நாகர்கோவிலில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுதபூஜை
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலுங்கடி சி.பி.எச் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது .
கொரோனா தடை உத்தரவு காரணமாக ஆண்டு தோறும் நடைபெற்று வரும் இசை கச்சேரி நிகழ்சிகள் ரத்து செய்யப்பட்டன.
குமரி மாவட்டத்தில் ஆயுதபூஜை விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் தொழில் நிறுவனங்கள் வாகன நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆயுத பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். நாகர்கோவில் நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்க பட்டு விடிய விடிய இசை கச்சேரி நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக இசை கச்சேரி நிகழ்சிகள் ரத்து செய்யபட்டது.
அதே வேளையில் வானுயரத்தில் ஒளிர்ந்த வண்ண விளக்குகளை காண ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து ஆர்வமாக கண்டுகளித்து சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் கலுங்கடியில் உள்ள சி.பி.எச். ஆட்டோ நிறுத்தத்தில் வெகு விமரிசையாக ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது .