திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில் |வளமான வாழ்வு தரும் வடுக பைரவர் |3 கோடி மந்திரங்கள் வழிபட்ட தலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோவில்
    கயிலாயத்தை விடவும், சிவன் விரும்பி உறையும் தலம் இந்த திருக்கோடிக்காவல் ஆலயம் என்கிறது தலபுராணம் - காசியை விட ஈசனின் அருள்மிகுந்த உள்ள தலம் இது.
    மூலவர் : கோடீஸ்வரர் (வேத்ரவனேஸ்வரர்), கோடிகாநாதர்
    அம்பாள் : திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை
    தல விருட்சம் : பிரம்பு
    தீர்த்தம் : சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி
    புராணப் பெயர் : வேத்ரவனம்
    ஊர் : திருக்கோடிக்காவல்
    மாவட்டம் : தஞ்சாவூர் மாவட்டம்
    பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர்
    பெரிய கோயில்' என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது தஞ்சை பெரிய கோயில் தான். ஆனால், மற்றொரு பெரிய கோயிலும் தமிழகத்தில் இருக்கிறது.
    அதுவே, கும்பகோணம் அருகிலுள்ள திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில். திருக்கயிலாயத்தை விட உயர்ந்த இந்த திருத்தலத்தைத் தரிசிப்போமா.
    சிறப்பம்சம்:
    திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரரால் பாடல் பெற்ற தலம் இது.
    இங்குள்ள ஈசன் கோடீஸ்வரர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாகவும், அம்பாள் திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகின்றனர்.
    இத்தல ஈசன் சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்தோடு காண்போரைக் கவரும் வண்ணம் வீற்றிருக்கிறார்.
    பிராத்தனை
    இங்குள்ள கரையேற்று விநாயகரை சதுர்த்தி நாளில் வழிபட்டால் நம் குறைகள் யாவும் களைந்து நல்ல வண்ணம் வாழ வைப்பார். இம்மையிலும், மறுமையிலும் பக்தர்களைக் கரையேற்றுபவர் என்பதால் இவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.
    இத்தலத்தில் பிரம்பு தல விருட்சமாக இருக்கிறது.
    சிருங்க தீர்த்தம் மற்றும் காவிரி தல தீர்த்தங்களாக உள்ளன.
    கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவி வழிபட்டு பேறுபெற்றத் தலம்.
    பால சனீஸ்வரர்:
    இங்கு ஜேஷ்டாதேவி, பால சனீஸ்வரர், துர்வாசர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. சனி பகவான், எமதர்மன், சித்ரகுப்தர், துர்வாச மகரிஷியும் எதிரெதிர் சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள். பால சனியின் தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் இருக்கிறது.
    மூலவரின் கருவறை வெளிச்சுவரில் சிறப்புமிக்க, அழகோவிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
    அவற்றில் கூத்தபிரான் எனப்படும் நடராஜர், சிவகாமி அம்பாளுடன் இருக்கிறார். அவரது வலதுபுறம் பேய் உருவில் காரைக்கால்_அம்மையார் தாளமிட்டபடி இருந்து ஈசனின் திருநடனத்தைக் கண்டு ஆனந்தமடையும் சிற்பம் அனைவரையும் கவரக் கூடியது.
    முப்பத்து_முக்கோடி
    தேவர்களும் வழிபட்டு பேறுபெற்றதும், தங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றதுமான தலம் இது. இதனால், இது பெரியகோயில் என்ற அந்தஸ்தைப் பெற்றது.
    தல வரலாறு:
    தன் கணவனைக் கொன்று விட்டு, விபச்சாரியாக வாழ்ந்த "லோககாந்தா' என்ற பெண், தன்னுடைய இறுதி காலத்தில் இந்த தலத்திற்கு வந்தாள்.
    அவள் மரணமடைந்ததும் எம தூதர்கள் அங்கு வந்தனர். அதற்குள் சிவ தூதர்கள் சென்று அந்தப் பெண்ணை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர்.
    எமன் சிவபெருமானிடம் காரணம் கேட்டான். அதற்கு சிவபெருமான், "திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து என்னை தரிசிப்பவர்களை அண்ட உனக்கு உரிமையில்லை' என்றார்.
    காசியைப் போல இந்த தலத்தில் வாழ்பவர்களுக்கும் எமபயம் இல்லை. காசியை விட ஈசனின் அருள்மிகுந்த உள்ள தலம் இது.
    கயிலாயத்தை விடவும், சிவன் விரும்பி உறையும் தலம் இந்த திருக்கோடிக்கா ஆலயம் என்கிறது தலபுராணம்.
    கைலாயம் செல்ல முடியாதவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது, திருக்கோடிக்கா வந்து ஈசனை தரிசனம் செய்தால் கைலாயம் சென்ற பலன் கிடைக்கும். அமாவாசை நாட்களில் இங்கு சென்று வருவது மேலும் சிறப்பு.
    ஒரு முறை திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க, பக்தர்கள் திருப்பதி சென்றனர்.
    திருப்பதி வெங்கடாசலபதி அவர்களுக்கு காட்சி கொடுக்காமல், "திருக்கோடிக்காவில் எனது தங்கை திரிபுரசுந்தரி ஆவன செய்வாள்' என்று அருளினார்.
    இதையடுத்து அவர்கள் திருக்கோடிக்கா வந்தனர். அப்போது அவர்களுக்கு இத்தலத்தில் வீற்றிருக்கும் திரிபுரசுந்தரி அம்பாள், திருப்பதி வெங்கடாசலதியாக காட்சி கொடுத்து அருளினாள். எனவே, இது செல்வம் தரும் தலமாகவும் விளங்குகிறது.
    நந்திதேவரின் கொம்பினால் உண்டான இத்தல சிருங்கோத்பவ தீர்த்தம் மிகச் சிறப்பானது. இத்தலம் வந்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
    திறக்கும் நேரம்: காலை 6.30-1200, மாலை 5.30-8.00.
    இருப்பிடம்:
    கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., நவக்கிரக தலமான கஞ்சனூரில் இருந்து 3 கீ மீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து கதிராமங்கலம் வழியாக குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம்.
    கோயில் Google map link
    maps.app.goo.g...
    ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
    +91 9159514727
    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    +91 7994347966
    if you want to support us via UPI id
    9655896987@ybl
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 70

