முருகன் வேல் வழிபாட்டின் முக்கியத்துவம் | Pirugu Prabhakaran |Murugar Vel Valipadu|Arunakirinathar|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #arunagirinathar#piruguprabhakaran#kandaralangaram #bakthiinfinity #velvazhibadu #murugar
    .................................................................................................................................
    முருகன் வேல் வழிபாட்டின் முக்கியத்துவம் | Pirugu Prabhakaran |Murugar Vel Valipadu|Arunakirinathar|
    .................................................................................................................................
    பாடல் 38 ...
    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
    பொருள்:
    நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
    அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
    இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
    திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
    திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
    அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே
    பாடல் 40:
    சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
    மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
    வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
    பொருள்:
    சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள
    வயல்கள் அழிந்துபோயின; மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது
    சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்
    அழிந்துபோயிற்று. பெருமைதங்கிய மயில்வாகனத்தையுடைய
    திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும்
    கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின. இவ்வுலகில் கந்தவேளின்
    திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால்
    எழுதப்பட்டிருந்த ['விதி' என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று.
    பாடல் 70:
    விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததன வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
    பொருள்:
    நமது கண்களுக்குத் துணையாவது திருமுருகப்பெருமானது புனிதமானவையும் மென்மையானவையுமான செந்தாமரை மலர் போன்ற திருவடிகளேயாகும். உண்மையில் ஒருசிறிதும் குறையாத
    சொல்லுக்குத் துணையாவது 'முருகா' என்று கூறும் அப்பரமபதியின்
    திருநாமங்களேயாகும். முன்பு செய்த பழியைத் தருகின்ற
    பாவத்தை அகற்றுவதற்குத்
    துணையாவது திருமுருகப்பெருமானின்
    பன்னிரண்டு புயங்களுமேயாகும். அஞ்சுந்தன்மையுடைய
    தனிமையான வழிக்குத் துணையாவது திருச்செங்கோட்டில்
    எழுந்தருளியுள்ள கந்தப்பெருமானுடைய கூர்மையான
    வேலாயுதமும் மயிலுமேயாகும்.
    பாடல் 72:
    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
    சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
    பொருள்:
    சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை,
    திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த
    வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை,
    விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த
    கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப்
    பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக
    உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு
    குறையும் உண்டாகாது.
    பாடல் 90:
    மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
    மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
    சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
    நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.
    பொருள்:
    திருமாலின் திருமருகரை, கனக சபையில் திருநடனம்புரியும்
    சிவபெருமானின் திருப்புதல்வரை, தேவர்களுக்கும் உயர்வான தேவ
    தேவரை உண்மை அறிவின் வடிவாகிய முழுமுதற்கடவுளை,
    இவ்வுலகில் கெண்டை மீன்கள் நிறைந்த வயல்களும் சோலைகளும்
    சூழ்ந்த திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் திருமுருகப்
    பெருமானை அவருடைய திருக்கோயிலுக்குச் சென்று கண்குளிரக்
    கண்டு வணங்கும் பொருட்டு அந்தப் பிரம்மதேவன் அடியேனுக்கு
    நாலாயிரம் கண்களைப் படைக்கவில்லையே!
    ............................................................................................................................................................
    Whatsapp Channel Link : whatsapp.com/c...
    Facebook Link : www.facebook.c...
    Instagram Link : www.instagram....
    .............................................................................................................................................................
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 79

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 5 หลายเดือนก่อน +45

    ஐயா நீங்கள் கூறிய பாடல்களை தொடர்ந்து 48நாட்கள் எழுதினேன். முருகர் அற்புதம் நிகழ்த்தினார்.

