திருவீழிமிழலை திருவீழிநாதர் கோவில் | மாப்பிள்ளை சுவாமி | திருமண தடை நீக்கி செல்வவளம் தரும் தலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2022
  • தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
    நேத்ரார்ப்பனேஸ்வரர் கோவில்
    திருவீழிமிழலை (124/274)
    திருமண தோஷ நிவர்த்தி தலம்
    பாடல் பெற்ற சிவதலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் இத்தலம் அறுபத்து ஒன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது. தேவார மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்றாகும்.
    மூலவர்: நேத்ரார்ப்பனேஸ்வரர், திருவீழிநாதர்.
    அம்பாள்: சுந்தர குசாம்பிகை.
    தலவிருட்சம்: வீழிமரம்.
    தலதீர்த்தம்:விஷ்ணு தீர்த்தம், மற்றும் இருபத்தைந்து தீர்த்தங்கள்.
    புராணப் பெயர்கள்:
    பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கபுரம், தட்சிணகாசி, சண்மங்களத்தலம், சுவேதகானனம், ஆகாசநகரம், பக்கங்கள், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம், திருவீழிமிழலை.
    தற்போதைய பெயர்: திருவீழிமிழலை
    தலசிறப்பு
    வட இந்திய மன்னன் ஒருவனின் மகன் சுவேதகேது. அவனது ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், 16 வயதில் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று கூறினார்கள். அரசன் முனிவர்களிடம் ஆலோசனை செய்ய, அவர்கள் திருவீழிமிழலை தலத்திற்குச் சென்று சிவபூஜை செய்தால் காலமிருத்யுவை வெல்லலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள். சுவேதகேது அதன்படி திருவீழிமிழலை தலம் வந்து இறைவனை தினமும் ஆராதித்து வந்தான். நாட்கள் சென்றன. சுவேதகேதுவின் உயிர் பிரிய வேண்டிய நேரம் வந்தது. உயிரை எடுக்க வந்த எமதர்மரைப் பார்த்த சுவேதகேது சிவலிங்கத்தை இறுகப் பற்றிக் கொண்டான். எமதர்மன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்து சுற்றிக் கொள்ள, சுவேதகேதுவோடு, பெருமானையும் இழுத்தான் எமதர்மன். அப்போது சிவலிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு, எமனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததுபோல், சுவேதகேதுவைக் காப்பாற்றினார். பின் தேவர்கள் வேண்டுகோளின் பேரில் எமனை உயிர்ப்பித்து, இன் தன் பக்தர்கள் சிவபூஜையில் ஈடுபட்டிருக்கும் போது உயிரைப் பறிக்க வரக்கூடாது என்று ஆணையிட்டார். இத்தகைய சிறப்பு பெற்றது திருவீழிமிழலை திருத்தலம்.
    கோயிலமைப்பு
    மூலவர் லிங்கத்திற்கு பின்புற கர்ப்பக்கிருக சுவரில் பார்வதி பரமேசுவரர் திரு உருவங்கள் இருக்கின்றன. இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. மகாமண்டபத்தில் கல்யாணசுந்தரர் மாப்பிள்ளை சுவாமியாகக் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி. அவரது வலது பாதத்தின் மேலே திருமால் அர்சித்த கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் காணலாம். கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தை விட கர்ப்பக் கிருஹத்தின் மேல் இருக்கிற 16 சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானமே சிறப்பானது. இதற்கு விண்ணிழி விமானம் என்று பெயர். சக்கரம் பெற்ற திருமால் வைகுண்டத்தில் இருந்து கொண்டுவந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
    தல வரலாறு
    திருமாலுக்கு சலந்திரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் தேவைப்படுகிறது. அதைப் பெருவதற்காக திருவீழிமிழலையில் சிவபெருமானிடம் வருகிறார். ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் என்னியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999 மலர்களால் அர்ச்சனை செய்து விடுகிறார். ஆயிரமாவது மலர் இல்லை. இன்னொரு தாமரை மலரைக் கொண்டு வந்து அர்ச்சனையை தொடர நேரமும் இல்லை. குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பெயர்த்து எடுத்து பூஜையை குறை இல்லாமல் முடித்தவுடன் சிவனும் காட்சி கொடுத்து திருமால் விரும்பியபடி அவருக்கு சக்கராயுதம் கொடுத்து அருள் செய்கிறார். இப்படி மஹாவிஷ்னு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம் தான் திருவீழிமிழலை.
    இப்படி திருமால் ஈசனை வழிபட்ட செய்தியை திருநாவுக்கரசர் தனது பதிகம் மூலமாக பாடுகிறார். நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும் "பூதத்தின் படையர் பாம்பின்" என்று தொடங்கும் பதிகத்தின் 8வது பாடலில் இத்தல வரலாற்றைக் குறித்துப் பாடுகிறார்.
    படிக்காசு அருளியது
    திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது நாட்டில் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது. இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள். மறுநாள் காலையில் கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள். அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர்.
    திருவிழா
    சித்திரையில் பெருவிழாவும் , நவராத்திரி , சஷ்டி முதலான விழாக்களும் , மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை முதலான உற்சவங்களும் நடைபெறும் தலம்.
    பிராத்தனை
    திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய சிறந்த தலம்.
    சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன.
    அமைவிடம்
    கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோயில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் எரவாஞ்சேரி அடுத்து வரும் தென்கரை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். தென்கரையில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது. அருகில் உள்ள பெரிய ஊர் பேரளம். திருஅன்னியூர், சிறுகுடி, திருப்பாம்பரம் மற்றும் திருமீய்ச்சூர் ஆகியவை இத்தலத்தின் அருகில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்.
    கோயில் Google map link
    maps.app.goo.gl/97uThXfP2bVS2...
    கோவில்வெண்ணி சர்க்கரை நோய் தீர்க்கும் தலம்
    • சர்க்கரை நோயை குணமாக்க...
    if you want to support us via UPI id
    k.navaneethan83@ybl
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 26

