கிழக்கு வெளுத்ததடி பாடல் | Kizhakku Veluthathadi song | T. M. Soundararajan, P. Susheela song .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2022
  • #oldsongs #kannadasanhitsongs #tamilsongs
    கிழக்கு வெளுத்ததடி பாடல் | Kizhakku Veluthathadi song | T. M. Soundararajan, P. Susheela song . Tamil Lyrics in Description .
    Movie : Avan Pithana
    Music : R. Parthasarathi
    Song : Kizhakku Veluthathadi
    Singers : T. M. Soundararajan, P. Susheela
    Lyrics : Kannadasan
    பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
    இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி
    பெண் : கிழக்கு வெளுத்ததடி
    கீழ் வானம் சிவந்ததடி
    கதிரவன் வரவு கண்டு
    கமல முகம் மலர்ந்ததடி
    எங்கள் குடும்பம் இன்று
    ஏரெடுத்து நடந்ததடி
    இன்று வந்த தென்றலுக்கு
    இதயமெல்லாம் திறந்ததடி
    பெண் : கிழக்கு வெளுத்ததடி
    கீழ் வானம் சிவந்ததடி
    கதிரவன் வரவு கண்டு
    கமல முகம் மலர்ந்ததடி
    பெண் : ஓடிய மேகம் இன்று
    மழையாகப் பொழிந்ததடி
    ஊரார்க்கு கிடைக்கும் என்று
    ஊரணியில் விழுந்ததடி
    காடு சென்ற மாடப் புறா
    வீடு வந்து சேர்ந்ததடி
    வீடு வந்த மகிழ்ச்சியிலே
    விழாக் கோலம் கொண்டதடி
    பெண் : கிழக்கு வெளுத்ததடி
    கீழ் வானம் சிவந்ததடி
    கதிரவன் வரவு கண்டு
    கமல முகம் மலர்ந்ததடி
    ஆண் : வானமே வையமே
    நீ தந்த வளமெல்லாம்
    மானிடர் உரிமையம்மா
    நான் என்று சொல்வதை
    நாம் என்று சொல்வதால்
    நாடெல்லாம் வாழுமம்மா
    பொழுதெல்லாம் உழைக்கின்ற
    ஏழையின் முகத்திலே
    புன்னகை வளருமம்மா
    புன்னகை வளருமம்மா
    ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா
    கீழ் வானம் சிவந்ததம்மா
    கதிரவன் வரவு கண்டு
    கமல முகம் மலர்ந்ததம்மா
    எங்கள் குடும்பம் இன்று
    ஏரெடுத்து நடந்ததம்மா
    இன்று வந்த தென்றலுக்கு
    இதயமெல்லாம் திறந்ததம்மா
    ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா
    கீழ் வானம் சிவந்ததம்மா… ஆ… ஹோய்
    பெண் : நல்லவர்க்கு நல்லதெல்லாம்
    நடப்பதுதான் நீதியடி
    இல்லாமல் மாறி விட்டால்
    எந்த உயிர் வாழுமடி
    பல்லாண்டு பாடுங்கடி
    பறவைகள் போல் ஆடுங்கடி
    பதினாறு பெரு வாழ்வும்
    வருகவென்றே கூறுங்கடி
    ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா
    கீழ் வானம் சிவந்ததம்மா
    கதிரவன் வரவு கண்டு
    கமல முகம் மலர்ந்ததம்மா
  • บันเทิง

ความคิดเห็น • 107

  • @srisri5649
    @srisri5649 ปีที่แล้ว +12

    சச்சு கதாநாயகி தான் என் போன்ற வர்களுக்கு

  • @revathisridhar4778
    @revathisridhar4778 หลายเดือนก่อน +4

    சச்சு. அருமையான கலைத்திறமை கொண்ட நடிகை. I am her fan till now😊

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 ปีที่แล้ว +14

    இன்றும்.இளமையுடன்.
    இருக்கும்.சச்சு.அவர்கள்.நடனம்
    அருமை.👍🌹💯

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 ปีที่แล้ว +38

    ஆயிரமாயிரம் கலர் படங்கள் வந்தாலும் !!!!!
    கருப்பு வெள்ளை படங்களுக்கு ஈடாகாது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +1

      நடனம் பழைய படங்கள் மாதிரி இப்போது வருவதில்லை

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 2 ปีที่แล้ว +12

    ச்சு அருமையான நடனம் சச்சு super dance

  • @yiii1670
    @yiii1670 ปีที่แล้ว +23

    டிஎம்எஸ் சுசிலா குரல் வளம் இன்று என்றும் இளமை மாறாது இனிமையாக குரல் வளம் தந்த இறைவனுக்கு நன்றி.

