வணக்கம் நண்பர்களே! காணொளியை முழுமையாக பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை, கருத்திட முன் அது சம்பந்தமாக காணொளியில் செல்லியுள்ளாரா என்னு கொஞ்சம் சுத்தி பார்த்து விட்டு கருத்திடவும். பலர் என்னிடம் சகிந்தன் ஏன் மீண்டும் வந்தார் என்று கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்காக அவரின் தனது தனிப்பட்ட அனுபவக் கருத்தை தான் இந்த காணொளியில் பதிவுசெய்துள்ளேன். 7:26 23:43 23:52 50:25 51:07 8:18 இரண்டு தம்பியும் Visa விண்ணப்பம் போட்டார்கள், சகிந்தனுக்கு தான் கிடைத்தது. ஜெனோஜனுக்கு கிடைக்கவில்லை (அவருக்கு மீள விண்ணப்பித்திருக்கிறார்) . சகிந்தன் போகும் போது இருந்த மன நிலை அங்கு போனவுடன் அப்படியே மாறிவிட்டார். மீண்டும் வரப்போவதாக சொன்னார், நான் அறிவுரை சொன்னேன். அவர் கேட்கவில்லை. 10 வருட visa இருக்கு தானே அங்கு வந்து முயற்றி செய்து பார்க்கிறேன் இன்லை என்றால் மீண்டும் கனடா செல்வதாக சொன்னார். அதனால் தம்பியாக இருந்தாலும் ஒரு அளவுக்கு பின் அவரை அழுத்தம் கொடுத்து அங்கு வாழ வைக்கமுடியாது. அவரின் விருப்பம் படியே செய்யச் சொன்னேன். ( முன்னொரு முறை அவர் எனக்கு அனுப்பிய தகவலுக்கு எனது பதில் - th-cam.com/video/A-qgP2AbBLE/w-d-xo.html ) ஜெனோஜனுக்கு மீள் விண்ணப்பத்தில் Visa கிடைத்தால் அவர் அங்கு சென்று வாழ்வதா இல்லை என்றால் / திரும்பி வருவதா என்று அவர் தான் முடிவு எடுக்கப் போறார். அதே போல நான் உங்களை வெளிநாட்டுக்கு போங்கள் என்றோ போக வேண்டாம் என்றோ Visit Visa-வில் போனவர்களை திரும்பி வாருங்கள் என்றோ சொல்லவில்லை. (சொன்னாலும் நான் சொல்வதை யாரும் கேட்கப்போவது இல்லை) நான் ஊரில் வாழலாம் என்று சொல்கிறேனே தவிர கட்டாயம் வாழுங்கள் என்று சொல்லவில்லை (சொன்னாலும் நான் சொல்வதை யாரும் கேட்கப்போவது இல்லை) ஊரில் வாழலாம் என்று சொல்வது தவறு இல்லை என்று 100% நம்புகிறேன். பலர் என்னிடம் சகிந்தன் ஏன் மீண்டும் வந்தார் என்று கேள்வி எழுப்பியதால். அவர்களுக்காக சகிந்தனின் தனது தனிப்பட்ட அனுபவக் கருத்தை பதிவு செய்தேன். அவருக்கு கனடா வாழ்க்கை ஒத்து வரவில்லை போலும் அதனால் வந்துள்ளார். இங்கு 6 மாதம் முயற்சி செய்து பார்த்து விட்டு இங்கு உழைக்க முடியாவிட்டால், மீண்டும் போவேன் என்னு தான் சொல்லியுள்ளார். 51:01 🇨🇦கனடாக்கு போக வேண்டாம் என்று நான் சொல்லவில்லை th-cam.com/video/kupUk5VlYiI/w-d-xo.html நன்றி. தட்சணாமூர்த்தி பவனீசன்
I am working as IT engineer in Colombo. It is highly paid job with good quality life Just finish python course, then join small IT job. After 2 years you will have great life
தம்பி இந்த காணொளி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! வெளிநாட்டு வாழ்க்கை இப்படித்தான்! நூற்றுக்கு நாறு வீதம் முற்றிலும் உண்மை! எமது நாட்டைப்போல் என்றும் வராது! எல்லா வளமும் இருந்து நல்ல அறிவாற்றலுடன் வாழக் கூடியவர்கள் எமது நாட்டை நேசியுங்கள்! முற்றிலும் யதார்த்தமான காணொளி! உங்கள் நேர்காணலுக்கு மிக்க நன்றிகள்! வாழ்க வளர்க!❤❤❤👍🙏
உடலை வருத்தி உழைக்க கள்ளப்பட்டு உறவுகள் பணத்தில் enjoy பண்ணிக்கொண்டு இருப்பவர்கள் கனடா வந்தால் மிகவும் சிரமம்தான்.... தனது உழைப்பை மட்டுமே நம்பி எந்த வேலை ஆனாலும் செய்வேன் எனும் மன தைரியத்துடன் வருவோர்க்கு கனடா சொர்க்கமே... கனடாவில் கஷ்டப்படாமல் காசு புடுங்கினம் எங்களுக்கும் தரலாம் தானே என்று யோசிப்போர்கும், கனடா போனால் நோகாமல் வாளியில் காசு அள்ளலாம் என நினைத்தவர்களுக்கும் கனடா எப்பிடி இருக்கும் என்று தம்பி சொல்லுவார். கொஞ்சநாள் தம்பி winter க்கும் நின்று ஒரு factory வேலைக்கும் போயிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
வெளிநாட்டில் வாழ்வதென்றல் வேலை செய்ய வேண்டும் வேலை செய்தல் உடம்பு நோகும், வேர்க்கும் ஆனால் யாழ்பாணத்தில் இப்போது நிறைய இலவசம் (பிறந்தாள் பரிசு .வெளிநாட்டு காசு) எனவே யாழில் நோகாமல் நொங்கு குடிக்க தான் நிறையப் பேர் திரினும்😂
வெளிநாட்டில் எல்லோரும் உழைக்கின்றார்களா? எத்தனை பேர் gouv. benefits ல் வாழ்கின்றார்கள்? அப்படி தான் இப்போது சிறு பகுதியினர் செய்யும் பிழைகளை முழுவதுமாக சுமத்துவது பிழை. நாம் அனுப்பினோம். நமது அடுத்த சந்ததி அனுப்பவில்லை நீங்கள் சொல்லும் நிலமை முடிவுக்கு வருகின்றது.
நல்ல முயற்சி இலங்கை நல்ல நாடு நல்ல வாழ்கை அரசியல் மட்டும் இன வதம் மதவதம் இல்லாமல் இருக்கதால் மட்டும் தம்பி சொன்னது வெளிநாட்ல இருக்கின்ற அடுத்த தலைமுறை பிள்ளைகள் தமிழ் இல்லாமலே போய்விடும் அது தான் உண்மை
தற்போதய நிலமை வேறு … வேலை வாய்ப்பு , வாடகை , வட்டிவீதம் .. பொருட்கள் அதிகூடியவிலை .. இது தான் நிஜம் .. 5 வருடங்களுக்கு முன் உலகெங்கும் நிலமையே வேறு.. அதுதான் கனடாவிலும் நடக்குது .. தம்பியோ, இப்பவருபவர்களுக்கு இது சரியான நேரம் இல்லை …💯
கனடாவில் படிப்பு மருத்துவம் மிகச் சிறப்பு. கஸ்ரப் பட்டு உழைச்சு சிக்கனமாக செலவு செய்து, பகட்டு வாழ்வு வாழ விரும்பாது இருக்கும் குடும்பம் நிம்மதியா வாழக் கூடிய ஒரு சிறந்த நாடு தான் கனடா 🇨🇦❤🇨🇦
எனது பெரியம்மா 2010 இல் கனடாவில் செய்த தவறான அறுவைச்சிகிச்சையாலும் வைத்தியரின் அசண்டயீனத்தாலும் இறந்தார். இந்தியாவில் இந்த அறுவைச்சிகிச்சையை மேற்கொண்டிருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.
தம்பி நீங்க நல்ல முடிவுஎடுத்துள்ளீங்கள் தம்பி, மனமகிழ்ச்சி முகமகிழ்ச்சியைத்தரும் தம்பி சொல்வதெல்லாம் உண்மைதான் செலவுகள் தம்பி சந்தோஷ்சமாக சொந்தநாட்டில் தொழில் செய்யவும், வாழ்த்துக்கள்
அண்ணாவையும்,தம்பியையும் ஒரு காணொளியில் பார்த்ததும்,இருவரும் தோட்டம் செய்யும் முயற்ச்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள். கனடா அனுபவம் அருமை.( இக்கரைக்கு அக்கரைப்பச்சை) கனடா விசிட் விசாவில் 06 மாதம் தங்கலாம். இன்னும் ஒரு 06 மாதம் நீங்கள் அங்கு தங்கலாம். (அதற்கு நீங்கள் சரியான காரணத்தை குடிவரவு அதிகாரிக்கு தெரியப்படித்தி அவர்கள் உங்கள் காரணம் உறுதி படித்தினால் மட்டுமே!)
