Naan Oru Ponnoviyam Kanden | Kannil Theriyum Kathaikal |Ananthu |Anusha & Farida |Gopal Sapthaswaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 735

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 4 หลายเดือนก่อน +3

    தமிழ் எப்போதும் இனிமை தான்... எத்தனை வருடம் ஆகிவிட்டது 😢

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 ปีที่แล้ว +21

    Wow wonderful brother இது போல பாடல்களை செலக்ட் பண்ணி பாடவைப்பது தான். அன்பு சகோதரர் திரு கோபால் சப்தஸ்வரங்கள் அவர்களின் ஸ்பெஷலிட்டி perfect music All the best vaalthukkal gobal ji

  • @veerapandianpandidurai1889
    @veerapandianpandidurai1889 3 ปีที่แล้ว +65

    சிலோன் ரேடியோ வில் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து தடவை யாவது ஒலி பரப்ப பட்ட பாடல்.
    சவாலான இந்த பாடலை தேர்வு செய்ததற்கே பாராட்டுக்கள்..

  • @periasamyp8310
    @periasamyp8310 3 ปีที่แล้ว +21

    பாடல் தேர்வே அற்புதம் சார்.. தபேலா, வீணை கலைஞர்கள் அச்சரம் பிசகாமல் வாசித்துள்ளனர். பாடகர்களும் அதற்கேற்றாற்போல அருமையாக பாடியுள்ளனர்.
    வாழ்த்துக்கள் ங்க கோபால் சார்..

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว +1

      சிரம் தாழ்ந்த நன்றி 🙏

  • @saravanavisagam
    @saravanavisagam 3 ปีที่แล้ว +26

    மிக அதிகமாக வானொலி அலைவரிசைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடல் இது என நினைக்கிறேன்... இசைஞானியின் அசாத்தியத்திறமையை அற்புதமாக சப்தஸ்வரம் குழுவினர் மறுஒலிபரப்பு செய்திருக்கின்றனர்... பாராட்டுக்கள் ..மகிழ்ச்சி

  • @ckumshr
    @ckumshr 2 ปีที่แล้ว +14

    என்ன ஒரு orchestra .. சான்சே இல்லை ..அவ்ளோ clear அண்ட் originality .
    சிங்கர்ஸ் யப்பா செம்ம ... வாய்ஸ் . SUPER O SUPER

  • @santhoshvinnarasu3928
    @santhoshvinnarasu3928 2 ปีที่แล้ว +28

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பதிவு நன்றி கோபால் அண்ணா ❤️🙏

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 3 ปีที่แล้ว +37

    Sir. வேற லெவல் இசை கலைஞர்களுக்கெல்லாம் ஒரு சல்யூட். அருமையாக பாடிய அனந் மற்றும் அனுஷ்கா அவர்களுக்கும் கோரஸ் வாய்ஸ் அவர்களுக்கும்🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

    • @ramaswathy491
      @ramaswathy491 9 หลายเดือนก่อน

      அனந்து சார் வாய்ஸ் அச்சு அசலாக எஸ்.பி.பி சார் போல் உள்ளது

    • @sreeragamsabari5703
      @sreeragamsabari5703 20 วันที่ผ่านมา

      Super 🎉🎉🎉❤

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 2 ปีที่แล้ว +10

    இந்த பாடல் மிக அருமை.
    அனந்து ; பாடும்குழுவினர்; இசைக்குழு; வீணை;புல்லாங்குழல்;
    தபேலா ; வயலின் போட்டி
    போட்டு வாசித்து ஒரு இசை தட்டு கேட்ட சுகமான
    ராகங்கள். எல்லா கலைஞர்களுக்கும்எனது
    மனமுருகியவாழ்த்தும்
    கரவொலியையும்
    வழங்கி மகிழ்கிறேன்.