    • @Mastergamers2.0
      @Mastergamers2.0 5 หลายเดือนก่อน +1

      Yenna padal ezhudhaneenga yenna arputham nadandhadhu

    • @AnandRaj-gw1jl
      @AnandRaj-gw1jl 5 หลายเดือนก่อน +1

      என்ன பாடல்கள் தயவு செய்து சொல்லுங்கள் அண்ணா

    • @kirishbhavanbrothers2146
      @kirishbhavanbrothers2146 5 หลายเดือนก่อน +9

      விழிக்குத் துணை பாடல், நாளென் செய்யும் பாடல்,சேந்தனைக் கந்தனை பாடல், வீரவேல் தாரை வேல் பாடல்

    • @mbbableable
      @mbbableable 5 หลายเดือนก่อน +2

      எந்த பாடல் வரிகள் பிளீஸ்

    • @shanthishanthi2737
      @shanthishanthi2737 5 หลายเดือนก่อน +6

      விழிக்கு துணை திரு மென் மலர் பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்கு துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத்துணை உன் பன்னிருதோளும் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் . மயூரமே 🙏🙏🙏🙏🙏

  • @suthany5801
    @suthany5801 5 หลายเดือนก่อน +7

    ஐயா முருகன் குரலை நான் கேட்டதில்லை. நான் உங்கள் வீடியோக்களை பார்த்த பிறகு, முருகன் பேசினால் அவரும் உங்களைப் போலவே பேசுவார் என்று நினைக்கிறேன். நான் என் இதயத்திலிருந்து சொல்கிறேன், உங்கள் குரலும் உங்கள் பேசும் திறமையும் பிரபு முருகன் அங்கே வாழ்கிறார். உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது என் கண்கள் என் அனுமதியின்றி அழ ஆரம்பித்தன. ❤❤❤

    • @pushpavalli.c4970
      @pushpavalli.c4970 4 หลายเดือนก่อน +1

      S absolutely......patience. Unbelievable....I was astonished by his speech....when I was down his speech motivates me to hold murugan again strongly....daily I m reading his five songs.....facing lots of problems. So depressive but again believing in muruga.....

  • @Amutha.26
    @Amutha.26 5 หลายเดือนก่อน +6

    ஆகா! அற்புதம் . முருகனை உங்கள் இருவர் வடிவில் காண்கிறேன். நீங்களே வேலும் மயிலும்.

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 5 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்.❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் தமிழ் பேச்சு அருமை கந்தர் 🎉🎉🎉🎉🎉🎉அலங்காரம் தெளிவு அருமை பெருமை தெரிகிறது.😊😊😊😊😊😊.அய்யாவின் பேச்சு கேட்ட கேட்டக திகட்டதா தேன் அமிழ்து.🎉🎉🎉🎉🎉🎉 தெரியதை சொல்லி கொடுக்கும் என் அப்பன் முருகன்.❤❤❤❤❤❤.

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr 5 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா முருகன் துணை

  • @PragadeeshNarean
    @PragadeeshNarean 3 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 5 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா செந்தில் அண்ணா

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 5 หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏மிகவும் அருமை ஐயா🙏பணிவுடன் நன்றியும் வணக்கமும்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 3 หลายเดือนก่อน

    வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன் நன்றி

  • @natarajhari4171
    @natarajhari4171 5 หลายเดือนก่อน +6

    உங்களோட தமிழ் மிகத்தெளிவாக உள்ளது அடுத்த தலைமுறைக்கு வந்து நீங்கதான் தமிழ் உச்சரிப்பு கோடான கோடி நன்றி உங்களுடைய போன் நம்பரும் எனக்கு அனுப்பவும்

  • @sakthimuthuselvam4340
    @sakthimuthuselvam4340 5 หลายเดือนก่อน

    ஐயா மிகவும் அருமையான பதிவு. நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 5 หลายเดือนก่อน +3

    Arumai senthil sir

  • @malarvizhi7777
    @malarvizhi7777 5 หลายเดือนก่อน +10

    அருமை ஐயா அருமை அருமை அருமை முருகன் பெருமையை கேக்க கேக்க கேக்க கேக்க எனக்கு செவி பத்தாது ஐயா ஆனந்தம் ஆனந்தம் நன்றி நன்றி நன்றி

  • @ravichandran8086
    @ravichandran8086 5 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 5 หลายเดือนก่อน

    நல்வழி பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉

  • @சி.காஞ்சனா
    @சி.காஞ்சனா 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா.... ஓம் சரவண பவ...🙏🙏🙏🙏🙏🙏

  • @devakis2775
    @devakis2775 5 หลายเดือนก่อน

    Very powerful speech and create confident everyone.