இப்படி சும்மா அடித்து விட வேண்டாம் நல்ல வருமானம் இருந்தால் நல்ல வாழ்க்கை இது இலங்கைக்கும் பொருந்தும் இங்கு லட்சத்தில் மாதம் உழைப்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறனர் அதுவும் அடங்காமல் கிளம்புறவர்கள் போரசைகாரர்களாக அல்லது சரியான நிதி முகாமைத்துவம் தெரியாதவர்களாக இருப்பார்கள்
கனடா மிகச்சிறந்த நாடு 31 வருடவாழ்ந்து இப்போது தாய்நாட்டில் நிற்கிறேன்ஆறுமாதத்தில் கண்டிப்பாய் போயேஆகணும் என்னைப்பொறுத்தவரைபிறந்தநாட்டையும் வாழ்ந்துகொண்டிருக்கும் நாட்டையும் நேசிக்கிறேன் அங்கே பிறந்த எமதுபிள்ளைகளுக்குஆங்கிலம் தாய்மொழியாய்இருந்தாலும் தமிழ் நன்றாய் கதைப்பார்கள்
We always think about our Jaffna even though 40 years in this Beautiful country the mind still begs to be in our golden village அதுதான் மண் வாசனை வேறு எதுவும் இல்லை நாம் வேறு வழியின்றி இங்கு வந்தோம் அவ்வளவுதான்
இது எல்லாம் பழைய கதை ஒருவருக்கு புரோக்கர் வேலை தெரிந்தால் அங்கு ஆங்கிலம் வேண்டும் ஆனால் இங்கு அது தெரியாமல் பல லட்சம் உழைப்பார்கள் அதை விட கனடாவில் எல்லா வேலைகளும் licence வேண்டும் அதற்கு மொழி திறன் மற்றும் வேலை பயிற்சி வேண்டும். அதனால் இப்படி கூற வேண்டாம் அங்கு நாளைக்கு 12 மணித்தியாலயம் கூலி வேலை செய்தாலும் சில நூறு டொலர் உழைத்து குடும்பத்தை பார்த்து வீடு வாங்குவது கனவிலும் கிடையாது. சொந்த வீடு வாங்க முடியாத நாடு என்றால் அது எப்படி வாழ்க்கை என்று என நினைத்து பாருங்கள்
இருவரினது சம்பாசனையும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது. உங்கள் தம்பி சொல்வது முற்றிலும் உண்மை. எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா? என்ற இளையராசாவின் பாடல் நினைவுக்கு வந்தது. நன்றி.
படித்து படிப்பிற்கு தகுந்த வேலை என்றால் வெளிநாட்டு வாழ்க்கை அவ்வளவு சிரமம் இல்லை. அரைகுறையாக படித்து கனடாவில் தமிழ் கடைகளில் , ஓட்டல்களில் வேலை செய்தால் வாழ்வு நரகம் தான்
தம்பிக்கு அங்க இருப்பதற்குரிய சரியான முறை அமையவில்லை! அமைந்து இருந்தால் விசிட்விசாவில் வெற்றிகண்ட மனிதர் என்று போட்டு இருப்பீயள்! இப்ப ஒன்றும் சரி வரவில்லை திரும்பிவந்துட்டு நல்ல கதை!!!
You are right brother do not worry about comments,we are living in Canada for 40 years but now Canadian life is very hard,we love you do not worry about anything
எட்டா கனி புளிக்கும் என்பது சரி தான் அங்கெ தங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் தாங்காமல் வந்திருப்பாரா கிடைக்கவில்லை திரும்ப வந்து விடடார் அது தான் உன்மை சரி நீங்க சுத்துங்க ரீல் அஹ 😂😂😂😂
தம்பி சொல்வது 100 சதவீதம் உண்மை, கனடா சொர்க்க பூமி, ஆனால் உடல் உழைப்பு இருந்தால் வசதியாக வாழலாம், ஆனால் ஓய்வு எடுக்காமல் உழைத்துக்கொண்டே இருந்தால் luxury life, எங்கள் பிள்ளைகள் சொகுசாக வாழ்வதற்கு காரணம் எங்கள் தியாகங்கள், ஆனால் சந்தோசம் எம்மண்ணில் தான், உழைப்பவன் எங்கேயும் உழைக்கலாம்நான் 30 வருடங்களாக கனடாவில் இருக்கின்றேன்
If you are really educated and speak the language, their savivel is easier than others . Sayanthan, please go for English classes it will help your future.
Education is important. My friend came here Canada in 2019 with visitors visa for 10 years, stayed 3 three weeks. She has good job in Sri Lanka with reasonable salary. Nowadays, our people with good education and are in all profession... even in parliament. Lot of jobs opportunities available that's why they bringing people from other counties. But you need to have good education with job experience. Even I know some people came and got great jobs with very good salary.
எட்டா கனி புளிக்கும். இதுவெல்லாம் உங்கள் குடும்பத்திற்குள் பேச வேண்டிய தனிபட்ட விடயம் மற்றும் உங்கள் தனிப்பட்ட தேவை சம்பந்தப்பட்டது. எல்லோருக்கும் பொதுவான விடயமல்ல. உங்கள் உறவுகளின் தியாகம் உங்களை இப்படி பேச வைக்கிறது.
Ivarkalin video nan enjoy panni paarpen. Aanaal ivarkalukku sila visayangal puriya venum. Naangal velinaadu vantha kaalathila (90s) engalukku return panra option eh illa. Agency kooda varum pothu inga vantha case accept pannu maddum we are stuck here. Nanga etho onda inga seithu survive panra ondu thaan option. This made our time people more stronger and hard workers. New generation kids from Srilanka don’t do any hard work. They are lazy . This is the #1 problem. They need great leaders first.
தம்பிக்கு கனடா வந்து போனபடியால் கனடா வாழ்கை எப்படி என்று விழங்கி இருக்கும் என்னும் கொஞ்சநாள் நின்றிருந்தால் எப்படி குளிர்காலம் இரிக்கும் என்றுஉணர்ந்திருக்கலாம்
🎄Very nice Pavaneshan He came to Canada and enjoyed very well because he met to very nice people and I think He did not spent any money from his own money, I watch his You tube also most of them he did good job. But I did not see him, I am watching your all of the you tube, Good luck and take care.
இலங்கையில் உள்ளதைப் போல் வெளிநாட்டு வாழ்க்கையில்லை. எல்லா புலம்பெயர் நாடுகளிலிருந்தும் ஏதோ ஒரு உறவு அல்லது யாரோ ஒருவர் உடலை வருத்தி பணத்தை அனுப்பிக் கொண்டிருக்கிறார் இங்கே சொகுசாக மோட்டார் சைக்கிளில் ஊரைச் சுற்றலாம்,முஸ்லிம்கள்,இந்தியர்கள் சாப்பாட்டுக் கடைகளில் பல ஆயிரங்களைக் கொடுத்து விதம் விதமாக சாப்பிடலாம்.ஊரைச் சுற்றி கோயில்கள். மாறி மாறி.திருவிழாக்கள் அது முடிய பக்கத்து ஊர்க் கோயில் திருவிழாக்கள்,சினிமா,மாதமொரு முறை இந்தியக் கூத்தாடிகள் வந்து குஷிப் படுத்திக் கொண்டிருக்கின்றனர் ஆயிரக் கணக்கில் கொடுத்து டிக்கெட் எடுத்து அனுபவிக்கலாம், பத்துக்கு இரண்டுதான் படித்து தேறி வேலைக்குப் போகிறது மற்றது வெட்டியாக ஊரைச் சுத்துது. கேரளக் கஞ்சாவின் புகையும்,செட்டிநாடு பிரியாணி சுவையும்,கூத்தாடிகள் சுகமும் கண்ட யாழ்ப்பாணிகள் இனி ஏன் போகணும் வெளிநாடு.? 😂😂😂
@@SMat-tc4hr "நுனிப்புல் மேய்ந்த மாடு "என்றொரு பழமொழி உண்டு நண்பரே. பவநீசன் பதிவுகள் பலவற்றைப் பார்த்துள்ளேன் பாராடியுமுள்ளேன். தரமான ஒளிப்பதிவு, ஒலிப் பதிவு,எடிட்டிங் ஆக்கபூர்வமான பதிவுகள்,இலங்கையின் இயற்கையை அழகாக படம்பிடிக்கும் திறன்,நமது வரலாற்றின் காயங்கள் என்று திறமையான படைப்புக்களை தரும் நல்லதொரு TH-camr. ஆனாலும்,இந்தப் பதிவு ஆது பற்றிய முழுமையான அறிவும், தெளிவுமில்லாமல் ஒரு சின்னபையன் சொல்வதை வைத்து நக்கலும், நையாண்டியுமாக புலம்பெயர் தமிழர்களை சித்தரிப்பது போல் எனக்குத் தோன்றியது. அதிகமான நமது TH-camrs நமது புலம்பெயர் உறவுகளை கொச்சைப்படுத்துவது போல் பதிவுகளை போடுவது கண்டிக்கத்தக்கது. இன்று இவரின் தம்பி கண்டது போலில்லை முப்பது ஆண்டுகளின் முன்னர் அவர்கள் போன காலம்.வெறும் கையுடன் யாரின் துணையுமில்லமல் அங்கே போய் தாமாகவே கடுமையாக உழைத்து,போராடி,பல தியாகங்களை செய்து இன்று இந்த நிலைக்கு வந்துள்ளார்கள். இன்று தாயகத்தில் வாழும் தமிழர்களின் அனேகர் அவர்களின் தயவில்தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதே TH-camr கூட. புலம்பெயர் தமிழர்களின் சாதனைகளை இவரின் தம்பி காணவில்லை போலும். அவர்களின் அடுத்த தலைமுறை இன்று புலம்பெயர் நாடுகளில் கல்வியில்,செல்வத்தில் மேலோங்கி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். நம்மை நாமே இழிவு படுத்துவது போல் இப்படியான பதிவுகளை போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நமது அடுத்த தலைமுறையை ஊக்கு வுக்கும் வகையில் அவர்களின் சாதனைகளை எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். உங்களால் அங்கே சாதிக்க முடியுமெனில் எதற்க்காக எல்லா பல TH-camrs புலம்பெயர் தமிழர்களிடம் கையேந்துகிறார்கள்? உங்களால் முடியவில்லை என்பதுதானே அதன் உண்மை. உள்ளூரில் உழாத மாடு வெளியூர் போனால் உழுமா? சமூக வலைத்தளங்களில் தான் தோன்றித்தனமாக கருத்துக்களை பதிவிடக் கூடாது. அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் தம்பி சொல்வது உண்மை தான் ஒளிப்பதிவு நேரம்கூடவாக இருக்குறதுஇந்த பதிவை இரண்டாக பிரித்து போட்டு இருக்கலாம் நண்றி ஏன் எண்டால்கனடாவில்சரியான வேலை பளு நேரம்போதாமை தான் காரணம் தொடர்ந்து பாக்க முடியவில்லை இதர்க்கு உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்
He is a kid now on his age his thinking respectable. But reality once he mature he will use this visa and his life in Canada. But dam ture he said if we earn good in srilanka we don't have to go any of these machine life. Our life based on situations and money 💰
Take everything with positive approach we still don’t have any political freedom in our own land still feel like a second class citizens.And been treated like that since independence days. Until we get all freedom as any other country ( Indian.USA ,Canada, Australia and all European countries there is equal opportunity and feel respected as a human being.) So I recommend young generations to move out unless you have good education and jobs or own business to make your life comfortable besides all political issues. Understand home is home still missing Jaffna and always I am a Jaffna podyan than . But grateful to have my education and good jobs with great earnings. Very very comfortable and independent life.Think wise .
