தொட்டியம் அனலாடீஸ்வரர் கோயில் | நோய் தீர்க்கும் ஈஸ்வர தீர்த்தம் | திருமண தடை நிவர்த்தி தலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2024
  • தொட்டியம் அனலாடீசுவரர் திருக்கோயில்
    மூலவர்: அனலாடீஸ்வரர்
    அம்பாள் : திரிபுரசுந்தரி
    தீர்த்தம்: ஈஸ்வர தீர்த்தம்
    தலவிருட்சம்: வில்வம்
    புராண பெயர்: துவஷ்டபுரி, திரிபுரசம்ஹார ஷேத்திரம்
    ஊர்: தொட்டியம்
    மாவட்டம்: திருச்சி
    திருச்சி மாவட்டம், தொட்டியம் நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அனலாடீசுவரர் திருக்கோயில், துன்பங்களை நீக்கி நன்மைகளைப் பெருக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கின்றது. மேலும் சப்த கன்னிகள் வழிபட்டது, பிரம்மன் செய்த யாககுண்டமே தீர்த்தமாக விளங்குவது போன்றவையும் இக்கோயிலின் சிறப்பாக அமைந்துள்ளது.
    தல வரலாறு
    தாராசூரன் என்ற அரக்கனுக்கு வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகிய மூன்று புதல்வர்கள் இருந்தனர். தங்களது வம்சாவளி தொழிலான தேவர்கள், மனிதர்களைத் துன்புறுத்தும் பணியை அவர்களும் தொடர விரும்பினர். இதற்காகக் கடுமையான தவம்புரிந்து, பிரம்மனிடம் வரங்களை மூவரும் பெற்றனர். அதன் வாயிலாக பொன் மற்றும் வெள்ளியால் ஆன அரண்களையும் அமைத்துக் கொண்டனர்.
    அனலாடீசுவரர் சுவாமி
    மேலும் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தன்மைகளைக் கொண்டவர்களாய், பல இடங்களுக்கும் பறந்து சென்று மூவுலகங்களையும் இந்த மூவரும் துன்பத்தில் ஆழ்த்தினர். அந்தத் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த சிவபெருமான், பூமியைத் தேராகவும், சந்திர-சூரியரரை குதிரைகளாகவும், பிரம்மனை சாரதியாகவும், மகாமேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை வில் நாணாகவும், திருமாலை வாயுவாகிய சிறகாக அமைத்து, அக்னியை முனையாகக் கொண்டாக அம்பாகவும், மற்ற தேவர்களைப் போர்க் கருவிகளாகவும் கொண்டு போர்க்கோலத்துடன் புறப்பட்டார். அங்கு மூன்று அசுரர்களுடன் போரிட்டு, அவர்களின் அரண்களை முதலில் அழித்து, பின்னர் அவர்களை சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். அப்போது சிவபெருமான் விட்ட அம்பின் பொறி தொட்டுச் சென்ற இடங்களில் ஒன்று துஷ்டபுரியம் என்றழைக்கப்பட்டு வந்தது. துஷ்டர்களை (சத்ருக்கள்) நிவர்த்தியாகும் பொருட்டு துஷ்டபுரியம் என்றழைக்கப்பட்ட இந்த ஊர், தற்போது மருவி தொட்டியம் என்றழைக்கப்படுகிறது. முனிவர்களின் வேண்டுகோளின்படி, சிவபெருமான் திரிபுரம் சம்ஹாரத்துக்குப் புறப்பட்டு வந்த போது, இந்த திருக்கோயிலில் பிரம்மன் யாகம் ஒன்றைச் செய்து கொண்டிருந்தார். அந்த யாக குண்டத்தில் சிவபெருமான் நர்த்தனம் செய்த காரணத்தால் வடமொழியில் அக்னி நர்த்தீசுவரர் என்று அழைக்கப்பட்டார். தற்போது அனலாடீசுவரர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார்.
    பிராத்தனை
    பிரம்மன் நடத்திய யாக குண்டமே தற்போது அம்மன் சன்னதி முன்பு தீர்த்தமாக உள்ளது. கிழக்கு நோக்கிய சன்னதியைக் கொண்டுள்ள இந்த இறைவனை வழிபட்டால் வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கி, நன்மைகளும் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தலத்தில் உள்ள முருகனை தொடர்ந்து ஆறு மாதங்கள் வரும் ஷஷ்டி அன்று தேன் அபிஷேகம் செய்து வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    பொது தகவல்
    இறைவன் அனலாடீசுவரரை போன்று, இறைவி திரிபுரசுந்தரி அம்மனும் கிழக்கு நோக்கிய சன்னதியைக் கொண்டு எழுந்தருளியுள்ளார்.
    திரிபுரசுந்தரி என்றால் தமிழில் அழகு உடையவர் என்று பொருள். அதாவது அழகுடையவராக எழுந்தருளி, தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவையை அறிந்து அதைத் தீர்த்து வைக்கும் இறைவியாக அம்மன் திகழ்கிறார். சந்திர ரூபமாக அம்மன் காட்சியளிப்பதால், இக்கோயிலில் சந்திரன் கிடையாது. சூரியன் மட்டுமே எழுந்தருளியுள்ளார்.
    ஈசுவரத் தீர்த்தம்
    பிரம்மன் செய்த யாக குண்டமே தற்போது ஈசுவரத் தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இறைவி திரிபுரசுந்தரி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரில் இந்த தீர்த்தம் அமைந்துள்ளது. நாள்தோறும் அம்மனுக்கு நடைபெறும் உச்சிக்காலப் பூஜையின் போது, பக்தர்களுக்கு ஈசுவரத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
    இந்த தீர்த்தமே ஒரு காலத்தில் இங்குள்ள மக்களுக்கு பிணி போக்கும் மருந்தாக இருந்து வந்துள்ளது. ஈசுவரத் தீர்த்தம் பெறுவதால் திருமணத் தடை, குழந்தையின்மை, உடல்நலக் கோளாறுகள் நீங்கி, கல்வி, செல்வம் மற்றும் வாழ்வில் நன்மைகள் பெருகும்.
    தலபெருமை
    இக்கோயிலில் அம்மன் சன்னதிக்கு பின்புறம் நவக்கிரகங்கள் அமைந்திருப்பது தனிச் சிறப்புக்குரியது. குரு பகவான் அனுக்கிரக மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சனி மட்டும் தனியாக சூரியனை வழிபட, மற்ற கிரகங்கள் சூரியனை நோக்கியவாறு உள்ளன. சூரியனார் கோயிலில் நடைபெறுவது போன்று இக்கோயிலிலும் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு உண்டு. மிக உயரமான அளவில் பைரவர் இங்கு எழுந்தருளியுள்ளார். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விளக்கேற்றி பூஜை செய்து வழிபட்டால் பில்லி, சூனியம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு, மனதுக்கு நிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    நடைதிறப்பு
    காலை 06.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை திறந்திருக்கும்
    அமைவிடம்
    நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் வழியில் 36 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து நாமக்கல் சேலம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து தொட்டியம் என்ற இடத்தில் இறங்கினால் இத்தலம் அடையலாம்.
    ஆலய தொடர்பு எண்
    +91 9940861516
    +91 9443809636
    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    +91 7994347966
    கோயில் Google map link
    maps.app.goo.gl/eG9LrawRCmdD1...
    திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோயில் தரிசனம்
    • திருவாசி மாற்றுரைவரதீஸ...
    if you want to support us via Google pay phone pay paytm
    9655896987
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 20