  • @sprasanna199
    @sprasanna199 11 หลายเดือนก่อน +2

    Amazing Singers who took a beautiful song to the next level. Perfect synchronization and coordination. Keep it up. So proud to be listening to such brilliant singers 👏👏

  • @ramalingama.m799
    @ramalingama.m799 2 ปีที่แล้ว +9

    பரிதா அக்கா வாய்ஸ் செம்ம வேற லெவல் வாழ்த்துக்கள்

  • @Meyyappansomu
    @Meyyappansomu 2 ปีที่แล้ว +17

    இந்தப் பாடலின் சிறப்பும் அது தரும் மகிழ்வும் என் போன்ற அறுபதுகளில் இருப்பவர்கள் நன்கு அறிவார்கள்.. அருமையான குழு..🙏

  • @thamizhchelvan5840
    @thamizhchelvan5840 3 ปีที่แล้ว +30

    ரொம்ப இதமாக இருந்தது. பாடகர்கள் பாடலுக்கு நியாயம் ‌செய்துள்ளார்கள்(குறிப்பாக கோரஸ்). உங்கள் குழு மட்டும் எப்படி இவ்வளவு நெருக்கமாக இசையைக் கொடுக்கிறார்கள்?.
    (தபேலாவும், வீணையும் அற்புதம்).

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว +1

      தங்கள் பாராட்டு மிக்க நன்றி 🙏

  • @Shankarvembu-oc5fm
    @Shankarvembu-oc5fm 2 ปีที่แล้ว +21

    இந்த பாடல் கேட்கும் போது 25வருசம்பின்னால்போகிறதுமனசு இனிஒருகாலம்வருமா

  • @varshinint9119
    @varshinint9119 ปีที่แล้ว +4

    முதலில் உங்கள் குழுவிற்க்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் சுமார் 30 வருடத்திற்குமுன் இந்தப்பாடலை நம் வானோலியில் அடிக்கடி திகட்டும் அளவிற்கு கேட்டு மகிழ்ந்த பாடல் இப்பொழுது உங்கள் தயவில் அதை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு ஒருதருணம் அமைந்து அந்த கால நினைவுகள் திரும்ப வராதா என்று எண்ணி கண்ணீர் வருகிறது இதில் நடித்த நடிகர் மற்றும் நமது இசைஞானி மற்றும் பாடகர்கள் திரைபடத்தில் மற்றும் இக்குழுவில் பாடிய அனைவருக்கும் நன்றி

  • @abufarzana
    @abufarzana 2 ปีที่แล้ว +10

    இது போல அன்று ரசித்து கேட்காமல் விட்டு விட்ட பொக்கிஷங்களை மீண்டும் மீண்டும் மிக அழகாக இசையமைத்து ரசிகர்களுக்கு தந்துக் கொண்டிருக்கும் கோபால் சப்தஸ்வரம் நிகழ்ச்சி பல்லாண்டு பல்லாண்டு தொடரனும் என வாழ்த்துகிறேன்..

  • @pandurangarao5178
    @pandurangarao5178 9 หลายเดือนก่อน +1

    அருமையான Music,மிக கஷ்டமான பாடல் மிகச்சிறப்பாக பாடினீர்கள்

  • @arumugamlatha7955
    @arumugamlatha7955 2 ปีที่แล้ว +3

    அருமை. அருமை. பாடியவர்கள் பின்னணி கோரஸ் orchestra anaivarum

  • @muthugurupackiamthangamani2571
    @muthugurupackiamthangamani2571 3 ปีที่แล้ว +47

    அருமையான பாடல் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சார். நீங்கள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் சார்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

    • @n.dabarna7853
      @n.dabarna7853 2 ปีที่แล้ว

      @@gopalsapthaswaram6640 h.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 ปีที่แล้ว

      ரொம்ப சரி
      தங்களது வாழ்த்துக்கள் மனப்பூர்வமானது
      நன்றி

    • @rameshbabu8814
      @rameshbabu8814 2 ปีที่แล้ว

      @@gopalsapthaswaram6640 SEMA SUPER HIT SOng.

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 2 ปีที่แล้ว +23

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்......

  • @MeeraTamil
    @MeeraTamil 2 ปีที่แล้ว +3

    மாலை வரும் வரும்
    மாலை தரும் தரும்
    மாவிலை பின்னிய தோரணங்கள்
    மங்கல வாத்தியங்கள்
    எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்
    ஒரு வானம் கரு மேகம்
    மழை போலும் மலர் தூவும்
    மயில் ஆடும் குயில் கூவும்
    இவை யாவும் திருமண எதிரொலிகள்
    முதல் முதல் இரவென்ன வருவது
    மகிழ மனது நெகிழ வருக...//
    ப்பா.. புலவர் புலமைப்பித்தனின் இலக்கிய அறைகூவல். வேறு யாராலும் இந்த இசைக்கு இந்த வரிகளை யாத்திருக்கமுடியாது. இசைக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். முக்கியமா அந்த தபேலா கலைஞர் போட்டு பின்னியெடுத்திருக்கிறார் 😍