கழிவு நீருக்கு நாங்கள் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாக பணம் செலுத்த வேண்டியுள்ளது, ஏனெனில் அந்த நீர் ஏரியில் உள்ள ஊமைகளை சுத்தம் செய்து சுத்தப்படுத்த வேண்டிய ஒரு வசதிக்கு செல்கிறது.
அந்த தம்பி நன்றாக கனடா வாழ் தமிழ் மக்களை பற்றி(100வீதம்) தெரிந்து கொண்டுள்ளார். உழைப்பாளிகளையும் ,முதலாளிகளையும்,வரும்கால தமிழர்களையும் ,முழுமையாக நம் தமிழர்களின் கனடா வாழ்க்கை முறை பற்றியும் திறம்படக் கூறியுள்ளார். ஆனால் பகட்டாக போலியாக வாழ்பவர்களை பற்றி கூற விரும்பவில்லைப்போலும்.... உண்மையில் உண்மைதான் நன்றாக யாழ்க்குடாவில் சம்பாரிக்கத்தெரிந்தவர்கள் இங்கு வரத்தேவையில்லை. விரும்பினால் இங்கு வந்து உழைக்கலாம்.ஆனால் திரும்பி சொந்த மண்ணில் வந்து வாழவேண்டுமென உறுதி கொள்ள வேண்டும்.. மொத்தத்தில் தங்கமான மனம் படைத்த தம்பி. வாழ்க வளமுடன்.
இந்த தம்பி, கனடாவில் இருந்த காலத்தில், தான் நேரடியாக கண்ட அனுபவங்கள், சிலருடன் கதைத்தால் கேள்விப்பட்ட விடயங்களை பகிர்ந்துள்ளார். கனடாவின் உள்ள தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்ல வேண்டுமாயின், இங்கு சில வருடங்கள் மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். இங்கு வந்த தமிழர்கள் படித்து பல்கலைகளுக்கு சென்று நல்ல வேலையில் இருக்கிறார்கள். உள்ளார்கள். 99 விகிதமான இங்கு பிறந்த தமிழ் பிள்ளைகளும் சிறு வயதில் வந்த பிள்ளைகளும் நன்றாக படித்து நல்ல துறையில் உள்ளார்கள். எல்லோரும் உபர் (UBER) ஓடுவதில்லை, இப்பொழுது எல்லோரும் கோப்பைகளும் கழுவுவதும் இல்லை, Cleaning job செய்வதும் இல்லை. $15.50 என்பது minimum wage set by province, நீங்கள் இருக்கும் மாகாணங்களைப் பொறுத்தது. இங்கு மணித்தியத்துக்கு 30 டாலரும் 40 நாளில் அதற்கு மேல் உழைப்பவர்களும் இருக்கின்றார்கள் அவர்கள் இருக்கும் துறையை பொறுத்தது. அங்கு வீடு கட்டுபவர்கள் இங்கு வந்து வீடு கட்ட முடியாது, கனடாவில் படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும் அத்துடன் அனுபவம் இருத்தல் வேண்டும். கனடாவில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் உள்ளவர்களே அந்தந்த தொழில்களில் வேலைகள் செய்ய முடியும். கனடாவில் எண்ணுக்கடங்காத ஈழத் தமிழர்கள் இப்படி பல தொழில்களில் உள்ளார்கள். இங்கு தங்கள் முயற்சியால் பல நிறுவனங்களை நிறுவிய பல தொழில் அதிபர்களும் உள்ளார்கள். பேச்சு வார்த்தை சுதந்திரம் உண்டு, மக்கள் எல்லோருக்கும் பாதுகாப்பு உண்டு. காவல்துறையினர் முதல் இருந்து எந்த துறையில் உள்ளவர்களும் காரணம் இன்றி பொது மக்களின் மீது கைவைக்க முடியாது. தவறுதல் செய்தாலும் அவர்களுக்கும் தண்டனை உண்டு, இங்கு இனவெறி பாகுபாடு இல்லை. எல்லா இனமக்களுக்கும் ஒரே சம உரிமைகள் தான். இவர்களைப் பார்த்து இலங்கையில் உள்ள தமிழர்கள் விழித்து எழுதல் வேண்டும். ஆனாலும் எமது ஈழம் என்பது எமது சொர்க்க பூமிதான். எங்களின் கலாச்சாரத்து வாழ்க்கை முறையை இழந்தது எல்லோரும் தவிக்கின்றனர்.
நீங்கள் 25 வருடங்கழுக்கு முன் வந்தவர். கனடாவில் படித்தவர்கள் பெரிய துறையில் இருப்பவர் நிலை வேறு. புதிதாக வந்தவர்கள் வாழ்வது கடினம். இரவும் பகலும் கடினமாக உழைத்தால் மட்டும் வாழலாம்.
உண்மைதான் தம்பி, ஆனால் புதியதாக கனடாவில் குடியேறும் நோக்கில் இங்கு வருபவர்களுக்கு இந்த நிலைமை உண்டு. ஆனால் முன்பு எமது வாழ்க்கை மிகவும் கடினமானது. இலங்கையில் இருந்து வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த உறவுகளுடன் ஒரு அறையில் நான்கு ஐந்து ஆறு நபர்கள் என்று சேர்ந்து வாழ்வோம். அந்தக் காலத்தில் தமிழ் கடைகளும் இல்லை தகுந்த உதவிகளும் இல்லை . ஆனால் இப்பொழுது அப்படியல்ல. ஈழத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட பல உதவிகள் கிடைக்கும். இந்த நிலையிலும் நாங்கள் எங்கள் படிப்பையும் தொடர்ந்தோம். முழு நேர வேலையடன் முழு நேர படிப்பையும் தொடர்ந்தோம். அதனால் எங்கு சென்றாலும் முயற்சி செய்தால் பலனை அடையலாம். இதற்கு காலம் எடுக்கும். ஒரு நாளில் லட்சியத்தை அடைய முடியாது. இப்பொழுது இருக்கும் பொருளாதார நெருக்கடி (recession)கனடாவில் முன்பும் இருந்தது. இது ஒரு சுழற்சி முறையில் வருவது என்று எல்லோருக்கும் தெரிந்ததே.
வணக்கம், தம்பி எனக்கு ஒரு சந்தேகம் தம்பி ஊரில் தானேஇருத்தார் கனடா போகமுன் அப்ப உளைத்துப்பார்கவில்லையா? இவ்வளவு காசயும் சிலவளித்து இப்ப திரும்பிவந்துதான் உளைத்துப்பார்க்கப்போகிறார் போல் நன்று,ஆனால் சிலவுசெய்ததில் ஒரு பயன் தம்பிக்கு ஏற்பட்டுள்ளது கடின உழைப்பு எண்றால் என்னெண்று பார்த்து விளங்கிக்கொண்டுள்ளார். ஆனால் தம்பி திரும்பி கனடா போனால் கடினமா உழைத்து நன்றாகவருவார் அது அவரின் புரிதலில் தெரிகிறது.(கனடாவில் அல்லது ஐரோப்பாவில் மருத்துவம் இலவசம்இல்லை அதற்குரியபணத்தை முன்கூட்டியே ஊதியத்தில் களித்து விடுவார்கள்)
மருத்துவம் இலவசம் இல்லை என்பது சிறிதளவு உண்மை. ஆனால் நாங்கள் ஒரு சிறிய தொகைதான் மருத்துவத்துக்கு கொடுக்கிறம் ஐரோப்பாவில். எடுக்கிறது மலையளவில். கனடாவில் அது கூட இல்லை எனதான் நினைக்கிறேன்.
மிகவும் அருமையான பதிவு நன்றி. ஆனாலும் இவருக்கு எவ்வளவு காலத்தில் விசா கிடைத்தது, எவ்வளவு பணம் செலவாகியது இந்த விளக்கத்தை சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
தம்பி நான் லண்டனில் இருக்கிறேன். சிரிப்பு கலந்த கவலை நீங்கள் செல்வது உண்மை இருந்தாலும் திரும்பி வர முடியாது. எனி ஒரு வாழ்க்கை இலங்கையில் தொடரமுடியாது. பிள்ளைகளுக்கு படிப்பு தரமானதாக இருக்கிறது. தமிழ் பள்ளிகள் நிறைய உள்ளன. பிள்ளை கள் தமிழில் திறமை அடைந்துள்ளன. செலவுகள் தம்பி சென்றது உண்மை.
😂😂😂😂seriously so funny to see both of you, if you have decent job and earning good money no need to think of foreign countries, but for 90s kids who we are effected by war and left from our land yes always missing my land but i can't survive there. I love where i m now, accept the reality of life in Canada 🇨🇦, i have peace and safe life, but work, life is busy non stop.....money only will matter here no sentiment or feelings are second here....but his decisions are stupid. Youngsters are looking comfort life....back home u live 32 to up degrees but here in winter-30 to up that's only different so acceptance is a matter. Canada is a beautiful land..
Dear brothers. நான் 33 வருட கனடா வாழ்க்கை பிள்ளைகள் இங்கு பிறந்தவர்கள் அங்கு இருக்க வரமாட்டார்கள். நாங்கள் Montreal French பிள்ளைகள் தமிழ் ஆங்கிலம பிறெஞ் கதைப்பபார்கள். பிள்ளைகளை விட்டு விட்டு நாங்கள் அங்கு அவர் முடியாது பிற்ளைகளுக்கு அங்கு போய் வர விருப்பம் நன்றி
Please study English course it will be good for your future and so many chances in Canada like a ocean lots fishes you have to work hard And u have to know how to fish.???
