திருத்தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வர் கோயில் | Thirutalaichangadu | Devara Temple | Sangaranyeswarar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • திருச்சிற்றம்பலம்
    திருத்தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வர் கோயில் | Thirutalaichangadu | Devara Temple | Sangaranyeswarar
    இறைவன் பெயர் - சங்காரண்யேஸ்வரர், சங்கவன ஈஸ்வரர்
    இறைவி பெயர்- சௌந்தரநாயகி, பிரஹத் சுந்தராம்பிகை, அழகார்ந்தநாயகி
    எப்படிப் போவது : சீர்காழியில் இருந்து திருக்கடையூர் செல்லும் சாலை வழியில் சுமார் 16 கி.மீ. தொலைவில் தலைச்சங்காடு உள்ளது. மயிலாடுதுறையில் இருந்தும் சுமார் 21 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தை அடையலாம். அருகில் திருஆக்கூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருதலைச்சங்க நான்மதியம் என்ற கோவிலும் சிவன் கோவிலில் இருந்து அருகாமையில் உள்ளது. திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. வடக்கே பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.
    ஆலய அர்ச்சகர் தொலைபேசி +91 9600155155
    Google map : maps.app.goo.g...
    கோச்செங்கட் சோழனால் யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்டு கட்டப்பட்ட மாடக் கோவில்களில் திருதலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.
    தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 45ஆவது சிவத்தலமாகும்
    தலைச்சங்காடு திருத்தலத்திற்கு, தலையுடையர் கோவில்பத்து, தலைச்சங்கானகம், சங்குவனம், சங்காரண்யம் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன. தலைமையான சிவாலயத்தை கொண்டிருந்த காரணத்தாலும், திருமாலின் வேண்டுதலை ஏற்று சிவன் சங்கு வழங்கி அருள்புரிந்ததாலும் (தலபுராணம் சொல்வது), சங்குபூக்கள் பூத்துக் குலுங்கும் வனமாக இருந்தமையாலும் (கல்வெட்டுச் செய்தி), பூம்புகார் துறைமுகம் செழிப்புற்று விளங்கிய காலகட்டத்தில் கடலில் இருந்து எடுக்கப்படும் சங்குகள் விற்பனை செய்யப்படும் இடமாக இவ்வூர் இருந்தமையாலும் (வரலாறு) இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என பல்வேறு ஆதாரங்கள் கூறப்படுகிறது. இருப்பினும் அவை அத்தனையும் பொருந்துவதாகவே உள்ளது.
    திருதலைச்சங்காடு (சம்பந்தரின் பதிகத்தில் ஊரின் பெயர் தலைச்சங்கை என்றுள்ளது.)
    சங்கு வேண்டி தவம் செய்த பெருமாள், ஆலயத்தினுள்ளே சிவனுக்கு வலதுபுறத்தில் உள் பிரகாரத்தில் சிறிய வடிவில் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.
    தெற்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும், மேற்கு வெளிப் பிரகாரத்தில் முருகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நிதியும் உள்ளன. மேற்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் மஹாவிஷ்ணு சீதேவி, பூதேவி சமேதராய் காட்சி தருகிறார். மஹாவிஷ்ணு இத்தலத்தில் சங்காரண்யேஸ்வரரரை வழிபட்டு தனது ஆயுதமாக பாஞ்சசன்னிய சங்கைப் பெற்ற சிறப்புடையது இத்தலம். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி சௌந்தரநாயகி சந்நிதி அமைந்துள்ளது. இறைவி கருவறை வாயிலின் வெளியே இடதுபுறம் புவனேஸ்வரியின் தனி சந்நிதி அமைந்துள்ளது.
    கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியும் உள்ளதைக் காணலாம். இத்தலத்தின் தல விருட்சம் புரச மரம். புரச மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம், மற்றும் விநாயகர் திரு உருவங்களைக் காணலாம். ஆலயத்தின் தீர்த்தம் சங்குதீர்த்தம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. இத்தீர்த்தத்தில் பௌர்ணமி நாளில் நீராடுவது விசேஷமாகும்.
    #sivan
    #sivatemple
    #templevlog
    #templehistory
    #sivan
    #devaram
    #padalpetratemple
    #devara
    #oldtemple
    #Thalaichengadu
    #திருத்தலைச்சங்காடு
    #siva
    இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
    மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
    இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
    அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
    உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.
    அன்புடன்
    சிவ.ஜவஹர்
    ☎️ 9551623296
    #சிவ_ஜவஹர்
    #Siva_Jawahar
    இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.

ความคิดเห็น • 7

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 หลายเดือนก่อน +2

    🙏🌹🍀சிவாய நம 📿🙏🍀🌹❤❤❤❤❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul  6 หลายเดือนก่อน +1

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @karunakaranelumalai391
    @karunakaranelumalai391 6 หลายเดือนก่อน +1

    Om Namachivaya,

    • @ellamsivanarul
      @ellamsivanarul  6 หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @rbaskaran7046
    @rbaskaran7046 6 หลายเดือนก่อน +1

    தற்போதும் இந்த ஊரில் சங்கு விற்பனை செய்கிறார்களா ஐயா.....

    • @ellamsivanarul
      @ellamsivanarul  6 หลายเดือนก่อน

      @@rbaskaran7046 திருச்சிற்றம்பலம் 🙏
      நான் சென்றபோது பூம்புகாரை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே சங்கு விற்பனையைப் பார்க்க முடிந்தது.
      தலைச்சங்காட்டில் காண முடியவில்லை.

    • @rbaskaran7046
      @rbaskaran7046 6 หลายเดือนก่อน +1

      @@ellamsivanarul
      தகவலுக்கு நன்றி ஐயா