திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில் | மழலை மகாலட்சுமி பிறந்த தலம் | கோரக்கர் சித்தர் வழிபட்ட தலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
    சித்தநாதேசுவரர் கோயில்
    திருநறையூர் நாச்சியார்கோயில் (128/274)
    தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 65வது தலம்.
    மூலவர்: சித்தநாதர், வேதேசுவரர், நரேசுவரர்,சித்தநாதேசுவரர்
    தாயார்: அழகம்மை, சௌந்தர நாயகி
    தல விருட்சம்: பவள மல்லிகை
    தீர்த்தம்:சூல தீர்த்தம்
    தேவாரம் பாடியவர்கள்:
    திருஞானசம்பந்தர், சுந்தரர்
    சித்தர் வழிப்பட்ட லிங்கம்
    சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்‌.
    சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் என்றும் அழைக்கபடுகிறது.
    சுவாமி கோஷ்டத்தில், சிவவழிபாடு செய்யும் கோரக்கர் சிற்பம் இருக்கிறது. அருகிலேயே இங்கு தவமிருந்த மேதாவி மகரிஷியும் இருக்கிறார்.
    தலச்சிறப்பு
    மாசி மாதத்தில் முன்று நாட்களும், ஆவணி மாதத்தில் முன்று நாட்களும் சூரிய கிரணம் மூலவர் மீது படுகின்றது
    தலவரலாறு
    ராமாயண காலத்திற்கு பிறகு அனுமனுக்கே முதலிடமாக போனதில் கருடனுக்கு வருத்தம்
    அவர் மன புழுக்கத்தை
    ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் சொல்ல
    மகாலெட்சுமி நான் மனித உருவில் மறைந்து வளர்கிறேன் நீ கண்டுபிடித்து எம்பெருமானுடன் திருக்கல்யாணம் செய்து வை என கூறி மகாவிஷ்ணுவை திருமணம் செய்வதற்காகவே அன்னை மகாலட்சுமி மனித உருவில் முனிவரின் மகளாக அவதரித்த தலம்தான்
    திருநரையூர் சித்தீஸ்வரம்.
    மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் சிவனை வணங்கி வந்தார்.
    மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார்.
    சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் மனைவி விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார்.
    மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் தீர்த்தக் குளத்தில் ஒரு மலர்ந்த தாமரை மலரில் மேதாவி மகரிஷி முன் தோன்றினாள். மகரிஷியும் அவளை வளர்த்து வந்தார்.
    கருட பகவான் உலகத்தையே சுற்றி வந்து மகாலெட்சுமி இருக்கும் இடத்தை கண்டறிந்தார்.
    கருடனின் விண்ணப்பத்திற்கு இணங்க மகாலெட்சுமியை
    மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார் மகரிஷி.
    சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
    மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.
    தல பெருமை
    இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
    மகாலட்சுமியின் அவதார தலமென்பதால், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்.
    மழலை மகாலட்சுமி என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.
    இங்கு அவதரித்த மகாலட்சுமி, திருமாலை திருமணம் செய்து அருகிலுள்ள நாச்சியார்கோயிலில் அருளுகிறாள். எனவே, இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல்பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் கொடுக்கின்றனர்.
    வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் பெருமாள் கோயிலுக்கு செல்கின்றனர். இங்கு மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளது அவதார தலமென்பதால் இவள், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, "#மழலை_மகாலட்சுமி' என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.
    பொது தகவல்
    பௌர்ணமி தினங்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி யாகம் செய்து வழிபட்டால் அரசாளும் யோகம் வரும் என்பது நம்பிக்கை.
    கோரக்க சித்தர்
    கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார்.
    இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார்.
    சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது.
    தோல் வியாதி உள்ளவர்கள் கோரக்கருக்கு, பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, உடலில் பூசிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நீங்குவதாக நம்பிக்கை.
    பிரார்த்தனை
    சரியாக பேச்சு வராதவர்கள், குரல் வளம் சிறக்க வேண்டுபவர்கள் இங்கு சிவன், அம்பாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.
    தோல்நோய் நீங்க இங்குள்ள சித்தரிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
    புதன் கிழமை புத ஹோரையில் சித்தநாதேஸ்வரருக்கு சந்தனக்காப்பு செய்வித்து, பித்ரு தோஷ பரிகாரம் தேடிக் கொள்கின்றனர்.
    நடைதிறப்பு
    காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.
    அமைவிடம்
    கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் நாச்சியார் கோயில் கடைவீதி பேருந்து முன்பு உள்ள நிறுத்தத்தில் திருநறையூர் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர், குடவாசல், நாகப்பட்டினம், நன்னிலம், எரவாஞ்சேரி மற்றும் பூந்தோட்டம் வழியாக மயிலாடுதுறை செல்லும் அனைத்து பேருந்துகளும் திருநறையூரில் நின்று செல்லும்.
    நாச்சியார் கோயில் தரிசனம்
    • கும்பகோணம் நாச்சியார் ...
    ஆலய தொடர்பு எண்
    +91 9994073938
    மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    +91 7994347966
    if you want to support us via UPI id
    k.navaneethan83@ybl
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 45

