Aryankavu Temple History in Tamil|ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வரலாறு|Aryankavu Sastha Temple|Aryankavu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ธ.ค. 2023
  • In this post we are learn about the Ariyankavu temple.
    Aryankavu temple is located in Kollam district of Kerala state. Located on the border of Kerala and Tamil Nadu. Aryankavu is located in the Tirunelveli district of Tamil Nadu about 16 kilometers from Sengottai town. The word 'Aryan' means 'exalted one'. 'Kavu' means 'oasis'. The place was called 'Aryankavu' meaning 'Oasis of the High One' and later came to be known as 'Ariankavu'. It is one of the five Shasta temples built by Parasurama. The temple here is built with Kerala architecture. In the sanctum, Ayyappan is seated in a kingly form with his right leg down and his left leg slightly raised.
    Lord Shiva is depicted in the form of a linga on the right and in a golam with Pushkala standing on the left. Here the Lord is shown sitting on an elephant taming the religious elephant in a kolam. This is why he has the name 'Madagaja Vahana Ruban'.
    The temple complex also has the deities of Nagaraja, Ganapati, Valiyakkadutha Karuppasamy and Karuppai Ammal. Ayyappan, a celibate at Sabarimala, is depicted as having married Pushkalai in this temple.
    Thirumanjanam is held here for Shasta and Pushkala Devi in ​​the month of Margazhi. It is the belief of the devotees who come here that if people who are facing obstacles to marriage pray to Shasta here, the obstacles will be removed and marriage will happen soon. Aryankavu is 76 km from Kollam city and 33 km from Punalur city, Kerala. Aryankavu is located at a distance of 16 km from Red Fort.
    இந்த பதிவில் ஆரியங்காவு சாஸ்தாவின் ஆலயம் குறித்து நாம் அறிந்துகொள்ளவிருக்கிறோம்.
    ஆரியங்காவு ஐயப்பன் ஆலயம்
    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவு என்ற இடத்தில் உள்ளது. கேரள மாநிலத்திற்கும்,
    தமிழகத்திற்குமான எல்லைப் பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
    தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலும் ஆரியங்காவு அமைந்துள்ளது.
    ஆரியன்’ என்ற சொல்லுக்கு ‘உயர்ந்தவன்’ என்று பொருள். ‘காவு’ என்றால் ‘சோலை’ என்று பொருள். ‘உயர்ந்தவன் குடியிருக்கும் சோலை’ என்ற பொருளில் இவ்விடமானது ‘ஆரியன் காவு’ என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் ‘ஆரியங்காவு’ என்று மருவியிருக்கிறது.
    பரசுராமரால் உருவாக்கப்பட்டத் ஐந்து சாஸ்தா திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள ஆலயம் கேரளக் கட்டுமான அமைப்புடன் அமைந்திருக்கிறது. கருவறையில், ஐயப்பன் வலது காலைக் கீழே ஊன்றியும், இடது காலைச் சிறிது உயர்த்தியும் வைத்து அமர்ந்த நிலையில் அரசர் தோற்றத்தில் இருக்கிறார். இவருக்கு வலது புறம் சிவபெருமான் லிங்க வடிவிலும், இடதுபுறம் புஷ்கலை நின்ற கோலத்திலும் காணப்படுகின்றார்.
    மதம் கொண்ட யானையை அடக்கிய அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு இறைவன் இங்கு காட்சி தருகிறார். இதனால் அவருக்கு ‘மதகஜ வாகன ரூபன்’ என்ற பெயரும் உண்டு.
    இக்கோவில் வளாகத்தில், நாகராஜர், கணபதி, வலியக்கடுத்தா கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோரும் துணைக் கடவுள்களாக இருக்கின்றனர்.
    சபரிமலையில் பிரம்மச்சாரியாக உள்ள ஐயப்பன் இக்கோவிலில் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராகக் காட்சி தருகிறார்.
    இங்கு மார்கழி மாதத்தில் சாஸ்தாவிற்கும் - புஷ்கலா தேவிக்கும் கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    திருமணத்தடை இருப்பவர்கள், இங்கிருக்கும் சாஸ்தாவை வழிபட்டு வேண்டினால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடை பெறும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
    ஆரியங்காவு கேரள மாநிலம், கொல்லம் நகரில் இருந்து 76 கிலோமீட்டர் தொலைவிலும், புனலூர் நகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. செங்கோட்டை நகரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் ஆரியங்காவு அமைந்துள்ளது.
    • Aryankavu Temple Histo...
    Abishek Indradevan
    Bharatha Thamizhan
    பாரத தமிழன்
    அபிஷேக் இந்திரதேவன்

ความคิดเห็น • 2