பூ முடிப்பாள் இந்த பூங்குழலி Poo Mudippal Indha Poonkuzhali Song #-4K HD Video Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • பூ முடிப்பாள் இந்த பூங்குழலி Poo Mudippal Indha Poonkuzhali Lyrics in Tamil from Nenjirukkum Varai (1967)
    Poo Mudippal Indha Poonkuzhali Lyrics in Tamil. பூ முடிப்பாள் இந்த பூங்குழலி - பாடல் வரிகள், Poo Mudippal Indha Poonkuzhali song is from Nenjirukkum Varai 1967. The Movie Star Cast is Sivaji Ganesan, K. R. Vijaya and R. Muthuraman. Singer of Poo Mudippal Indha Poonkuzhali is T. M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by M. S. Vishwanathan. Poo Mudippal Indha Poonkuzhali Lyrics in English
    Song : Poo Mudippal Indha Poonkuzhali
    Movie/Album Name : Nenjirukkum Varai 1967
    Star Cast : Sivaji Ganesan, K. R. Vijaya and R. Muthuraman
    Singer : T. M. Soundararajan
    Music Composed by : M. S. Vishwanathan
    Lyrics written by : Kannadasan
    Poo Mudippal Indha Poonkuzhali Song Lyrics in Tamil (Nenjirukkum Varai 1967)
    Poo Mudippal Indha Poonkuzhali Lyrics in Tamil :
    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
    பார்வையிலே மன்னன் பேரெழுதி
    பார்வையிலே மன்னன் பேரெழுதி
    அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
    அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
    பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
    பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
    பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
    பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
    தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
    தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
    தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
    தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
    நிகழும் பார்த்திப ஆண்டு
    ஆவணித் திங்கள் இருபதாம் நாள்
    திருவளர் செல்வன் சிவராமனுக்கும்
    திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்
    நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
    வாழ்த்தியருள வேண்டுகிறேன்
    தங்கள் நல்வரவை விரும்பும்
    ரகுராமன் ரகுராமன் ரகுராமன்
    மாதரார் தங்கள் மகளென்று
    பார்த்திருக்க
    மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க
    காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர
    கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர
    காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க
    ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க
    கொட்டியது மேளம் குவிந்தது கோடி மலர்
    கட்டினான் மாங்கல்யம்
    மனை வாழ்க துணை வாழ்க குலம் வாழ்க
    கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
    கடமை முடிந்தது கல்யாணம் ஆக
    கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
    கடமை முடிந்தது கல்யாணம் ஆக
    அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
    அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
    ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட
    பூ முடித்தாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
    என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
    அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
    கண்ணில் நீரெழுதி. கண்ணில் நீரெழுதி..
    Poo Mudippal Indha Poonkuzhali Lyrics in English :
    Poo mudippaal indha poonguzhali
    Pudhu cheer peruvaal vanna thaenaruvi
    Poo mudippaal indha poonguzhali
    Pudhu cheer peruvaal vanna thaenaruvi
    Paarvaiyilae mannan per ezhudhi
    Paarvaiyilae mannan per ezhudhi
    Adhai paarthirukkum kannil neer ezhudhi
    Adhai paarthirukkum kannil neer ezhudhi
    Poo mudippaal indha poonguzhali
    Pudhu cheer peruvaal vanna thaenaruvi
    Ponmani kangalil anjanam theetti
    Poovaiyin annan kai valai pootti
    Ponmani kangalil anjanam theetti
    Poovaiyin annan kai valai pootti
    Thaai vazhiyae vandha naanathai kaatti
    Thaai vazhiyae vandha naanathai kaatti
    Thaan varuvaal mangai mangalam sootti
    Thaan varuvaal mangai mangalam sootti
    Poo mudippaal indha poonguzhali
    Pudhu cheer peruvaal vanna thaenaruvi
    Nigazhum paarthiba aandu
    Aavani thingal irubadhaam naal
    Thiruvalar chelvan sivaraamanukkum
    Thiruvalar chelvi raajaeswarikkum
    Nadai perum thirumanathirukkuSutram soozha vandhirundhu
    Vaazhthi arula vaendugiren
    Thangal nal varavai virumbum
    Raguraaman raguraaman raguraaman
    Maadharaar thangal magal endru
    Paarthirukka
    Maappillai mun vandhu manavaraiyl kaathirukka
    Kaadhalaal mella kaal paarthu nadandhu vara
    Kanni aval kaiyil katti vaitha maalai thara
    Kaalai thirukkarathil kanaga mani charam edukka
    Aanandham paadu yena aandror kural pirakka
    Kottiyadhu melam kuvindhadhu kodi malar
    Kattinaan maangalyam
    Manai vaazhga thunai vaazhga kulam vaazhga
    Kaithalam thandhen en kanmani vaazhga
    Kadamai mudindhadhu kalyaanam aaga
    Kaithalam thandhen en kanmani vaazhga
    Kadamai mudindhadhu kalyaanam aaga
    Adaikkalam nee endru vandhanal vaazha
    Adaikkalam nee endru vandhanal vaazha
    Aandavan pol unnai koyil kondaada
    Poo mudippaal indha poonguzhali
    Pudhu cheer peruvaal vanna thaenaruvi
    En paarvaiyilae undhan per ezhudhi
    Adhai paarthirukkum kannil neer ezhudhi
    Kannil neer ezhudhi kannil neer ezhudhi