  • @ravimayilvaganan9510
    @ravimayilvaganan9510 2 ปีที่แล้ว +15

    அற்புதம். இசைஞானியின் இசையை அப்படியே தந்துள்ளீர்கள். மிக சிறப்பு. பாடியவர்கள், குழுப் பாடகர்கள், வாத்திய கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மற்றும் நன்றி....🙏🏾💐💐💐

  • @sundart5017
    @sundart5017 3 ปีที่แล้ว +36

    அரிதான அருமையான பாடல்.
    தபேலா வுக்கு மிக முக்கியத்துவம்
    மிக நன்று.

  • @lakshmanKumar-ky2tj
    @lakshmanKumar-ky2tj 2 ปีที่แล้ว +6

    மிக கடினமான பாடல்...அற்புதம் செய்து வீட்டிர்கள் சார்.நன்றி....அதிலும் அந்த கோரஸ் மிக சிறப்பு...

  • @arulbharathibharathi7838
    @arulbharathibharathi7838 3 ปีที่แล้ว +22

    What a magical song by Raja.... Sending my wishes to your entire team..... Superb..

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 ปีที่แล้ว +3

    இந்த பாடலை பாடுவதும் இசை அமைப்பதும் மிகவும் கடினம் ஆனால் அந்த கஷ்டங்களை முகங்களில் காட்டாமல் அற்புதமாக பாடினீர்கள் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 3 ปีที่แล้ว +24

    Very rare song. Excellent work. One of Raja Sir's Master pieces. Thank you for your performance 🙏🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว +1

      Thanks a lot 🙏

    • @latharparthasarathy4414
      @latharparthasarathy4414 2 ปีที่แล้ว

      A Master piece par excellence of all times by Raja Sir. Heavenly melody.

    • @prakashsridhararao3298
      @prakashsridhararao3298 2 ปีที่แล้ว +1

      @@latharparthasarathy4414 But according to my knowledge, Ragadevan Raja Sir is the Composer for this song

  • @vmannaaru
    @vmannaaru 3 ปีที่แล้ว +35

    எனக்கு மிகவும் பிடித்த பக்திப் பாடல். வாத்தியக் கலைஞர்களும் பாடகர்களும் துல்லியம். வாழ்த்துக்கள்.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว

      🙏

    • @vkdmedia3734
      @vkdmedia3734 2 ปีที่แล้ว +3

      இது பக்திப்பாடலா ???
      என்னாச்சுப்பா உனக்கு ???

    • @g.k.prasathsriram2027
      @g.k.prasathsriram2027 2 หลายเดือนก่อน

      ராஜா sir பாடல்கள் எல்லாம் பக்தி பாடல்கள் தான்....

  • @Rajkumar-wg2hz
    @Rajkumar-wg2hz 23 วันที่ผ่านมา +2

    I can't believe it 🤔🤔🤔🤪👏👏👏

  • @vsrn3434
    @vsrn3434 ปีที่แล้ว

    Veenai...instrumental....music...awesome.......Anusha..Faridha...did great job......hats off..Gopal orchestra...outstanding...amazing music...excellent team work...Anusha Faridha & Gopal sapthaswaram...super

  • @kannankannappankannappan4948
    @kannankannappankannappan4948 3 ปีที่แล้ว +14

    What a great composing. Valga Isain Raja. Weldone execution by Gopalji Team. My Wishes to all musicians.
    Harmony Superb.
    All the Best Gopalji

  • @parmitham9815
    @parmitham9815 2 ปีที่แล้ว

    இலங்கை வானொலியில் சிறுவயதில் நான் அதிகமாக கேட்ட பாடல் இறைவனின் அதிசயத்தில் எதுவும் ஒன்று

  • @chenniappan.p.chenniappan.4399
    @chenniappan.p.chenniappan.4399 ปีที่แล้ว +1

    அருமை அருமை திரு. கோபால் சார். 🌹🦋🎉🙏

  • @anandanathanpoongavanam5042
    @anandanathanpoongavanam5042 2 ปีที่แล้ว +11

    ISAIGNANI has composed rich, saturated, beautiful & great music in a small capsule of five minutes.Excellent recreation by your team.Wonderful sir.

