தேவூர் தேவபுரீஸ்வரர் கோயில் | குருஸ்தலம் | குரு, இந்திரன் & குபேரன் வழிபாடு செய்த தலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • 274 தேவாரப்பாடல் பெற்ற சிவதிருத்தலங்கள்
    தேவபுரீஸ்வரர் கோயில்
    திருத்தேவூர் (தேவூர்)
    மூலவர்: தேவபுரீசுவரர், தேவகுருநாதர்,கதலிவனேசர்
    அம்பாள்: மதுரபாஷினி, தேன்மொழியம்மை
    தீர்த்தம்: தேவதீர்த்தம்
    ஊர்: தேவூர்
    மாவட்டம்; நாகப்பட்டினம்
    நடைதிறப்பு
    இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
    தல வரலாறு
    தேவர்கள், வழிபட்டதால், இப்பெயர்.
    குபேரன் வழிபட்டு, சங்கநிதி, பதுமநிதி பெற்ற தலம். இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர் என்றும், குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். மூன்று நிலைகளை உடைய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. நேரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியைக் காணலாம். கீழே உள்சுற்றில் அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், அகல்யை வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராசசபை தனியே அழகாக உள்ளது. கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன், விநாயகர் சந்நிதிகள் அருகருகே உள்ளன. கட்டுமலை ஏறி மேலே சென்றால் கௌதமர் வழிபட்ட லிங்கம், சோமாஸ்கந்தர், நவக்கிரகம் ஆகியவற்றைக் காணலாம். மூலவர் தேவபுரீசுவரர், இறைவி மதுரபாஷினி ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தலவிநாயகர் வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்னு காட்சி கொடுக்கிறார்.
    ஸ்தலவிருட்சம்: இத்தலத்து ஸ்தலவிருட்சம் கல்லிலேயே வளரும் அதிசய வாழைமரம் ஆகும். இது வெள்வாழை என்ற வகையைச் சார்ந்தது. தேவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டபோது தேவலோகத்தில் உள்ள வெள்வாழையும் இறைவனை இங்கு வழிபட்டு ஸ்தல விருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்துவிட்டது. இந்த வாழைமரத்திற்கு இன்றும் நீர் ஊற்றுவதில்லை. கருங்கல்லால் ஆன கட்டுமலையில் வளர்வது இந்த ஸ்தல விருட்சத்தின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. கல்லில் வளர்வதால் இவ்வாழைமரம் கல்வாழை என்று அழைக்கப்படுகிறது.
    தலத்தின் சிறப்பு:
    ராவணன் குபேரனுடன் போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்ற அமிர்த கலசங்களை எடுத்துச் சென்றான். குபேர ஸ்தானத்தை இழந்த குபேரன் தேவூர் தலத்து இறைவனை செந்தாமரைப் புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டதால் குபேர கலசங்களைத் திரும்பப் பெற்று மீண்டும் குபேர பட்டத்தைப் பெற்றான். குபேரனுக்கு பட்டம் வழங்கபட்ட ஸ்தலம் இது. செல்வம் வளரவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குபேரனுக்குச் சமமான செல்வத்தைப் பெறலாம்.
    இந்திரன் விருத்தாசுரனைக் கொன்ற பாவத்திற்கு இந்திர பட்டத்தை இழந்தபோது, இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப் பெற்று மீண்டும் இந்திர பட்டத்தைப் பெற்றான். ஆகையால் பதவி வேண்டுவோர், இழந்த பதவியை மீண்டும் பெற விழைவோர், வேலை வேண்டும் என தவிப்போர் இத்தலத்து இறைவன் தேவபுரீசுவரரை வழிபட வேண்டும்.
    இத்தலத்து இறைவனை சூரியன் வழிபட்டிருப்பதால், சூரியனால் இடர்வரும் என்று எண்ணுபவர்கள் தேவபுரீசுவரரை வழிபட்டால் சூரியன் அருள் கிடைக்கும். கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஒளி இறைவன் மேல் படுவதை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகிறார்கள்.
    பிராத்தனை
    இழந்த செல்வம் திரும்ப கிடைக்க வழிபட வேண்டிய தலம்.
    திருமணமாகாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் தேவூர் தலத்து இறைவனை திங்கட்கிழமைகளில் வழிபாட்டால் பலன் பெறலாம்.
    அமைவிடம்
    திருவாரூரில் இருந்து நாகப்பட்டிணம் செல்லும் சாலை வழியில் கீவளூரை அடைந்து, அங்கிருந்து திருத்துளைப்பூண்டி செல்லும் சாலையில் சென்றால் தேவூரை அடையலாம். திருவாரூர் - வலிவலம் நகரப்பேருந்து தேவூர் வழியாகச் செல்கிறது. தேவூரில் அக்ரஹாரம் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோயிலுக்கு எதிரிலேயே இறங்கலாம்.
    ஆலய முகவரி
    அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில்
    தேவூர்
    தேவூர் அஞ்சல்
    வழி கீவளூர்
    கீவளூர் வட்டம்
    நாகப்பட்டினம் மாவட்டம்
    PIN - 611109
    ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
    +919486278810
    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    +91 7994347966
    கோயில் Google map link
    maps.app.goo.g...
    if you want to support us via Google pay phone pay paytm
    9655896987
    Join this channel to get access to perks:
    / @mathina
    தமிழ்

ความคิดเห็น • 41

  • @KMookambika
    @KMookambika 11 หลายเดือนก่อน +7

    நானே நேரில் சென்று தரிசனம் செய்த உணர்வு உண்டாகிறது உங்கள் வீடியோ பார்க்கும் போது வாழ்த்துக்கள் தம்பி

  • @rameshsrinivasan9945
    @rameshsrinivasan9945 11 หลายเดือนก่อน +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள்....வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்....நன்றிகள்.