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 5 หลายเดือนก่อน

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 5 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @soundhrrajan7771
    @soundhrrajan7771 5 หลายเดือนก่อน

    சுகமே சூழ்க செந்தில் sir ❤❤

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @JUNIPER1SMYDOGGO
    @JUNIPER1SMYDOGGO 5 หลายเดือนก่อน

    Thank you sir

  • @shanthidhakshinamurthy6983
    @shanthidhakshinamurthy6983 5 หลายเดือนก่อน +2

    Om muruga vel vel muruga🙏🙏🙏

  • @mnagaraja576
    @mnagaraja576 5 หลายเดือนก่อน +1

    Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 5 หลายเดือนก่อน

    Thank you🙏

  • @vijayanrajagopal6394
    @vijayanrajagopal6394 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @NaliniS-s9r
    @NaliniS-s9r 5 หลายเดือนก่อน

    Om murugha
    🙏🙏🙏🙏
    Vetri vel murughanuku haro hara 🙏🙏🙏🤜

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @devisri-hf1tg
    @devisri-hf1tg 5 หลายเดือนก่อน +4

    அய்யா நீ சொல்லும் பதிகங்களை சொல்ல சொல்ல கேட்ட வேண்டும் என்று ஆண்வம் தூண்டுகிறது நன்றி அய்யா இறைவன் புகழ் சொல்லி பெறும படுத்திட்டங்க நீங்க நல்லா இருக்க இறைவனை வேண்டிக்கிறேன்

  • @bharaathgs7520
    @bharaathgs7520 5 หลายเดือนก่อน +1

    Good evening sir 🎉

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 5 หลายเดือนก่อน

    Vankkam guru ji

  • @இரணியன்பூங்குன்றனார்
    @இரணியன்பூங்குன்றனார் 5 หลายเดือนก่อน

    ஓம் முருகா

  • @sivasankaran.b4269
    @sivasankaran.b4269 5 หลายเดือนก่อน

    "ஓம் சரவணபவாய நம!"🙏🙏🙏💐

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @thamiltraders1131
    @thamiltraders1131 5 หลายเดือนก่อน

    Nanry

  • @namasivayam369
    @namasivayam369 5 หลายเดือนก่อน

    Thanks sir

  • @lakshmikanthan4693
    @lakshmikanthan4693 5 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ குகா வேலும் மைலும் துனை

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 5 หลายเดือนก่อน

    Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️

  • @seetharamanv.s.seetharaman7279
    @seetharamanv.s.seetharaman7279 5 หลายเดือนก่อน

    ஐயா மிக அருமை நீங்களே வேல் மாறலை பற்றியும் கூறவும்

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 5 หลายเดือนก่อน

    Om Saravana pava ❤❤❤❤❤❤

  • @yrsk7
    @yrsk7 5 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை இருவருக்கும் சிறம் தாழ்ந்த வணக்கங்கள். நன்றி ஐயா 🙏

  • @LUFFY-n2u
    @LUFFY-n2u 5 หลายเดือนก่อน

    Om Saravana bava 🕉️🌺🙏

  • @jagam19
    @jagam19 5 หลายเดือนก่อน

    OM MURUGA GURU MURUGA ARUL MURUGA ANANDHA MURUGA SIVASAKTHI BALAGANAE SHANMUGANAE SADAAKSHRANAE EN VAAKILUM NINAIVILUM NINDRU KAAKA, OM AIM SHREEM VEL KAAKA SWAHA🙏 Ayyaa neengal koorum padalin varigalia yezhuthu vadivil padhivida veandugiraen🙏

  • @NagudevarajanDevarajan
    @NagudevarajanDevarajan 5 หลายเดือนก่อน

    ஓம்...

