கோவை சரவணம்பட்டி புரோசோன் மால் சார்பாக "கோ க்ரீன்" எனும் தலைப்பில் நடைபெற்ற மாராத்தான் போட்டி!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள புரோஜோன் மாலில் இயற்கை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும்,மரம் வளர்ப்பு ,இயற்கை பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு புரோசோன் கோ க்ரீன் (PROZONE GO GREEN)எனும் தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    இந்த மாரத்தானை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ,கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் திரைப்பட நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
    இந்த மாரத்தனில் நான்கு பிரிவுகளாக குழந்தைகள், பெரியவர்கள், ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள், என சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    இதில் முக்கிய அம்சமாக மாற்றுத்திறனாளிகள் பங்குபெற்ற 1 கிமீ ஓட்டம் மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த தொடர் ஓட்டம் 1 கிமீ , 5 கிமீ, 10 கிமீ ,என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.
    இந்த மராத்தானிற்க்கான ஏற்பாடுகளை புரோசோன் மால் நிர்வாகத்தினர்,கோயமுத்தூர் அத்லேட்டிக் சங்கம்,அப்டவுன் கான்ஃபிட்டி ஆகியோர் இணைந்து செய்திருந்தனர் என்று, புரோஜோன் மாலின் மத்திய இயக்குனர் விஜய் பாட்டியா, நிர்வாகம் மற்றும் வர்த்தக மேலாளர் பாபு,.விற்பனை தலைமை மேலாளர் பிரிங்ஸ்டன் நாதன்,செயல் தலைவர் முஜம்மில் ஆகியோர் தெரிவித்தனர்.

ความคิดเห็น •