரும் வெற்றியாளராய் வாழ்ந்து,
    வளரும் இளைய சமூகத்திற்கு முன்
    ஏராய் பயணித்து வழி காட்டிக்கொண்டு இருப்பவர்
    எங்கள் அப்பா
    ‘உழைப்பின் மறு உருவம்’
    ஈசன் துரைசாமி அவர்கள்...
    அவரின் வழித்தோன்றலாக நாங்கள் வாழ்வதிலும் ,
    அவர் வழி நடப்பதிலும்
    மிகப்,மிகப்பெருமை கொள்கிறோம்.
    நெகிழ்ந்த ஈர நினைவுகளோடு ...
    ஈசன் இளங்கோ
    49,என்-2,புதுத்தெரு சாலை
    அம்மாப்பேட்டை மெயின் ரோடு,
    சேலம் -1
  • บันเทิง

ความคิดเห็น •