    • @maheswaranksk736
      @maheswaranksk736 ปีที่แล้ว +1

      Susheela voice evergreen

    • @cbaskar9893
      @cbaskar9893 ปีที่แล้ว

      ❤ கழகத்தின் தலைவர்

  • @maharajanm9953
    @maharajanm9953 ปีที่แล้ว +13

    இந்த பாடலை கேட்டால் அப்படியே இலட்சிய நடிகர் SSR நேரில் பார்த்த உணர்வு . வள்ளியூர் ம மகாராஜன் .

  • @dhandapaniangamuthu2522
    @dhandapaniangamuthu2522 ปีที่แล้ว +7

    எஸ்எஸ் ஆர் சச்சு பாடும்
    இந்த படத்தில் பாடல்கள்
    இனிமை காலச்சக்கரத்தால்
    அழிக்க முடியாத தில் இதுவும்
    ஓன்று பாட்டாளி களின்
    உழைப்பை உயர்த்திய
    பாடல்களில் ஓன்று அத்துடன்
    நீதியை சொல்ல கதிரவன்
    வேண்டுமே
    அ கார்முகில்

  • @karunanithivadivelu1247
    @karunanithivadivelu1247 ปีที่แล้ว +5

    அழகும்- ஆட்டமும் - சுறுசுறுப்புடன் சூப்பர்...

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 5 หลายเดือนก่อน +2

    இந்தப் பாடல் நடனம் குரல் அனைவரின் பங்களிப்பும் அருமை அருமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +6

    சூப்பரானப்பாடல் பை பார்த்தசாரதி 👸

  • @azhagesanveerappan6781
    @azhagesanveerappan6781 ปีที่แล้ว +10

    இனிமேல் இதுபோல் பாடல்கள் வருவதும் அரிது. நடிப்பவர்களும் அரிது.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 ปีที่แล้ว +21

    என்னவோரு அருமையான பாடல். அந்த காலம் எங்கள் பொற்காலம்

  • @grsekarsekar7479
    @grsekarsekar7479 ปีที่แล้ว +7

    திமுக வளர்ச்சிக்கு இந்த பாடல் வரிகள் ஒரு நெம்புகோல்

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 ปีที่แล้ว +15

    கதாநாயகி ஆகவேண்டும் என்று நடிக்க வந்து பின் நகைச்சுவை நடிகையாக வலம் வந்த நடிகை சச்சு.

  • @gisakstone5917
    @gisakstone5917 ปีที่แล้ว +7

    .அருமையான பாடல் கள்டான்‌ஸஅருமைங

  • @thamaraipugazenthi1943
    @thamaraipugazenthi1943 2 ปีที่แล้ว +18

    இனிமையான பாடல், சச்சு அம்மாவின் நடனம் அருமை.

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx ปีที่แล้ว +18

    Sachu dance is excellent and T.M.S & P.S's'performance, S.S.R also superb.

  • @vincentpaul6759
    @vincentpaul6759 ปีที่แล้ว +7

    Very very super song❤❤❤❤

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 ปีที่แล้ว +12

    கருத்தாளம் நிறைந்த, குரல்வளம் மிகுந்த,இசை வளம் சிறந்த, நடிகர்,நடிகையின் இலட்சிய நடிப்பில் காணும் போது மனதுக்கு இனிதாக இருக்கிறது. அனைவர் புகழும் தமிழ் உள்ளவரை வாழும்.