  • @buddybugchannel8995
    @buddybugchannel8995 ปีที่แล้ว +6

    சிவாய நம இந்த பதிவை பார்க்க வைத்த கோடீஸ்வரர் அப்பா கோடான கோடி நன்றிகள் சிவாய நம

  • @Vidhya2301
    @Vidhya2301 ปีที่แล้ว +19

    கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து இந்த தலத்திற்கு நானே சென்று தரிசனம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது இந்த வீடியோ இது போன்ற அற்புதமான ஆலயங்களை தொடர்ந்து பதிவிடுங்கள் 🙏🙏🙏

    • @SURESHKUMAR-ml9fj
      @SURESHKUMAR-ml9fj 8 หลายเดือนก่อน

      Thanks for giving information about reaching this temple.

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 2 หลายเดือนก่อน +2

    இத்தலம் மயிலாடுதுறைலிருந்து குத்தாலம்-கதிராமங்கலம்-கஞ்சனூர்-சூரியனார்கோவில்-ஆடுதுறை வழித்தடத்தில் உள்ளது. நான் பல முறை மயிலாடுதுறைலிருந்து சென்று வந்து பலன் பெற்றுள்ளேன். அருமையான திருத்தலம் "திருக்கோடிகாவல்" மயிலாடுதுறையிலிந்து 16 கீமீ உள்ளதால் கும்பகோணம் போக வேண்டிய அவசியமில்லை.

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு அற்புதமான தலம் அனைவரும் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டிய தலம். வாழ்க வளமுடன் சார் கோடீஸ்வரர் சுவாமி உங்களுக்கு அனைத்து வளங்களையும் வழங்கட்டும் 🌷

  • @333narpavi5
    @333narpavi5 2 หลายเดือนก่อน +1

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @kullothuingans7805
    @kullothuingans7805 ปีที่แล้ว +2

    அருமை வாழ்க வளர்க ஃஅருட்பணி தொடர்கநன்றி

  • @sneelaneela8192
    @sneelaneela8192 ปีที่แล้ว +2

    நாமே நேரே சென்று தரிசனம் செய்தது போல இருந்தது. மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். தங்கள் ஆன்மீக பயணம் வளர வாழ்த்துக்கள்.

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 ปีที่แล้ว +1

    🙏🏻நமஸ்காரம்.. அவசியம் 🌹இந்த ஸ்தலம்.. செல்லவேண்டும் போல் உள்ளது..2017 கைலாஷ் மனசாவர் சென்றேன்.. நம் தமிழ் நாட்டில் பிறந்து போகாமல் இருக்க கூடாது.. கோடி 🙏🏻நமஸ்காரம்.

  • @rbaskaran7046
    @rbaskaran7046 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉❤❤❤❤
    மிக அருமையான விளக்கங்களுடன்
    சிறப்பு வாழ்த்துக்கள்...

