கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் | திருமண தடை நீக்கும் கல்யாண துர்க்கை | பரசுராமர் வழிபட்ட தலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 เม.ย. 2024
  • தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
    ஆலந்துறையார் திருக்கோயில் கீழப்பழுவூர்
    சயன கோலத்தில் பரசுராமர் உள்ள தலம்
    (55/274)
    சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமையப்பெற்றுள்ள 63 - தலங்களுள் 55- வது தலமாகப் போற்றப் பெறுகின்றது.
    மூலவர் : ஆலந்துறையார் என்கின்ற வடமூலேஸ்வரர்
    அம்பாள் : அருந்தவநாயகி
    தலமரம் : ஆலமரம்
    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம். (கோவிலுக்கு எதிரிலேயே அமைந்துள்ளது.)
    ஊர்: கீழப்பழுவூர்
    மாவட்டம்: அரியலூர்
    கோவில் அமைப்பு
    கிழக்கு நோக்கிய ஆலயம்.
    கோவிலுக்கு எதிரிலேயே குளம் அமையப் பெற்றுள்ளது.
    அம்பாள் சந்நிதி தனியாக இருக்கின்றன.
    அர்த்த மண்டபச் சுவரையொட்டி காலசம்ஹாரர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாணசுந்தரர், கங்காளர், பைரவர் ஆகியோர் திருமேனிகள் இருக்கின்றன.
    தென்புறத்தாலிருக்கும் மேடை மீது அறுபத்து மூவர்கள், திரிபுராந்தகர், ரிஷபாருடர் ஆகியோரின் உற்சவத் திருமேனிகளும் இருக்கின்றன.
    பிரகாரத்தில் நுழைந்தால், துர்க்கை, அப்பர், சம்பந்தர், விநாயகர், வீரபத்திரர், சப்தமாதாக்கள் ஆகியோரின் திருமேனிகளும் உள்ளன.
    கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை போன்றோர்களும் இருக்கின்றார்கள். கயமுகசூரனை அழித்த பின்னர் இங்கு வந்த விநாயகரை நிருத்த விநாயகர் என அழைக்கப்படுகின்றார்
    மருதுடையார் ஆற்றின் தென்பகுதியில் கிழக்கு நோக்கியதும், ஐந்து நிலை இராஜ கோபுரமும், இரண்டு பிரகாரங்களுடன் கோவில் அமையப் பெற்றிருக்கிறது. அம்பிகை தவமிருந்து யோகம் செய்த காரணத்தினால் இவ்விடத்தை யோகவனம் எனவும் கூறப்படுகிறது.
    சுவாமி சந்நிதியின் வலது பக்கமாய் ஒற்றைக்காலில் நின்று தழம் செய்யும் கோலத்தில் அம்பிகையின் திருவுருவம் விளங்குகின்றது.
    தல சிறப்பு
    பரசுராமர் தன் தாயைக் கொன்ற பழியை தீரும் பொருட்டு வழிபட்ட தலம் இதுவாகும்.
    மூலவர் முன்னாலுள்ள மேல் உத்திரத்தில் பரசுராமரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
    தனிச் சந்நிதியில் அருளும் அம்பிகை அருந்தவ நாயகி, இறைவனின் யோகவனேஸ்வரர் என்ற பெயருக்குக் காரணமும் இவள்தான்.
    தாம்பத்ய சங்கரர், அர்த்தநாரீஸ்வரர் இருப்பதால் குடும்ப ஒற்றுமைக்கு அருளும் தலம்.
    காலசம்ஹார மூர்த்தி இருப்பதால் திருக்கடையூருக்கு நிகரான.எமபயம் தீர்க்கும் கோவில்.
    பிராத்தனை
    அம்பிகை தவம் செய்து இறைவனை மணந்துகொண்டதால், இத்தலம் வந்து தொழுவோர்க்கு திருமணத் தடை இருப்பின், திருமணத்தடை அகலும்.
    பரசுராமரின் வேண்டுதலுக்கேற்ப சகல தேவர்களும் இங்கே சூட்சும ரூபமாக உறைவதால் இங்கு வந்து வழிபட்டால் சகல செல்வமும் சேரும் என்பது உறுதியான நம்பிக்கை விளங்கி வருகிறது.
    சுற்றுப் பாதையில் செல்லும் போது, சப்த மாதர்களையும், அருகே வீரபத்திரரையும் தரிசிக்க முடியும்.
    மிகவும் பழமையானதான மருத்துவக் குடி பஞ்சாங்கம் இத்தலத்தை ஆதிகுரு ஸ்தலம் என்றும், இங்கு அமர்ப்திருக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிப்பவர் கல்வியும், செல்வமும் பெறுவர்.
    தல வரலாறு
    மூவர், முனிவர், முக்கோடி தேவர்கள் எல்லாம் இருக்கும் இடம் இந்தக் கீழப்பழுவூர்.
    இறைவன் நாட்டான்மை ஸ்தானம் கொண்டு தீர்ப்பு சொன்ன தலம்.
    சிவன் தலைவர் என்றால் ஊர்மக்கள் தேவர்களும, முனிவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்கள்.
    கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர்.
    அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன், என்றார்.
    அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த #அம்பிகை என்பதால் அம்பாள் அருந்தவநாயகி எனப்படுகிறாள்.
    தாய் செய்த தவறுக்காக தந்தையின் சொல் படி மகனான பரசுராமன் தாய் ரேணுகாஜதேவியை கொன்றதனால் மாத்ருஹத்தி தோஷம் பீடித்தது.
    தந்தே ஜமதக்னி முனிவரின் வரத்தின்படி தாய் ரேணூகா தேவி மீண்டும் உயிர் பெற்றார்.
    இருப்பினும் மாத்ருஹத்தி தோஷம் பீடித்ததால் பல தலங்களுக்குச் சென்று இறைவனை வணங்கியும், தோஷம் நீங்கப்படவில்லை.
    பின் இத்தலத்திற்கு வந்து ஆலமரத்தின் கீழிருந்த புற்று லிங்கத்தை வணங்கியதும் மாத்ருதோஷம் விலகியதை உணர்ந்தார்.
    திருவிழாக்கள்
    பங்குனியில் நடைபெறும் விழாவில் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள ஜமதக்னி முனிவருக்குக் காட்சி தரும் ஐதீக விழா நடைபெறும்.
    அமைவிடம்
    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் தஞ்சாவூரில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் கீழபழுவூர் உள்ளது.
    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், லால்குடி, கும்பகோணம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் சேலம்(சேலம்_தஞ்சாவூர் வழி ஆத்தூர், பெரம்பலூர், அரியலூர்) போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
    அஞ்சல் முகவரி
    அருள்மிகு. வடமூலேஸ்வர் திருக்கோயில்.
    கீழப்பழுவூர் & அஞ்சல் -621 707
    அரியலூர் வட்டம்- மாவட்டம்.
    ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
    +91 9677559676
    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    +91 7994347966
    கோயில் Google Map Link
    maps.app.goo.gl/JZSxNg2SDGfHY...
    வழுவூர் வீரட்டானேஸ்வரர் கோயில் தரிசனம்
    • செய்வினையிலிருந்து நம்...
    if you want to support us via Google pay phone pay paytm
    9655896987
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 18