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 ปีที่แล้ว +21

    அருமையான பாடல், காலத்தால் அழியாத கருத்துகள்

  • @Duraidurai-vh3qr
    @Duraidurai-vh3qr ปีที่แล้ว +9

    சுசீலாவும்டிஎம்ஸ்ன்குரலும்இனிமை

  • @VTG950
    @VTG950 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @singaravelkumarasamy5871
    @singaravelkumarasamy5871 ปีที่แล้ว +15

    கழககருத்துக்களை. கழக. சின்னம் கதிரவணையும் இணைத்து இயறப்பட்ட. அருமையான பாடல்

    • @jagathesandamodaraswamy6906
      @jagathesandamodaraswamy6906 ปีที่แล้ว

      Now seeing sun

    • @padsv
      @padsv 3 หลายเดือนก่อน +1

      "கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி"
      அன்றே கணித்தார் கவிஞர் பாரதிய ஜனதா கட்சிக்கும் திமுகாவிற்கும் உள்ள உறவை 😝😝😝😝

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 ปีที่แล้ว +10

    கவிஞர் கண்ணதாசன்✍🏻

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +7

    Kannadasan lyrics appappa
    Music also superb

  • @anandanananth5916
    @anandanananth5916 ปีที่แล้ว +21

    என்றுமே மனதை விட்டு அகலாத இனிமையான பாடல்

  • @user-rm6ez7uy8q
    @user-rm6ez7uy8q ปีที่แล้ว +4

    இனிய பாடல் ❤

  • @jackyjacky5695
    @jackyjacky5695 ปีที่แล้ว +5

    EXCELLENT. kumari.. chachu

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl 8 หลายเดือนก่อน +1

    Ssr சச்சு டான்ஸ் அருமை

  • @kalyanamm4768
    @kalyanamm4768 ปีที่แล้ว +5

    காடு சென்ற மாடப்புறா வீடு வந்து சேர்ந்ததடி வீடு வந்து மகிழ்ச்சியிலே விழாக் கோலம் கொண்டதடி.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 ปีที่แล้ว +14

    ஓடிய மேகமின்று மழையாகப் பெய்ததம்மா
    ஊரார்க்கு உதவும் என்று தரணியில் விழுந்ததம்மா

  • @gopalv6119
    @gopalv6119 ปีที่แล้ว +11

    இனிமை நின்ற பாடல்
    இல்லை இளமை நின்ற பாடல்

  • @mayilsamykt1084
    @mayilsamykt1084 ปีที่แล้ว +5

    படம் அவன் பித்தனா

  • @srinivasanr2480
    @srinivasanr2480 8 หลายเดือนก่อน +2

    அன்று கட்சி வளரதிரு.கண்ணதாசன்எவ்வளவுசிந்தனையுடன்செயல்பட்டார்என்பதற்க்கே.இப்பாடல்.மக்களைபுரியும்படியும்ரசிக்கும்படியும்அமைந்தது.நிமிர்ந்துஉட்கார்ந்துபார்த்துகேட்க்குமளவு.

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 ปีที่แล้ว +3

    Sachchu dance and actions are super.

  • @JeyarajC-ls2ny
    @JeyarajC-ls2ny 9 หลายเดือนก่อน +1

    காலத்தால் அழிக்க முடியாத
    காவிய கானம்

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 ปีที่แล้ว +3

    எதைச் சொன்னாலும் அது ஈடாகாது

  • @dhuraisamy3338
    @dhuraisamy3338 ปีที่แล้ว +11

    கழகம் வளர காரணமான பாடல்களிலா இது வரும் ஒன்று

  • @rajarathinapandian7277
    @rajarathinapandian7277 ปีที่แล้ว +11

    கழகத்தை வளர்த்த எங்கள் குலவேந்தன்

    • @doraiswamydorai3022
      @doraiswamydorai3022 ปีที่แล้ว

      True

    • @dhuraisamy3338
      @dhuraisamy3338 ปีที่แล้ว +2

      @@doraiswamydorai3022 தி‌ மு க. வை வளர்க்க ‌மிச்சிறந்த ‌பாட்டுக்களில்‌இதுவும் ஒன்று

    • @newsupdate3879
      @newsupdate3879 ปีที่แล้ว

      ​@@dhuraisamy3338
      கழகம் வளர்ந்ததால் தான்டா தமிழகம் தமிழன் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் அனைத்தும் நாசமாக போய் தமிழன் அனாதையாக இருக்கிறான்.

