தேவாரம் | திருவாசகம் I திருவிசைப்பா I திருப்பல்லாண்டு I திருப்புகழ் I கந்த புராணம் I 𝐓𝐚𝐦𝐢𝐥 o

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • தேவாரம் :
    தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடைய
    சுடலைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
    பீடுடையபிரமாபுரம்மேவிய பெம்மானிவனன்றே
    திருவாசகம்:
    அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்தஆ ரமுதே
    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
    செம்மையே ஆய சிவபதம் அளித்த
    செல்வமே சிவபெரு மானே
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே
    திருவிசைப்பா :
    ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே ! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே ! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ! சித்தத்துள் தித்திக்கும் தேனே ! அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே ! அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே
    திருப்பல்லாண்டு:
    பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே
    திருப்புகழ்:
    ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
    ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
    கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
    குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
    மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
    ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
    கந்த புராணம்:
    வான் முகில் வழாது பெய்க
    மலி வளம் சுரக்க மன்னன்
    கோன் முறை அரசு செய்க
    குறைவு இலாது உயிர்கள் வாழ்க
    நான்மறை அறங்கள் ஓங்க
    நற்றவம் வேள்வி மல்க
    மேன்மை கொள் சைவ நீதி
    விளங்குக உலகமெல்லாம்!

ความคิดเห็น • 32

  • @SMRL22
    @SMRL22 3 หลายเดือนก่อน +6

    இந்த பன்னிரு திருமுறைகள் பிழையில்லாமல் பாடல்கள் மற்றும் விளக்க உரையுடன் கூடிய புத்தகம் எங்கு கிடைக்கும். நூலாசிரியர் பெயர் என்ன தெரிந்தால் கூறவும்.

    • @ChandraPrabha-c1r
      @ChandraPrabha-c1r 2 หลายเดือนก่อน +1

      மாணிக்கவாசகர்

  • @kishoregaming8328
    @kishoregaming8328 ปีที่แล้ว +2

    om nama shivaya

  • @nahendranthangaval7731
    @nahendranthangaval7731 ปีที่แล้ว +5

    சிவாய திருச்சிற்றம்பலம்

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பதிவு, நன்றி, வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @Socialman7991
    @Socialman7991 4 หลายเดือนก่อน +2

    எழுத்துப்பிழைகள் உண்டு
    தேவாரத்தில் இல்லாத சொற்களைச் சேர்ப்போம் உள்சொற்களை குறைத்துக்கூறுவதோ குற்றமாகும்

    • @Tamil.o.Official
      @Tamil.o.Official  4 หลายเดือนก่อน +1

      நன்றி, பிழைகளை குறிப்பிடவும், திருத்துகின்றோம்

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +5

    முருகா சரணம் 🙏🙏🙏

  • @thanushiyaveluppillai
    @thanushiyaveluppillai ปีที่แล้ว +2

    Periyapuranam missing

    • @Tamil.o.Official
      @Tamil.o.Official  ปีที่แล้ว +1

      பெரிய புராணம், குறிப்பாக எந்த பாடல்களை எதிர்பார்க்கின்றீர்கள்

  • @thiruneelakandam2543
    @thiruneelakandam2543 2 ปีที่แล้ว +3

    அருமை சிவாய திருச்சிற்றம்பலம்

  • @simplycooking_5116
    @simplycooking_5116 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻

  • @vasudevanv5835
    @vasudevanv5835 2 ปีที่แล้ว +3

    பெரியபுராணம் பாடலய

  • @Hi-gd5zd
    @Hi-gd5zd หลายเดือนก่อน +1

    Om 🙏❤✨

  • @karthiksivasivanyeenvazi6105
    @karthiksivasivanyeenvazi6105 2 ปีที่แล้ว +2

    Om namashiva vazga 🙏🙏🙏

  • @svenkatesanchemistryteache460
    @svenkatesanchemistryteache460 26 วันที่ผ่านมา

    அருமை

  • @KavinKavinv-f8c
    @KavinKavinv-f8c 9 หลายเดือนก่อน +1

    நல்ல குரல் வளம்

  • @BgmTamizhaa
    @BgmTamizhaa 2 ปีที่แล้ว +3

    👍👍👍

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை ஓம் நமசிவாய 🙏

  • @bala2627
    @bala2627 ปีที่แล้ว +1

    செந்தேன் குரலுக்கு வாழ்த்துக்கள்❤

  • @kankiritharan3418
    @kankiritharan3418 2 ปีที่แล้ว +1

    Thanks 4 upload, sweet 🙏

  • @krishnanjay354
    @krishnanjay354 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய சிவ சிவ

  • @nagarajahsakunthaladevy4768
    @nagarajahsakunthaladevy4768 ปีที่แล้ว +1

    படையில் வாழை

  • @bala2627
    @bala2627 ปีที่แล้ว +3

    ❤ ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ❤❤❤ முருகா சரணம் ❤❤❤

  • @09natarajan
    @09natarajan 11 หลายเดือนก่อน +1

    சிவாய நம

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 ปีที่แล้ว +1

    OM namasivaja

  • @suseladevi3143
    @suseladevi3143 26 วันที่ผ่านมา

    Very good, God bless you 🙏 Malaysia

  • @kiruthikavikiruthi9489
    @kiruthikavikiruthi9489 ปีที่แล้ว +4

    ஓம் நம சிவாய

  • @rasalinkamkumaran6605
    @rasalinkamkumaran6605 2 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍👍