திருவோத்தூர் வேதபுரீசுவரர் ஆலயம் செய்யாறு || வரலாறு || கோவில் சிறப்பு ||
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- #cheyyar #cheyyarsiva #vedhapureeswarartemple #temple #hindutemple #sivantemples #sivan
அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு (எ) திருவத்திபுரம் (எ) திருவோத்தூர்
மகாகும்பாபிஷேகப் பெருவிழா
அன்புடையீர்,
சான்றோர் நிறைந்த தொண்டை நன்நாட்டில் சிறப்புடன் மிளிரும் காஞ்சிபுரத்தின் தென்பானுள்ளதும் செழுநீர்சேய்நதி ஆரம்பூண்டதும் சீர்காழிவள்ளல் திருஞானசம்பந்தர் சுவாமிகளால் ஆண்பனை குலையினச் செய்த அற்புதத் தேவாரப்பண் இசைக்கப்பெற்றதும், அருணகிரிநாதர், "அதுப்பிரகாச வள்ளலார், சிவப்பிரகாசர் போன்ற சான்றோர்களால் போற்றிப் பாடல்பெற்றதுமான திருவோத்தூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அடியார்தம் இடரகற்றிவரும்
அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனாய அருள்மிகு வேதபுரீஸ்வரர் பெருமானுக்கு நிகழும் சுபகிருது ஆண்டு உத்தராயண புண்யகாலம் (க்ரீஷ்மருது) ஆனி மாதம் சுக்லபஷம் சப்தமி திதி 22ஆம் தேதி (06-07-2022) புதன்கிழமை உத்திர நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபதினம் காலை 6-00 மணிக்குமேல் 7-30 மணிக்குள் கடக லக்கினத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் மகாகும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறவுள்ளதால் அனைத்து பக்தகோடிகளும் கலந்துகொண்டு எல்லாம் வல்ல உலக பரம்பொருள் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகப் பெருமாள் அருள்மிகு வேதபுரீஸ்வரர் அருளைப் பெற வேண்டுகிறோம். மேலும் விடியற்காலை 5.00 மணியளவில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடையறும். காலை 6.00 மணிக்குமேல் 6.30 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் கும்பாபிஷேகம் நடைபெறும் காலை 6.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் நர்த்தன கணபதி, பாலமுருகன், நாகலிங்ம், சோமஸ்கந்தர், வேதபுரீஸ்வரர், ஷண்முகன், நடராஜர், பாலகுஜாம்பிகை. சண்டிகேஸ்வரர் மகாகும்பாபிஷேகம் நடைவறும்.
ஆனி மாதம் 14ஆம் தேதி (28.6.2022) செவ்வாய்கிழமை
காலை8.00மணி
திருவோத்தூர் அருள்மிகு காங்கியம்மன் ஆலயத்தில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, காங்கியம்மன் நவகலச பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி, அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
மாலை 6.00 மணி -
அருள்மிகு காங்கியம்மன் ஆலயத்தில் கிராம சாந்தி பூஜை
ஆனி மாதம் 15ஆம் தேதி (29.6.2022) புதன்கிழமை
காலை 7.00 மணி -
அருள்மிகு பாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயத்தில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஆச்சார்யவர்ணம், கஜபூஜை மஹாகணபதி பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
மாலை 6.00மணி
பிரவேச பலி, ரக்ஷஷோக்ன ஹோமம்.
ஆனி மாதம் 16ஆம் தேதி (30.6.2022) வியாழக்கிழமை
காலை 9.00 மணி -
விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, நவக்கிரக ஹோமம், அஸ்வபூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
மாலை6.00மணி
வாஸ்துசாந்தி, வாஸ்துஹோமம்.