  • @mbsmani2806
    @mbsmani2806 ปีที่แล้ว +7

    இயல் இசை நாடகம்
    பார்பனருக்கே சொந்தம் என்ற
    நிலையை மாற்றிய
    பாடல்வரிகள்

    • @jayakumars3131
      @jayakumars3131 ปีที่แล้ว

      Sachu is abrahmin

    • @petervetriselvan3056
      @petervetriselvan3056 ปีที่แล้ว

      உண்மைதான்.
      வாழ்க திராவிடம்!
      வெல்க தந்தை பெரியாரின் கொள்கைகள்!!

  • @dhandapanidhandapani4233
    @dhandapanidhandapani4233 ปีที่แล้ว +4

    Super

  • @ravichandran9844
    @ravichandran9844 6 หลายเดือนก่อน

    வார்த்தைகள் இல்லை மனம் மகிழ்ச்சியை எடுத்துரைக்க🙏

  • @gnanjappan7467
    @gnanjappan7467 2 ปีที่แล้ว +4

    Now on days I am not hear these type of excellant songs

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 ปีที่แล้ว +4

    Excellent my favourite super song

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +2

    Voice and 🎶 super 3.6.2023

  • @francisfrancis707
    @francisfrancis707 ปีที่แล้ว +1

    Old. Is. Gold

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +5

    படம் அவன் பித்தனா .கதை வசனம் கலைஞர் கருணாநிதி

  • @bennycharles3214
    @bennycharles3214 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤ very nice song ❤❤❤❤

  • @LakshmananLakshmanan-br9xh
    @LakshmananLakshmanan-br9xh 8 หลายเดือนก่อน +1

    முதல் பார்வையில் நடனம் ஆடுவது L.விஜயலட்சுமி போலத் தோன்றும்.கவனித்துப் பார்த்தால் தான் ஆடுவது சச்சு அம்மா என்பது தெரியும்.இந்த மாதிரி நடனத்தை சச்சு அம்மா வேறு பாடல் எதிலும் வெளிக்காட்டவில்லை.

  • @muthumani2517
    @muthumani2517 ปีที่แล้ว +2

    அருமை பாடல்

  • @Govindaraj-fy4yu
    @Govindaraj-fy4yu 3 หลายเดือนก่อน +1

    தி மு க வின் கொள்கை விளக்கக் குறிப்பு பாடல்

  • @murugasamysr7952
    @murugasamysr7952 ปีที่แล้ว +2

    Suber
    Suber

  • @harithamurugeshan936
    @harithamurugeshan936 ปีที่แล้ว +1

    Siva super

  • @viswanathan3852
    @viswanathan3852 ปีที่แล้ว +1

    Once up on a time elanga radio early in the morning protect in the song.

  • @parangirinathan3114
    @parangirinathan3114 4 หลายเดือนก่อน

    Very good song.

  • @vennilamoun3471
    @vennilamoun3471 ปีที่แล้ว +6

    Excellent song

  • @jothilakshmi2735
    @jothilakshmi2735 4 หลายเดือนก่อน

    Great songs

  • @murugank3943
    @murugank3943 ปีที่แล้ว +2

    TMS

  • @j.rajendrankumar.897
    @j.rajendrankumar.897 21 วันที่ผ่านมา

    This time match

  • @kuppan2775
    @kuppan2775 ปีที่แล้ว +4

    Naan.oru.tamil.padal.rasigan

  • @nganapathy3017
    @nganapathy3017 10 หลายเดือนก่อน +3

    அருமையான இலட்சியப் பாடல். வாழ்க வளமுடன் தமிழ் நாடு.

