கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் | சுயம்பு பஞ்சலோக நடராஜர் | Konerirajapuram Nataraja Temple History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
    உமாமகேஸ்வர் சமேத மங்களநாயகி
    பூமி தோஷம் நிவர்த்தி தலம்.
    திருநல்லம்
    கோனேரி_ராஜபுரம் (97/274)
    திருநல்லம் - கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 34ஆவது சிவத்தலமாகும்.
    இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு என்று சொல்லப்படுகிறது. இத்தலத்தை பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் தான் தரிசிக்க முடியும்.
    இறைவன் : ஸ்ரீ உமாமகேஸ்வரர்
    இறைவி : ஸ்ரீ மங்களநாயகி
    தீர்த்தம் : பிரம்மதீர்த்தம். பூமிதீர்த்தம். ஞானகூபம்
    தல சிறப்பு
    சனிபகவான் உருவமும், அருகில் பைரவர், இராகு துர்க்கை, அக்னி ஆகியோர் உருவச்சிலைகளும் உள்ளன. தொழுது வாயிலைக் கடந்தால் முலவர் தரிசனம் கிடைக்கும். சனிபகவான் முருகனை பார்த்த கோலத்தில் இருப்பது தனி சிறப்பு. இந்த தலத்தில் உள்ள சனிபகவான் முருகனை வழிபட்டால் சனி தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் நீங்கும்
    இத்தலத்தில் நடராஜர் திரு உருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் சுயம்புவாக இத்தலத்தில் காட்சி தருகிறார்.
    இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. உற்சவ காலங்களில் தெரு உலா வருவதற்காக ஒரு சிறிய நடராஜர் செப்புச் சிலையும் இருக்கிறது.
    பெரிய நடராஜர் செப்புச் சிலை உருவம் மிகவும் கலை அழகுடன் காட்சி அளிக்கிறது. அவர் உடம்பில் மருவு, ரேகை, தழும்பு போன்றவைகளைக் காண்பது ஒரு அதிசயம். பூமாதேவி இத்தலத்து இறைவனை வழிபட்டிருக்கிறாள்.
    இத்தலத்தை பூர்வ புண்ணியம் இருந்தால் தான் தரிசிக்க முடியும் என்பது அப்பர் மெருமானின் அருள் வாக்கு.
    தலவரலாறு
    பூமிதேவியால் வழிப்பட்டதால். முன்னொருயுகத்தில் அசுரன் ஒருவன் பூமியை தூக்கி கொண்டுபோய் பாதாளத்தில் வைத்துவிட்டான். ஸ்ரீ மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை வெளியில் கொண்டு வந்து பூமியைக் காப்பாற்றினார்.
    பின் பூமிதேவியிடம் இதுபோல் மீண்டும் நடக்காதிருக்க சிவபெருமானிடம் வரம் பெற வேண்டும் எனத் திருமால் கூற அதற்காண வழிமூறைகளை அவரிடமே கேட்டறிந்தாள். அதன் படியே பூஜைக்கான இடம் தேடினாள் பூமிதேவி. ஸ்ரீமஹாவிஷ்ணு நேத்ரார்ப்பணம் செய்து பல ரிஷிகள் வழிபட்ட தல்முமான திருவீழிமிலைக்கு வடமேற்கில் ஒரு அற்புதமான இடத்தைக் கண்டாள். அங்கே பத்ராஸ்வத்தம் (அரசமரம்) விருட்சமும் அதில் பலவித பறவைகள் கூடுகட்டி வாழ பிரம்மாவினால் ஏற்ப்படுத்தபட்ட பிரம்மதீர்த்தமும் இருக்கக் கண்டு இவ்விடமே பூமியைக்காக்க வரபெற வேண்டிய ஸ்தலம் என அறிந்தாள்.
    தேவசிற்பியான விஸ்வகர்மா கோவில் அமைக்க வைகாசி மாதம் குருவரத்தில் உரோகிணியும் பஞ்சமியும் கூடிய சுபநாளில் விருஷப லக்கணத்தில் தேவகுருவாகிய பிருகஸ்பதி சூட்சுமாகம முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தருள; பூமாதேவி முறைப்படி வளிப்பட்டாள். பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் தரிசனம் தந்து உலக உயிர்கள் பாவங்களிலிருந்து வீடுபட தீர்த்தம் ஒன்றை உண்டாக்க பூமிதேவியைப் பணிந்தார். பூமிதேவியால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் பூமி தீர்த்தமாகும்.
    பிராத்தனை
    ஜாதகத்தில் திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரரையும், நடராஜரையும் வழிபட்டால் அந்த தோஷங்கள் நீங்கும்.
    இங்குள்ள வைத்தீஸ்வரசுவாமியை வழிபடும் பக்தர்களுக்கு பலவகையான நோய்களிலில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
    உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அங்கவள நாயகி கிழக்கு நோக்கியும் மாலை மாற்றிக்கொள்ளும் நிலையில் வீற்றிருந்து இத்தலம் வந்து வழிப்படுவோர்க்கு திருமணத் தடையை நீக்குகின்றனர்.
    உண்மையில் வீடு, நிலம், மனை அளவுகளில் ஏற்படும் கோண அளவு மாற்றங்களால் ஏற்படும் தோஷங்களைக் களைய வல்ல நாதரே ஸ்ரீபூமிநாதர் ஆவார். வீட்டின் கோண அளவுகள் சமமாக அமைவதே முறை. சில வீடுகள் ஆரம்பத்தில் அகலமாகவும் போகப் போக குறுகலாக அமைவது உண்டு. சில வீடுகள் ஆரம்பத்தில் குறுகலாக இருந்து போகப் போக அகலமாக அமைவது உண்டு. இத்தகைய அமைப்பு பாம்பு மனை என்று வழங்கப்படுகிறது. இது சரியான கோண அளவைக் குறிப்பது கிடையாது. இதற்காக அத்தகையோர் தங்கள் இல்லங்களை மாற்ற முடியாது அல்லவா ? இத்தகைய இல்லங்களில் வசிப்போர் திருநல்லம் ஈசனை தரிசனம் செய்து உரிய தான தர்மங்களை நிறைவேற்றுவதால் கோண அளவுகள் சரியாக அமையாதபோதும் கோனேரிராஜபுரம் ஈசன் அவர்களைக் காப்பான் என்பது உண்மையே.
    சிறப்புகள்
    கண்டராதித்த சோழன் மனைவியான செம்பியன் மாதேவியின் திருப்பணிப் பெற்ற தலம்.
    கல்வெட்டில் இறைவன் 'திருநல்லம் உடையார் ' என்று குறிக்கப்படுகிறார்.
    இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை.
    வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவன் நன்கொடையால் கோயில் கட்டப்பட்டதாகவும், 'நக்கன் நல்லத் தடிகள்' என்பவனால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும், குந்தவை பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகின்றன.
    அமைவிடம்
    கும்பகோணம் - காரைக்கால் பாதையில் உள்ள எஸ்.புதூர் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து தெற்கே வடமட்டம் செல்லும் சாலையில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டுரோடில் இறங்கி 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து 23 கி.மீ தொலைவில் கோனேரிராஜபுரம் அமைந்துள்ளது.
    கும்பகோணத்தில் இருந்து கோனேரிராஜபுரம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
    ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
    8489391675
    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    7994347966
    கோயில் Google map link
    maps.app.goo.g...
    if you want to support us via UPI id
    9655896987@ybl
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 34