Canadian paid 1000 dollars per day if they are CEO,doctors,surgeons,higher officials also senior management and engineers . Enterpuner earn over 10 thousands dollars month
90% உருட்டு தான் , ஆட த்தெரியாதவன் எப்போதும் கூடம் கோணல் என்று தான் சொல்வான். முதலில்சரியாக ஆங்கிலம் உச்சரிக்க பழகவேண்டும், கனடாவில் சென்றும் புட்டும் சாம்பலும் தேடக்கூடாது, முக்கியமாக அங்கு உள்ள தமிழ் கூட்டங்களை சார்ந்து வாழக்கூடாது, சுயமாக , திறமையாக உழைத்தால் கனடா ஒரு அற்புதமான நாடு.
நல்ல பயன் உள்ள கருத்துக்களை பகிர்ந்துள்ளிர்கள் நன்றி தம்பிமார்களே இதில் ஒன்று விளங்ககுடியதாக இருக்குது தம்பி சாகிந்தன் வீட்டில் செல்லமாக கஸ்டம் என்னவென்று தெரியாமல் வளர்ந்த சின்னப் பிள்ளை அதனால் தாய் தந்தை சகோதரம் மற்றும் கூடித் திரிந்த நண்பர்கள் ஆகியோரின் பாசபிணைப்பு காரணந்தான் கனடாவை வெறுப்பதற்கான இதுதான் என்று நினைக்கிறேன் தம்பி அடுத்து நானும் கனடா செல்ல இருக்கிறேன் ஜனவரி மாதமளவில் செல்ல இருக்கிறேன் அவ்வாறு சென்றால் சகிந்தன் மீண்டும் கனடா வந்த நான் சந்திப்பேன் தம்பி நான் இரண்டு பேர் போடு விடியோவையும் விரிம்பிபார்க்கும் நபர் தம்பி
கனடாவில் பணத்தை தவிர என்ற கேள்வி தவறானது. 😂 பணத்தை தவிர மற்ற எல்லாம் பார்க்க கிடைக்கும். ஆனால் பணத்தை இரவும் பகலும் தேடி ஓடி உழைத்தால் பார்த்து ஏங்கும் பலவற்றை வாங்கி அனுபவிக்கலாம். இது தான் உண்மை. நானும் கனடாவில் இருந்து தான் இந்த comment எழுதுகிறேன். May God bless you all. ❤❤❤🎉🎉😊
அக்கரைக்கு இக்கரை பச்சை அங்கிருந்து பார்க்கும் பொழுது இந்தக்கரை மிகவும் பச்சையாக தெரியும் வெளிநாட்டில் இருந்து பார்க்கும் போது தான் எங்கள் நாடு எவ்வளவு சொர்க்கம் என்பது புரியும் நாங்கள் எத்தனையை இழந்துள்ளோம் என்டது புரியும் வெளிநாடு என்றால இயந்திர வாழ்க்கை வேலை. வீடு. வீடூ வேலை இதை தவிர வேறு எதுவுமில்லை நினைத்தவுடன் எதுவும் செய்யலாம் எதுவும் வாங்கலாம் ஊரில் இருப்பவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளை செய்யலாம் சந்தோசத்தை தொலைத்து விட்டு வாழ்கின்றோம் ஊர் நினைவு சொந்த பந்தம் கோவில் குளம் சுத்தமான காற்று நன்மை தீமைகள் திருவிழாக்கள் அனைத்தையும் நினைத்து கவலைப் பட்டுக் கொண்டே வாழ்க்கையை கழிக்க வேண்டியது தான் மொத்தத்தில் வெளிநாட்டு வாழ்க்கை ஒரு இயந்திர வாழ்க்கை
வணக்கம் நண்பர்களே!
காணொளியை முழுமையாக பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை,
கருத்திட முன் அது சம்பந்தமாக காணொளியில் செல்லியுள்ளாரா என்னு கொஞ்சம் சுத்தி பார்த்து விட்டு கருத்திடவும்.
பலர் என்னிடம் சகிந்தன் ஏன் மீண்டும் வந்தார் என்று கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்காக அவரின் தனது தனிப்பட்ட அனுபவக் கருத்தை தான் இந்த காணொளியில் பதிவுசெய்துள்ளேன்.
7:26
23:43
23:52
50:25
51:07
8:18 இரண்டு தம்பியும் Visa விண்ணப்பம் போட்டார்கள், சகிந்தனுக்கு தான் கிடைத்தது. ஜெனோஜனுக்கு கிடைக்கவில்லை (அவருக்கு மீள விண்ணப்பித்திருக்கிறார்) . சகிந்தன் போகும் போது இருந்த மன நிலை அங்கு போனவுடன் அப்படியே மாறிவிட்டார்.
மீண்டும் வரப்போவதாக சொன்னார், நான் அறிவுரை சொன்னேன். அவர் கேட்கவில்லை. 10 வருட visa இருக்கு தானே அங்கு வந்து முயற்றி செய்து பார்க்கிறேன் இன்லை என்றால் மீண்டும் கனடா செல்வதாக சொன்னார். அதனால் தம்பியாக இருந்தாலும் ஒரு அளவுக்கு பின் அவரை அழுத்தம் கொடுத்து அங்கு வாழ வைக்கமுடியாது. அவரின் விருப்பம் படியே செய்யச் சொன்னேன். ( முன்னொரு முறை அவர் எனக்கு அனுப்பிய தகவலுக்கு எனது பதில் - th-cam.com/video/A-qgP2AbBLE/w-d-xo.html )
ஜெனோஜனுக்கு மீள் விண்ணப்பத்தில் Visa கிடைத்தால் அவர் அங்கு சென்று வாழ்வதா இல்லை என்றால் / திரும்பி வருவதா என்று அவர் தான் முடிவு எடுக்கப் போறார்.
அதே போல நான் உங்களை வெளிநாட்டுக்கு போங்கள் என்றோ போக வேண்டாம் என்றோ Visit Visa-வில் போனவர்களை திரும்பி வாருங்கள் என்றோ சொல்லவில்லை. (சொன்னாலும் நான் சொல்வதை யாரும் கேட்கப்போவது இல்லை)
நான் ஊரில் வாழலாம் என்று சொல்கிறேனே தவிர கட்டாயம் வாழுங்கள் என்று சொல்லவில்லை (சொன்னாலும் நான் சொல்வதை யாரும் கேட்கப்போவது இல்லை) ஊரில் வாழலாம் என்று சொல்வது தவறு இல்லை என்று 100% நம்புகிறேன்.
பலர் என்னிடம் சகிந்தன் ஏன் மீண்டும் வந்தார் என்று கேள்வி எழுப்பியதால். அவர்களுக்காக சகிந்தனின் தனது தனிப்பட்ட அனுபவக் கருத்தை பதிவு செய்தேன்.
அவருக்கு கனடா வாழ்க்கை ஒத்து வரவில்லை போலும் அதனால் வந்துள்ளார்.
இங்கு 6 மாதம் முயற்சி செய்து பார்த்து விட்டு இங்கு உழைக்க முடியாவிட்டால்,
மீண்டும் போவேன் என்னு தான் சொல்லியுள்ளார். 51:01
🇨🇦கனடாக்கு போக வேண்டாம் என்று நான் சொல்லவில்லை
th-cam.com/video/kupUk5VlYiI/w-d-xo.html
நன்றி.
தட்சணாமூர்த்தி பவனீசன்
I am working as IT engineer in Colombo. It is highly paid job with good quality life
Just finish python course, then join small IT job. After 2 years you will have great life
தம்பி இந்த காணொளி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! வெளிநாட்டு வாழ்க்கை இப்படித்தான்! நூற்றுக்கு நாறு வீதம் முற்றிலும் உண்மை! எமது நாட்டைப்போல் என்றும் வராது! எல்லா வளமும் இருந்து நல்ல அறிவாற்றலுடன் வாழக் கூடியவர்கள் எமது நாட்டை நேசியுங்கள்! முற்றிலும் யதார்த்தமான காணொளி! உங்கள் நேர்காணலுக்கு மிக்க நன்றிகள்! வாழ்க வளர்க!❤❤❤👍🙏
உடலை வருத்தி உழைக்க கள்ளப்பட்டு உறவுகள் பணத்தில் enjoy பண்ணிக்கொண்டு இருப்பவர்கள் கனடா வந்தால் மிகவும் சிரமம்தான்....
தனது உழைப்பை மட்டுமே நம்பி எந்த வேலை ஆனாலும் செய்வேன் எனும் மன தைரியத்துடன் வருவோர்க்கு கனடா சொர்க்கமே...
கனடாவில் கஷ்டப்படாமல் காசு புடுங்கினம் எங்களுக்கும் தரலாம் தானே என்று யோசிப்போர்கும், கனடா போனால் நோகாமல் வாளியில் காசு அள்ளலாம் என நினைத்தவர்களுக்கும் கனடா எப்பிடி இருக்கும் என்று தம்பி சொல்லுவார்.
கொஞ்சநாள் தம்பி winter க்கும் நின்று ஒரு factory வேலைக்கும் போயிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
Well said 😂😂😂😂😂
100% right
அருமை! நான கனடாவில் 34 வருடங்களை பூர்த்தி செய்துவிட்டேன்.
Ture
Very well said 👏
வெளிநாட்டில் வாழ்வதென்றல் வேலை செய்ய வேண்டும் வேலை செய்தல் உடம்பு நோகும், வேர்க்கும் ஆனால் யாழ்பாணத்தில் இப்போது நிறைய இலவசம் (பிறந்தாள் பரிசு .வெளிநாட்டு காசு) எனவே யாழில் நோகாமல் நொங்கு குடிக்க தான் நிறையப் பேர் திரினும்😂
True
இது தான் உண்மை
True
இங்கு கஷ்ட பட்டு உழைத்து தங்கள் குடும்பத்தை ஒழுங்கா பார்க்காமல் ஊரில் இருக்கு சொந்தங்களுக்கு அனுப்புறது. கடையில் ஓடர் செய்றது சாப்பாடு எல்லாம்
வெளிநாட்டில் எல்லோரும் உழைக்கின்றார்களா? எத்தனை பேர் gouv. benefits ல் வாழ்கின்றார்கள்? அப்படி தான் இப்போது சிறு பகுதியினர் செய்யும் பிழைகளை முழுவதுமாக சுமத்துவது பிழை. நாம் அனுப்பினோம். நமது அடுத்த சந்ததி அனுப்பவில்லை நீங்கள் சொல்லும் நிலமை முடிவுக்கு வருகின்றது.