  • @paulvannanrajadurai9003
    @paulvannanrajadurai9003 2 ปีที่แล้ว +4

    கண்ணில் தெரியும் கதைகள்...
    சரத்பாபு . வடிவுக்கரசி
    நானொரு பொன்னோவியம்...
    ஆனந்து
    அனுஷா
    பரிதா....
    சிறப்பு!💓

  • @poovarasu3906
    @poovarasu3906 ปีที่แล้ว +1

    🌹என்றும் என்றென்றும் இளமை இது புதுமை கோபால் சப்தஸ்வரக் குழுவினரின் இசை விருந்து. வாழ்த்துகள்.

  • @arthimuthuarthimuthu1688
    @arthimuthuarthimuthu1688 2 ปีที่แล้ว +1

    சார் தூங்குவதற்கு முன்னாடி உங்க ஆர்கெஸ்ட்ரா வில் ஒரு நாலு பாட்டு கேட்டாலே போதும் அப்பப்பா என்ன இனிமை சொல்லுறதுக்கு வார்த்தையே இல்லை நன்றி சார்!

  • @kalatambidore8696
    @kalatambidore8696 2 ปีที่แล้ว

    அருமை ஸ்ரீ அனந்து ஸ்ரீமதி அனுஷா ஸ்ரீமதி ஃபரிதா அற்புதமான கோபால் சப்தஸ்வரம்
    பாரிஸிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்
    Great Sri Ananthu Srimathi Anusha Srimathi Farida
    Prodigious Gopal Sapthaswaram
    We wish you all the best from Paris

  • @avela8838
    @avela8838 5 หลายเดือนก่อน

    யப்போதும் இந்த மாதிரி பாடல்கள் கேட்க ரொம்ப ஆசைப்பட்டேன் ஆனா இப்ப very clear இசையும் பாடகர், இசையும் இசை குழுவும் இப்போ இளமை இனிமை யா எப்பவும் இருக்கும் இதை பார்க்கும் ஒவ்வொரு வரும் இலைமையா இருக்கும் எண்ணத்தை கொடுக்கும் உங்கள் இசை குழுவுக்கு 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️🎉🎉🎉

  • @sendilvelanpurushothaman4479
    @sendilvelanpurushothaman4479 2 หลายเดือนก่อน

    Awesome, congratulations. Outstanding performance from Anand sir & Farida mam

  • @kalaimanit6029
    @kalaimanit6029 2 ปีที่แล้ว +7

    இசை ஞானியின் இசை எனும் போதிலே இன்பத்தேன் வந்து பாயுது காதிலே. Amazing, Wonderful performance by the entire team.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      Beautiful comment 👏👏
      Thanks for the appreciation 🙏🙏

  • @itcmohan
    @itcmohan 3 ปีที่แล้ว +10

    Sir,
    Pramadham... Thathroobam.... Arputham .... Orchestration is superb.... Best singers ... Keep it up .. All the best to all of them.... Mr.Ananthu never tried to imitate the original singer and sung well...

  • @mindtechcricket4944
    @mindtechcricket4944 2 ปีที่แล้ว +1

    Thabla shastanga namaskar sir.

  • @S.Murugan427
    @S.Murugan427 3 ปีที่แล้ว +4

    அதிகமாக எதிர்பார்த்து ரொம்ப நாட்களாக காத்திருந்த பாடல்.
    ஒரிஜினல் பாடல் நல்ல தரத்தில் இல்லை.
    மிகவும் அருமையாக மீட்டு தந்துள்ளீர்கள் கோபால் சார்.
    நன்றி: பாடகர்கள் அனந்து, அனுஷா, பரீதா, கோரஸ் குழுவினர் மற்றும் இசைகலைஞர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றி கலந்த வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்.
    🙏🙏🙏💐💐💐🌹🌹🌹♥️♥️♥️

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 3 ปีที่แล้ว +3

    பாடல் அருமை.
    பாடகர் அனந்து
    கோரஸ் குழு திறமை
    அருமை அற்புதம்.
    வீணை புல்லாங்குழல்
    வயலின் இசைக் கலைஞர்கள் தபேலா
    மிக மிக அருமை.
    இசை கலைஞர்கள்
    அனைவரும் பாராட்டுக்கு

  • @shanke300
    @shanke300 3 ปีที่แล้ว +8

    Difficult song. But what a rare treat. I love this song too much. SPB S.J n P.S legends are tremendous. Maestro magic..

