சித்ரா பௌர்ணமி சிறப்புகள் மற்றும் வரலாறு | ஆன்மீகமும் அறிவியலும் | Chitra Poornami 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มี.ค. 2024
  • தமிழர்களின் மாதம் சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சூரியபகவான் ராசி மண்டலத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே முதல் மாதம். என்றாலும் மாதங்களின் பெயர்கள் பெரும்பாலும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. எந்த நட்சத்திர நாளில் பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே பெரும்பாலும் அந்த மாதத்தின் பெயராக இருக்கும். குறிப்பாக முதல் மாதத்தில் பௌர்ணமி வரும் நட்சத்திரம் சித்திரை.ஆதலால் அந்த மாதம் சித்திரை எனப்பட்டது.
    சித்ரா பௌர்ணமி சிறப்புகள் மற்றும் வரலாறு(Chitra Poornami Features and History) Full Details
    informationneeds.com/Spiritual...
    பழைய சித்ரா பௌர்ணமி வரலாறு:
    இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.
    சித்ரா பௌர்ணமி வசந்த காலம்(சித்திரை மாதம்):
    சித்திரையின் வருகை வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கிறது. குளிர்க்காலம் முழுமையாக முடிந்து இதமான இளம் வெயில் தொடங்கும். மாம் பூக்கள் மலர்ந்து எங்கும் மணம் பரப்பும் அதோடு வேப்பம் பூக்களும் பூத்திருக்கும். இது வாழ்வில் இனிமையும் கசப்பும் இணைந்தேகாணப்படும். என்ற தத்துவத்தை விளக்குவதாக உள்ளது.
    சித்ரா பௌர்ணமி அறிவியல் காரணம்:
    ஆன்மீகமும் அறிவியலும் பிரிக்க முடியாதவை.நம் முன்னோர்கள் அதற்கென்று சில திருவிழாக்கள் உருவாக்கினார்கள்.சித்ரா பௌர்ணமி அன்று கொண்டாடப்படும்,அனைத்து பண்டிகைகளும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டது.
    #சித்ராபெளர்ணமி2024 #சித்ராபெளர்ணமி #murugandevotee #chitrapournamivalipaduintamil #chitrapournami #பௌர்ணமி #விரதம்
    #Pournami #pournamithinkal #aanmeegam #aanmegam #ChitraPournamiSignificance #aanmeegamthagaval #aanmeegamtamil #aanmeega_thagaval #aanmeegathagaval #ஆன்மீகம் #ஆன்மீகம்2024 #ஆன்மீகம்தகவல்தமிழில் #ஆன்மீகதகவல்கள் #ஆன்மீகதகவல்

ความคิดเห็น •