  • @SivakumarTrichy
    @SivakumarTrichy ปีที่แล้ว +7

    திருச்சியில் இருந்து இந்த ஆலயத்திற்கு நானே நேரில் சென்று இந்த கோயிலை தரிசனம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது இந்த பதிவு சுயம்பு நடராஜர் உங்கள் மூலம் தரிசனம் செய்தேன் ரொம்ப அருமையான பதிவு ரொம்ப நன்றி 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +3

    🙏🌿சிவ சிவ🐄🌻திருச்சிற்றம்பலம் 🙏🌺🌹🔱🙏🌸

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 4 หลายเดือนก่อน

    ❤ Miga Arumaiyaga Iraiwan Darisanam Seidhu Weitha Thambi ku Mikka Nandri 🙏🏽🙏🏽🙏🏽

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய
    அருள்மிகு மங்களநாயகி சமேத உமா மகேஸ்வரர் போற்றி ஓம்

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +2

    ரொம்ப மகிழ்ச்சி சார்

  • @devarajanmuthusamydevaraja4179
    @devarajanmuthusamydevaraja4179 ปีที่แล้ว +1

    அழகான அற்புதமான பெரிய கோயில் ! 🙏🙏🙏🙏🙏! நன்றிகள் !

  • @jayendranmv1416
    @jayendranmv1416 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க நதண் தால் வாழ்க இமை போழதும் எண் நெஞ்சில் நிங்கதான் தால் வாழ்க 🙏🏻 நண்றி நண்றி நண்றி 🙏🏻

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y 8 หลายเดือนก่อน

    Supero super GURUVE SARANAM nice information vazga Valamudan & Nalamudan

  • @MahaLakshmi-tc4ky
    @MahaLakshmi-tc4ky ปีที่แล้ว +1

    அருமை அருமை யாக உள்ளது வீடியோ காட்சிகள் அருமை நீங்கள் பேசியது மிகவும் அருமை யாக உள்ளது கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் நான் இந்தத் கோவி்களுக்குச் போகனும் என்று இருந்தேன் ஆனால் இப்போ உங்கள் மூலம் கோவில் போய் பார்த்துவிட்டு வந்தேன் அண்ணா