  • @wilsonjacob1599
    @wilsonjacob1599 3 ปีที่แล้ว +2

    கோபால் சப்தஸ்வரம் குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் 💐

  • @555shekha
    @555shekha 3 ปีที่แล้ว +1

    Superb! Raja master s difficult composing very much difficult song arumai arumai arumai

  • @vivagav9803
    @vivagav9803 3 ปีที่แล้ว +8

    What a composition of Ilayaraja..... the great.
    Extraordinary performance by the orchestra, awesome singing. I watch many orchestras in TH-cam, but this team presents in very grand manner.
    👏👏

  • @saisharma9234
    @saisharma9234 2 ปีที่แล้ว +2

    Excellent rendition by Ananthu, Anusha, Farida and chorus singers. I'm listening to this song more than 10 times. Hats off to Gopal Sapthaswarangal musicians.

  • @jawaharcb
    @jawaharcb 2 หลายเดือนก่อน

    தமிழ்திரையுலகம் வீணடித்த ஒரு சிறந்த பாடகர் அனந்து சார்.❤

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 2 ปีที่แล้ว +1

    Excellent Excellent இதற்கு துல்லியமான இணைச்சொல் வேண்டும் தமிழில் பாராட்ட..

  • @csccomputers9996
    @csccomputers9996 2 ปีที่แล้ว +2

    மிக அற்புதமான பாடல். நேர்த்தியாக பாடிய பாடகர்கள், குழுவினர்கள், இசை கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @parthasarathyjeyadevan538
    @parthasarathyjeyadevan538 หลายเดือนก่อน

    இசையின் உயிர்ப்பு என்றென்றும் ஒலிக்கும் வகையில் தத்ரூபமாய் குரல் அமைப்புடன் ....

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 2 ปีที่แล้ว +2

    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்பதனை இசைக்குழுவினர் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றனர்

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 3 ปีที่แล้ว +5

    Great song selection. Super. Thanks to Gopal Sir

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 2 ปีที่แล้ว +4

    சூப்பர் பாடல்.... கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது....

  • @SelvaArun-e9g
    @SelvaArun-e9g ปีที่แล้ว

    gopal sir u r great .....chancey illa....athilum unga female singers very top.... surmughi mam great singer talent..... anusha and faritha mam voice very glarity .....then super orchestra..... nan oru ponnoviyam song very superb.... ananthu sir very super singer.

  • @SakthiVel-hb1vm
    @SakthiVel-hb1vm 2 ปีที่แล้ว +1

    இசைக்குளு ஐயா இளையராஜாஅவர்களின்நிழலில்

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 3 ปีที่แล้ว +4

    Great composition and rare song with very good performance.

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 2 ปีที่แล้ว +2

    Excellent Veena playing. Playing thapela is amazing. Female singers are very beautifully singing. What a wonderful evergreen song. Thanks to Raja sir.

  • @muru90
    @muru90 6 หลายเดือนก่อน

    Awesome singing nice feel..all sang beautifully with extraordinary music score..hats off to all

  • @balusubramaniamnatarajan7493
    @balusubramaniamnatarajan7493 2 ปีที่แล้ว

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் .இளம் வயதில் ரசித்து மகிழ்ந்திருக்குறேன்
    .

  • @sengotaiyanks8617
    @sengotaiyanks8617 ปีที่แล้ว

    இந்தப் பாடலை திரும்ப திரும்ப கேட்பவர்களில் நானும் ஒருவன். சிறப்பாக பாடியுள்ள பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @devasir2372
    @devasir2372 3 ปีที่แล้ว +4

    Gopal Sir...please upload All your songs....on hearing your songs...we feel our missed Legend SPB sir..among us...

  • @MANOJKUMAR-yk7ew
    @MANOJKUMAR-yk7ew 3 ปีที่แล้ว +8

    Very difficult song to perform live. Amazing performance.. Harmonies and Tabla stand out as well as faridha's voice.

  • @ravindraan
    @ravindraan 2 ปีที่แล้ว +1

    No one else but Raja..