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 ปีที่แล้ว +3

    I am grateful to u for giving temple info in detail and this induces everyone to visit and have darshan of Sri Kodeeswarar! Ur video .depicting the sirpanngal in this temple..are super with ur explanation! My friend of this place as his Native Sri Sankaraswaminathan took my family to this place! Definitely I wlvisit again !🎉🎉

  • @arunsofi1911
    @arunsofi1911 ปีที่แล้ว +2

    More information expecting like this. Thanks a lot.

  • @malargeetha3029
    @malargeetha3029 ปีที่แล้ว +1

    Super ayya migavum arumai atleast photo yirunthal pathivuseyyunga ayya romba happy

  • @laxmivisva1125
    @laxmivisva1125 ปีที่แล้ว +1

    Super.... Great explanation about this temple🙏🙏🙏

  • @pannirselvamselvam6358
    @pannirselvamselvam6358 ปีที่แล้ว +1

    I went so many time this side to go sukaran temple..But not heard this temple thanks for this utter.

  • @saraswathirajagopalan4697
    @saraswathirajagopalan4697 ปีที่แล้ว +2

    Sooper. You have explained very well about each and everything in detail which makes interest on that place to settle there in rest of my life..ohm nama shivaya

  • @raghumarem3734
    @raghumarem3734 7 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம். கோயிலிற்கே சென்று வந்ததது போல் இருந்தது.நன்றிகள் பல.

  • @Ramanichandranc
    @Ramanichandranc ปีที่แล้ว +3

    Vadugha bairava pottery 🙏🙏🙏💐💐💐💐💐

  • @arunsofi1911
    @arunsofi1911 9 หลายเดือนก่อน +1

    Superb informative. Go head.

    • @mathina
      @mathina  9 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @user-pb6mc8me1u
    @user-pb6mc8me1u ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 ปีที่แล้ว +3

    Super sir

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +2

    ஒரு சன்னதி விடாமல் அனைத்து சன்னதிகளையும் காட்டி அவற்றுக்கான விளக்கமும் தந்தது அற்புதம். உண்மையில் நாமே நேரில் சென்று ஆலயத்தை சுற்றி வளம் வந்து எல்லா சன்னதிகளையும் தெய்வங்களையும் தரிசித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது இந்த பதிவு மிக்க நன்றி மிக மிக நன்றி

  • @raghuram2933
    @raghuram2933 ปีที่แล้ว +1

    Super

  • @kannann7497
    @kannann7497 4 หลายเดือนก่อน

    சார் உங்களது ஒலி.ஔிப்பதிவு சூப்பர்.

  • @natarajansankaran2560
    @natarajansankaran2560 8 หลายเดือนก่อน

    OM SRI THIRIPURA SUNDHARI SAMETHA SRI THRIKOTEESWARA kindly BLESS my daughter family & my family for a long ,prosperous,happy ,bright future.My humble namaskarams.

  • @palanid3189
    @palanid3189 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான பதிவு

    • @palanid3189
      @palanid3189 ปีที่แล้ว +1

      அனைத்து சிவன் கோவில்கள் இதேபோன்று ஒலிபரப்ப வேண்டும் ஐயா

  • @jphairoil
    @jphairoil ปีที่แล้ว +1

    மிக அருமை 🙏🙏🙏

  • @user-xi8ff4uz9r
    @user-xi8ff4uz9r 3 หลายเดือนก่อน

    👌 The,best

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +2

    🙏🌸ஹர ஹர மகாதேவா🌷📿🙏🌿🙏

  • @buddybugchannel8995
    @buddybugchannel8995 ปีที่แล้ว

    சிவாய நம ஐயா இன்றைக்கு தான் பதிவை பார்த்தோம் நாளைக்கு 25.07.2023 காலை இந்த ஆலயத்திற்கு செல்கிறோம் நன்றி ஐயா

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj 8 หลายเดือนก่อน

    Thanks for posting this video likes more, Bro.