ความคิดเห็น • 35

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +13

    இனிமையான திருமண அழைப்பு பாடல்.அரசர்& மன்னர் 👍👍 ராஜாக்களின்
    இசைசாம்ராஜ்யம்..
    நெஞ்சில் நிறைந்த தேவகானம் 🙏💐💐💐💐💐 நன்றி 🙏

  • @subhabarathy4262
    @subhabarathy4262 ปีที่แล้ว +8

    அருமையான இனிமையான பாடல். கவியரசரின் அற்புதமான அழகான வரிகள், மெல்லிசை மன்னரின் மங்கல இசை, TMS ஐயாவின் அற்புதமான பாச உணர்வை வெளிப்படுத்தும் குரலினிமை +நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பு உடன் K. R. விஜயாவின் அழகு தோற்றம்.. என்றும் நெஞ்சில் நிறைந்திருக்கும். பாடல் வரிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் தந்தது சிறப்பு. அருமை.வண்ணத்தில் பாடலைப் பார்ப்பது அருமை ❤❤. நன்றி 🙏.

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +7

    இனிமையான அற்புதமான பாடல் அருமை கவிஞர் கண்ணதாசன் எழுதிய விஸ்வநாதன் ஐயா இசையில் டி எம் எஸ் குரலில் சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா நடிப்பில் பாடல் அருமையான பாடல் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🍒🌼🌼🙏🏽🙏🏽

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 ปีที่แล้ว +6

    T❤M❤S வாழ்த்துக்கள் இனிமையான குரல் 🙏🙏🙏
    Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 ปีที่แล้ว +8

    வாழ்வின் நிகழ்வுகளை நமக்கு திரைப்படம் பல கோணங்களில் காட்டிய பரிமாணமானங்களில் ஒன்று இந்த பாடல்..
    தலை நிறைய பூ சூடிய மங்கையின் திருமண நிகழ்வை 7 நிமிடங்களில் கல்யாண பத்திரிகை படித்துக்காட்டி சௌந்தரராஜன் பாடிய பாடல்..
    "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி.."
    என்று தமையன் உணர்வை சொல்லும் பாடல் வரிகள் தருவதில் கவிஞருக்கு இணை அவர் தான்..
    திருவளர் செல்வி ராஜேஸ்வரி என்கிற கே.ஆர்.விஜயாவிற்கும் திருவளர் செல்வன் சிவராமன் என்கிற முத்துராமனுக்கும் கல்யாணம் செய்து வைத்து ஆசீர்வாதம் செய்யும் ரகுராமன் என்கிற சிவாஜி கணேசன்..
    திருமண சடங்கில் நாதஸ்வரம் மேளம் வாசித்த மெல்லிசை மன்னர் விசுவநாதன்...
    இந்த திருமண நிகழ்வுக்கு வந்து வாழ்த்திய உள்ளங்களுக்கு என் நன்றிகள்.. 0:44

    • @JTFTAMIZHAN
      @JTFTAMIZHAN 10 หลายเดือนก่อน

      𝒄
      𝒑 1
      𝑩𝒆𝒆 𝑩𝒐𝒐𝒌 𝑻𝒎 Vu

  • @vasudevancv8470
    @vasudevancv8470 ปีที่แล้ว +6

    Excellent Upload in Colour. Mild Colouring is Too good. What an extraordinary Song this's! The efficacy of a great Team Work by Kannadasan MSV TMS Sivaji and Sridhar. A Collective Brilliance. We get this kind of a great song once in a Lifetime only! From the Opening Music till the End, stirring our nerves from head to foot. Such an extraordinary composition by MSV and soulful singing by TMS. Kudos to all of them for bringing out this Extraordinary Song that will stay green for Millenniums.

  • @subramaniamsubramaniam1916
    @subramaniamsubramaniam1916 6 หลายเดือนก่อน +2

    Entire song see the face expression of sivaji.....wonderful.....the girl whome he loved and now she is getting married with someone. He takes her as sister and marrying to his friend.
    Wonderful movie .......by sridhar and wonderful acting by sivaji.