  • @mathina
    @mathina  ปีที่แล้ว +3

    நமது தாய் நலமுடன் இருக்க வழிபட வேண்டிய தலம்
    th-cam.com/video/geB89GGAKy4/w-d-xo.html

  • @user-sl3ov9gs4n
    @user-sl3ov9gs4n 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் மகாலட்சுமி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaiyermani7334
    @krishnaiyermani7334 10 หลายเดือนก่อน +6

    என்னுடைஐ தோல் வியாதி நிவர்த்தியாக கோரக்க சித்தருக்கு எண்ணை அபிஷேகம் செய்தேன். குணமாகிவிட்டது. K. Mani Iyer.

    • @sangeethapriya6878
      @sangeethapriya6878 5 หลายเดือนก่อน +1

      தீராத தோல் வியாதிகள் கடந்த 10 வருடங்களாக சிரமப்படுகிறேன் கோரக்க சித்தருக்கு என்ன அபிஷேகம் எவ்வாறு செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள்

    • @baskarankrishnamoorthy747
      @baskarankrishnamoorthy747 หลายเดือนก่อน

      @@krishnaiyermani7334 எந்த கோயில் or இடத்தில் எப்புடி அபிஷேகம் செய்தீர்கள் விளக்கம் சொல்லுங்கள் எனக்கும் அதே பிரச்னை ப்ளீஸ்

  • @user-sl3ov9gs4n
    @user-sl3ov9gs4n 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @meenakshik4217
    @meenakshik4217 7 หลายเดือนก่อน +2

    Thanks

  • @meerachenganur1878
    @meerachenganur1878 ปีที่แล้ว +2

    ജീവിതത്തിൽ ഒരിക്കലെങ്കിലും സന്ദർശിക്കേണ്ട ഒരു ക്ഷേത്രം, ദർശനത്തിനായി ഈ ക്ഷേത്രം നേരിട്ട് സന്ദർശിക്കുന്നത് പോലെ തോന്നി.നല്ല വിശദീകരണം, ആശംസകൾ.

  • @mohanrajs7786
    @mohanrajs7786 7 หลายเดือนก่อน +1

    மிக மிக நன்றாக விபரமாகவும் தெளிவான பதிவாகவும் அமைத்தமைக்கு நன்றி

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை நன்றி

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு எங்கள் ஊர் குடவாசல் அருகில் உள்ள தலம் வாழ்க வளமுடன் சார் 🙏👌🙏👌

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +4

    🙏🥀🌹திருநீலகண்டம்🍁🔱சிவாய நம🐄🌿🙏💦📿

  • @venkateswaran2371
    @venkateswaran2371 ปีที่แล้ว +2

    Super sir

  • @apyuvarajkumar8429
    @apyuvarajkumar8429 7 หลายเดือนก่อน +1

    Excellent video and Description.

