sengal soolai (red bricks) manufacturing process, செங்கல் சூளை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • செங்கல் தயாரிப்பு என்பது கட்டிடம் கட்டுவதற்கான மூலப் பொருட்களில் ஒன்றாக இருக்கும் செங்கல்லை உற்பத்தி செய்வதைக் குறிக்கும். செங்கல் தயாரிப்பு பெரிய தொழிற்சாலைகளில் இடம்பெறுகின்ற அதேவேளை கிராமப் பகுதிகளில் குடிசைத் தொழிலாகவும், சிறு தொழிலாகவும் செய்யப்பட்டு வருகின்றது. பெரிய தொழிற்சாலைகள் இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றன. குடிசைத் தொழில்களில் மனித வலுவே முக்கியமானதாக உள்ளது.
    செங்கல் உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருள் களிமண். எனவே களிமண் பெருமளவில் கிடைக்கக்கூடிய இடங்களிலேயே செங்கல் உற்பத்தி இடம்பெறுகிறது. செங்கல் உற்பத்திக்குத் தேவையான களிமண் சில குறிப்பிட்ட இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.[1]
    நீருடன் சேர்த்துக் குழைக்கும்போது அச்சில் வார்த்துத் தேவையான வடிவத்துக்குக் கொண்டுவரக்கூடிய வகையில் அது நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்.
    அச்சிலிருந்து எடுத்த பின்னர் வடிவம் மாறாமல் இருக்கும்வகையில் ஈரநிலை வலிமையையும், காற்றுலர் வலிமையையும் கொண்டிருத்தல் வேண்டும்.
    போதிய வெப்பநிலைக்கு உயர்த்தும்போது கணிமண் துணிக்கைகள் ஒன்றாகப் பிணையக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
    உற்பத்தி நிலைகள்தொகு
    பொதுவாக செங்கல் உற்பத்தியில் ஆறு நிலைகள் உள்ளன. இந்த ஆறு நிலைகளூடாகச் சென்றே மூலப்பொருட்கள் பயன்பாட்டுக்கு உகந்த செங்கற்களாக வெளிவருகின்றன. இவ்வாறு நிலைகள் வருமாறு:
    மூலப்பொருட்களை அகழ்ந்தெடுத்தலும், களஞ்சியப்படுத்தலும்.
    மூலப்பொருட்களைத் தயார்ப்படுத்தல்.
    செங்கல்லை வேண்டிய வடிவத்தில் அச்சில் வார்த்தல்.
    உலர்த்தல்.
    சூளையில் சுடுதலும், குளிரவைத்தலும்.
    செங்கற்களைச் சூளையில் இருந்து அகற்றுதலும், களஞ்சியப்படுத்தலும்.
    உற்பத்தித் தரம்தொகு
    பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும்போது உரிய தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது இலகு. இதனால், அவ்வாறான செங்கற்கள் தரம் வாய்ந்தவையாக இருப்பதற்குக் கூடுதல் வாய்ப்புக்கள் உள்ளன. அதேவேளை, குடிசைத் தொழிலாகச் செய்யும்போது, தரத்தைப் பேணுவதற்கான போதிய வசதிகள் இருப்பதில்லை. இதனால், அவ்வாறு உற்பத்தியாகும் கற்களும் பெரிய கட்டிடங்களில் பயன்படுத்துவதற்குப் போதுமான தரத்தைக் கொண்டிருப்பது அரிது.

ความคิดเห็น • 13