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 ปีที่แล้ว +8

    EVERGREEN HERO SSR அவர்கள் EVERGREEN HEROINE

  • @manikamraja
    @manikamraja ปีที่แล้ว +1

    Sakothari.sachu.avarkal.neetolilivaslka🎉🎉🎉🎉🎉🎉

  • @murugank3943
    @murugank3943 ปีที่แล้ว +1

    Naan endru solvathai naam endru solvathal

  • @balachanthran1694
    @balachanthran1694 2 ปีที่แล้ว +5

    100*100

  • @vetrimaran7861
    @vetrimaran7861 ปีที่แล้ว +3

    🌹🌹🌹🌹

  • @rathinasamyk884
    @rathinasamyk884 ปีที่แล้ว +2

    Rathinasamy

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 2 ปีที่แล้ว +17

    மெல்லிசை மன்னர்... இசையில் மன்னர் தான் அவர் !!👍👌

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 9 หลายเดือนก่อน

    When horizon is red color next day scorching hot according to ancestors

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +3

    17.8.22

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      இனிய மாலை வணக்கம்🌙 👍

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      🍓🥭🍇🍍🍎🙏

  • @babuaripaka1149
    @babuaripaka1149 7 หลายเดือนก่อน

    Name of the dancer ? Say anybody.

  • @petervetriselvan3056
    @petervetriselvan3056 ปีที่แล้ว +1

    தயாரிப்பு மற்றும் இயக்கம்
    கலைஞரின் மனச்சாட்சி
    மாமேதை 'முரசொலி' மாறன் தானே?.

  • @aruldasan7922
    @aruldasan7922 ปีที่แล้ว +17

    அந்த காலத்தில் திமுக வளர்ச்சிக்கு எல்லாரும் பாடுபட்டுயிருக்கிறார்கள்

    • @bhuvaneshwariv7476
      @bhuvaneshwariv7476 ปีที่แล้ว +1

      அருள்தாசன் அந்த காலத்தில் கழகம் வளர எல்லோரும் சேர்ந்து பாடுபட்டார்கள். ஆனால் பாடுபட்டவர்கள் எல்லாம் எந்த நிலையில் உள்ளார்கள் என தெரியாது. ஒரு குடும்பம் மட்டும் ஆல் தழைத்து அருகு போல் வேர் ஊன்றி கொழிக்கிறது. இது தான் உண்மை

    • @petervetriselvan3056
      @petervetriselvan3056 ปีที่แล้ว

      மிகச் சரியாகச் சொன்னீர்கள்.அதனால்தான் இன்றளவும் 'திராவிட மாடல்'அரசு வெற்றிகரமாகத் தொடர்கிறது!

    • @iyamperumalkalimuthu7161
      @iyamperumalkalimuthu7161 3 หลายเดือนก่อน

      உண்மை தான் SSR KRR MGR T.V.நாராயணசாமி இன்னும் பலர்.இப்போ அந்த மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்தின் பிடியில்.எங்கள் குடும்பம் ஏழ்மையின் பிடியிலே...

  • @padsv
    @padsv 3 หลายเดือนก่อน

    "கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி"
    அன்றே கணித்தார் கவிஞர் பாரதிய ஜனதா கட்சிக்கும் திமுகாவிற்கும் உள்ள உறவை 😝😝😝😝

  • @nspremanand1334
    @nspremanand1334 ปีที่แล้ว +1

    Kamalam maralum nijam.🪷

  • @maheswaranksk736
    @maheswaranksk736 ปีที่แล้ว +2

    SSR was dmk terrorist

    • @velp5168
      @velp5168 8 หลายเดือนก่อน

      எம் ஜ ஆருக்கு முன்னால எம்எல்ஏ ஆனவர்

  • @shanmugamsa9444
    @shanmugamsa9444 7 หลายเดือนก่อน +7

    அன்று எஸ் எஸ் ஆர் சொன்னபடி நெடுஞ்செழியன் முதல்வர் ஆகியிருந்தால் நாட்டு மக்களின் நிலை மேம்பாடு அடைந்து இருக்கும்

    • @sureshmani6504
      @sureshmani6504 3 หลายเดือนก่อน

      பயித்தியம் இப்போ தமிழ்நாடு முன்னேறி தான் இருக்கிறது

  • @muthusamymuthusamy4753
    @muthusamymuthusamy4753 ปีที่แล้ว +2

    DIRAVIDA THATHTHUVAM KALANTHA THEYNISAI PADAL

  • @rajendranr8375
    @rajendranr8375 9 หลายเดือนก่อน +1

    Super