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 4 วันที่ผ่านมา

    விஜயாபதி விஸ்வாமித்திரர் கோயிலை பற்றி விபரமாக ஒரு விடியோ பதிவு போடவும்

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em หลายเดือนก่อน +1

    நன்றி, நான் வருகிறேன் கோவிலுக்கு

  • @rameshsrinivasan9945
    @rameshsrinivasan9945 11 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல்கள் ... பாராட்டுக்கள்....நன்றி கள்...வTழ்த்துக்கள்......

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 11 หลายเดือนก่อน +2

    Super sir

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 11 หลายเดือนก่อน +1

    சிறந்த பதிவு. அருமை அருமை அருமை.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 11 หลายเดือนก่อน

    நன்றி 🙏🏿🙏🏿🙏🏾🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ravisankargurusamy4783
    @ravisankargurusamy4783 11 หลายเดือนก่อน +1

    வண்ணமுகி லன்ன எழில் சுண்ணமலிஅண்ணலொடு வண்ணமலர் மேல்
    நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன நலங்கொள் பதிதான்
    வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய அன்னநடையின் மொழியினார்
    திண்ணவன மாளிகை செறிந்த இசையால்மருவு தேவூரதுவே!

  • @boopathybala1484
    @boopathybala1484 10 หลายเดือนก่อน +1

    Thanks

    • @mathina
      @mathina  10 หลายเดือนก่อน

      Welcome

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 11 หลายเดือนก่อน

    நன்றி. 🙏🏿

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 7 หลายเดือนก่อน

    அண்ணா
    சிறப்பான தகவல் தந்ததற்கு நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி
    வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு கோயில் அருகாமையில் குளியலறை கழிவறை இருப்பதையும் குறிப்பிட்டு இருந்தால் இரவு பயணம் செய்து காலை கோயில் வந்து சேர்பவர்களுக்கு அது நன்மையாக இருக்கும் நன்றி

  • @ganesanravichandran3111
    @ganesanravichandran3111 11 หลายเดือนก่อน

    Super explanation.

  • @rajumettur4837
    @rajumettur4837 4 หลายเดือนก่อน

    Very clear explanation sir.tq.

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 หลายเดือนก่อน +1

    Om namashivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 11 หลายเดือนก่อน +2

    🙏🌺🏵️சிவ சிவ🌷🔥🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nvmramki
    @nvmramki 11 หลายเดือนก่อน

    Superb & very useful.

  • @VivekanandhanD-v9b
    @VivekanandhanD-v9b 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @skytv6624
    @skytv6624 11 หลายเดือนก่อน +2

    நன்றி ஜயா எங்க ஊர்

  • @mindirani5560
    @mindirani5560 11 หลายเดือนก่อน

    Super bro 🎉🎉🎉

  • @govindjagadeesh4132
    @govindjagadeesh4132 11 หลายเดือนก่อน

    Very nice friend

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 11 หลายเดือนก่อน

    Om Shri Gurubyo Namaha.

  • @ponpugal
    @ponpugal 11 หลายเดือนก่อน +1

    Super 👌 ji,,,, keep rocking...

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @skytv6624
    @skytv6624 11 หลายเดือนก่อน +1

    மலேசியா வில் இருந்து தினேஷ்குமார்

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @d.thumilan3985
    @d.thumilan3985 11 หลายเดือนก่อน +3

    Hi sir
    Super sir😊
    Happy deepawali sir😊

    • @mathina
      @mathina  11 หลายเดือนก่อน

      இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏

    • @d.thumilan3985
      @d.thumilan3985 11 หลายเดือนก่อน

      ​@@mathinaThank you sir😊

  • @veeralakshmicoloursars9345
    @veeralakshmicoloursars9345 11 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Manidevimdsb0786
    @Manidevimdsb0786 3 หลายเดือนก่อน

    🙏

  • @sreenivasanmanoramma9734
    @sreenivasanmanoramma9734 5 หลายเดือนก่อน

    கோவில் ஐயர் போன் நம்பர் தெரிவிக்க முடியுமா

    • @mathina
      @mathina  5 หลายเดือนก่อน +1

      Description ல் தந்து உள்ளேன் எனினும் கீழே தந்துள்ளேன் உங்கள் பார்வைக்கு
      9486278810

  • @raninatarajan9664
    @raninatarajan9664 8 หลายเดือนก่อน

    Where is Thevur

    • @mathina
      @mathina  8 หลายเดือนก่อน

      Check Description all the details available

  • @venkatachalapathibakthavac5468
    @venkatachalapathibakthavac5468 11 หลายเดือนก่อน

    வெங்கடேசன் குறுக்கல் விளக்கம் அளிக்கிறார் கோச்செங்கடசோழர் கட்டிய பாடல் பெற்ற தலம்

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 11 หลายเดือนก่อน +2

    Om namasivaya

  • @karthikeyan-ut2bj
    @karthikeyan-ut2bj 11 หลายเดือนก่อน

    Super sir

  • @rathinavelut2865
    @rathinavelut2865 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @nirmalasriramulu7487
    @nirmalasriramulu7487 11 หลายเดือนก่อน

    Om namashivaya