அவியல் | Avial Recipe in Tamil | Aviyal Recipe | Sidedish for Rice |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • அவியல் | Avial Recipe in Tamil | Aviyal Recipe | Sidedish for Rice | ‪@HomeCookingTamil‬
    #அவியல் #AvialRecipeinTamil #AviyalRecipe #SidedishforRice #homecookingtamil
    Other recipes
    Arachuvitta Sambar - • அரைச்சுவிட்ட சாம்பார் ...
    Arisi Paruppu Sadam - • அரிசி பருப்பு சாதம் | ...
    Chettinad Rangoon Puttu - • செட்டிநாடு ரங்கூன் புட...
    Kovakkai Poriyal - • கோவக்காய் பொரியல் | Ko...
    Cabbage Kottu - • முட்டைகோஸ் கூட்டு | Ca...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    அவியல்
    தேவையான பொருட்கள்
    மசாலா விழுது அரைக்க
    துருவிய தேங்காய் - 3/4 கப்
    பச்சை மிளகாய் - 5
    சின்ன வெங்காயம் - 9
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    அவியல் செய்ய
    தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    சேனைக்கிழங்கு - 1 கப் நறுக்கியது
    புடலங்காய் - 1 கப் நறுக்கியது
    வாழைக்காய் - 1 கப் நறுக்கியது
    வெள்ளை பூசணிக்காய் - 1 கப் நறுக்கியது
    பீன்ஸ் - 1 கப் நறுக்கியது
    கேரட் - 1 கப் நறுக்கியது
    மஞ்சள் பூசணிக்காய் - 1 கப் நறுக்கியது
    மலபார் வெள்ளரிக்காய் - 1 கப் நறுக்கியது
    முருங்கைகாய் - 1 கப் நறுக்கியது
    மாங்காய் - 1 கப் நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 1/4 கப்
    அரைத்த தேங்காய் விழுது
    அடித்த தயிர் - 1 கப்
    தாளிக்க
    தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள்
    சின்ன வெங்காயம் - 6 நறுக்கியது
    கறிவேப்பிலை
    செய்முறை:
    1. மசாலா விழுது அரைக்க, மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் இன்றி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
    2. அவியல் செய்ய, ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் நறுக்கிய சேனைக்கிழங்கு, புடலங்காய், வாழைக்காய், வெள்ளை பூசணிக்காய், பீன்ஸ், கேரட், மஞ்சள் பூசணிக்காய், மலபார் வெள்ளரிக்காய், முருங்கைகாய், மாங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    3. அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    4. பிறகு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
    5. அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும்.
    6. பின்பு அடித்த தயிரை சேர்த்து நன்கு கலந்து விட்டு 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
    7. தாளிப்பு செய்ய, தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி அவியலுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    8. அட்டகாசமான அவியல் தயார்.
    Avial is a South Indian mild flavored, coconut based gravy curry. This is very popular in Kerala and Tamilnadu. In Kerala particularly, avial is a must have during festivals or any special occasions. They all usually have avial with appam, idiyappam, parotta etc. But if you want, you can also enjoy it with regular dosa or any roti. Watch this video till the end to get a step by step guidance on the preparation process. Try this amazing side dish and you will just fall in love with it instantly. Let me know how it turned out for you guys in the comments section below.
    You can buy our book and classes at www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.i...
    Facebook: / homecookingtamil
    TH-cam: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 185