மன முறிவும்.. மண முறிவும்.. Irai Anbu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @Sakthis007
    @Sakthis007 11 วันที่ผ่านมา +2

    சிறப்பான பதிவு அய்யா மகிழ்ச்சி உங்கள் பேச்சு எப்போதும் எங்களுக்கு மகுடம் போல ......

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 14 วันที่ผ่านมา +4

    வீடுகளை புத்தகங்களால் அலங்கரிக்கும் போது தான் அழகான இல்லமாக மாறுகிறது என்கிறார் இறையன்பு ஐயா அவர்கள்.
    மனமுறிவு மணமுறிவு -சுழி மட்டுமே வித்தியாசம்.
    தூய்மை பணியாளர் மேரி பற்றி குறிப்பிட்டது மேன்மையான பதிவு.
    புத்தகம் படிப்பதன் பயன்களை அனைவரின் உள்ளம் சேர உரைத்துள்ளார்.
    குடும்பங்களின் அமைப்பை உறுதியாக வைப்பதனை கதையோடு விளக்கியது சிறப்பு.
    வாழ்க்கை துணை பற்றிய
    எதிர்பார்ப்புகள் அதிகம் என்று கதையுடன் விளக்கி ஒரு குட்டு வைத்துள்ளார்.
    ஊடகம் வாயிலாக தவறான சித்தரிப்பை ஏற்படுத்துவதற்கு கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
    குடும்பத்திற்காக நிறைய விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த காலம் போய் இன்று சிறு விஷயங்களுக்கு விவாகரத்துகளில் நிற்கிறது.
    விவாகரத்துகளால் ஏற்படும் செலவினம், பிரச்சனைகள், குழந்தைகள் மன நல பாதிப்பு, சமூக அந்தஸ்து பாதிப்பு, ஒற்றை பெற்றோர் வளர்ப்பின் பின்னடைவு, என்று மிகவும் தேவையான கருத்துகளை பகிர்ந்து உள்ளம் தெளிய வைத்து உள்ளார். நிச்சயம் சிலராவது மனம் மாற்றம் கொள்வார்கள் இறையன்பு அவர்களின் பேச்சின் பயனாக.
    சின்ன சின்ன பாராட்டுகளில் உள்ள அன்பு கூடும், குடும்ப அமைப்பு சிறப்புறும்.
    நண்பன் தோள்பட்டையை பிடிக்கும் என்று பகிர்ந்த விஷயம் அருமை! வர்ணித்த விதம் அழகு.!
    ரசிக்கும்படியான பல நிகழ்வுகளை பகிர்ந்ததால் பார்வையாளர்கள் சிரிப்புடனும் உற்சாகத்துடனும் மக்கள் கரவொலி!
    நிறைய எழுத்தாளர்களின் கதைகளையும், வெளிநாட்டு அறிஞர்களின் நூல்களையும் குறிப்பிட்டதும் முத்தாய்ப்பு.!
    வைர அட்டிகை கதைக்கு பார்வையாளர்கள் கரவொலி ஓங்கி ஒலித்தது!

    • @purusothamann8884
      @purusothamann8884 13 วันที่ผ่านมา +1

      👍🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻

  • @mdnaufal8108
    @mdnaufal8108 14 วันที่ผ่านมา +3

    தமிழ் இளைய சமுதாயத்தின்
    உற்சாக விளக்கே.....!!
    இறையன்பு IAS
    அவர்களே....!!
    நீவிர்
    என்றென்றும் எங்களுக்கு
    வழிகாட்டி...
    வளர்க தங்களின்
    அர்ப்பணிப்பு...
    இறையருள் துணை என்றும் தங்களின்
    குடும்பத்தினர்க்கு
    நிறைவாக
    அமைய வேண்டுகிறேன்.

  • @jagadeeswariK-n5g
    @jagadeeswariK-n5g 10 วันที่ผ่านมา +1

    அருமையான வாழ்க்கைக்கு அவசியமான உரை! எல்லா தம்பதியினரும் கேட்க வேண்டிய பதிவு!