பவனீசன்
ஊடகத்திற்கு "
"நன்றி.
.
*கனடா ( CANADA ) நாட்டிற்குப் போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு
பயனுள்ள காணொளி"
*வாழ்க வளர்க*
*வாழ்க வளமுடன்*
K.K.N.
நல்ல முயற்சி இலங்கை நல்ல நாடு நல்ல வாழ்கை அரசியல் மட்டும் இன வதம் மதவதம் இல்லாமல் இருக்கதால் மட்டும் தம்பி சொன்னது வெளிநாட்ல இருக்கின்ற அடுத்த தலைமுறை பிள்ளைகள் தமிழ் இல்லாமலே போய்விடும் அது தான் உண்மை
தற்போதய நிலமை வேறு … வேலை வாய்ப்பு , வாடகை , வட்டிவீதம் .. பொருட்கள் அதிகூடியவிலை ..
இது தான் நிஜம் ..
5 வருடங்களுக்கு முன் உலகெங்கும் நிலமையே வேறு.. அதுதான் கனடாவிலும் நடக்குது .. தம்பியோ, இப்பவருபவர்களுக்கு இது சரியான நேரம் இல்லை …💯
கனடாவில் படிப்பு மருத்துவம் மிகச் சிறப்பு. கஸ்ரப் பட்டு உழைச்சு சிக்கனமாக செலவு செய்து, பகட்டு வாழ்வு வாழ விரும்பாது இருக்கும் குடும்பம் நிம்மதியா வாழக் கூடிய ஒரு சிறந்த நாடு தான் கனடா 🇨🇦❤🇨🇦
எனது பெரியம்மா 2010 இல் கனடாவில் செய்த தவறான அறுவைச்சிகிச்சையாலும் வைத்தியரின் அசண்டயீனத்தாலும் இறந்தார். இந்தியாவில் இந்த அறுவைச்சிகிச்சையை மேற்கொண்டிருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.
@@ststharan இந்தியாவிலும் அரைகுறை டொக்டர்ஸ் இருக்கிறார்கள்
தம்பி நீங்க நல்ல முடிவுஎடுத்துள்ளீங்கள் தம்பி, மனமகிழ்ச்சி முகமகிழ்ச்சியைத்தரும் தம்பி சொல்வதெல்லாம் உண்மைதான் செலவுகள் தம்பி சந்தோஷ்சமாக சொந்தநாட்டில் தொழில் செய்யவும், வாழ்த்துக்கள்
Return good idea for U
நல்ல பதிவு. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள், வாழ்க வளமுடன் நலமுடன்.
அண்ணாவையும்,தம்பியையும் ஒரு காணொளியில் பார்த்ததும்,இருவரும் தோட்டம் செய்யும் முயற்ச்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கனடா அனுபவம் அருமை.( இக்கரைக்கு அக்கரைப்பச்சை)
கனடா விசிட் விசாவில் 06 மாதம் தங்கலாம்.
இன்னும் ஒரு 06 மாதம் நீங்கள் அங்கு தங்கலாம். (அதற்கு நீங்கள் சரியான காரணத்தை குடிவரவு அதிகாரிக்கு தெரியப்படித்தி அவர்கள் உங்கள் காரணம் உறுதி படித்தினால் மட்டுமே!)
மிகவும் அருமையான உரையாடல் வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கம் என்றாலும் நம் ஊராகுமா
❤❤
இப்படி சும்மா அடித்து விட வேண்டாம் நல்ல வருமானம் இருந்தால் நல்ல வாழ்க்கை இது இலங்கைக்கும் பொருந்தும் இங்கு லட்சத்தில் மாதம் உழைப்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறனர் அதுவும் அடங்காமல் கிளம்புறவர்கள் போரசைகாரர்களாக அல்லது சரியான நிதி முகாமைத்துவம் தெரியாதவர்களாக இருப்பார்கள்
தம்பியை போல் அனைத்து புலம்பெயர்ந்த உறவுகள் எண்ணமும். இருப்பினும் மெழுகாய் உருகி ஒளி கொடுத்த புலம் பெயர் உறவுகள்
கனடா மிகச்சிறந்த நாடு 31 வருடவாழ்ந்து இப்போது தாய்நாட்டில் நிற்கிறேன்ஆறுமாதத்தில் கண்டிப்பாய் போயேஆகணும் என்னைப்பொறுத்தவரைபிறந்தநாட்டையும் வாழ்ந்துகொண்டிருக்கும் நாட்டையும் நேசிக்கிறேன் அங்கே பிறந்த எமதுபிள்ளைகளுக்குஆங்கிலம் தாய்மொழியாய்இருந்தாலும் தமிழ் நன்றாய் கதைப்பார்கள்
தம்பி நீ சரியா சொல்லிரு என்று உண்மையை பேசினால் போதும் நல்ல விஷயம்தான் ஒரு விடயத்தை பயன்படுத்தி சொல்வதெல்லாம் சரியா இருக்கும் வாழ்த்துக்கள்
We always think about our Jaffna even though 40 years in this Beautiful country the mind still begs to be in our golden village
அதுதான் மண் வாசனை வேறு எதுவும் இல்லை நாம் வேறு வழியின்றி இங்கு வந்தோம் அவ்வளவுதான்
கனடாவில் உழைத்து வாழத் தெரியாதவன் உலகில் எங்கும் உழைத்து வாழ முடியாது. உழைக்காமல் வாழ முடியாது என்பது உண்மை. 😅
True
I am agree
இது எல்லாம் பழைய கதை ஒருவருக்கு புரோக்கர் வேலை தெரிந்தால் அங்கு ஆங்கிலம் வேண்டும் ஆனால் இங்கு அது தெரியாமல் பல லட்சம் உழைப்பார்கள் அதை விட கனடாவில் எல்லா வேலைகளும் licence வேண்டும் அதற்கு மொழி திறன் மற்றும் வேலை பயிற்சி வேண்டும். அதனால் இப்படி கூற வேண்டாம் அங்கு நாளைக்கு 12 மணித்தியாலயம் கூலி வேலை செய்தாலும் சில நூறு டொலர் உழைத்து குடும்பத்தை பார்த்து வீடு வாங்குவது கனவிலும் கிடையாது. சொந்த வீடு வாங்க முடியாத நாடு என்றால் அது எப்படி வாழ்க்கை என்று என நினைத்து பாருங்கள்
கனடா வந்தால் நீங்க் மனிதரல்ல
மாடு
பேய்
நாய்
மாதிரி
வெளிநாட்டில் உழைத்து வாழவில்லை உழைத்து உழைத்து சாகின்றோம். வாழ்க்கையை வாழவில்லை.
உங்கள் அற்புதமான உரையாடல் காலத்தின் தேவை👍
மிகவும் சிறப்பான செயற்பாடு தங்கள் கருத்துப் பகிர்வுகள்.
பவனீசன் விரைவில் 1லட்சம் subscribers ஐ கடக்க முற்கூட்டிய வாழ்த்துக்கள். வருகின்ற சித்திரை வருடப்பிறப்புக்கு முன்பே இது நடக்கும் 👏👏👏👍
புதிதாக வந்தவர்கள் இரவும் பகலும் தேடி ஓடி கடினமாக உழைத்தால் உழைக்கலாம்.16 மணி நேரம் இரண்டு வேலை செய்ய வேண்டும்.
இயந்திற வாழ்க்கை அன்றன் பாலசிங்கத்துக்கு அண்ண சொன்ன பதில்தான் புதைகுழியில்தான் ஓய்வு 🇨🇦🇨🇦🇨🇦
இருவரினது சம்பாசனையும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது. உங்கள் தம்பி சொல்வது முற்றிலும் உண்மை. எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா? என்ற இளையராசாவின் பாடல் நினைவுக்கு வந்தது. நன்றி.
Canada is the 🇨🇦 🍁 🇨🇦 best place 👌 to live in This country.😊😊😊
இந்தக் காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது
அறிவுபூர்வமான உங்கள் உரையாடல்கள் எனக்கு பிடித்துள்ளது வாழ்த்துக்கள் 👍
அண்ணா சொன்னது 100/100% உண்மை வெளிநாட்டு வாழ்கை விசர் வாழ்கை
படித்து படிப்பிற்கு தகுந்த வேலை என்றால் வெளிநாட்டு வாழ்க்கை அவ்வளவு சிரமம் இல்லை. அரைகுறையாக படித்து கனடாவில் தமிழ் கடைகளில் , ஓட்டல்களில் வேலை செய்தால் வாழ்வு நரகம் தான்
தம்பிக்கு அங்க இருப்பதற்குரிய சரியான முறை அமையவில்லை! அமைந்து இருந்தால் விசிட்விசாவில் வெற்றிகண்ட மனிதர் என்று போட்டு இருப்பீயள்!
இப்ப ஒன்றும் சரி வரவில்லை திரும்பிவந்துட்டு நல்ல கதை!!!
hahahahahhahahahhahaha I am totally agreed with you,
உண்மையான கருத்து
Yes it’s true
தோத்தாங்கோளீஸ், சங்கம் அமைத்து புலம்புகிரார்கள் , பார்க்கலாம் இவர்கள் ஸ்ரீலங்காவில் என்ன கிழிக்கப்போகிறார்கள் என்று
இருவரையும் ஒன்றாகப் பார்த்தது மிகவும் சந்தோசம்
He got homesick, but he should overcome that it will take up to 1 year to like Canada 🇨🇦.