    • @mathina
      @mathina  7 หลายเดือนก่อน

      Thank you very much!

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 7 หลายเดือนก่อน +1

    Om Shri Namasivaya Namaha.🙏

  • @saisathishsaisathish6628
    @saisathishsaisathish6628 8 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்...

  • @manojstills6593
    @manojstills6593 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @mythiligopi6508
    @mythiligopi6508 ปีที่แล้ว +1

    Super bro ungaluku yean valthukal

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 10 หลายเดือนก่อน +2

    Om namasivaya

  • @kalavathis1483
    @kalavathis1483 ปีที่แล้ว +4

    இந்த தலத்தில் உள்ள மகாலட்சுமி நவநீதன் இது போன்ற நல்ல ஆலய பதிவுகள் பதிவிட அருள்புரியட்டும் ஏன் bike ல் வரவில்லையா நவநீதா

    • @mathina
      @mathina  ปีที่แล้ว

      வரவில்லை அக்கா

    • @Kudavasal-Nandhini6
      @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว

      உங்கள் ஆசிர்வாதம் பழித்து நவநீதன் சார் நலமுடன் இருக்க வேண்டும் அக்கா.

    • @Kudavasal-Nandhini6
      @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +1

      ​@@mathina நவநீதன் சார் காரில் சென்று ஆலயங்களை பதிவு செய்யும் நிலையை மகாலட்சுமி அன்னை வழங்குவார்

  • @ramkumarm884
    @ramkumarm884 ปีที่แล้ว +1

    OM NAMAH SHIVAYA 🙏

  • @malathipannerselvam7962
    @malathipannerselvam7962 ปีที่แล้ว +1

    Om shiviya potri🙏

  • @krishpadm5170
    @krishpadm5170 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @narayanannarasimhachari5499
    @narayanannarasimhachari5499 2 หลายเดือนก่อน +1

    Sir, please try to make a video about vaishnavi durgai temple, kadagambadi and vasudeva perumal temple kadagambadi

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +2

    ஓம் அருள்மிகு அழகம்மை சௌந்தரநாயகி உடனுறை சித்தநாதேசுவரா் போற்றி ஓம்

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rayonar.suriamoorthy.7040
    @rayonar.suriamoorthy.7040 ปีที่แล้ว

    🌹🌹🌹🌹🌹🌹

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal61119 3 หลายเดือนก่อน

    276 la 87 vadu aalayam apdinu oru website la padichen sir... Which is right...any idea about this question

  • @rajgopalthiyagarajan2357
    @rajgopalthiyagarajan2357 ปีที่แล้ว

    Donating ginglee oil to temple will cure all skin issue

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 4 หลายเดือนก่อน +1

    மார்ச்31வந்தேன்

  • @d.thumilan3985
    @d.thumilan3985 ปีที่แล้ว

    Hi sir😊
    Kindly tell the opening and closing timing of the temple sir 😊

    • @mathina
      @mathina  ปีที่แล้ว

      Ok next time

  • @sathishLoganathan06
    @sathishLoganathan06 10 หลายเดือนก่อน

    Sir........ Google map location is missing

    • @mathina
      @mathina  10 หลายเดือนก่อน

      Next video onwards i will watch all sorry bro

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal61119 3 หลายเดือนก่อน

    ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.... ஆனால் தக்ஷிணாமூர்த்தியும் மேற்கு நோக்கி அமைந்துள்ளது என்று கூறுகிறீர்கள்.... அது எவ்வாறு என்று சற்று சொல்வீர்களா...????

    • @mathina
      @mathina  3 หลายเดือนก่อน +1

      ஆலய வாசல் அடுத்து உள்ளது. சுவாமி தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கி உள்ளது. ஆலயம் சென்று நேரடியாக பாருங்கள்

  • @user-sl3ov9gs4n
    @user-sl3ov9gs4n หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 ปีที่แล้ว

    Super sir