ஸ்ரீ பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி 64,65,66,67, பாசுரங்களுக்கு வியாக்யானம் அளிப்பவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசம் செய்பவரும், அருளாளப் பெருமாள் எம்பெருமானார் வம்சத்தில் உதித்தவருமான, ஸ்ரீ உ வே விஞ்சிமூர் வேங்கடாசார்ய ஸ்வாமி அவர்கள். 64 ஆம் பாசுரத்தில் எப்போதுமே தன் நெஞ்சில் வைத்து பூசிக்கும் ஆழ்வாருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தேவர்களுக்காகத் தன் உடம்பு நோகும்படியாகக் கடல் கடைந்ததன் காரணமான அசதி நீங்கத் தானோ எம்பெருமான் காஞ்சி திவ்யதேசத்திலே வெஃகாவில் கிடந்தும், திருப்பாடகத்தில் இருந்தும், திரு ஊரகத்தில் நின்றும், இருக்கிறான் என்று ! அடுத்த பாசுரத்தில், அங்கற்கு, அதாவது சிறு பிள்ளையான பக்தன் பிரகலாதனுக்காக, பலம் பொருந்திய இரணியனை மார்பைப் பிளந்து அழித்தான். அந்தப் பெருமானே அடியார்களுக்குத் தீங்கிழைத்த கம்சனின் குவலாயாபீடம் என்கிற யானையின் கொம்பை உடைத்து அழித்தான். அம்மான் அவனே என்றபடி "எல்லோருக்கும் ஸ்வாமி நானே" என்று இதன் மூலம் அடியார்களுக்குக் காண்பிக்கிறான். அடுத்த பாசுரத்தில், எம்பெருமான் எதிரிகளை அழிக்க விழித்து இருக்க வேண்டும் என்பதில்லை! உயோக நித்திரையில் உள்ள எம்பெருமானைத் தாங்கிய ஆதிசேஷன், இருளையழிக்கும் கிரணங்கள் போல் இரத்தினங்களைத் தன் பணங்களின் மேல் கொண்ட ஆதிசேஷன், பெருமூச்சு விட (வெவ்வுயிர்ப்ப), எதிரிகளாக அருகே வந்த மைதுகைடபர்கள், அந்த உஷ்ணத்திலே வயிறு உருகி மாண்டனர். இவ்வாறு அடியார்களுக்கு எதிரிகளானவர்களை அழித்த எம்பெருமான் சேஷ சயனத்தில் பள்ளிகொண்டிருந்த போது, உயர்ந்து நின்ற அவர் திருநாபிக் கமலம், எம்பெருமானின் திருச்கக்கரத்தைக் கண்டு சூரியன் என்று நினைத்து மலர்ந்தும், வெண்மையான ஸ்ரீபாஞ்சஜன்யத்தைக் கண்டு ஆகாசத்தில் துலங்கும் சந்திரன் என்று நினைத்து மூடிக்கொண்டும், நாபித் தாமரையானது மாறி மாறி மலர்ந்தும் மூடியும் திகழ்கிறது என்று ஆழ்வார் வர்ணிக்கிறார். தமிழ்த்தலைவன் பேயாழ்வாரின் மேற்கூறிய பாசுரங்களுக்கு இவ்வாறு அற்புதமான வியாக்யானம் அருளிய ஸ்ரீ உ வே விஞ்சிமூர் வேங்கடாசார்ய ஸ்வாமிக்கு அநேக க்ருதக்ஞதைகள் 🙏. ஸ்ரீபேயாழ்வார் திருவடிகளே ஸரணம். 🙏🎉
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்.பாசுர விளக்கம் அத்புதம் ஸ்வாமி. ஶ்ரீபேயாழ்வார் திருவடிகளே சரணம்🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Srimathe Ramanujaya namaha
Swamy thiruvadigaluku pallandu pallandu pallandu🙏🙏🙏🌹🌹🦜🦜
🙏🙏🙏
Nameskaram swami
Adiyen.
ஸ்ரீ பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி 64,65,66,67, பாசுரங்களுக்கு வியாக்யானம் அளிப்பவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசம் செய்பவரும், அருளாளப் பெருமாள் எம்பெருமானார் வம்சத்தில் உதித்தவருமான,
ஸ்ரீ உ வே விஞ்சிமூர் வேங்கடாசார்ய ஸ்வாமி அவர்கள். 64 ஆம் பாசுரத்தில் எப்போதுமே தன் நெஞ்சில் வைத்து பூசிக்கும் ஆழ்வாருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தேவர்களுக்காகத் தன் உடம்பு நோகும்படியாகக் கடல் கடைந்ததன் காரணமான அசதி நீங்கத் தானோ எம்பெருமான் காஞ்சி திவ்யதேசத்திலே வெஃகாவில் கிடந்தும், திருப்பாடகத்தில் இருந்தும், திரு ஊரகத்தில் நின்றும், இருக்கிறான் என்று ! அடுத்த பாசுரத்தில், அங்கற்கு, அதாவது சிறு பிள்ளையான பக்தன் பிரகலாதனுக்காக, பலம் பொருந்திய இரணியனை மார்பைப் பிளந்து அழித்தான். அந்தப் பெருமானே அடியார்களுக்குத் தீங்கிழைத்த கம்சனின் குவலாயாபீடம் என்கிற யானையின் கொம்பை உடைத்து அழித்தான். அம்மான் அவனே என்றபடி "எல்லோருக்கும் ஸ்வாமி நானே" என்று இதன் மூலம் அடியார்களுக்குக் காண்பிக்கிறான். அடுத்த பாசுரத்தில், எம்பெருமான் எதிரிகளை அழிக்க விழித்து இருக்க வேண்டும் என்பதில்லை! உயோக நித்திரையில் உள்ள எம்பெருமானைத் தாங்கிய ஆதிசேஷன், இருளையழிக்கும் கிரணங்கள் போல் இரத்தினங்களைத் தன் பணங்களின் மேல் கொண்ட ஆதிசேஷன், பெருமூச்சு விட (வெவ்வுயிர்ப்ப), எதிரிகளாக அருகே வந்த மைதுகைடபர்கள், அந்த உஷ்ணத்திலே வயிறு உருகி மாண்டனர். இவ்வாறு அடியார்களுக்கு எதிரிகளானவர்களை அழித்த எம்பெருமான் சேஷ சயனத்தில் பள்ளிகொண்டிருந்த போது, உயர்ந்து நின்ற அவர் திருநாபிக் கமலம், எம்பெருமானின் திருச்கக்கரத்தைக் கண்டு சூரியன் என்று நினைத்து மலர்ந்தும், வெண்மையான ஸ்ரீபாஞ்சஜன்யத்தைக் கண்டு ஆகாசத்தில் துலங்கும் சந்திரன் என்று நினைத்து மூடிக்கொண்டும், நாபித் தாமரையானது மாறி மாறி மலர்ந்தும் மூடியும் திகழ்கிறது என்று ஆழ்வார் வர்ணிக்கிறார். தமிழ்த்தலைவன் பேயாழ்வாரின் மேற்கூறிய பாசுரங்களுக்கு இவ்வாறு அற்புதமான வியாக்யானம் அருளிய
ஸ்ரீ உ வே விஞ்சிமூர் வேங்கடாசார்ய ஸ்வாமிக்கு அநேக க்ருதக்ஞதைகள் 🙏.
ஸ்ரீபேயாழ்வார் திருவடிகளே ஸரணம். 🙏🎉
Adoyen swamy
Adiyen swamy