You are right brother do not worry about comments,we are living in Canada for 40 years but now Canadian life is very hard,we love you do not worry about anything
தம்பி சொல்வதெல்லாம் உண்மைதான்
100% உண்மை. சொர்க்கமே என்றாலும் நம் ஊரை போல வருமா? Welcome back 😁
இந்த சொந்த ஊர் சொர்கம் எல்லாம் , கல்யாணம் ஆன பின் நரகமாக மாறிவிடும். சினிமா காரன் பாடிய பாட்டை நம்பி வீணா போகாதீர்கள்
எட்டா கனி புளிக்கும் என்பது சரி தான் அங்கெ தங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் தாங்காமல் வந்திருப்பாரா கிடைக்கவில்லை திரும்ப வந்து விடடார் அது தான் உன்மை சரி நீங்க சுத்துங்க ரீல் அஹ 😂😂😂😂
Athu arinsu enna seiya poreenka .....
Ithu thaan bro...... X
You miss understand they're lazy people. They eat go out and sleep this generation too lazy .youtube makes them very lazy
இவரின் பதிவில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சிக்கல் உருவாகலாம் .
@@yasitharan9865சரியா சொன்னிங்க... Typical mind
Adey! Veli naattu vaalkkai athuvum intha kulir naadukalil easy illai. Sonnaal purinthu kollanum.illaathu vidin agent kondu poi aetho oru country il irakki virtu poi viduvaan. Appuram enna panrathu moli theriyaatha naattil??? Europe, Canada ellaam porulaathaara pirachchinaiyil thavikkinrana. Canadaavil unakku mattum velai vaiththu kaaththu kondu irukkiranaa???? China kaaran, Sikhs, muslims enru pala inam
Vaaluthu. Athu ellaam oru kaalam. thamilar.akathikalukku munnurimai koduththaanka.Ippo appadi illai. Athanaal thaan palarum irukkirathai vitru vittu sontha naattukku poka ninaikkinranar. Ithil thavaru enna??? Soththu ellaam vitru, kadanum pattu po, kani ettutho, pulikkutho enru paarppom.
Really amazing both of you 100/100 True Bro all the best both of you 👌👌👌
தம்பி சொல்வது 100 சதவீதம் உண்மை, கனடா சொர்க்க பூமி, ஆனால் உடல் உழைப்பு இருந்தால் வசதியாக வாழலாம், ஆனால் ஓய்வு எடுக்காமல் உழைத்துக்கொண்டே இருந்தால் luxury life, எங்கள் பிள்ளைகள் சொகுசாக வாழ்வதற்கு காரணம் எங்கள் தியாகங்கள், ஆனால் சந்தோசம் எம்மண்ணில் தான், உழைப்பவன் எங்கேயும் உழைக்கலாம்நான் 30 வருடங்களாக கனடாவில் இருக்கின்றேன்
Enna thiyakam unda pillaiku seijirathu thiyakamada
தான் பட்ட கஷ்டங்களை தன் பிள்ளைகள் படக்கூடாது என்ற தந்தையின் உள்ளம் , எந்த இளம் வயதினருக்கும் புரிவதில்லை.
தம்பி சொல்வது உண்மை 🙏👍❤️
பவனீசன் கட்டடக்கலை என்ன வைத்தியனாக இருந்தாலும் கனடாவந்நு அந்த துறையில் பட்டம் பெற்று லைசன்ஸ்் எடுத்தால் மட்டுமே பிழைக்கலாம்
அருமையான உரையாடல்❤
பயனுள்ள காணொலி.வாழ்த்துக்கள்.
Thanks Pavaneesan
Thampy will come back to Canada,Canada is a best Country in the world.
If you are really educated and speak the language, their savivel is easier than others . Sayanthan, please go for English classes it will help your future.
Education is important. My friend came here Canada in 2019 with visitors visa for 10 years, stayed 3 three weeks. She has good job in Sri Lanka with reasonable salary. Nowadays, our people with good education and are in all profession... even in parliament. Lot of jobs opportunities available that's why they bringing people from other counties. But you need to have good education with job experience. Even I know some people came and got great jobs with very good salary.
Yes, it's very true. I know the person got the job in IT within two months for 120 thousand dollars per month (year 2023)
மிக யதார்த்தத்தை சொல்லி உள்ளீர்கள் தம்பி ❤❤
வாழத்தானே பணம் வேண்டும் இங்கு வேலைக்காக வாழ்வாகும்.
இனத்துக்காக உழைப்பதனால் ஏதேதோ துயர் உனைச்சூழும்.
உங்கள் அன்பான,பண்பான பழக்க வழக்கதுக்கு நன்றி.
நம்ம நாடு அருமை
இவ்வளவு நாளும் சகிந் உங்கள் சொந்த தம்பி என்று தான் நினைத்திருந்தேன்
எட்டா கனி புளிக்கும்.
இதுவெல்லாம் உங்கள் குடும்பத்திற்குள் பேச வேண்டிய தனிபட்ட விடயம் மற்றும் உங்கள் தனிப்பட்ட தேவை சம்பந்தப்பட்டது.
எல்லோருக்கும் பொதுவான விடயமல்ல.
உங்கள் உறவுகளின் தியாகம் உங்களை இப்படி பேச வைக்கிறது.
Ivarkalin video nan enjoy panni paarpen. Aanaal ivarkalukku sila visayangal puriya venum. Naangal velinaadu vantha kaalathila (90s) engalukku return panra option eh illa. Agency kooda varum pothu inga vantha case accept pannu maddum we are stuck here. Nanga etho onda inga seithu survive panra ondu thaan option. This made our time people more stronger and hard workers. New generation kids from Srilanka don’t do any hard work. They are lazy . This is the #1 problem. They need great leaders first.
தம்பிக்கு கனடா வந்து போனபடியால் கனடா வாழ்கை எப்படி என்று விழங்கி இருக்கும் என்னும் கொஞ்சநாள் நின்றிருந்தால் எப்படி குளிர்காலம் இரிக்கும் என்றுஉணர்ந்திருக்கலாம்
தம்பி தனது அனுபவத்தை "விளக்கமாக "வழங்கியுள்ளார்."
K.K.N
குளிர்காலம்
எப்படி "இருக்கும்.
K.k.n
அனைத்துக் கருத்துப் பதிவுகளிலும்/(பதிவுகளும்")
தமிழ் எழுத்துப் பிழைகள் /(இன்றி)"இல்லாமல் இருப்பது
பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
K.K.N.
உடம்பு நோகாம ஒரு முழம் தடியோடு சுத்தித்திரிய காசு கொட்டுதெல்லோ (you Tube) அது செய்ய வேலை😂
🎄Very nice Pavaneshan He came to Canada and enjoyed very well because he met to very nice people and I think He did not spent any money from his own money, I watch his You tube also most of them he did good job. But I did not see him, I am watching your all of the you tube, Good luck and take care.
அங்குள்ள தமிழர்கள் பலர் இன்னும் கூட மிகுந்த தமிழ் தேசிய உணர்வோடு இருக்கிறார்கள் என்று சொன்ன போது உண்மையில் அழுதே விட்டேன் .
இலங்கையில் உள்ளதைப் போல் வெளிநாட்டு வாழ்க்கையில்லை.
எல்லா புலம்பெயர் நாடுகளிலிருந்தும் ஏதோ ஒரு உறவு அல்லது யாரோ ஒருவர் உடலை வருத்தி பணத்தை அனுப்பிக் கொண்டிருக்கிறார் இங்கே சொகுசாக மோட்டார் சைக்கிளில் ஊரைச் சுற்றலாம்,முஸ்லிம்கள்,இந்தியர்கள் சாப்பாட்டுக் கடைகளில் பல ஆயிரங்களைக் கொடுத்து விதம் விதமாக சாப்பிடலாம்.ஊரைச் சுற்றி கோயில்கள். மாறி மாறி.திருவிழாக்கள் அது முடிய பக்கத்து ஊர்க் கோயில் திருவிழாக்கள்,சினிமா,மாதமொரு முறை இந்தியக் கூத்தாடிகள் வந்து குஷிப் படுத்திக் கொண்டிருக்கின்றனர் ஆயிரக் கணக்கில் கொடுத்து டிக்கெட் எடுத்து அனுபவிக்கலாம், பத்துக்கு இரண்டுதான் படித்து தேறி வேலைக்குப் போகிறது மற்றது வெட்டியாக ஊரைச் சுத்துது.
கேரளக் கஞ்சாவின் புகையும்,செட்டிநாடு பிரியாணி சுவையும்,கூத்தாடிகள் சுகமும் கண்ட யாழ்ப்பாணிகள் இனி ஏன் போகணும் வெளிநாடு.?
😂😂😂
💯சுயநலமான கருத்து 🤦🏻♀️
@@SMat-tc4hr "நுனிப்புல் மேய்ந்த மாடு "என்றொரு பழமொழி உண்டு நண்பரே.
பவநீசன் பதிவுகள் பலவற்றைப் பார்த்துள்ளேன் பாராடியுமுள்ளேன்.
தரமான ஒளிப்பதிவு, ஒலிப் பதிவு,எடிட்டிங் ஆக்கபூர்வமான பதிவுகள்,இலங்கையின் இயற்கையை அழகாக படம்பிடிக்கும் திறன்,நமது வரலாற்றின் காயங்கள் என்று திறமையான படைப்புக்களை தரும் நல்லதொரு TH-camr.
ஆனாலும்,இந்தப் பதிவு ஆது பற்றிய முழுமையான அறிவும், தெளிவுமில்லாமல் ஒரு சின்னபையன் சொல்வதை வைத்து நக்கலும், நையாண்டியுமாக புலம்பெயர் தமிழர்களை சித்தரிப்பது போல் எனக்குத் தோன்றியது.
அதிகமான நமது TH-camrs நமது புலம்பெயர் உறவுகளை கொச்சைப்படுத்துவது போல் பதிவுகளை போடுவது கண்டிக்கத்தக்கது.
