திருக்கோலக்கா | அருள்மிகு ஓசை நாயகி உடனாய திருத்தாளமுடையார் கோவில் | Thirukkolakka | thalamudaiyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • திருச்சிற்றம்பலம்
    அருள்மிகு ஓசை நாயகி உடனாய தாளபுரீசுவரர் திருக்கோயில்
    இறைவர் திருப்பெயர்:சப்தபுரீஸ்வரர், தாளபுரீஸ்வரர், திருத்தாளமுடையார்.
    இறைவியார் திருப்பெயர்:தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி.
    திருத்தலச் சிறப்பு:
    *ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல் தலம்.
    *இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள்.
    *திருமகள் திருமணம் செய்து கொண்ட தலம் ஆதலால் திருகோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது.
    *வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து பேசும் சக்தியைக்கொடு,' என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும்.
    *• சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது.
    *. பஞ்ச(கா) தலங்களில் திருக்குரக்குக்கா தலமும் ஒன்று. கா என்பது சோலை. தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் -கா என்ற ஊர்ப்பெயர் கொண்டவை ஐந்து தாம்.
    மற்ற தலங்கள் திருவானைக்கா, திருகோடிக்கா, திருநெல்லிக்கா, திருகோலக்கா.
    #devara
    #padalpetratemple
    #sivatemple
    #alayam
    #devaram
    #sivan
    #sivatemple
    எப்படிப் போவது:
    சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் 1.5 கி.மி. தொலைவில் திருகோலக்கா இருக்கிறது. இக்காலத்தில் இது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கப்படுகிறது.
    இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
    Temple Route Map:
    maps.app.goo.g...
    இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
    மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
    இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
    அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
    உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.
    அன்புடன்
    சிவ.ஜவஹர்
    ☎️ 9551623296
    #சிவ_ஜவஹர்
    #Siva_Jawahar
    இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.

ความคิดเห็น • 4

  • @narayanamoorthyr1656
    @narayanamoorthyr1656 8 หลายเดือนก่อน +2

    Om namachivaya 🕉🙏🏻

    • @ellamsivanarul
      @ellamsivanarul  8 หลายเดือนก่อน

      🙏🌻திருச்சிற்றம்பலம்🌻🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 หลายเดือนก่อน +1

    🙏🌼🌷சிவ சிவ🌻🌺❤🙏🙏🙏🙏🙏🙏💮

    • @ellamsivanarul
      @ellamsivanarul  8 หลายเดือนก่อน +1

      திருச்சிற்றம்பலம்🙏🙏💐💐🌻🌻