  • @gokilavani1559
    @gokilavani1559 5 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @maniz1
    @maniz1 5 หลายเดือนก่อน

    சுகமே சூழ்க

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 5 หลายเดือนก่อน +1

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @tamilbhaktiisaimalai4445
    @tamilbhaktiisaimalai4445 5 หลายเดือนก่อน +1

    Om muruga 🙏🏻🦚

  • @senthilraja1306
    @senthilraja1306 5 หลายเดือนก่อน

    om saravanapava 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkamal3006
    @rajkamal3006 5 หลายเดือนก่อน

    Om saravana bhava 🦚

  • @ambighaaa170
    @ambighaaa170 5 หลายเดือนก่อน +1

    ஐயா நன்றி அந்த ஏழு பாடல் களுமாசொல்லுங்கள்ஐயாநனறி

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 5 หลายเดือนก่อน +3

    Nandre piragu prabakaran matrum sai senthil ayya nandreallathiya appan kandar alangaram padal naal enna syuum kudu kutrum ennai seyum shanmugam en seyum padal 38, padal 40 vel kanam sel pattu alinthathu ayyan prama eluthu vera avan kal en thalai pathathu , 70 padal veliku thunai thiru men padangal, padal 72 asta isawerayam kittum, 90 padal nalla ayaram nan. Nool payan nava, ratha padal lalitha nava rethina malai padal navilvaar. Pamalai aruna guri nathaar salangam emman sandai naraha kuli yarukum payapadathey. Kandar naannulil. Arumai arumai ayya.

    • @kikkar51
      @kikkar51 5 หลายเดือนก่อน

      Amma 🙏 manna nalla dhairiyam vare enna padal padikkano amma nalla manna dhairuyam vare koncham solli kudunga amma 🙏🙏 🙏🙏🦚🦚🦚

    • @kikkar51
      @kikkar51 5 หลายเดือนก่อน

      Amma dhairiyam vare enna padal padikkano amma🙏🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @konganar9915
    @konganar9915 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👍🤝

  • @selvapackiasankars6035
    @selvapackiasankars6035 5 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @rupalivenkatesan6842
    @rupalivenkatesan6842 4 หลายเดือนก่อน

    Please give 7 sings in description box sir

  • @samygopi8608
    @samygopi8608 3 หลายเดือนก่อน

    Omayya 🪷🪷🪷🪷🪷🪷🐓🦚🙇‍♀️

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 5 หลายเดือนก่อน +1

    🙏🌹🍎🌳

  • @vidyamohan1351
    @vidyamohan1351 5 หลายเดือนก่อน +1

    Sugame suzgha

  • @என்னுடன்
    @என்னுடன் 4 หลายเดือนก่อน

    38 வது பாடல்🔥
    40 வது பாடல்🔥
    70வது பாடல்
    72வது பாடல்
    90 வது பாடல்
    அத்துடன் நூற்பயன் பாடல் 101

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @kikkar51
    @kikkar51 5 หลายเดือนก่อน

    Manna dhairiyam vare enna padal padikkano yaravathu sollungaa please🙏🙏🙏

  • @sansanthoshtup178
    @sansanthoshtup178 5 หลายเดือนก่อน

    🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏

  • @mbharanimbharani
    @mbharanimbharani 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @yuvarajsundar9392
    @yuvarajsundar9392 5 หลายเดือนก่อน

    🦚🙏

  • @sathishkumar.vsathishkumar677
    @sathishkumar.vsathishkumar677 5 หลายเดือนก่อน

    🦚🙏🙏🙏🙏🙏🙏🦚

  • @yogesp-ec8ro
    @yogesp-ec8ro 22 วันที่ผ่านมา

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