  • @suramanit4425
    @suramanit4425 ปีที่แล้ว

    உங்கள் பாடலை கேட்க கேட்க மிகவும் மிகவும் அருமையாக இருக்கின்றது இருவரும் அருமையாக பாடுகிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @rajam7769
    @rajam7769 4 หลายเดือนก่อน

    சார் உங்கள் சிறப்பே திரைப் படத்தில் வரும் இசை, குரல் இந்த இரண்டையும் தத்ரூபமாக கொடுப்பதுதான். வாழ்த்துக்கள்.

  • @ShriramStudios
    @ShriramStudios 2 ปีที่แล้ว +10

    Superbly reproduced by the entire crew. Amazing singing including chorus and brilliant orchestration 👍👏 Enjoyed thoroughly 👏👏👏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞🙏🙏🙏❤️🙏💞🙏❤️🙏💞🙏🙏🙏

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 ปีที่แล้ว

    பாடல்கள் தேர்வு, பாடகர்கள் தேர்வு, இவற்றில் தங்களின் ஆற்றலை போற்றத்தான் வேண்டும்! குறிப்பாக அனந்து போன்ற பிரபலங்களுடன் சகோதரி ப்பரிதாவை பாடவைப்பதில் மகிழ்ச்சி! அவருடைய தெளிவான பாடல்வரி உச்சரிப்பில் நான் பலமுறை பிரமித்து போயிருக்கிறேன்! அவரைப் போன்றவர்களை தாங்கள் அதிகம் பயன்படுத்துவதைக் கண்டு தங்களை வாழ்த்துகிறேன்.

  • @poovarasu3906
    @poovarasu3906 3 หลายเดือนก่อน

    🥀 புல்லாங்குழலிசை ,ஈடு இணையற்ற வீணையிசை , தன்னிகரற்ற தபேலாயிசை
    மூன்று கலைஞர்களும் கோபால் சப்தஸ்வரத்தின் மூன்று கண்களெனில் மிகையாகாது.
    வாழ்த்துகள்.

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 2 ปีที่แล้ว +2

    பரிதா அக்கா வேற லெவல்...

  • @musolinabraham5780
    @musolinabraham5780 2 ปีที่แล้ว +4

    The entire Team is really committed, involved, dedicated, It's an Outstanding performance . Hats off to one and all.

  • @venkatramani5621
    @venkatramani5621 2 ปีที่แล้ว +3

    Outstanding performance.

  • @dillibabu4918
    @dillibabu4918 2 ปีที่แล้ว

    கோபால்சார் என் மனசுல நிறைந்து இருக்கீங்க வா😀ழ்க உங்களின் இசை உலகம் நன்றிகள்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏

  • @balajiram38
    @balajiram38 3 ปีที่แล้ว +5

    Oh! What a song! How well it has been recreated!!!! What a synchronisation of Veena, flute and violin( even thou it's not there but tgro key board)!!! Brilliantly sung by all including chorus!!! Difficult song on stage made easy!!!!! Kudos to gopalji

  • @sibijoesibi9635
    @sibijoesibi9635 3 ปีที่แล้ว +19

    Amongst the five songs composed by five different composers of this movie 'Kannil therium
    kathaigal' released in the year 1980, Issai Gnani proved his geniousnes that
    there is no competitor for him for ever. An everlasting master piece amongst thousands
    composed by Issai Gnani. Your presentation is more fidelistic than
    the original sound track of the movie; especially Kiran's Thabela beats.
    Thanking you, Gopal sir.

  • @mathialagan5703
    @mathialagan5703 ปีที่แล้ว

    வீனை மீட்டுகிற அழகே அழகு நிகழ்ச்சி மிக சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @noormohamed9118
    @noormohamed9118 2 ปีที่แล้ว +2

    What a beautiful evergreen song. We back to 1980.

  • @p.Rameshkumar-c6r
    @p.Rameshkumar-c6r 3 ปีที่แล้ว

    கோபால்சார் மேடையில் நீங்கள் படைக்கும்பாடல்கள் முற்றிலும் உங்களுக்கானது வேறுயாரும் எந்தமேடையிலும்பாடஇயலாது அமர்க்களம் சார் தொடரட்டும் உங்கள் இசைசாதனை

  • @mkarthikeyan8462
    @mkarthikeyan8462 3 ปีที่แล้ว +9

    Excellent chorus 👌

  • @PantPant-v4n
    @PantPant-v4n 5 หลายเดือนก่อน

    Salute Gopal sir team vera leval !

