திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் கோயில் மாங்கல்ய பிரசாதம் தந்து மாங்கல்ய தோஷம் நீக்கும் மங்களாம்பிகை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
    பிராணநாதேஸ்வரர் திருக்கோயில்
    திருமங்கலகுடி(38/274)
    மூலவர் : பிராணநாதேசுவரர்,
    பிராணவரதேஸ்வரர்
    அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
    தல விருட்சம் : கோங்கு, இலவு(வெள்ளெருக்கு)
    தீர்த்தம் : மங்களதீர்த்தம் (காவிரி)
    புராண பெயர் : திருமங்கலக்குடி
    ஊர் : திருமங்கலக்குடி
    மாவட்டம் : தஞ்சாவூர்...
    பாடியவர்கள்:
    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
    தேவாரப்பதிகம்
    பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந்து ஏத்திட வலியும் வாளொடு நாள்கொடுத்தான் மங்கலக்குடிப் புலியின் ஆடையின் னானடி ஏத்திடும் புண்ணியர் மலியும் வானுலகம் புகவல்லவர் காண்மினே.
    திருஞானசம்பந்தர்
    தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 38வது தலம்.

    சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 38 வது தேவாரத்தலம் ஆகும்.
    பிரார்த்தனை
    நவகிரக தலங்களில் சூரிய தலமான சூரியனார் கோயிலுக்கு செல்லும் முன்பு இத்தலத்துக்கு வந்து வழிபட வேண்டும் என்பது முக்கியமாதலால் நவகிரக தோஷமுள்ள பக்தர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் செல்கின்றனர். நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், சத்ருபயம்(எதிரிகள் பயம்) நீக்கம்பெறல், திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.
    நேர்த்திக்கடன்
    தொடர்ந்து பதினொன்று ஞாயிற்றுக் கிழமைகள் மதியம் 12 மணிக்கும் 12.30 க்கும் இடையில் வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் நைவேத்தியம் செய்து அங்கு கோயில் பிரகாரத்தில் நடைபெறும் வழிபாடுகளிலும் பங்கு பெற வேண்டும். இப்படி செய்தால் நவகிரக தோஷம்,எல்லாவிதமான வியாதிகளிலிருந்தும் விடுபடலாம். தொடர்ந்து ஐந்து வெள்ளிக் கிழமைகள் மங்களாம்பிகையை ஆராதிக்கும் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் ராகு, கேது சனி முதலிய கிரக தோஷங்களும் விலகி திருமணத்திற்கு உரிய தடைகளும் நீங்கி மாங்கல்ய பாக்கியம் உண்டாகும்.
    தலபெருமை
    பஞ்ச மங்கள ஷேத்திரம் இத்தலம் பஞ்ச மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
    1. இந்த ஊரின் பெயர் மங்கலக்குடி,
    2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை,
    3. இக்கோயில் விமானம் மங்கள விமானம்
    4. இத்தலத்தின் தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம்,
    5. இத்தலத்து விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
    எருக்கு இலையில் தயிர் சாத பிரசாதம்:
    நவக்கிரகங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர் சாத நைவேத்யம் படைத்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இக்கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உச்சிகால பூஜையின்போது, உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.
    பித்ரு தோஷம் (முன்னோர்களுக்கு முறையான தர்ப்பணம் போன்ற சடங்குகள் செய்யாதவர்கள்) உள்ளவர்கள் சுவாமிக்கு தயிர்சாத நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.
    தாலி தரும் தாய்
    அம்பிகை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளே இங்கு வரப்பிரசாதியாவாள். இவளது பெயரிலேயே கோயிலும் அழைக்கப்படுகிறது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு, இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்டகாலம் தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை. இந்த அம்பிகை தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக இருந்து அருளுகிறாள். சுமங்கலிப்பெண்கள், அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
    தலவரலாறு
    பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார். கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது.
    ஊரின் எல்லைக்கு வரும்போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலில் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத்தருமாறு வேண்டினார்.அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது.அதுபடி மந்திரி உயிர் திரும்பபெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள பிம்பமானது பிராணநாதேசுவரன் (ஜீவதாயகன்)என்ற பெயரால் அழைக்கப்பெற்றார். கணவர் உயிரை தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள்.
    இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளியதாக வரலாறு கூறுகிறது.
    அமைவிடம்
    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள ஆடுதுறை வரை சென்று அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள திருமங்கலங்குடி செல்ல ஆட்டோ வசதி உள்ளது. இந்த தலத்தை தரிசனம் செய்த பின் தான் சூரியனார் கோவில் செல்ல வேண்டும்.
    ஆலய அலுவலக தொலைபேசி எண்
    9791481880
    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    7994347966
    கோயில் Google map link
    maps.app.goo.g...
    கஞ்சனூர் சுக்கிரன் கோயில் தரிசனம்
    • கஞ்சனூர் சுக்கிரன் கோய...
    if you want to support us via UPI id
    9655896987@ybl
    Join this channel to get access to perks:
    / @mathina
    தமிழ்