  • @Radha95119
    @Radha95119 2 หลายเดือนก่อน +1

    Thanks

  • @user-sl3ov9gs4n
    @user-sl3ov9gs4n 8 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @priyashiva8334
    @priyashiva8334 หลายเดือนก่อน

    Nandrigal sago

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 หลายเดือนก่อน +1

    🙏🌹சிவாய நம🙏🙏🌹🙏🙏❤❤❤❤❤❤

  • @geetha-1165
    @geetha-1165 2 หลายเดือนก่อน

    Tku we are blessed to see so many temples by ur channel since we can't go to all the temples and don't know about the thala varalaru of the temples

  • @aruncdm
    @aruncdm 3 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி நன்றிகள் 😊 🙏🙏🙏

  • @d.thumilan3985
    @d.thumilan3985 3 หลายเดือนก่อน

    Super sir 😊😊😊

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 3 หลายเดือนก่อน

    Super sir 1

  • @PowerRangerIND
    @PowerRangerIND หลายเดือนก่อน +1

    Bairavar pakathula iruka god name please

  • @venkataramanv8809
    @venkataramanv8809 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவயா &

  • @PowerRangerIND
    @PowerRangerIND หลายเดือนก่อน

    Sanni guru, guru ketu,or sanni chandran direct to direct pakura sannidhi iruka kovil pathurukingala

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 3 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @SaranD-cv8nk
    @SaranD-cv8nk 3 หลายเดือนก่อน

    How to reach thirumazhapadi from keezhapazhuvur temple?

    • @mathina
      @mathina  3 หลายเดือนก่อน

      Keezhapalur to Thirumanur travel from Ariyalur to Thanjavur bus after reaching Thirumanur Travel Thanjavur to pullambadi bus you reach thirumalapadi

  • @user-up1ni3vo3k
    @user-up1ni3vo3k 3 หลายเดือนก่อน

    Enga area anna

  • @user-up1ni3vo3k
    @user-up1ni3vo3k 3 หลายเดือนก่อน

    Na athigama povan

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 หลายเดือนก่อน

    🙏🌹சிவாய நம🙏🙏🌹🙏🙏❤❤❤❤❤❤