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 14 วันที่ผ่านมา +3

    அண்ணன் இறையன்பு அவர்களின் பேச்சு எப்பொழுதுமே ஆளுமையுடன் இருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றிகள்

  • @sornamn9716
    @sornamn9716 14 วันที่ผ่านมา +3

    இன்றைய சமூகத்திற்கு மிகத் தேவையான உரை. புத்தக வாசிப்பின் தேவையை,நன்மையை தொடக்கத்தில் சொல்லி,மண முறிவில் முன்னணியில் இருக்கும் நாடுகள், மாநிலங்கள் எனும் புள்ளிவிவரங்கள் கூறி,6-வதாக இருக்கும் தமிழ்நாட்டில் நிகழும் மணவிலக்குகளை தடுப்பதற்கான வழிமுறைகளைக் கூறும் மிகச்சிறப்பான உரை.பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணங்களில் மட்டுமல்ல,காதல் திருமணங்கள் சிலவும் மணமுறிவில் முடிவதைக் கோடிட்டுக் காட்டி,அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைத் தன் வாழ்க்கை அனுபங்களைக் கொண்டும்,தன் நண்பர்களின் வாழ்வியல் அனுபங்களைக் கொண்டும் விளக்கியவிதம் மிகச்சிறப்பாக உள்ளது.முடிவில் சூடாமணியின் கதைகளைச்சொல்லி முடித்த விதமும் மிக நன்று.நிறையப் புத்தகங்கள்,கதைகள் ,அறிஞர்கள் பற்றிய மேற்கோள்கள் இந்த சொற்பொழிவில் நிறைந்து இருக்கிறது.எடுத்துக்காட்டான உரை. சைக்கோக்களிடம் மாட்டிக்கொண்ட வாழ்க்கைத்துணைவர்களுக்கு வேறு வழியில்லை.அவர்களிடம் இருந்து மணமுறிவு பெறுவதுதான் ஒரே வழி.ஆனால் சின்னச்சின்ன விசயங்களுக்காக மணமுறிவைச் சிந்திக்கும் இன்றைய தலைமுறைக்கு மிகவும் வழிகாட்டக்கூடிய வாழ்வியல் உரை. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் . வா.நேரு,மதுரை.

    • @balaaraja5408
      @balaaraja5408 6 วันที่ผ่านมา

      மிக அருமை

  • @electricselvam8964
    @electricselvam8964 13 วันที่ผ่านมา +2

    அறிவூட்டும். அழகிய புத்தகமே. நீங்கள் தான் ங்க சார்

  • @madhuraji6706
    @madhuraji6706 12 วันที่ผ่านมา

    வணக்கம்... பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா ❤️❤️❤️💐

  • @Chandran-x8u
    @Chandran-x8u 13 วันที่ผ่านมา +1

    உயர்ந்த சிந்தனைகள்... கதைகள்... மனங்களை மேம்படுத்தும் கருத்துகள்... இல்லறத்தை நல்லறமாக மாற்றும் அற்புத உரை... திருமண நிகழ்வுகளில் இவ்வுரையை நூலாக்கி அனைவருக்கும் அன்பளிப்பாக அளிக்கலாம். ❤🎉

  • @indwarrior9812
    @indwarrior9812 14 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா

  • @balaaraja5408
    @balaaraja5408 9 วันที่ผ่านมา

    மக்கள் புரியும் வரை திரும்ப திரும்ப கவனிக்கவும்...

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 12 วันที่ผ่านมา +1

    தகழி சிவசங்கரன் பிள்ளையின் படைப்பில் துாய்மைப்பணியாளரின் வாழ்க்கையில் துரயம் மிகுந்திருப்பதை உணர்ந்துருகும்படி சுருங்கச்சொல்லி இதயம் தொட்டீர்கள் சார்.

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 12 วันที่ผ่านมา

    படிப்பாளிக்கும் படைப்பாளிக்கும் நட்புலகில் தனியான சிவப்புக்கம்பளம் விரிக்கப்படுகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நல்ல புத்தகம் ஆறுதல் தரும் அருமருந்துதான் என்பதை அதைக் கண்களால் அருந்தி மனதுக்கு விருந்தளித்தால் அறியலாம். உரை துவங்கிய ஐந்து நிமிடங்களில் கிடைத்த அறிவுப்பொக்கிசம்.