  • @user-xx1sz2fn6l
    @user-xx1sz2fn6l ปีที่แล้ว

    அற்புதமான பதிவு நேரில் சென்று இந்த கோயிலை தரிசனம் செய்த மாதிரி இருந்தது இந்த பதிவு சுயம்பு நடராஜரை தரிசனம் செய்ய வைத்த ஆன்மீகத்துடன் நட்பு channel க்கு நன்றி தொடரட்டும் உங்கள் பணி

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว +1

    அற்புதம் நற்பவி

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +2

    அற்புதமான தலம் இது போன்ற ஆலயங்களை உங்கள் மூலம் தரிசனம் செய்ய ஆவல் நானே நேரில் சென்று தரிசனம் செய்த மாதிரி இருந்தது இந்த பதிவு வாழ்க வளமுடன் சார். எனக்கு நாளை வளைகாப்பு பல ஆலயங்கள் தரிசனம் செய்த உங்கள் ஆசீர்வாதம் எனக்கு தேவை . எனக்கு மிகவும் பிடித்த தலம் இந்த கோயிலை அருமையாக பதிவு செய்த உங்களுக்கு கோடி நன்றிகள் இந்த தலத்தில் உள்ள சுயம்பு நடராஜர் நவநீதன் சார் நலமுடன் இருக்க அனைத்து வளங்களையும் வழங்கட்டும் 🙏

    • @mathina
      @mathina  ปีที่แล้ว

      இறைவன் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் வாழ்த்துக்கள்

    • @Kudavasal-Nandhini6
      @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว

      @@mathina ரொம்ப சந்தோஷம் நவநீதன் சார் 🙏

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c ปีที่แล้ว +2

    ஐயா முடிந்தால் செம்பியன் மாதேவி வாழ்ந்து ஊர் செம்பியகுடி மற்றும் கண்டராதித்தம் (கண்டராய்த்தம் ) இது திருமழபாடி அருகில் இருக்கிறது, திருமழபாடி பாடல் பெற்ற தளம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன், செம்பியன் மாதேவி ஏறி, அருகில் செம்பியன் மாதேவி மற்றும் கண்டராதித்தர் கு சிலை வைத்து இருக்கிறார்கள் அங்கும் ஒரு பழமையான சிவன் கோவில் இருக்கிறது மற்றும்

  • @rajalakshmis9676
    @rajalakshmis9676 8 หลายเดือนก่อน

    Thanks a lot. Very nice description aruliya. . Donyosmi very nice and beautiful place to see and to get the

  • @srimathichidambaram8271
    @srimathichidambaram8271 ปีที่แล้ว +1

    Super

  • @Maanu1111
    @Maanu1111 4 หลายเดือนก่อน

    ஓம்நமசிவாய

  • @mkalaivani6340
    @mkalaivani6340 ปีที่แล้ว +1

    சிறபப்பான பதிவு நேரில் சென்று தரிசனம் செய்த மாதிரி இருந்தது இந்த வீடியோ நன்றி தொடரட்டும் உங்கள் பணி

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 ปีที่แล้ว

    Super sir

  • @selvis972
    @selvis972 ปีที่แล้ว

    சிவாய நம. சிவாய நம

  • @vlakshmi3464
    @vlakshmi3464 ปีที่แล้ว

    Om Nama Shivaya 🙏 🌺

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว

    முதல் பார்வை ❤

  • @nagaprabu1155
    @nagaprabu1155 ปีที่แล้ว

    Om nama sivayam

  • @amutharamesh669
    @amutharamesh669 8 หลายเดือนก่อน

    Supar

  • @umamaheswari604
    @umamaheswari604 8 หลายเดือนก่อน

    I am your subscriber. I am regularly seeing your videos. Really very excellent and very clear explanation. Very much useful for viewers. Thank u

  • @deena220
    @deena220 ปีที่แล้ว

    Very good explanation given by you first time I fully understood, I hope you will give other temples thank you

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @PandiPandi-mg2dc
    @PandiPandi-mg2dc ปีที่แล้ว

    தேவலோககன்னிவழிதலங்கள்சிவன்கோவில்

  • @jillasathish4620
    @jillasathish4620 2 หลายเดือนก่อน +1

    எந்த ஊர் எந்த மாவட்டம் நான் கருர் எப்படி போகவேண்டும் இந்த கோவில்க்கு முகவரி சொல்லுங்க

    • @mathina
      @mathina  2 หลายเดือนก่อน

      கரூரில் இருந்து கும்பகோணம் அடைந்து அங்கிருந்து வடமட்டம் செல்லும் நகர பேருந்தில் பயணம் செய்து கோணேரிராஜபுரம் அடையலாம். அல்லது கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்தில் பயணம் செய்து S.புதூர் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோணேரிராஜபுரம் செல்ல நிறைய ஆட்டோ வசதி உள்ளது

  • @PandiPandi-mg2dc
    @PandiPandi-mg2dc ปีที่แล้ว

    கைலாஷ் மானசரோவர் யாத்திரைvideo