  • @artinprint5751
    @artinprint5751 6 หลายเดือนก่อน

    😅 அய்யா இது போன்ற பாடல்கள் ஆர்கெஸ்ட்டரா என்றும் கேட்டதில் கலை

  • @ilayaraja2244
    @ilayaraja2244 2 ปีที่แล้ว +7

    உண்மையில் போதையாகவே உணர்கிறேன் 👌👌😍😍🙏

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 3 ปีที่แล้ว +18

    ஜி.ராமனாதனின் Classic KVM ன் ஜனரஞ்சகம் MSV ன் Novelty எல்லாம் ஒன்றாய் கூட்டினால் Raja. SPB S.Janaki and PS
    காலத்தால் அழியாத கானம். Tnq for avatharam team.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 ปีที่แล้ว

    என்னுடைய சிறிய வயதில் வானொலியில் இப்பாடல் ஒளிபரப்பாகும்,..!! விளையாடிக்கொண்டே கேட்பேன்..!! அப்பொழுதே இப்பாடல் எனை ஈர்த்து விட்டது...!!👍👌

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 ปีที่แล้ว

    ஒரிஜினல் ரிக்கார்டிங் தியேட்டரில் உட்கார்ந்து கேட்டது போல இருந்தது, மனதுக்கு ரம்மியமான பாடல்களை தொகுத்து வழங்கும் கோபால் சப்தஸ்வரத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏

  • @muthaiyaayyar6917
    @muthaiyaayyar6917 2 ปีที่แล้ว

    இவ்வளவு இனிமைக்கு காரணம்,
    அந்த பாடலின் ஒலிப்பதிவு
    நாளுக்கு நாள் மாறுபடுவதுனால்

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 13 ชั่วโมงที่ผ่านมา

    Vera level super super super ippa intha mathiri show conduct panrangala please please please sollunga pa

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  5 ชั่วโมงที่ผ่านมา

      Yeah,
      We regularly conduct programs, please subscribe our channel and press bell icon, you will get notification before our shows.
      Thank you

  • @sendilvelanpurushothaman4479
    @sendilvelanpurushothaman4479 3 หลายเดือนก่อน

    No words to explain, amazing performance

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 3 ปีที่แล้ว +1

    ஐயா மிக அருமையான பாடல் பதிவு மிக்க நன்றி ஐயா

  • @S_M_0009
    @S_M_0009 29 วันที่ผ่านมา

    👍👍👍. Love this beautiful rendering. Kudos to the Team.

  • @muthukrishnan8586
    @muthukrishnan8586 3 ปีที่แล้ว +1

    பாராட்ட வார்த்தையே இல்லை....வெகு சிறப்பு

  • @pirudayaraj7717
    @pirudayaraj7717 2 ปีที่แล้ว

    Orchestra and Audio recording SUPER

  • @doraisamiselvam
    @doraisamiselvam 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் இது. அதிலும் ஆண்ணின் குரல் அற்புத்திலும் அற்புதம். உண்மையான குரலை விட இது புதுவிதமாக இனிமையாக அற்புதமாக இருந்தது. மிக மிக அருமையான பாடல் மீண்டும் புதியதாக பாடிய பாடல் குழுக்கள் மற்றும் இசை ஜாம்பவான்கள் குறிப்பாக தபேலா வாசித்தவருக்கு பாராட்டுக்களும், நன்றிகளும் மற்றும் வாழ்த்துகளும் .

  • @sumathirajadurai7385
    @sumathirajadurai7385 2 ปีที่แล้ว

    மிகவும் அரிதான பாடல்.
    அருமையான.
    பரிதா (அக்கா) சூப்பர்.
    அடையாளம் கண்டு மகிழ்ச்சி.

  • @SeenivasanJeyaraman
    @SeenivasanJeyaraman ปีที่แล้ว +1

    கணணல் தெரியும் பாடகர்களின் குரல்கள் மிகவும் அருமை
    தபேலா நன்று,வீணை மிகவும் அருமை,

  • @keshavanbalasubramaniyamke1442
    @keshavanbalasubramaniyamke1442 18 วันที่ผ่านมา

    Hattsof to entire orchestra team 🎉