  • @ramyalakshmanan7095
    @ramyalakshmanan7095 14 วันที่ผ่านมา +3

    வணக்கம் ஐயா 🙏

  • @arssundaramalagumalai4207
    @arssundaramalagumalai4207 10 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம்,
    ஸ்ரீ பகவத் ஐயா அவர்கள் ஆன்மிக துறையில் பெரும் விளக்குனர் மற்றும் வழிகாட்டி ஆவார். அவரின் போதனைகள் மன அமைதி மற்றும் ஆன்மிக வளர்ச்சியைக் கண்டறிய உதவுகின்றன. அவர் வழங்கும் உரைகள் ஆன்மிகம், தியானம், சத்சங்கம் மற்றும் சுய விழிப்புணர்வு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளன.
    சேலம் ஸ்ரீ பகவத் பவன் என்பது பகவத் ஐயா அவர்களின் போதனைகளை பகிர்ந்தளிக்கும் ஒரு ஆன்மீக மையமாக உள்ளது. இதில் ஆன்மிக முகாம்கள், தியானப் பயிற்சிகள் மற்றும் சத்சங்கங்கள் நடைபெறுகின்றன. இவை பகவத் ஐயாவின் அருளில் மக்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டவை.
    ஸ்ரீ பகவத் ஐயா அவர்கள் தனது எளிய மற்றும் ஆழமான போதனைகளின் மூலம் அனைவருக்கும் ஆன்மிக தெளிவு மற்றும் அமைதி அளிக்கின்றார். அவரது வழிகாட்டுதலின்படி பலர் ஆன்மீக வளர்ச்சியில் முன்னேறியுள்ளனர்.
    பகவத் ஐயாவின் போதனைகள் மற்றும் அருளைப் பெறுவது உங்கள் ஆன்மீக பயணத்தை உயர்த்தும் ஒரு அனுபவமாக இருக்கும்.

  • @srirama1885
    @srirama1885 13 วันที่ผ่านมา +1

    👌

  • @departmentofenglishintamil9580
    @departmentofenglishintamil9580 13 วันที่ผ่านมา +1

    Naaan eantha thappume pannama eanna divorce pannitangle athuku eanna sir pndrathu😢

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 12 วันที่ผ่านมา

    நாம் வாசிக்கின்ற புத்தகமானது மேற்கோள் காட்டுகின்ற புத்தகங்களையெல்லாம் வாங்கி வாசிக்கத்துாண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லைங்க சார்.

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 14 วันที่ผ่านมา +3

    ❤❤❤

  • @purusothamann8884
    @purusothamann8884 13 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉

  • @ragulsragul6421
    @ragulsragul6421 14 วันที่ผ่านมา +3

    🥰🥰😍😍😍🙏🙏🙏💐

  • @arssundaramalagumalai4207
    @arssundaramalagumalai4207 10 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம்,
    ஸ்ரீ பகவத் ஐயா அவர்களைப் பற்றி பேசுங்கள்.
    ஸ்ரீ பகவத் ஆய்யா சகிக்க முடியாத எளிமையனவர்கள்,
    அவர்கள் ஒரு சந்திப்பிலேயே உங்களை ஞானியாக்கி விடுவர்.
    அவரைப் பற்றி பேசுங்கள்.

  • @manimani-hy2gz
    @manimani-hy2gz 2 วันที่ผ่านมา

    Sir I am laurel student I have te speak with I am in depression class100😢 pls sir

  • @jagadeeswariK-n5g
    @jagadeeswariK-n5g 10 วันที่ผ่านมา +1

    அருமையான வாழ்க்கைக்கு அவசியமான உரை! எல்லா தம்பதியினரும் கேட்க வேண்டிய பதிவு!

  • @bhvaneshwarangajendiran9467
    @bhvaneshwarangajendiran9467 12 วันที่ผ่านมา

    நன்றி ஐயா