✝️ கிறித்தவ தேவாலயம் கட்டிய கிளாரிந்தா எனும் கோகிலா l Rosa Clarinda

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • 🙏 தஞ்சை மன்னனிடம் அமைச்சராக இருக்கும் பண்டித ராவ் தன் மகனை படைப்பணிக்கு அனுப்புகிறார். அவன் அறந்தாங்கி அருகே நடந்த போரில் மறைகிறான். அவன் மனைவி அதிர்ச்சியில் மறைகிறாள். அவர்களின் மகள் கோகிலாவை பண்டிதரே வளர்க்க நேரிடுகிறது. அவரும் மறையவே அரசரே கோகிலாவை வளர்க்கிறார். சாரதா என்னும் சேடி அவளுக்கு பணிவிடை செய்து வருகிறாள். ஒரு சூழ்ச்சிக்கூட்டம் கோகிலாவுக்கு மன்னர் மானியமாக அளித்த கிராமங்கள் மற்றும் செல்வத்தை கவர நினைக்கிறது. அவர்கள் கோகிலாவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக அரசரிடம் பொய் சொல்லி வயோதிகரான திவானுக்கு 12 வயதான கோகிலாவை மணம்புரிந்து வைக்கிறார்கள்.
    கோகிலாவை மணந்த திவான் உயிரிழக்கிறார். அந்த சூழ்ச்சிக்கூட்டம் கோகிலாவை உடன்கட்டை ஏறச்செய்ய முயல்கிறது. கிளாரிந்தா அதற்கு மறுக்கிறாள். அவர்கள் அவளை கட்டாயப்படுத்தி சிதையில் ஏற்ற முயல்கையில் லிட்டில்டன் என்னும் ஆங்கிலேயப் படைத்தளபதி அவளை காப்பாற்றுகிறார். மராட்டிய பிராமணர்கள் அவரைப்பற்றி தஞ்சையின் புதிய மன்னரும் பிரதாபசிம்மரின் மகனுமான சாயாஜியிடம் முறையிடுகிறார்கள். சாயாஜி கோகிலாவை விட்டுவிடும்படி சொன்னாலும் லிட்டில்டன் அதை ஏற்கவில்லை.
    லிட்டில்டன் கோகிலாவை மணக்க விரும்புகிறார். கோகிலா மதம் மாற விரும்புகிறார். ஆனால் இரண்டுக்கும் சீர்திருத்தக் கிறிஸ்தவத் திருச்சபையும் ஆங்கிலேய கம்பெனியும் ஒத்துக்கொள்ளவில்லை. லிட்டில்டன் தஞ்சையில் இருந்து நெல்லைக்கு மாற்றம் வாங்கிக்கொண்டு கோகிலாவையும் அழைத்துச் சென்றார். அங்கே கோகிலா மானசீகமாக மதம் மாறி தன்னை கிளாரிந்தா என பெயர் மாற்றம் செய்துகொண்டு மதப்பணிகளில் ஈடுபட்டாள்.
    1773-ல் விக்டோரியா மகாராணி அழைப்பின்பேரில் லிட்டில்டன் லண்டன் சென்றார். உடல்நலமின்றி இருந்த அவர் அங்கே மறைந்தார். அவர் தன் சொத்துக்களை கிளாரிந்தாவுக்கு எழுதி வைத்திருந்தமையால் அவை அவளுக்கு உரிமையாயின. 1778-ல் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் அவளை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினார். பாளையங்கோட்டையில் மதப்பணி செய்த கிளாரிந்தா அங்கே 1785-ல் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தையும் ஏழைகளுக்காக ஒரு கிணற்றையும் வெட்டினாள். அம்மக்கள் அவளை ராசா கிளாரிந்தா என அழைத்தனர். சாரதா மதம் மாறி சாரா என ஆனாள்.
    📍 CSI Clarinda Church maps.app.goo.g...
    Video Source Link :
    1. tamil.wiki/wik...
    2. yarl.com/forum...
    3. www.dinamani.c...
    4. www.dinamani.c...
    5. tamil.wiki/wik...
    6. tamil.wiki/wik...
    7. The_Legacy_of_Christian_Friedrich_Schwartz
    8. Clarinda: A Historical Novel
    #clarinda #chrishtian #chrish #thevalayam #hendery #littleton #englishgentleman #gogila #kokila #thirunelveli #history #thanjavur #pradhap #singh #pradhapsinghmaharaj #maharaj #indianking #victoria #rosaclarinda #palayamkottaidiocese #palayamkottai_diocese #palayam #palayamkottai #hendrylittleton

ความคิดเห็น •