  • @kavithak5060
    @kavithak5060 4 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @tbraghavendran
    @tbraghavendran ปีที่แล้ว +1

    Thank you 🙏

  • @venkataramanv8809
    @venkataramanv8809 ปีที่แล้ว +3

    Om Namasivayah

  • @jaivvs
    @jaivvs 8 หลายเดือนก่อน +2

    ஒவ்வொரு பதிவிலும் கோயில் நடை திறந்திருக்கும் நேரம் குறிப்பிடுங்கள் அண்ணா. 🙏

    • @mathina
      @mathina  8 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக

  • @ramakrishnans3277
    @ramakrishnans3277 3 หลายเดือนก่อน

    ஓம் சிவாய நமக ஓம் அகத்தீஸ்வராய நமக ❤

  • @g.roshanthroshanthg-6alpha368
    @g.roshanthroshanthg-6alpha368 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா🙏

  • @saravanansara7824
    @saravanansara7824 2 หลายเดือนก่อน

    ஓம்நமசிவாயபோற்றிஓம்நமசிவாயபோற்றி

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @kds2707
    @kds2707 7 หลายเดือนก่อน

    Om Namashivaya
    Har Har Mahadev

  • @aprakash7599
    @aprakash7599 11 หลายเดือนก่อน

    நமசிவாய வாழ்க

  • @Ramanichandranc
    @Ramanichandranc ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏 om namachivaya om

  • @narpavithangam8542
    @narpavithangam8542 4 หลายเดือนก่อน +1

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +1

    அருள்மிகு திரிபுரசுந்தரி வடிவாம்பாள் உடனமர் கோடீஸ்வரரே போற்றி ஓம்

  • @mohanambalselvarathinam5681
    @mohanambalselvarathinam5681 ปีที่แล้ว +1

    Arumayana koil anal pokkuvarathu vasadhihal adiham illai

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 4 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @JayanthiRuthma
    @JayanthiRuthma 3 หลายเดือนก่อน +1

    Nandriya Shivay Namah 😂

  • @subramaniang7512
    @subramaniang7512 ปีที่แล้ว +3

    correct location ? where is it ? route map please

    • @mathina
      @mathina  ปีที่แล้ว

      Check description details available and temple Google map location available

  • @JayanthiRuthma
    @JayanthiRuthma 3 หลายเดือนก่อน

    Na 37:09

  • @skytv6624
    @skytv6624 11 หลายเดือนก่อน

    அப்பா அம்மா...

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram ปีที่แล้ว

    Om namasivaya

  • @manickaraj6998
    @manickaraj6998 ปีที่แล้ว

    Yessuppar

  • @d.thumilan3985
    @d.thumilan3985 ปีที่แล้ว +1

    Hi sir😊
    Super sir😊

  • @sundaramoorthy2994yourage
    @sundaramoorthy2994yourage ปีที่แล้ว +1

    Virinjipuram easwaran Kovil padam vendum virinjipuram

  • @user-dd2go9yh4h
    @user-dd2go9yh4h 8 หลายเดือนก่อน

    As somebody said pl tell if there is any place to stay overnight in thirukodikaval that I can enjoy this temple fully.. I am 84 hrs old so one day not sufficient.. joint pains not able to walk fast.

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 2 หลายเดือนก่อน

      Ayya, you can stay in Kumbakonam. In thirukodikaval temple area there is no facilities for night stay.

  • @manickaraj6998
    @manickaraj6998 ปีที่แล้ว

    21:46 21:58

  • @saanpilmanimaransaanpilman7043
    @saanpilmanimaransaanpilman7043 ปีที่แล้ว

    🙏🌷🙏

  • @yummymahasamayalandlifesty6469
    @yummymahasamayalandlifesty6469 ปีที่แล้ว

    Anga night stay panna room or pathroom speciality iruka please tell me

    • @mathina
      @mathina  ปีที่แล้ว

      No stay at Kumbakonam here no facilities

  • @nesan100
    @nesan100 11 หลายเดือนก่อน +1

    கோவிலில் எமதர்மன் என்று சொன்னீர் அது எமதர்மன் இல்லை தமிழ் பேரரசன் இராசராச சோழன்!!!!

    • @mathina
      @mathina  11 หลายเดือนก่อน +1

      நான் சொல்லவில்லை கோயிலில் எமதர்மன் என்று பதாகை வைக்கப்பட்டுள்ளது கோயிலில் இதை தெரியப்படுத்துங்கள் நன்றி 🙏

    • @nesan100
      @nesan100 11 หลายเดือนก่อน +2

      @@mathina தொல்லியல் ஆய்வாளர் ஐயா தெய்வநாயகம் மற்றும் மன்னன் மன்னர் இதை வெளி படுத்தியுள்ளார்கள் !! நன்றி

    • @mathina
      @mathina  11 หลายเดือนก่อน

      தகவலுக்கு ரொம்ப நன்றி இதை ஆலய நிர்வாகத்தில் சொன்னால் அவர்கள் பதாகையை மாற்றி வைப்பார்கள் அனைவருக்கும் பயன் அளிக்கும் 🙏🙏🙏

  • @jphairoil
    @jphairoil ปีที่แล้ว +1

    🙏🙏🙏