🔴வலிமையற்ற தோளினாய் போ போ போ | Bharathiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • வலிமை யற்ற தோளினாய் போபோபோ
    மார்பிலே ஒடுங்கினாய்போபோபேர்
    பொலிவிலா முகத்தினாய்போபோபோ
    பொறியிழந்த விழியினாய் போபோபோ
    ஒலியிழந்த குரலினாய்போபோபோ
    ஒளியிழந்த மேனியாய்போபோபோ
    கிலிபிடித்த நெஞ்சினாய்போபோபோ
    கீழ்மையென்றும் வேண்டுவாய் போபோபோ
    இன்று பாரதத்திடை நாய்போல்
    ஏற்ற மின்றி வாழுவாய் போபோபோ
    நன்றுகூறில் அஞ்சுவாய்போபோபோ
    நாணிலாது கெஞ்சுவாய்போபோபோ
    சென்றுபோன பொய்யெலாம் மெய்யாகச் சிந்தைகொண்டு போற்றுவாய்போபோபோ
    வென்றுநிற்கும் மெய்யெலாம் பொய்யாக விழிமயங்கி நோக்குவாய் போபோபோ
    வேறுவேறு பாஷைகள் -கற்பாய்நீ
    வீட்டுவார்த்தை கற்கிலாய்போபோபோ
    நூறு நூல்கள் போற்றுவாய் -மெய்கூறும் நூலிலொத் தியல்கிலாய் போபோபோ
    மாறுபட்ட வாதமே ஐந்நூறு
    வாயில்நீள ஓதுவாய் போபோபோ
    சேறுபட்ட நாற்றமும் -- தூறுஞ் சேர்
    சிறிய வீடு கட்டுவாய் போபோபோ
    ஜாதி நூறு சொல்லுவாய்போபோபோ
    தரும மொன் றியற்றிலாய் போபோபோ
    நீதி நூறு சொல்லுவாய் -- காசென்று
    நீட்டினால் வணங்குவாய் போபோபோ
    தீது செய்வ தஞ்சிலாய்-நின் முன்னே
    தீமைநிற்கி லோடுவாய் போபோபோ
    சோதி மிக்க மணியிலே - காலத்தால்
    சூழ்ந்த மாசு போன்றனை போபோபோ
    #bharathiyar #bharathiyarquotes
    #bharathi #bharathiyarkavithaigal #bharathiyar_varigal #bharathikannamma #bharathiyarsong #bharathiar #bharathiyarkavithai #bharathiyarquotesareinspiring #kadavulbharathi #bharathiyarmedia #bharathiyarkavithaigalismyinspiration🔥 #bharathilove #bharathians #bharathi #tamilan #ajithbharathi #tamil #kavithaigal #bharathistatus #mahakavi #bestpoems

ความคิดเห็น • 4

  • @vasuvikram5439
    @vasuvikram5439 3 ปีที่แล้ว +2

    I'm the 1st comment and i want full meaning pls pogindra bharathamum varugindra bharathamum pls apload the meaning pls🙏🙏🙏

    • @Ajithbharathi
      @Ajithbharathi  3 ปีที่แล้ว +1

      இணையத்தில் பொருள் இல்லை ! உங்களுக்காக நானே தயாரித்து கண்டிப்பாக சொல்கிறேன் 🖤💯

    • @Ajithbharathi
      @Ajithbharathi  3 ปีที่แล้ว +1

      போகின்ற பாரதம் என்று பாரதி யாரையெல்லாம் சபிக்கிறான் என்றால்..
      தோளில் வலிமையற்றவர்கள்
      ஒட்டிய நெஞ்சு உடையோர்
      முகப்பொலிவு இல்லதோர்
      விழியில் வீரம் அற்றோர்
      மேனியில் ஒளி இல்லதோர்
      அச்சமுடைய நெஞ்சமுடையோர்
      கீழ்மை யேற்று கொண்டோர்...
      அவர்களை போ போ போ என்றும் விரட்டுகிறார்..
      அவர்கள் நாய் போல் எந்த முன்னேற்றமும் இன்றி வாழ்வார்கள் எனவும் சபிக்கிறார்...
      நல்லது உரைத்தாலும் அச்சம் கொள்பவர்கள் ,
      வெட்கமின்றி கெஞ்சிக் கிடக்கும் குணம் கொண்டோர்..சொல்லி வைத்த பொய்யெல்லாம் மெய் என்றும்... வென்று நிற்கும் மெய் எல்லாம் பொய் எனவும் மதியின்றி நம்புபவர்களை நினைத்து வேதனையில் சபிக்கின்றார்...அவர்களை போ போ போ என்றும் விரட்டுகிறார்..
      தாய் மொழி கல்லாமல் பல மொழி கற்றும் பயனில்லை எனவும்.. 100 நூல்கள் படித்தாலும் உண்மை கூறும் ஒரு நல்ல நூலை போற்ற மறுப்பாய்...ஆனால் வீணாக வாதம் செய்வாய்....நீ சிறிய வீட்டுக்குள் கிடப்பாய் எனவும் அவர்களை போ போ போ என்றும் விரட்டுகிறார்..
      சாதி வேற்றுமைகள் சொல்வோரை தருமம் காக்க தெரியாதோர் என்கிறார்.. காசுக்காக நீதி மாறி பேசுவோரை , தீமை செய்ய கூசாமல் , தீமை நடக்கும் போது அதை கண்டு அஞ்சுவோரை போ போ என விறட்டுவதொடு..... அவர்களை நல்ல மணியின் மேல் காலம் போக போக படியும் தூசி என்று கடுமையாக சொல்கிறார் பாரதி.... 🖤🖊

  • @vasuvikram5439
    @vasuvikram5439 3 ปีที่แล้ว +1

    Sir meaning veanum sir pls 🙏🙏🙏🙏🙏