ஸ்ரீ பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரங்கள் 60,61,62,63 க்கு ஸ்ரீ உ வே திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி அற்புதமாக வியாக்கியானம் அருளக் கேட்டோம். எம்பெருமான் விபவாவதாரத்தில் செய்த லீலைகளை ஆழ்வார் விவரிக்கிறார். ஆறு விதமான வெற்றியைக் குறிப்பிட்டு, விரோதிகளிடமிருந்து அடியார்களை ரக்ஷித்ததும் அந்த மகிழ்ச்சியைச் சங்கை வாய்மடுத்தூதி வெளிப்படுத்தினான் என்கிறார் ஆழ்வார். எம்பெருமான் அர்ச்சாவதாரமாக இருக்கும் இடங்களை விவரித்த ஆழ்வார், முன்பு அந்த பகவானுக்கு கோயில் போல் இருந்தன. அந்த எம்பெருமான் இப்போது என் நெஞ்சில் இருக்கிறான் என்கிறார். திவ்ய தேசங்களில் எம்பெருமான் வீற்றிருப்பது அடியார்களின் நெஞ்சிலே குடிபுகத்தான். இதை விளக்குகையில் ஸ்வாமி, திருக்கோவில்களில் பாலாலயம் போல் தற்சமயம் இந்த திவ்யதேசங்களில் இருப்பது தாற்காலிகமாகத் தான், அதாவது நம் நெஞ்சில் புகும் வரை தான் என்கிறார். அடுத்த பாசுரத்தில் மீண்டும் ஏழு திவ்யதேசங்களைக் குறிப்பிட்டு, இந்தத் தலங்களில் இருப்பவன் தன் கையில் நீரேற்று மகாபலியிடம் மூவடி கேட்டு உலகளந்தவன் தான் என்கிறார். அடியார்களுக்காகத் தன்னையும் தாழ்த்திக்கொண்டு, வேண்டுமானால் யாசகமும் செய்து, எதை வேண்டுமானாலும் செய்து சாதித்துக் கொடுப்பான். பக்தர்களாகிய நம்மைப் பெறுவதற்காக, அந்த எம்பெருமான் நம்மை எதிர்பார்த்துக் கொண்டு திவ்யதேசங்களில் இருக்கிறான். அறுபத்து மூன்றாம் பாசுரத்தில், எம்பெருமான் தன்னைப் பற்றி இருப்பவர்க்கு தன் திருமேனியில் இடம் கொடுத்திருக்கிறான். பிராட்டியைத் திருமார்பிலும், நான்முகனை நாபியிலும், சிவனைத் தன்னில் ஒரு பாதியாகவும் தன் திருமேனியில் வைத்துள்ளான். பாசுரங்களின் ஆழ்ந்த அர்த்தங்களை மிகவும் எளிய முறையில் எடுத்துரைத்துள்ளார் ஜீயர் ஸ்வாமி. ஜீயர் ஸ்வாமி திருவடிகளே ஸரணம். ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே ஸரணம்.
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். பாசுர விளக்கம் அத்புதம்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.பாக்யம் . தன்யோஸ்மி அடியேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Srimathe Ramanujaya namaha.
Swamy thiruvadigaluku pallandu pallandu pallandu 🙏🙏🙏💐💐
Nameskaram.
Thank you swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Acharyan thiruvadigale saranam
ஸ்ரீ பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரங்கள் 60,61,62,63 க்கு ஸ்ரீ உ வே திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி அற்புதமாக வியாக்கியானம் அருளக் கேட்டோம்.
எம்பெருமான் விபவாவதாரத்தில் செய்த லீலைகளை ஆழ்வார் விவரிக்கிறார். ஆறு விதமான வெற்றியைக் குறிப்பிட்டு, விரோதிகளிடமிருந்து அடியார்களை ரக்ஷித்ததும் அந்த மகிழ்ச்சியைச் சங்கை வாய்மடுத்தூதி வெளிப்படுத்தினான் என்கிறார் ஆழ்வார். எம்பெருமான் அர்ச்சாவதாரமாக இருக்கும் இடங்களை விவரித்த ஆழ்வார், முன்பு அந்த பகவானுக்கு கோயில் போல் இருந்தன. அந்த எம்பெருமான் இப்போது என் நெஞ்சில் இருக்கிறான் என்கிறார். திவ்ய தேசங்களில் எம்பெருமான் வீற்றிருப்பது அடியார்களின் நெஞ்சிலே குடிபுகத்தான். இதை விளக்குகையில் ஸ்வாமி, திருக்கோவில்களில் பாலாலயம் போல் தற்சமயம் இந்த திவ்யதேசங்களில் இருப்பது தாற்காலிகமாகத் தான், அதாவது நம் நெஞ்சில் புகும் வரை தான் என்கிறார். அடுத்த பாசுரத்தில் மீண்டும் ஏழு திவ்யதேசங்களைக் குறிப்பிட்டு, இந்தத் தலங்களில் இருப்பவன் தன் கையில் நீரேற்று மகாபலியிடம் மூவடி கேட்டு உலகளந்தவன் தான் என்கிறார். அடியார்களுக்காகத் தன்னையும் தாழ்த்திக்கொண்டு, வேண்டுமானால் யாசகமும் செய்து, எதை வேண்டுமானாலும் செய்து சாதித்துக் கொடுப்பான். பக்தர்களாகிய நம்மைப் பெறுவதற்காக, அந்த எம்பெருமான் நம்மை எதிர்பார்த்துக் கொண்டு திவ்யதேசங்களில் இருக்கிறான். அறுபத்து மூன்றாம் பாசுரத்தில், எம்பெருமான் தன்னைப் பற்றி இருப்பவர்க்கு தன் திருமேனியில் இடம் கொடுத்திருக்கிறான். பிராட்டியைத் திருமார்பிலும், நான்முகனை நாபியிலும், சிவனைத் தன்னில் ஒரு பாதியாகவும் தன் திருமேனியில் வைத்துள்ளான். பாசுரங்களின் ஆழ்ந்த அர்த்தங்களை மிகவும் எளிய முறையில் எடுத்துரைத்துள்ளார் ஜீயர் ஸ்வாமி. ஜீயர் ஸ்வாமி திருவடிகளே ஸரணம்.
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே ஸரணம்.