திருக்குரக்குக்கா / தொழில் மேன்மை தரும் தேவாரத்தலம் / Anjaneyar Temple /Thirukurakkaval Shiva Temple
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- திருச்சிற்றம்பலம்
திருக்குரக்குக்கா / தொழில் மேன்மை தரும் தேவாரத்தலம் / Anjaneyar Temple /Thirukurakkaval Shiva Temple
#திருக்குரக்குக்கா
#திருச்சிற்றம்பலம்
#anjaneyar
#anjaneyartemple
#sivan
#devara
#devaram
#padalpetratemple
சிவஸ்தலம் பெயர் திருக்குரக்குக்கா (தற்போது திருக்குரக்காவல் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர் குந்தளநாதர், குந்தளேஸ்வரர், குண்டலகர்ணேஸ்வரர்
இறைவி பெயர் குந்தளநாயகி
பஞ்ச(கா) தலங்களில் திருக்குரக்குக்கா தலமும் ஒன்று. மற்ற தலங்கள் திருவானைக்கா, திருகோடிக்கா, திருநெல்லிக்கா, திருகோலக்கா. குரங்கு வழிபட்டதால் இத்தலம் திருக்குரக்குக்கா என்று பெயர் பெற்றது
அனுமனுக்கு தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது. இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது. இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால் கட்டி அகற்ற முற்பட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று. சிவஅபராதம் நீங்க இராமர் அறிவுரைப்படி ஆஞ்சனேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை பூஜித்தார். இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தி இந்த அனுமனே
பாடல் பெற்ற தலங்களுள் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 28வது சிவத்தலமாகும்.
சுவாமி கிழக்கு நோக்கியவாறும், வலப்புறம் அம்பாள் தெற்கு நோக்கியவாறும் உள்ளது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மிக்க திரு மா வளரும் செந்தாமரை வளரும் செய் குரக்குக்கா வளரும் இன்பக் கனசுகமே" என்று போற்றி உள்ளார்.
மயிலாடுதுறை- மணல்மேடு, சீர்காழி- மணல்மேடு வழியாகச் செல்லும் பேருந்தில் ஏறி இளந்தோப்பு ஜி.எச்.எனும் நிறுத்தத்தில் இறங்கி வடக்கே மூன்று கிலோமீட்டர் சென்றால் திருக்குரக்காவலை அடையலாம். வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்தும், இளந்தோப்பி லிருந்தும் ஆட்டோ வசதி நிறைய உள்ளது.
கோயிகலுக்கான வரைபடம் - maps.app.goo.g...
கோயில் திறப்பு : 7.30~ 12.30 & 16.30 ~ 19.30
மேலும் விவரங்களுக்கு: திரு.நடராஜசிவம் குருக்கள் - 7708820533
இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.
அன்புடன்
சிவ.ஜவஹர்
☎️ 9551623296
#சிவ_ஜவஹர்
#Siva_Jawahar
இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
Om namachivaya 🕉🕉🕉🙏🏻
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
❤❤🙏🌿🌹சிவாய நம Ayya🙏❤❤❤❤❤🎉
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
🙏🕉ஈசன் அருளின்றி ஒர் அனுவும் அசையாது🕉 நம சிவாய🕉🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
100% உண்மை