இன்று இவரின் தம்பி கண்டது போலில்லை முப்பது ஆண்டுகளின் முன்னர் அவர்கள் போன காலம்.வெறும் கையுடன் யாரின் துணையுமில்லமல் அங்கே போய் தாமாகவே கடுமையாக உழைத்து,போராடி,பல தியாகங்களை செய்து இன்று இந்த நிலைக்கு வந்துள்ளார்கள்.
இன்று தாயகத்தில் வாழும் தமிழர்களின் அனேகர் அவர்களின் தயவில்தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதே TH-camr கூட.
புலம்பெயர் தமிழர்களின் சாதனைகளை இவரின் தம்பி காணவில்லை போலும்.
அவர்களின் அடுத்த தலைமுறை இன்று புலம்பெயர் நாடுகளில் கல்வியில்,செல்வத்தில் மேலோங்கி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
நம்மை நாமே இழிவு படுத்துவது போல் இப்படியான பதிவுகளை போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
நமது அடுத்த தலைமுறையை ஊக்கு வுக்கும் வகையில் அவர்களின் சாதனைகளை எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்.
உங்களால் அங்கே சாதிக்க முடியுமெனில் எதற்க்காக எல்லா பல TH-camrs புலம்பெயர் தமிழர்களிடம் கையேந்துகிறார்கள்?
உங்களால் முடியவில்லை என்பதுதானே அதன் உண்மை.
உள்ளூரில் உழாத மாடு வெளியூர் போனால் உழுமா?
சமூக வலைத்தளங்களில் தான் தோன்றித்தனமாக கருத்துக்களை பதிவிடக் கூடாது.
அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Pavaneesan oru TH-cam pichchaikkaaran
You are 100% correct
Pulampeyar thamilarai kocchaipaduthupavan
உங்கள் தம்பி சொல்வது உண்மை தான் ஒளிப்பதிவு நேரம்கூடவாக இருக்குறதுஇந்த பதிவை இரண்டாக பிரித்து போட்டு இருக்கலாம் நண்றி ஏன் எண்டால்கனடாவில்சரியான வேலை பளு நேரம்போதாமை தான் காரணம் தொடர்ந்து பாக்க முடியவில்லை
இதர்க்கு உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்
😂😂 இப்படி இருப்பதை விட நாட்டில் சுதந்திரமாகவும் பிடித்த படி வாழ்ந்து விட்டு போகலாம் 🙃🙃 1 hour கூட நேரமில்லாத கனடா வாழ்க்கை
Best wishes thanks Bavanesan
Hi Pavaneesan, if you work $20/ hour you can get $2000 clear money per month. Other taxes.
He is a kid now on his age his thinking respectable.
But reality once he mature he will use this visa and his life in Canada.
But dam ture he said if we earn good in srilanka we don't have to go any of these machine life. Our life based on situations and money 💰
Take everything with positive approach we still don’t have any political freedom in our own land still feel like a second class citizens.And been treated like that since independence days. Until we get all freedom as any other country ( Indian.USA ,Canada, Australia and all European countries there is equal opportunity and feel respected as a human being.) So I recommend young generations to move out unless you have good education and jobs or own business to make your life comfortable besides all political issues. Understand home is home still missing Jaffna and always I am a Jaffna podyan than . But grateful to have my education and good jobs with great earnings. Very very comfortable and independent life.Think wise .
தம்பி கூறியது போல் கடும் வேலை செய்தால் இலங்கை சொர்கம் 👍🏽👍🏽👍🏽
கழிவு நீருக்கு நாங்கள் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாக பணம் செலுத்த வேண்டியுள்ளது, ஏனெனில் அந்த நீர் ஏரியில் உள்ள ஊமைகளை சுத்தம் செய்து சுத்தப்படுத்த வேண்டிய ஒரு வசதிக்கு செல்கிறது.
அந்த தம்பி நன்றாக கனடா வாழ் தமிழ் மக்களை பற்றி(100வீதம்) தெரிந்து கொண்டுள்ளார். உழைப்பாளிகளையும் ,முதலாளிகளையும்,வரும்கால தமிழர்களையும் ,முழுமையாக நம் தமிழர்களின் கனடா வாழ்க்கை முறை பற்றியும் திறம்படக் கூறியுள்ளார். ஆனால் பகட்டாக போலியாக வாழ்பவர்களை பற்றி கூற விரும்பவில்லைப்போலும்.... உண்மையில் உண்மைதான் நன்றாக யாழ்க்குடாவில் சம்பாரிக்கத்தெரிந்தவர்கள் இங்கு வரத்தேவையில்லை. விரும்பினால் இங்கு வந்து உழைக்கலாம்.ஆனால் திரும்பி சொந்த மண்ணில் வந்து வாழவேண்டுமென உறுதி கொள்ள வேண்டும்.. மொத்தத்தில் தங்கமான மனம் படைத்த தம்பி. வாழ்க வளமுடன்.
தம்பி சொல்லிறது உண்மை. வெளிநாட்டில் வேலை. கஷ்டம்
ஆறு மாதத்தில் நல்ல பக்குவம்வந்திருக்கிறது. தமிழனாக வாழ ஊர்தான் சரி. கனடாவில் பிறந்தவர்கள் ஊர்வரமாட்டார்கள்.
உண்மை😢
உண்மையான தகவல்
இந்த தம்பி, கனடாவில் இருந்த காலத்தில், தான் நேரடியாக கண்ட அனுபவங்கள், சிலருடன் கதைத்தால் கேள்விப்பட்ட விடயங்களை பகிர்ந்துள்ளார். கனடாவின் உள்ள தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்ல வேண்டுமாயின், இங்கு சில வருடங்கள் மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். இங்கு வந்த தமிழர்கள் படித்து பல்கலைகளுக்கு சென்று நல்ல வேலையில் இருக்கிறார்கள். உள்ளார்கள். 99 விகிதமான இங்கு பிறந்த தமிழ் பிள்ளைகளும் சிறு வயதில் வந்த பிள்ளைகளும் நன்றாக படித்து நல்ல துறையில் உள்ளார்கள். எல்லோரும் உபர் (UBER) ஓடுவதில்லை, இப்பொழுது எல்லோரும் கோப்பைகளும் கழுவுவதும் இல்லை, Cleaning job செய்வதும் இல்லை. $15.50 என்பது minimum wage set by province, நீங்கள் இருக்கும் மாகாணங்களைப் பொறுத்தது.
இங்கு மணித்தியத்துக்கு 30 டாலரும் 40 நாளில் அதற்கு மேல் உழைப்பவர்களும் இருக்கின்றார்கள் அவர்கள் இருக்கும் துறையை பொறுத்தது. அங்கு வீடு கட்டுபவர்கள் இங்கு வந்து வீடு கட்ட முடியாது, கனடாவில் படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும் அத்துடன் அனுபவம் இருத்தல் வேண்டும். கனடாவில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் உள்ளவர்களே அந்தந்த தொழில்களில் வேலைகள் செய்ய முடியும். கனடாவில் எண்ணுக்கடங்காத ஈழத் தமிழர்கள் இப்படி பல தொழில்களில் உள்ளார்கள். இங்கு தங்கள் முயற்சியால் பல நிறுவனங்களை நிறுவிய பல தொழில் அதிபர்களும் உள்ளார்கள். பேச்சு வார்த்தை சுதந்திரம் உண்டு, மக்கள் எல்லோருக்கும் பாதுகாப்பு உண்டு. காவல்துறையினர் முதல் இருந்து எந்த துறையில் உள்ளவர்களும் காரணம் இன்றி பொது மக்களின் மீது கைவைக்க முடியாது. தவறுதல் செய்தாலும் அவர்களுக்கும் தண்டனை உண்டு, இங்கு இனவெறி பாகுபாடு இல்லை. எல்லா இனமக்களுக்கும் ஒரே சம உரிமைகள் தான்.
இவர்களைப் பார்த்து இலங்கையில் உள்ள தமிழர்கள் விழித்து எழுதல் வேண்டும். ஆனாலும் எமது ஈழம் என்பது எமது சொர்க்க பூமிதான். எங்களின் கலாச்சாரத்து வாழ்க்கை முறையை இழந்தது எல்லோரும் தவிக்கின்றனர்.
நீங்கள் 25 வருடங்கழுக்கு முன் வந்தவர். கனடாவில் படித்தவர்கள் பெரிய துறையில் இருப்பவர் நிலை வேறு. புதிதாக வந்தவர்கள் வாழ்வது கடினம். இரவும் பகலும் கடினமாக உழைத்தால் மட்டும் வாழலாம்.
Nenkal niraya per Anka pichakarar inka ilankaiku money ya dived panni inka vanthu silavalikkeka perisa erukkum
உண்மைதான் தம்பி, ஆனால் புதியதாக கனடாவில் குடியேறும் நோக்கில் இங்கு வருபவர்களுக்கு இந்த
நிலைமை உண்டு.
ஆனால் முன்பு எமது வாழ்க்கை மிகவும் கடினமானது. இலங்கையில் இருந்து வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த உறவுகளுடன் ஒரு அறையில் நான்கு ஐந்து ஆறு நபர்கள் என்று சேர்ந்து வாழ்வோம்.
அந்தக் காலத்தில் தமிழ் கடைகளும் இல்லை தகுந்த உதவிகளும் இல்லை . ஆனால் இப்பொழுது அப்படியல்ல. ஈழத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட பல உதவிகள் கிடைக்கும். இந்த நிலையிலும் நாங்கள் எங்கள் படிப்பையும் தொடர்ந்தோம். முழு நேர வேலையடன் முழு நேர படிப்பையும் தொடர்ந்தோம். அதனால் எங்கு சென்றாலும் முயற்சி செய்தால் பலனை அடையலாம். இதற்கு காலம் எடுக்கும். ஒரு நாளில் லட்சியத்தை அடைய முடியாது.
இப்பொழுது இருக்கும் பொருளாதார நெருக்கடி (recession)கனடாவில் முன்பும் இருந்தது. இது ஒரு சுழற்சி முறையில் வருவது என்று எல்லோருக்கும் தெரிந்ததே.