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +4

    ஓம் சிவாயநம ஓம்
    ஓம் திருவீழிமிழலை நாதர் மாப்பிள்ளை சாமி போற்றி ஓம்

  • @HariharasudhanVasanth
    @HariharasudhanVasanth 21 วันที่ผ่านมา

    மூன்று தினங்களுக்கு முன்பு சென்றேன் திருவண்ணாமலை இருந்து மகிழ்ச்சியாக இருந்தது

  • @jayanthisanthanam993
    @jayanthisanthanam993 5 หลายเดือนก่อน +1

    நானே நேரில் தரிசனம் செய்தாற்போல் இருந்தது! மிக்க நன்றி!

  • @karpagamaravindhan8709
    @karpagamaravindhan8709 6 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவு எல்லாம் அருமையாக உள்ளது சற்குருநாதன் பாடல் தில்லைவாழ் அந்தணர் பாட்டுபதிவிடவும்

  • @rathisakthivel4164
    @rathisakthivel4164 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நேரில் தரிசனம் செய்தது போல இருந்தது அருமை

  • @kalaivanis9122
    @kalaivanis9122 ปีที่แล้ว +6

    கோயில் அருமையான முறையில் பதிவு செய்து உள்ளீர்கள் நேரில் சென்று பார்த்த உணர்வு சார் 🙏🙏🙏

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c ปีที่แล้ว +3

    சிவாயநம....

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 7 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு அருமையான தரிசனம் நன்றி வணக்கம்

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 7 หลายเดือนก่อน +2

    ஓம் சிவாயநம என் மகனுக்கு இறைவன் அருளால் திருமணம் நடக்க வேண்டும் நன்றி வணக்கம்

  • @Astro_Guruji_Dr_Vijay
    @Astro_Guruji_Dr_Vijay ปีที่แล้ว +5

    Super Siva 👍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +4

    🙏🥀திருநீலகண்டம் 🔥🙏🔥❤🙏🦚💐திருஅண்ணாமலையார் போற்றி🔥🙏🌸சிவ சிவ🌹🥥திருச்சிற்றம்பலம்🙏🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏

    • @ishusriram
      @ishusriram ปีที่แล้ว

      Supparanna,neendanalkandha,koothi,sirroompa,roompathanks

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +4

    ரொம்ப அருமையான பதிவு நேரில் சென்று தரிசனம் செய்த மாதிரி இருந்தது இந்த வீடியோ நன்றி சார் வாழ்க வளமுடன் சார் 🙏👌👌

  • @srini12
    @srini12 2 หลายเดือนก่อน

    Ungal video ennai nere sella thoondi ullathu. Arumaiyana vilakam. Vazhga valamudan. Nichayam nan sendru tharisipen❤

  • @karpagamaravindhan8709
    @karpagamaravindhan8709 6 หลายเดือนก่อน +2

    சற்குருநாதன் பாடல் எதுவாக இருந்தாலும் போடவும்

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 2 หลายเดือนก่อน

    Thank you Thank you

  • @umapathimrs
    @umapathimrs 2 หลายเดือนก่อน +1

    உங்கள் குரல் சுந்தர் சி குரல் போல் உள்ளது சார்

  • @gopalgopal-gt5nr
    @gopalgopal-gt5nr 19 วันที่ผ่านมา

    இந்தகோவிலில் திருமணத்திற்கு பரிகார பூஜைகள் செய்கிறார்களா

  • @ragavendrarao4756
    @ragavendrarao4756 3 หลายเดือนก่อน

    Thank you sir .

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 9 หลายเดือนก่อน +1

    Om namasivaya

  • @VenkataramanTS-no9gf
    @VenkataramanTS-no9gf 6 หลายเดือนก่อน

    Temples

  • @keerthigarajamanickam8443
    @keerthigarajamanickam8443 10 หลายเดือนก่อน +2

    Poonunga itha koviluku pogalama????

    • @mathina
      @mathina  10 หลายเดือนก่อน +2

      தாரளமாக செல்லலாம்

    • @lalitharathnam9682
      @lalitharathnam9682 3 หลายเดือนก่อน

      @@mathinacallme