  • @smanikandan9256
    @smanikandan9256 11 หลายเดือนก่อน +3

    ஈடு இணையற்ற பாடகர் திருமிகு சௌந்தரராஜன் ஐயா குரல் மெய் மறக்கச் செய்கிறது.

  • @ramesh.e1805
    @ramesh.e1805 9 หลายเดือนก่อน +4

    கனவன் மனைவிக்கு உன்டான பந்தத்தை எடுத்துரைக்கும் மிக அழகான பாடல் இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்

    • @gajandirank6925
      @gajandirank6925 3 หลายเดือนก่อน +1

      அண்ணன் தங்கை உறவு

  • @seenivasan7167
    @seenivasan7167 ปีที่แล้ว +18

    இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள் அவர்களின் உழைப்புக்கு தன் நடிப்பால் உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள்

    • @pandithanga3521
      @pandithanga3521 4 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +4

    அற்புதமானப்பாடல்! கல்யாணப்பத்திரிகையே பாடலாக்கிய கவிக்கும் எம்எஸ்வீக்கும் சபாஷ்! சிவாஜி விஜயாமா க்கு பாராட்டுக்கள் ஒவ்வொரு கல்யாணத்திலும் கேட்க்கப்படும் பாடல்! அருமை ❤❤❤❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 7 หลายเดือนก่อน

      இனிய🙏 🍳☕️காலையில் ஒரு முதல்👍☝️ வணக்கம். பூர்ணிமா🙏 அவர்களே🙋🙏

  • @karthigeyanv.p5441
    @karthigeyanv.p5441 7 หลายเดือนก่อน +2

    நெஞ்சிருக்கும் வரை இந்த பாடல்
    நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும்

  • @MugeshParimanam
    @MugeshParimanam 8 หลายเดือนก่อน +1

    Arumayana padal kannathasanin varigalil simma kurolon sountharajanin kuralil isayum pramatham.anthagala kalyana vidugalil thvaramal intha padal olikum.kalathal aluyatha padalithu❤

  • @shankarmani333
    @shankarmani333 9 หลายเดือนก่อน +2

    ALWAYS OLD IS GOLD.❤❤❤❤❤

  • @anniefenny8579
    @anniefenny8579 29 วันที่ผ่านมา

    காலத்தால் அழியாத இசையும் பாடல்வரிகளும்,குரலும் நடிகர் திலகத்தின் நிகரில்லாத நடிப்பும் அடடா... இறுதியில் கண்ணில் நீரெழுதி என்று முடித்து கலங்கவைத்துவிட்டது.

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 6 หลายเดือนก่อน +2

    Super action only ours NADIKAR THILAKAM SHIVAJI

  • @kalaanantharaman761
    @kalaanantharaman761 2 หลายเดือนก่อน +1

    It is my favourite song

  • @appaJayaraj
    @appaJayaraj 6 หลายเดือนก่อน +1

    All actors acting without makeup. This is another record in Thalaivar movie

  • @murugana4590
    @murugana4590 8 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த பாடல் அருமை

  • @kumarsubramani1099
    @kumarsubramani1099 6 หลายเดือนก่อน +2

    I miss you. My. Life 1:37

  • @seenivasan7167
    @seenivasan7167 ปีที่แล้ว +4

    என் தலைவன் மேக்கப் போடமலே அழகு

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 2 หลายเดือนก่อน

    Movie Nenchirukkum Varai lyrics Kannadasan MSV music singers TMS first time a song fully played like wedding invitations type Kannadasan superb

  • @seenivasanp7747
    @seenivasanp7747 4 หลายเดือนก่อน

    super song sivaji ayya super acting

  • @seenivasanp7747
    @seenivasanp7747 6 หลายเดือนก่อน

    superb , old is gold

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 5 หลายเดือนก่อน +1

    கண்ணதாசன் ஐயா வரிகள் கே.ஆர். விஜயா சிவாஜி கணேசன் எம் எஸ் வி கூட்டணி சும்மாவா நன்றாக இருக்கும்

  • @RameshNandini-h8o
    @RameshNandini-h8o ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @anandakrishnan996
    @anandakrishnan996 6 หลายเดือนก่อน

    அருமையான பாடல்

  • @bairavanchinnathambi7007
    @bairavanchinnathambi7007 11 หลายเดือนก่อน +1

    6/10/023

  • @mkprakash7326
    @mkprakash7326 7 หลายเดือนก่อน +1

    Black and white better, colour not good. I am not like it.

  • @thinakaranramasamy8598
    @thinakaranramasamy8598 6 หลายเดือนก่อน

    காவியம் காவியம்