வணக்கம், தம்பி எனக்கு ஒரு சந்தேகம் தம்பி ஊரில் தானேஇருத்தார் கனடா போகமுன் அப்ப உளைத்துப்பார்கவில்லையா? இவ்வளவு காசயும் சிலவளித்து இப்ப திரும்பிவந்துதான் உளைத்துப்பார்க்கப்போகிறார் போல் நன்று,ஆனால் சிலவுசெய்ததில் ஒரு பயன் தம்பிக்கு ஏற்பட்டுள்ளது கடின உழைப்பு எண்றால் என்னெண்று பார்த்து விளங்கிக்கொண்டுள்ளார்.
ஆனால் தம்பி திரும்பி கனடா போனால் கடினமா உழைத்து நன்றாகவருவார் அது அவரின் புரிதலில் தெரிகிறது.(கனடாவில் அல்லது ஐரோப்பாவில் மருத்துவம் இலவசம்இல்லை அதற்குரியபணத்தை முன்கூட்டியே ஊதியத்தில் களித்து விடுவார்கள்)
மருத்துவம் இலவசம் இல்லை என்பது சிறிதளவு உண்மை. ஆனால் நாங்கள் ஒரு சிறிய தொகைதான் மருத்துவத்துக்கு கொடுக்கிறம் ஐரோப்பாவில். எடுக்கிறது மலையளவில். கனடாவில் அது கூட இல்லை எனதான் நினைக்கிறேன்.
இன்று இலங்கையுள்ள நிலையில் வெளிநாட்டிற்கு வர விரும்புவோர் உண்மையில் அவர்களது கற்பனைக்கு அப்பால் உள்ள ஒரு உலகத்தைதான் காண்பார்கள்.
I appreciate that he gives the real life of Canada.Our country is first class country.Because of the situation all run to foreign country.
தம்பிமார் “பண்டியை குளிப்பாட்டி மெத்தையில விட்டாலும். “ அது மறுபடியும் சேற்றிலதான் போய்ப் புரளும் எண்டதுக்கு உங்களை விட சிறந்த உதாரணம் ஒண்றுமே இல்லை..! வாழ்க வழமுடன் 🤣🤪😜
Super answer brother.
மிகவும் அருமையான பதிவு நன்றி. ஆனாலும் இவருக்கு எவ்வளவு காலத்தில் விசா கிடைத்தது, எவ்வளவு பணம் செலவாகியது இந்த விளக்கத்தை சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
தம்பி நான் லண்டனில் இருக்கிறேன். சிரிப்பு கலந்த கவலை நீங்கள் செல்வது உண்மை இருந்தாலும் திரும்பி வர முடியாது. எனி ஒரு வாழ்க்கை இலங்கையில் தொடரமுடியாது. பிள்ளைகளுக்கு படிப்பு தரமானதாக இருக்கிறது. தமிழ் பள்ளிகள்
நிறைய உள்ளன. பிள்ளை கள் தமிழில் திறமை அடைந்துள்ளன. செலவுகள் தம்பி சென்றது உண்மை.
If u r work 8hr/day only u get 7.5hr pay (no pay for lunch time)and 1/3must pay tax for government
தம்பியவை ஏன் திரும்ப முடியா காரணம் இங்க வாழ்த காலம் மற்ரது பிள்ளைகள் படிப்பு.
Super video brother 100 true ❤❤❤
தம்பியவை இலங்கை எங்கள் நாடு🤝
கஷ்டப்பட்டு உழைக்க வேனும் ஐயா.சும்மா கமறாவ தூக்கிட்டு இதலாம்.....
தம்பி திரும்பி நாட்டுக்கு போனது நல்லது வாழ்த்துக்கள்
ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்க்கும் நிலையில்யாரும்இல்லை
Welcome house and family you are happy boy! Complete your change now like brain? Thank you brother
😂😂😂😂seriously so funny to see both of you, if you have decent job and earning good money no need to think of foreign countries, but for 90s kids who we are effected by war and left from our land yes always missing my land but i can't survive there. I love where i m now, accept the reality of life in Canada 🇨🇦, i have peace and safe life, but work, life is busy non stop.....money only will matter here no sentiment or feelings are second here....but his decisions are stupid. Youngsters are looking comfort life....back home u live 32 to up degrees but here in winter-30 to up that's only different so acceptance is a matter. Canada is a beautiful land..
Om siva om siva super
Dear brothers. நான் 33 வருட கனடா வாழ்க்கை
பிள்ளைகள் இங்கு பிறந்தவர்கள் அங்கு இருக்க வரமாட்டார்கள். நாங்கள் Montreal French பிள்ளைகள் தமிழ் ஆங்கிலம பிறெஞ் கதைப்பபார்கள். பிள்ளைகளை விட்டு விட்டு நாங்கள் அங்கு அவர் முடியாது பிற்ளைகளுக்கு அங்கு போய் வர விருப்பம் நன்றி
Please study English course it will be good for your future and so many chances in Canada like a ocean lots fishes you have to work hard And u have to know how to fish.???
Canadian paid 1000 dollars per day if they are CEO,doctors,surgeons,higher officials also senior management and engineers . Enterpuner earn over 10 thousands dollars month
தோட்டமா! கட்டாயம் அந்த கடவுச்சீட்டு காப்பாத்தும்
இந்த தம்பி சொல்வதில் சில கருத்துக்கள் உண்மையும் சில கருத்துக்கள் உருட்டுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது
90% உருட்டு தான் , ஆட த்தெரியாதவன் எப்போதும் கூடம் கோணல் என்று தான் சொல்வான். முதலில்சரியாக ஆங்கிலம் உச்சரிக்க பழகவேண்டும், கனடாவில் சென்றும் புட்டும் சாம்பலும் தேடக்கூடாது, முக்கியமாக அங்கு உள்ள தமிழ் கூட்டங்களை சார்ந்து வாழக்கூடாது, சுயமாக , திறமையாக உழைத்தால் கனடா ஒரு அற்புதமான நாடு.
@@narenn3237இல்லை
I am a Computer Engineer and a Canadian Citizen. No jobs
Too many indians who work with computers.
நாங்கள் கனடாவில் 35 வருடங்களாக இருக்கிறோம் plastic company ல் 12 மணித்தியாளங்கள் கஸ்டமான வேலை இலங்கையால் தான் நிம்மதி
தம்பி பவனீசன் நீங்களும் ஒருக்க வந்துட்டு போங்க
நல்ல பயன் உள்ள கருத்துக்களை பகிர்ந்துள்ளிர்கள் நன்றி தம்பிமார்களே இதில் ஒன்று விளங்ககுடியதாக இருக்குது தம்பி சாகிந்தன் வீட்டில் செல்லமாக கஸ்டம் என்னவென்று தெரியாமல் வளர்ந்த சின்னப் பிள்ளை அதனால் தாய் தந்தை சகோதரம் மற்றும் கூடித் திரிந்த நண்பர்கள் ஆகியோரின் பாசபிணைப்பு காரணந்தான் கனடாவை வெறுப்பதற்கான இதுதான் என்று நினைக்கிறேன் தம்பி அடுத்து நானும் கனடா செல்ல இருக்கிறேன் ஜனவரி மாதமளவில் செல்ல இருக்கிறேன் அவ்வாறு சென்றால் சகிந்தன் மீண்டும் கனடா வந்த நான் சந்திப்பேன் தம்பி நான் இரண்டு பேர் போடு விடியோவையும் விரிம்பிபார்க்கும் நபர் தம்பி
கனடாவில் பணத்தை தவிர என்ற கேள்வி தவறானது. 😂 பணத்தை தவிர மற்ற எல்லாம் பார்க்க கிடைக்கும். ஆனால் பணத்தை இரவும் பகலும் தேடி ஓடி உழைத்தால் பார்த்து ஏங்கும் பலவற்றை வாங்கி அனுபவிக்கலாம். இது தான் உண்மை. நானும் கனடாவில் இருந்து தான் இந்த comment எழுதுகிறேன். May God bless you all. ❤❤❤🎉🎉😊
இது தான் உண்மை
இரவும் பகலும் ஓடி ஓடி உழைத்து வாங்கலாம் அதை அனுபவிக்க நேரம் கிடைக்காது 😅😅😅😅
👍
@@jimmynathan8528அதற்கு பெயர் தான் time management. அதை நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும்
அக்கரைக்கு இக்கரை பச்சை அங்கிருந்து பார்க்கும் பொழுது இந்தக்கரை மிகவும் பச்சையாக தெரியும் வெளிநாட்டில் இருந்து பார்க்கும் போது தான் எங்கள் நாடு எவ்வளவு சொர்க்கம் என்பது புரியும் நாங்கள் எத்தனையை இழந்துள்ளோம் என்டது புரியும் வெளிநாடு என்றால இயந்திர வாழ்க்கை வேலை. வீடு. வீடூ வேலை இதை தவிர வேறு எதுவுமில்லை நினைத்தவுடன் எதுவும் செய்யலாம் எதுவும் வாங்கலாம் ஊரில் இருப்பவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளை செய்யலாம் சந்தோசத்தை தொலைத்து விட்டு வாழ்கின்றோம் ஊர் நினைவு சொந்த பந்தம் கோவில் குளம் சுத்தமான காற்று நன்மை தீமைகள் திருவிழாக்கள் அனைத்தையும் நினைத்து கவலைப் பட்டுக் கொண்டே வாழ்க்கையை கழிக்க வேண்டியது தான் மொத்தத்தில் வெளிநாட்டு வாழ்க்கை ஒரு இயந்திர வாழ்க்கை
அ௫மை தேவையான க௫த்து வாழ்த்துக்கள் இ௫வ௫க்கும்
தம்பிமார் உழைத்து வாழ முயற்சியுங்கள்
They are working as a TH-cam. This is a very good job everyone can't do. Pavaneesan is well talented and has a very good voice.
Nee nalla valkaya anupavikka piranthavan supper
Not only you , many of them going back to homeland.
சோம்பேறிகளுக்கு கஸ்டம் தான்
Well said thambi!!!, really appreciate that ....pavaneesan u r doing great job for tamil community 👍