என் சின்ன வயதில் திரு...தர்மபுரம் ஸ்வாமி நாதன் பாடிய திருமுறைப் பாடல்கள் கேட்டு மிகவும் ஈடுபாடு வந்தது... அதே மாதிரி உள்ளது திரு.சற்குருநாதன் பாடுவது.... இவர் பாடுவது என்னை இறைவன் சமீபம் அழைத்துச் செல்வது மாதிரி உள்ளது.... இவர் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து பாட இறைவனை வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
என் சின்ன வயதில் திரு...தர்மபுரம் ஸ்வாமி நாதன் பாடிய திருமுறைப் பாடல்கள்
கேட்டு மிகவும் ஈடுபாடு வந்தது...
அதே மாதிரி உள்ளது
திரு.சற்குருநாதன் பாடுவது....
இவர் பாடுவது என்னை இறைவன் சமீபம் அழைத்துச் செல்வது மாதிரி உள்ளது....
இவர் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து பாட இறைவனை வேண்டுகிறேன்...
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
சிவாய நம.🙏. அப்பர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி.
ஓதுவாமூர்த்திகள்..திரவடி...கள்.என்சிரம்தாழ்த்திவணங்குகிறேன்
உங்கள் திருமுறை கேட்ட பிறகே நான்திருமுறை பாடுகின்றேன்
இவன் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கண்டப்பங்குறிச்சி கிராமம்
திருச்சிற்றம்பலம் 🙏 தங்கள் குரல் வளம் பண்ணிசை சிறப்பு 👍 மனமகிழ்ச்சி 💐🙏
பாடல் எண் : 1
கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 2
நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 3
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 4
முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 5
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 6
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 7
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்
வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 8
வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 9
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 10
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
அருமை!
அடியேனுக்கு அருள் புரிய வேண்டும் வீரட்டானத்துறை அம்மானே!!
அருமை ஐயா...
ஓம் நமசிவாய 🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாற்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
சிவ சிவ 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹nalvar🌹🙏porpatham🌹🌹🙏🙏🙏malaradi🙏போற்றி. 🙏🙏🌹ஓம். 🙏🙏நமசிவாய. 🙏🙏🙏🌹புயஙகனே. 🙏🙏🙏போற்றி. ஓம். 🙏🙏🙏நமசிவாயம். Iyya🙏🙏🌹🌹arumiagha🙏🙏படியுள்ளீர்ககள். 🙏🙏🙏திருச்சிற்றம்பலாம். 🙏sivaya🙏nama🌹
பூவோடுசேர்ந்து.நாறும்மனக்குமாம்.நீங்கள்பாட.நாங்கள் கேட்க. உங்க ளாள்.எங்களுக்கு. சிவகதிகிடைக்கும்.
ஓம் சிவாய நம
Super 👌
திருநாவுக்கரசர் சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி
OM Namaschiva.
அதிகைவீரட்டானேஸ்வரசுவாமிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சிவாயநம
அப்பர் திருவடிகளே ஸரணம்
தேவாரம் கற்போம் பாடுவோம்.நிம்மதி பெறுவோம்.அருமை.அருமை
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் உசிவமயம் சிவ ஓம் நமசிவாய ஓம்
⚘🙏🙏🙏⚘
சிவ சிவ
ஓம் நமசிவாயம் 🙏🙏🙏
தங்களது இந்த பதிக பாடலை தினமும் கேட்டு வருகிறேன். இதனால் விரைவில் அதிகை
கெடில வீரட்டானம் செல்லும் ஆவல் எழுந்துள்ளது.
சற்குருநாதன் ஸ்வாமிகளுக்கு கோடி வந்தனங்கள்..
அருமை ஐயா அருமை
Om namasivaya
என் வயிற்று வலி குணமாகட்டும் சிவபெருமானே
இந்த பதிகம் தொடர்ந்து கேட்டால் கண்டிப்பாக குணமாகும், திருச்சிற்றம்பலம்🙏
சிவாய நம*
ஓம் நமசிவாய
Kal vValiyal Thudithapothu Kanavil Padikkacholli Utharavu Parathilirunthu Vanthathu ❤ Nijam ❤ Valum Deivathin Jeevanulla Varthaigal ❤ Om Namah Shivaya ❤
Nama sivaya namaha
காஞ்சி மகான் திருவடிசரணம் அம்மைஅப்பன்திருவடிசரணம்🪔🙏🙏
உங்களுடைய குரல் மிகவும் இனிமையாக உள்ளது.
அருமை !
அடியேனுக்கு அருள் புரிய வேண்டும் வீரட்டானத்துறை
அம்மானே......
Arumai Arumai
arumai
🙏🙏🙏🙏
ஓ்சிவசிவஓம் lyrics pl add in screen
Eluthu vadivil pathivu seiyungal voice super
👍
kindly show the full platform-video. excellent rendition.
😅
வந்தனம்
ஓம் நமசிவாய நமஹ
ஓம் நமசிவாய
🙏🙏🙏
ஓம்நமசிவாயம்