ஆனி மாதம் 17ஆம் தேதி (01.7.2022) வெள்ளிக்கிழமை
காலை9.00 மணி -
விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மஹாலஷ்மி பூஜை, மஹாலஷ்மி ஹோமம், அஷ்டலஷ்மி ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல்
மாலை6.00 மணி
ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ப்ரதான ஆச்சார்யர்கள், ரக்ஹாபந்தனம்
ஆனி மாதம் 18ஆம் தேதி (02.7.2022) சனிக்கிழமை
காலை-8.30மணி
விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், அங்குரபூஜை, தீர்தசங்கிரணம், திசாஹோமம், மூர்த்தி ஹோமம், சம்கிதா ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
மாலை6.00மணி
விக்னேஸ்வர பூஜை, அங்குரபூஜை, பஞ்சகவ்ய பூஜை, சிவமூல ஆகம பாராயணம்.
ஆனி மாதம் 19ஆம் தேதி (03.7.2022) ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00மணி
விக்னேஸ்வர பூஜை, அங்குர பூஜை, ஆச்சார்யார்கள் ரக்ஷாபந்தனம், அனைத்து யாக சாலைகள் அலங்காரம், பரிவார மூர்த்தங்கள், கலாகர்ஷனம், அக்னி சங்கிரணம், யாகசாலை பிரவேசம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
மாலை-4.00மணி
விக்னேஸ்வர பூஜை, அங்குரபூஜை, விசேஷ்சந்தி, கும்பலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், சுவாமிக்கு வெள்ளை பஷ்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, ப்வணா அபிஷேகம், ஹோமங்கள் விசேஷ திரவியங்கள் சமர்பித்தல், பட்டு வஸ்திர பூர்ணாஹுதி, ஷோடசோபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
ஆனி மாதம் 20ஆம் தேதி (04.7.2022) திங்கட்கிழமை
காலை 9.00 மணி விசேஷ சந்தி, விக்னேஸ்வர பூஜை, பச்சைபுஷ்ப அலங்காரம், சோமகும்ப பூஜை, சூர்ய பூஜை, இரண்டாம் யாக கால பூஜை, ப்வணா அபிஷேகம், சிவமஹா மண்டப பூஜை, ஷடத்வாந்யாசம் நவகுண்ட யாகபூஜை, த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, விசேச தீபாராதனை,ஷோடசோபசாரம், வேத பாராயணம், திருமுறை பாராயணம், மஹா தீபாரதனை, பிரசாதம் வழங்குதல்.
மாலை 5.00
மணிவிசேஷசந்தி, விக்னேஸ்வர பூஜை, கதம்ப புஷ்ப அலங்காரம், மூன்றாம் கால யாகபூஜை, பவ்ணா அபிஷேகம், அத்வஷ்டகந்யாசம், யாகசாலை பூஜைகள், த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, ஷோடசோபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
ஆனி மாதம் 21ஆம் தேதி (05.7.2022) செவ்வாய்கிழமை
காலை 8.30 மணி
விசேஷ சந்தி, மஞ்சள் புஷ்ப அலங்காரம், நான்காம் கால யாக பூஜை, பஞ்சாச்ரந்யாசம், யாகபூஜை, ஷண்ணவதித்ரவ்ய ஹோமங்கள், பூர்ணாஹுதி, விசேஷ தீபாராதனை, ஷோடசோபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
மாலை 5.00 மணி
விசேஷசந்தி, சிவப்பு புஷ்ப அலங்காரம், ஐந்தாம் கால யாகபூஜை, ப்வணா அபிஷேகம், நாடிசந்தானம், தத்வார்ச்சனை, ஷ்பரிஸாஹுதி, யாகபூஜைகள், த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, விசேஷ தீபாராதனை, ஷோடசோபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
ஆனி மாதம் 22ஆம் தேதி (06.7.2022) புதன்கிழமைவிடியற்
காலை 2.30 மணி
பரிவார யாகசாலை பூஜை தொடக்கம். ஆறாம் கால யாக பூஜை ஆரம்பம்.
காலை 4.30-5.30 மணி