ความคิดเห็น • 34

  • @dhanusaicreations
    @dhanusaicreations 2 หลายเดือนก่อน +4

    விரிவான மற்றும் மிக தெளிவான விளக்கம் நேரில் சென்று பார்த்தது போல் திருப்தியை கொடுக்கிறது மிக்க நன்றிகள்🙏🙏🙏
    வாழ்க வளமுடன்💐💐💐 சகோதரரே💐💐💐

    • @mathina
      @mathina  2 หลายเดือนก่อน +1

      🙏

  • @ajeedev6503
    @ajeedev6503 9 หลายเดือนก่อน +6

    ஐயா ரொம்ப நன்றி நேற்று சூரிய நாராயனார் கோவிலுக்கு செல்ல இங்கு வந்து வழிபட்டு சென்றேன். உங்கள் காணொளி மூலம் தான் முழுமையாக வழிபட்டேன் நன்றி ஐயா.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +11

    அற்புதமான பதிவு நேரில் சென்று தரிசனம் செய்த மாதிரி இருந்தது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்கள் மூலம் பல ஆலயங்களை தரிசனம் செய்ய ஆவலாக உள்ளேன் வாழ்க வளமுடன் சார் 🙏

  • @lmchannel2779
    @lmchannel2779 9 หลายเดือนก่อน +4

    தங்களின் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிவபெருமானின் பரிபூரண ஆசி உங்களுக்கு இருக்கிறது.

  • @shanmugamsaravanakumar5568
    @shanmugamsaravanakumar5568 ปีที่แล้ว +8

    தஞ்சை அடுத்த சூரக்கோட்டையில் சுத்தரத்னேஸ்வரர் 2000ஆண்டு பழைய சிவன் கோவில்...பலர் அறியாத கோவில்... video pls

  • @sundarvega
    @sundarvega 4 หลายเดือนก่อน +2

    Kodana kodi nanri

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 5 หลายเดือนก่อน +2

    Super thanks❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +3

    🙏🌷🍀சிவாய நம🌿📿🌹💦

  • @skytv6624
    @skytv6624 ปีที่แล้ว +2

    நன்றி ஜயா

  • @narayanannarasimhachari5499
    @narayanannarasimhachari5499 3 หลายเดือนก่อน +1

    Video about panchavarnaswami kovil, woraiyur, trichy-3 please

  • @skytv6624
    @skytv6624 ปีที่แล้ว +2

    அப்பா அம்மா

  • @narayanannarasimhachari5499
    @narayanannarasimhachari5499 3 หลายเดือนก่อน +1

    Video about nachiar kovil, woraiyur, trichy-3please

  • @kalakala9191
    @kalakala9191 ปีที่แล้ว +1

    Super, vazhgavalamuden

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 ปีที่แล้ว +2

    Super sir

  • @VaishnaviRajendran-ex2of
    @VaishnaviRajendran-ex2of ปีที่แล้ว +1

    Congratulations Anna Continue your Journey Super Video Anna Super Thanks Anna

  • @sivadevotional370
    @sivadevotional370 ปีที่แล้ว +1

    Thanks very much for your great service Sir🙏

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 9 หลายเดือนก่อน +1

    Om namasivaya

  • @fineconspatentoffice
    @fineconspatentoffice 2 หลายเดือนก่อน +1

    bro saturday vanthu kalyana parigaram seyallama sollunga cmy sollunga bro

    • @mathina
      @mathina  2 หลายเดือนก่อน

      Please check description temple management contact number available contact their for this kind of doubt

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthikKarthik-vi6zd
    @KarthikKarthik-vi6zd 9 วันที่ผ่านมา

    aptpgavandam adraes pls

    • @mathina
      @mathina  9 วันที่ผ่านมา

      Please check the description

  • @sumeshsenguttuvan1931
    @sumeshsenguttuvan1931 10 หลายเดือนก่อน +1

    Uchikaalai means what time? Sunday?

    • @mathina
      @mathina  10 หลายเดือนก่อน

      12 Pm

  • @d.thumilan3985
    @d.thumilan3985 ปีที่แล้ว +1

    Hi sir😊
    Kindly tell the opening and closing timing of the temple sir 😊

    • @mathina
      @mathina  ปีที่แล้ว +2

      காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    • @d.thumilan3985
      @d.thumilan3985 ปีที่แล้ว

      ​@@mathinathank you sir😊

  • @dharmaraj7167
    @dharmaraj7167 27 วันที่ผ่านมา

    ஆண்கள் போகலாமா

    • @mathina
      @mathina  27 วันที่ผ่านมา +1

      போகலாம்

  • @sriramr599
    @sriramr599 3 หลายเดือนก่อน +2

    Please send contact number. From mayavaram how to go

    • @mathina
      @mathina  3 หลายเดือนก่อน

      Check Description all the details available in description