  • @umaprabakar692
    @umaprabakar692 4 หลายเดือนก่อน +3

    சீக்கிரமே செல்ல அவர் அருள் செய்ய வேண்டும்

  • @aathiraadditti2710
    @aathiraadditti2710 5 หลายเดือนก่อน +4

    நேற்று தான் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.. சிவாயநம

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 5 หลายเดือนก่อน +2

    உடனே என்னைஉண்ஆலயத்திற்குஅழைத்துஅருள்தருவாயாக கிமூ சித்தணி சந்தோஷம்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 5 หลายเดือนก่อน +3

    ஆவலுடன் காத்திருக்கிரோம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 หลายเดือนก่อน +2

    🙏💐சிவ சிவ🌿🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umaprabakar692
    @umaprabakar692 5 หลายเดือนก่อน +2

    மிக நன்று

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 5 หลายเดือนก่อน +1

    Super sar

  • @devipriya3567
    @devipriya3567 5 หลายเดือนก่อน

    Really super useful information

  • @devipriya3567
    @devipriya3567 5 หลายเดือนก่อน +1

    Explanation good

  • @gowriaswanth2382
    @gowriaswanth2382 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @Radha95119
    @Radha95119 2 หลายเดือนก่อน

    Thanks

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 5 หลายเดือนก่อน +1

    Waiting sir.

  • @rathinavelut2865
    @rathinavelut2865 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @d.thumilan3985
    @d.thumilan3985 5 หลายเดือนก่อน +1

    Hi sir
    Super sir😊

  • @parameswariravi4719
    @parameswariravi4719 17 วันที่ผ่านมา

    உங்க போன் எண் தருவீர்களா ஐய்யா வேரு கோவில் பற்றி பேச

  • @manikandanp8012
    @manikandanp8012 5 หลายเดือนก่อน +2

    274.sivaalayam varalaru book kedaikuma

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 4 หลายเดือนก่อน +1

    You are tell him where is thotiam after temple history

    • @mathina
      @mathina  4 หลายเดือนก่อน

      On the time of starting video location mentioned check the description all the details available

    • @user-wu3xp5yn6c
      @user-wu3xp5yn6c 3 หลายเดือนก่อน

      Thottiyam is 35 km from SALEM city , Thottiyam can also be reached from TRICHY city I think 54 km from Trichy City. The actual location is TRICHY -- SALEM highway. from Trichy --- MUSURI --- Thottiyam. Thottiyam is WELL CONNECTED with HIGHWAYS

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